வேர்களைத்தேடி தளத்திற்குத் தங்களை அன்புடன் வரவேற்கிறேன்... இத்தளத்தில் சங்க இலக்கியம், கணினித்தமிழ் சார்ந்து எனது அனுபவங்களைப் பகிர்ந்து வருகிறேன். 13 ஆண்டுகளில் 1500க்கும் மேற்பட்ட பதிவுகளை வழங்கியுள்ளேன். தற்போது இந்தியக் குடிமைப் பணித்தேர்வுக்கான விருப்பப் பாடம் தமிழுக்குரிய விளக்கங்களைத் தொடர்ந்து வழங்கி வருகிறேன். தங்கள் மேலான வருகைக்கு நன்றிகளைத் தெரிவித்துக்கொள்கிறேன்.

புதன், 26 செப்டம்பர், 2012

உலகாளும் முறை - UPSC EXAM TAMIL - புறநானூறு -185


    உலகில் ஆட்சி செய்யும் ஒவ்வொரு அரசனுக்கும் இருக்கவேண்டிய அடிப்படைத் தகுதியை உரைப்பதாக இப்பாடல் அமைகிறது.

    அரசனின் ஆட்சித்திறனை ஒரு வண்டியாக உவமித்துத் தொண்டைமான் இளந்திரையன் பாடுவதாக இப்பாடல் அமைகிறது
    .

    ஆளுவோன் திறமையுடையவனாக இருந்தால் வண்டி எந்த இடையூறும் இன்றி இனிதாகச் செல்லும்.

    அவனுக்கு சரியாக வண்டியை ஓட்டத்தெரியாவிட்டால் நாடு பகையென்னும் சேற்றில் அழுந்தி மிகப்பல துன்பங்களை அடையும். என உரைப்பதாக இப்பாடல் அமைகிறது.

            
    கால்பார் கோத்து, ஞாலத்து இயக்கும்
    காவற் சாகாடு உகைப்போன் மாணின்,
    ஊறுஇன்றாகி ஆறுஇனிது படுமே;
    உய்த்தல் தேற்றான் ஆயின், வைகலும்,
    பகைக்கூழ் அள்ளற் பட்டு,

    மிகப்பல் தீநோய் தலைத்தலைத் தருமே.

    புறநானூறு -185
    பாடியவர்தொண்டைமான் இளந்திரையன் 
    திணை - பொதுவியல்
    துறை - பொருண்மொழிக் காஞ்சி



    அரசனின் ஆட்சித்திறத்தை ஒரு வண்டியாக உவமித்துத் தொண்டைமான் இளந்திரையன் பாடிய இப்பாடலில்,
    இந்தப் புறநானூற்றுப் பாடல் அக்கால மன்னராட்சி முறையின் நெறிமுறைகளைக் காட்சிப்படுத்துகிறது..

    இந்தப்பாடலில், வண்டியைச் செலுத்துவோன் திறமையுடையவனாக இருந்தால் வண்டி எவ்வித இடையூறுகளும் இன்றி செல்லும். அதுபோல ஆட்சிசெய்யும் அரசன் அரசியல் முறையை நன்கு அறிந்தவனாக இருந்தால் நாடு நலம் பெறும். மக்கள் வளம் பெறுவார்கள். அதனால் அரசனும் சிறப்புப் பெறுவான்.

    வண்டியைச் செலுத்தும் திறமை இல்லாதவனாக இருந்தால் வண்டி வழிதவறிச் சென்று சேற்றில் அழுந்தி துன்பத்திற்கு  உள்ளாகும். அதுபோல அரசாளும் முறை அறியாதவானக அரசன் இருந்தால் நாடு உட்பகை, புறப்பகை என்னும் சேற்றில் அழுந்தி அரசன் துன்பமடைவான். நாடும் சீர்கேடு அடையும். 

    கால் என்றால் உருளை என்றும் பார் என்றால் வண்டியின் உறுப்புகளில் ஒன்று என்றும் பொருள் கொள்வோம். 

    மன்னன் என்பதற்குப் பதிலாக அரசியல்வாதிகளையும்
    வண்டி என்பதற்குப் பதிலாக நம் நாட்டையும், 
    பகை என்பதற்குப் பதிலாக நம் நாடு சந்திக்கும் சவால்களையும் கருத்தில் கொள்வோம்..

    தமிழ்ச்சொல் அறிவோம்
    கால் - உருளை (சக்கரம்)
    பார் - வண்டியின் உறுப்புகளுள் ஒன்று
    ஞாலம் - உலகம்
    சாகாடு - வண்டி
    கைப்போன் - செலுத்துவோன்
    ஊறு - துன்பம்
    ஆறு - வழி
    தேற்றான்
    - தெளியான்
    அள்ளல் - சேறு
    தலைத்தலை - மேலும்மேலும்



தொடர்புடைய இடுகை

                             1  அந்த மகராசன் மிக நல்லவன்

14 கருத்துகள்:

  1. நன்றாகவே புரிகிறது சார்...

    தமிழ்ச்சொற்களுக்கு மிக்க நன்றி...

    பதிலளிநீக்கு
  2. அருமையான புறநானூற்று பாடலை பகிர்ந்தமைக்கு நன்றி முனைவரே!

    அறிந்தேன் சில தமிழ் சொற்கள்!

    பதிலளிநீக்கு
  3. //எங்கே இருக்கிறோம்?//
    எல்லோரும் தெரிந்துகொள்ள வேண்டிய தகவல் நண்பரே...

    எனது தளத்தில் என் காதல் க(வி)தை... 03

    பதிலளிநீக்கு


  4. உண்மையை உரைத்தீர்கள்! உணர்வாரா ஆள்வோர்!

    பதிலளிநீக்கு