வேர்களைத்தேடி தளத்திற்குத் தங்களை அன்புடன் வரவேற்கிறேன்... இத்தளத்தில் சங்க இலக்கியம், கணினித்தமிழ் சார்ந்து எனது அனுபவங்களைப் பகிர்ந்து வருகிறேன். 13 ஆண்டுகளில் 1500க்கும் மேற்பட்ட பதிவுகளை வழங்கியுள்ளேன். தற்போது இந்தியக் குடிமைப் பணித்தேர்வுக்கான விருப்பப் பாடம் தமிழுக்குரிய விளக்கங்களைத் தொடர்ந்து வழங்கி வருகிறேன். தங்கள் மேலான வருகைக்கு நன்றிகளைத் தெரிவித்துக்கொள்கிறேன்.

செவ்வாய், 25 செப்டம்பர், 2012

இணையத்தில் ஆதிக்கம்செலுத்தும் மொழிகள் (தமிழ்)


இணையத்தில் தமிழ் ஆதிக்கம் செலுத்த நாம் என்ன செய்யவேண்டும்...?


கணினி, இணையம் இரண்டிலும் தமிழ் முழுமையாக இல்லை என்பதை உணர்ந்து 01 என்னும் கணினி மொழியை ஆங்கிலத்துக்குப் பயன்படுத்தியது போல தமிழ் மொழிக்கு முழுவதும் பயன்படுத்தவேண்டும். ஒருங்குறி (யுனிகோடு) என்னும் எழுத்துருச் சிக்கலுக்கு முற்றுப்புள்ளி வைக்கவேண்டும்


கணினி - இயங்குதளங்களின் பல்வேறு பதிப்புகளிலும் தமிழ் எந்த அளவுக்கு ஏற்புடைத்தாக இருக்கிறது. எந்த அளவுக்கு முரண்பட்டிருக்கிறது என்பதை அறிந்து சீர் செய்யவேண்டும்.

வன்பொருள் - தட்டச்சுப் பலகை முதல் கணினி சார்ந்த பல்வேறு கருவிகளும் ஆங்கிலமொழி வடிவத்தையே ஆதரிக்கின்றன. வன்பொருள்களும் தமிழ்பேசும் நிலையை உருவாக்கவேண்டும்.

இணையம் உலவிகள் தமிழுக்கேற்ப வடிவமைக்கப்பட்டுள்ளன. இருந்தாலும் முழுவதும் தமிழ் கட்டளைகளைக் கொண்ட உலவிகள் உருவாக்கப்பட்டு மக்கள் பயன்பாட்டுக்குக் கொண்டுவரவேண்டும்.

மென்பொருள்கள் - கணினியோடு பல்வேறு பணிகளைமேற்கொள்ள நாள்தோறும் உருவாக்கப்பட்டுவரும் மென்பொருள்கள் ஆங்கிலமொழியைக் கருத்தில் கொண்டே இன்றளவும் உருவாக்கப்பட்டுவருகின்றன. மென்பொருள் உருவாக்கத்தில் தமிழ்மொழிக்கு தனித்துவமான இடம்கொடுத்து மென்பொருள்கள் உருவாக்கப்படவேண்டும்.

மேகக்கணினி - வளர்ந்துவரும் தொழில்நுட்பமான மேகக்கணினி நுட்பத்தை தமிழுக்கு ஏற்ப எவ்வாறு பயன்படு்த்திக்கொள்வது என்பதுதொடர்பாக சிந்திக்கவேண்டும்.

மின்நூல்கள் - இணையத்தில் பெருகிவரும் மின்னூல்கள் இன்னும் தொழில்நுட்பங்களைப் பயன்படுத்தி சராசரி தமிழர்களுக்கும் சென்றுசேரச் செய்தல்வேண்டும்.

அலைபேசி (டேப்லட் பிசி, ஸ்மார்ட் போன்) - பெரிய பெரிய கணினி தயாரிப்பாளர்களும் இப்போது இந்த அலைபேசிகளுக்கே முக்கியத்துவம் கொடுத்து தயாரித்து வருகிறார்கள். அதனைக் கவனத்தில் கொண்டு, அலைபேசிகளின் இயங்குதளம் தொடங்கி, உலவிகள் வரை தமிழ் மொழியைப் பயன்படச் செய்தல்வேண்டும்.

மொத்தத்தில் நாம் இயல்பாக சுவாசிப்பதுபோல கணினியில் நம்தமிழ்மொழியும் இயல்பாகப் பயன்படுத்தப்படவேண்டும்.

தற்போது வளர்ந்துவரும் தொழில்நுட்பங்களுக்கேற்ப தமிழ் வளர்ந்துள்ளது எல்லா நிலைகளிலும் தமிழர்கள் பங்காற்றிவருகிறார்கள்,பயன்படுத்தி வருகிறார்கள்.
இருந்தாலும் பல்வேறு தேவைகளுக்கும் ஆங்கில மொழியின் உதவியையே நாடியிருக்கிறோம். (நம்மில் எத்தனைபேர் சமூகத்தளங்களில் தமிழைப்பயன்படுத்தி வருகிறோம்? 
இன்னும் தமிங்கிலத்தில்தானே பலரும் பயன்படு்த்தி வருகிறோம்)
அதனால் நம் அனுபவங்களையும், கண்டுபிடிப்புகளையும் முடிந்தவரை தமிழ்மொழியிலேயே பதிவு செய்வோம். 

வலைப்பதிவுகள்,முகநூல், டிவைடர், கூகுள் + என்னும் சமூகத் தளங்களில் தமிழ்மொழியின் ஆதிக்கத்தை நம் ஆளுமை வாயிலாக வெளிப்படுத்துவோம்.

தமிழ் இணையப்பல்கலைக்கழகம்
விக்கிப்பீடியா
நூலகம் 

போன்ற பல தமிழ் இணையதளங்களை உருவாக்குவோம் பயன்படுத்துவோம்.

இவ்வாறெல்லாம் நாம் ஒவ்வொருவரும் செய்தால் இணையத்தில் தமிழ் எதிர்காலத்தில் ஆதிக்கம் செலுத்தும் என்பது என் கருத்து.


எனக்குத் தெரிந்தவரை சில எதிர்காலத்தமிழ் இணையம் குறித்த எதிர்பார்ப்புகளை முன்வைத்திருக்கிறேன்.

அன்பு நண்பர்களே... தொழில்நுட்பப் பதிவர்களே எதிர்காலத் தமிழின் தேவைகுறித்த தங்களின் பார்வைகளை, கருத்துகளை ஆவலுடன் எதிர்பார்க்கிறேன்.


என்ற கருத்தை ஆழமாக சிந்தித்து நம்மால் ஆனவரை தமிழ் மொழியை இணையத்துக்கு ஏற்ப வடிவமைப்போம் வாருங்கள்....


தொடர்புடைய இடுகைகள்







14 கருத்துகள்:

  1. உண்மைதான் சகோ////

    இனத்தையும், இயற்கையையும் அழித்து மனிதன் வாழ முடியாது,,,

    மாணவர்களுக்கு விளிப்புணர்வை ஏற்படுத்துங்கள்,, பெரும் சமூக மாற்றத்தை அங்கிருந்து தான் தொடங்க முடியும்..

    பதிலளிநீக்கு
  2. தமிழ் என்றும் இளமையான மொழி..... காலத்துக்கேற்ப மாற்றிக்கொள்ளும்

    பதிலளிநீக்கு
  3. சிறப்பான பகிர்வு... இணைப்பில் உள்ள பதிவுகளை படிக்கிறேன்...

    நன்றி...

    பதிலளிநீக்கு
  4. சைனிஸ் இரண்டாம் இடத்தில் இருப்பது ஆச்சிரியமாக இருக்கிறது!

    பதிலளிநீக்கு

  5. அருமையானக் கருத்துக்கள்! இக்கருத்துக்களை எதிர் காலம் செயல் படுத்தினால் தமிழின் பெருமையை உலகு அறியும்

    பதிலளிநீக்கு