பக்கங்கள்

இந்திய குடிமைப் பணித்தேர்வு - தமிழ் - 2 - (UPSC EXAM TAMIL)

வெள்ளி, 28 செப்டம்பர், 2012

இணையத்தில் உங்கள் மொழிநடை?


கருத்துச் சுதந்திரம் நிறைந்தது இன்றைய இணைய உலகம்.
யார் வேண்டுமானாலும் தம் கருத்தை முழுமையாக தெரிவிக்கும் வாய்ப்பு இன்று யாவருக்கும் உள்ளது. அதற்கான ஊடகங்களும் இன்று நிறையவே வந்துவிட்டன.

மொழியுரிமை என்றால் என்ன?என்றுதான் இன்று பலருக்குத் தெரிவதில்லை.

மொழியுரிமை என்பது ஏதோ நம் தன்விவரக்குறிப்பிலோ, விண்ணப்பங்களிலோ தாய்மொழி எது என்ற கேள்விக்குமட்டும் பயன்படக்கூடியது என்ற சிந்தனை இன்று இளம் தலைமுறையினரிடம் உள்ளது.

நம் கருத்துக்களை நம் தாய்மொழியில் வெளியிடவேண்டும்
என்ற உணர்வு இன்று பலருக்கு இல்லை.

நம் ஆங்கில அறிவைக் காட்டுவதற்கான வாய்ப்புகள் இங்கு நிறைய உள்ளன. இருந்தாலும் நாம் யார் என்று காட்ட நமக்கு நம் தாய்மொழிதானே அடையாளம். அந்த அடையாளத்தை நாம் தொலைத்துவிட்டால் எதிர்காலத்தில் நாம் தாய்மொழி என்று சொல்லிக்கொள்ள தமிழ் இருக்குமா..?

தமிழர்கள் இன்று உலகுபரவி வாழ்கின்றனர்.. சாதாரணமாக பழந்தமிழ் இலக்கியங்கள் பற்றி எழுதும் எனது வலைப்பதிவுக்கே 134 நாடுகளிலிருந்து பார்வையாளர்கள் வந்திருக்கிறார்கள் என்றால் தமிழின், தமிழரின் பரவல் என்ன என்பதை நாம் உணர்ந்துகொள்ளமுடியும்.

பல்வேறு நாடுகளில், பல்வேறு துறைகளில் பணிபுரியும் தமிழர்கள் எல்லோரும் ஒன்றாகக் கூடும் இடம் இணையம்.

சிலர் சொந்தமாக இணையதளம் வைத்திருக்கிறார்கள்
சிலர் வலைப்பதிவுகள் வைத்திருக்கிறார்கள்
குறைந்தபட்டசம் ஏதாவது சமூக தளங்களிலாவது தமது கருத்துக்களை வெளியிடுபவர்களாகவே இன்றைய தமிழர்கள் இருக்கிறார்கள்.

இருந்தாலும் இவர்கள் தம் கருத்துக்களை வெளியிட எந்த மொழியைப் பயன்படுத்துகிறார்கள்..?

என் பார்வையில்...

தமிழ் பயன்படுத்துவோர்
ஆங்கிலம் பயன்படுத்துவோர்
தமிங்கிலம் பயன்படுத்துவோர்
பிற மொழிகளைப் பயன்படுத்துவோர்

என பாகுபாடு செய்துகொள்கிறேன். இந்தத் தமிழர்கள் எல்லோரும் தம் கருத்துக்களைத் தமிழிலேயே வெளியிட்டால்..

எதிர்காலத்தில் இணையத்தில் அதிகம் பயன்படுத்தப்படும் மொழிகளின் வரிசையில் நம் தமிழ்மொழியும் இடம்பெறும் இல்லையா..


தமிழ் பயன்படுத்துவதில் உள்ள சிக்கல்கள்

இன்னும் பலர் இணையத்தில தமிழ் எவ்வாறு எழுதுவது என்றே தெரியாதவர்களாக இருக்கிறார்கள். அவர்களுக்காக நான் பரிந்துரைக்கும் இணைய பக்கங்கள்..



அன்பான தமிழ் உறவுகளே............. 
நம் தாய்மொழியான தமிழ்மொழி எதிர்காலத்தில் இணையத்தில் அதிகமாகப் பயன்படவேண்டும் என்ற எனது வேட்கையாக இவ்விடுகையை வெளியிடுகிறேன்..
தமிழுக்காக சில மணித்துளிகளை நீங்கள் ஒதுக்குவீர்கள் என்ற நம்பிக்கையில்...

இவ்விடுகையின் மேல்பக்கத்தில தமிழின் பரவலும், பயன்பாடும் குறித்த வாக்கெடுப்புவைத்திருக்கிறேன்.
உங்கள் கருத்துக்களை நீங்கள் வெளியிடும் ஊடகம் எது?
அதற்காக நீங்கள் பயன்படுத்தும் மொழிநடை எது?
என்பதை வாக்களித்துத் தெரியப்படுத்துங்கள் என்று
அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்..

நன்றி.

தொடர்புடைய இடுகைகள்




31 கருத்துகள்:

  1. மானக்கெட்ட தமிழன் தமிழில் பேசுவதையே அவமானமாக நினைக்கும்போது..எழுதும்போது மட்டும் தமிழிலா எழுதுவான்..? ஆங்கிலத்தில் எழுதினால்தான் உலகம் தன்னை அறிவாளி என்று நினைக்கும் அதிமேதாவி அல்லவா அவன்..? தன் குழந்தைக்குத் இருபது என்று சொன்னால் புரியாது..ட்வென்டி என்று சொன்னால்தான் புரியும் என்று திருமணக்கூட்டத்தில் பெருமை பீற்றுபவந்தானே அவன்...? இணையமாவது ...தமிழாவது...?

    பதிலளிநீக்கு
  2. சமூக வலைத்தளங்களில் படங்களையும் ஒன்றரையணா தத்துப்பித்துவங்களையும் பகிர்வதுதானே பெரும்பாலோனோரின் வேலை...தமிழுக்கு அங்கு என்ன வேலை...?

    பதிலளிநீக்கு
  3. உங்கள் சேவை பாராட்டப் படவேண்டியது . அன்புடன் வாழ்த்துகள்

    பதிலளிநீக்கு
  4. சிறந்த முயற்சி... வாழ்த்துக்கள்...

    வாக்களித்து விட்டேன்...

    பதிலளிநீக்கு
  5. அனைவரும் உணரவேண்டிய செய்தி இது .இந்தத் தகவலை
    வெளியிட்ட தங்களின் தமிழ் மீது உள்ள பற்றுக்கும் ,முயற்சிக்கும்
    என் வாழ்த்துக்கள் உரித்தாகட்டும் .மிக்க நன்றி பகிர்வுக்கு .

    பதிலளிநீக்கு
  6. இந்த காலத்தில் ஆங்கிலத்தில் பேசுபவர்கள் தான் நம்மை விட அறிவாளி என்று
    நினைப்பார்கள் தமிழில் எழுதுவது தங்கள் தரக்குரைவாக நினைப்பார்கள்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. சிவப்பு என்பது அழகல்ல நிறம்
      ஆங்கிலம் என்பது அறிவல்ல மொழி என்பதை நாம் அவர்களுக்குப் புரியவைக்கவேண்டும் அன்பரே.

      நீக்கு
  7. தமிழ் குறித்த உங்கள் ஆதங்கம் ஏற்புடையதே..

    பதிலளிநீக்கு
  8. தமிழ் பயன்படுத்துவோர் எண்ணிக்கை நிச்சயம் அதிகரிக்கும். உங்கள் முயற்சியும் பாராட்டத்தக்கது.

    பதிலளிநீக்கு
  9. என் எண்ணங்களைச் சிறப்பாக வெளியிட என் தாய்மொழியில் பேசுவதும் எழுதுவதும்தானே எளிது?
    நல்ல பகிர்வு

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களைப்போலவே தமிழர்கள் யாவரும் எண்ணிவிட்டால் நம் கனவு விரைவில் நிறைவேறும்.

      நீக்கு
  10. உங்கள் எண்ணங்கள் ஏற்றமுடைத்து நண்பரே.

    பதிலளிநீக்கு
  11. வ‌ண‌க்க‌ம் பேராசிரிய‌ரே! மொழிப்ப‌ற்று உள்ள‌வ‌ர்க‌ள் தேடிக் க‌ண்ட‌டைவார்க‌ள் தாய்மொழியில் க‌ருத்துக‌ளைப் ப‌கிர‌ த‌க்க‌ வ‌ழியை. மாற்றான் தோட்ட‌த்து ம‌ல்லிகை ம‌ண‌த்துக்காக‌ நாசியை விரித்துக் காத்துக் கிட‌க்கும் அறியாமை இருள‌க‌ற்ற‌ 'வேர்க‌ளைத் தேடி' அக‌ழ்ந்தெடுக்கும் த‌ங்க‌ள் ப‌ணி சிற‌ப்புடைய‌து.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வணக்கம் நிலாமகள்.. தங்கள் வருகைக்கும் வாசித்தலுக்கும் நன்றிகள்.

      நீக்கு
  12. தாய் மொழியில் எழுதும் போது புரிந்துணர்வு நன்றாக இருக்கும் இது என் கருத்து ஐயா!

    பதிலளிநீக்கு
  13. பாராட்டப்பட வேண்டிய நல்ல முயற்சி. வாக்களித்து விட்டேன்.

    பதிலளிநீக்கு
  14. பாராட்டப்பட வேண்டிய நல்ல முயற்சி. வாக்களித்து விட்டேன்.

    பதிலளிநீக்கு
  15. மனதைத் தொடும் பதிவு..தமிழ் மக்கள் தமிழை ஒதுக்கினால் மனம் துயரப்படுகிறது...:நெஞ்சு பொறுக்குதில்லையே இந்த நிலை கெட்ட மாந்தரை நினைந்து விட்டால்.." என்ற பாரதியின் வரிகள் தான் நினைவு வரும்...தங்கள் முயற்சி கண்டு மகிழ்ச்சியாக உள்ளது..
    இதனை ஒட்டிய என்னுடைய பதிவு ஒன்று

    http://thaenmaduratamil.blogspot.com/2012/07/blog-post_30.html

    பதிலளிநீக்கு
  16. தங்கள் பதிவைக் கண்டேன் மகிழ்ந்தேன்.
    தங்கள் வருகைக்கும் மறுமொழிக்கும் நன்றி.

    பதிலளிநீக்கு
  17. இணையத்தில் தமிழர்கள் எத்தனை பேர் என்ற ஒர் சின்ன தகவலைத் தேடி வந்ததில் ஏமாற்றமாக இருந்தாலும், நல்ல தளம். இணையத்தில் தமிழை அடுத்த கட்டத்திற்கு எடுத்துச் செல்லும் பணியில் படுகை.காம் இணையதள பணி வாய்ப்பு மிகவும் பயனளிக்கும் என்பதில் மிக்க பெருமை

    பதிலளிநீக்கு