- சுவர் பெரிதாக இருப்பதால் கல்வி தன்னைவிட்டு மிகத்தொலைவில் இருப்பதாக இந்தக் குழந்தை எண்ணி்க்கொள்ளவில்லை. தான் கற்றுக்கொள்ளவேண்டும் என்ற உறுதியுடைய மனம் இந்தக் குழந்தையிடம் உள்ளது அதனால் வெளியே இருந்துகூட இந்தக் குழந்தையால் கற்றுக்கொள்ளமுடிகிறது..
சில குழந்தைகள்
பள்ளியின் உள்ளே இருந்தும் கற்றுக்கொள்ளாமல் இருப்பதையும் நம்மால் காணமுடிகிறது.
கற்றுக்கொள்ளவேண்டும்
என்ற ஆர்வம் மட்டும்
இருந்தால் போதும் எதுவும் தடையல்ல
என்ற உயர்ந்த சிந்தனையை
இந்தக் காட்சி நமக்குப் புலப்படுத்துகிறது.
- அந்தக் காலத்தில் குழந்தைகள் தான் புத்தகங்களைக் கிழிப்பார்கள். இன்றெல்லாம் வன்முறை உணர்வைத் தூண்டித் தவறான பாதைக்கு அழைத்துச்செல்லும் புத்தகங்கள் குழந்தைகளைக் கிழித்துவிடுகின்றன. இந்த உண்மையை அழுத்தமாகச் சொல்லும் நிழற்படம் இது.
- கல்வி - பணம் இரண்டில் எது மதிப்பு மிகுந்தது?
பணத்தைக் கொடுத்து கல்வியை வாங்குகிறோம்
கல்வியை விற்றுப் பணமாக்குகிறோம்
இலவசமாகக் கிடைக்கும் எதற்கும் மதிப்பிருக்காது என்பது உண்மைதான்
அதற்காக அதிகவிலைகொடுத்து இந்தக்கல்வியை வாங்கும்போது
அதைப் பெறும் மாணவர்களுக்கு மனிதாபிமானம் இருக்காது என்ற கருத்தையும் நாம் சிந்திக்கவேண்டும்.
கற்க கசடறக் கற்பவை கற்றபின்
நிற்க அதற்குத் தக
திருக்குறள் -391
தொடர்புடைய இடுகை
இன்றைய சூழலில் கல்விச் செல்வம் விற்பனைக்கு வந்து விட்டது. விற்பனையின் தாக்கத்தினை நாம் பல இடங்களில் உணர்ந்து தான் கொண்டிருக்கின்றோம்.
பதிலளிநீக்குநன்றி
உண்மைதான் சிவஹரி. தங்கள் வருகைக்கு நன்றி.
நீக்குகல்வியை வியாபாரமாக்கும் இந்த காலகட்டத்தில் இலவசமாகக் கிடைக்கும் கல்விக்கு மதிப்பிருக்காது என்பது உண்மைதான் முனைவரே...
பதிலளிநீக்குஎனது தளத்தில்
குழந்தை தொழிலாளி
உண்மைதான் கவிஞரே. தங்கள் வருகைக்கும் மறுமொழிக்கும் நன்றிகள்.
நீக்குஅன்று கல்வி ஒரு சேவை...
பதிலளிநீக்குஇன்று கல்வி பணம் கொழிக்கும் நல்ல தொழில்...
குழந்தைகள் மீது தவறில்லை...
பணத்திற்கும்... இல்லை இல்லை... படிப்பிற்கும் மனிதாபிமானத்திற்கும் சம்பந்தம் இல்லை என்றே எனக்குத் தோன்றுகிறது... (இன்று அல்ல... என்றும்...)
உண்மைதான் அன்பரே.. தங்கள் வருகைக்கும் மறுமொழிக்கும் நன்றிகள்.
நீக்குஉண்மைதான்!சிறப்பான பகிர்வு.
பதிலளிநீக்குநன்றி குட்டன்.
நீக்குகல்வி பறிக்கும் அரசியல் இப்பவெல்லாம்.பணமொன்றேதான் வாழ்க்கையும் ஆகிறது !
பதிலளிநீக்குஉண்மைதான் ஹேமா..
நீக்குதங்கள் வருகைக்கும் மறுமொழிக்கும்நன்றி.