ஒரு பேருந்தில் வந்துகொண்டிருந்தேன்.
பேருந்து கூட்டத்தால் நிரம்பிவழிந்தது.
அடுத்த நிறுத்தத்துக்கு கொஞ்ச தூரம் இருக்கும்போது ஒரு பெண்மணி
நிறுத்துங்க... என்று மெதுவாகச் சொன்னார்..
நான் நினைத்தேன் இவர் சொல்வது அருகே நிற்கும் நமக்கே மெதுவாகத்தானே கேட்கிறது நடத்துனருக்கு எப்படிக்கேட்கும் என்று..
நிறுத்தமும் வந்தது..
யாரும் இறங்கவேண்டுமா? என்று சத்தமாகக் கேட்டார் நடத்துனர்.
அப்போதும் அந்தப் பெண்மணி மூட்டைமுடிச்சுகளோடு..
ஆமா நிறுத்துங்க... என்று மெதுவாகச் சொன்னார்..
நானும் என்னடா இது இந்தம்மா இவ்வளவு மெதுவாச் சொல்றாங்க!வண்டிபோகும் வேகத்துக்கும், ஒலிக்கும் பாடலின் ஒலிக்கும் எப்படி ஓட்டுநர் வண்டியை நிறுத்துவார் என்று எண்ணிக்கொண்டிருந்தேன்..
நான் எதிர்பார்த்ததுபோலவே பேருந்து அவர் இறங்கவேண்டிய நிறுத்தத்தைக் கடந்து நீண்டதூரம் வந்துவிட்டது..
அப்போதுதான் அந்தப் பெண்மணி ஐயோ நிறுத்துங்க நிறுத்துங்க நான் இறங்கவேண்டும் என்று கத்தினார்..
உடன்வந்த பயணிகளும் அந்தப் பெண்மணி பாவம் என்று எல்லோருமாகச் சேர்ந்து கத்தி வண்டியை நிறுத்தினர்.
அந்தப்பெண்மணியும் மூட்டைமுடிச்சுகளோடு கீழே இறங்கினார்.
பேருந்து கிளம்பியது..
கொஞ்சதூரத்தில் நெரிசல் காரணமாக பேருந்து நின்றது.
உடன் வந்தபயணிகள் பார்த்தீங்களாயா இந்த அம்மா எவ்வளவு விவரம்?
என்றார்கள். என்ன என்று நானும் திரும்பிப்பார்த்தேன்.
அந்த அம்மா அப்போது இறங்கிய இடம் தான் அவர் வீடு இருக்கிறது.
தன்வீட்டினருகே நிறுத்தச் சொன்னால் ஓட்டுனர் நிறுத்தமாட்டார் என்பதை அறிந்துதான் அந்தப் பெண்மணி இப்படி மெதுவாக...
நிறுத்துங்க... நிறுத்துங்க... என்று சொல்லிவிட்டுத் தன் நிறுத்தம் வந்ததும் சத்தமிட்டு நிறுத்தியிருக்கிறார் என்பதை அறிந்து வியந்துபோனேன்.
வேடிக்கை மனிதர்கள் என நினைத்துக்கொண்ட எனக்கு அப்போது மனதில் தோன்றியது..
இந்தப் பெண்மணி எவ்வளவு புத்திசாலி..!
இந்த நடத்துனர் எவ்வளவு பாவம்..
என்று.. இவர்களைப் போன்ற நடத்துனர்களின் நலனுக்காகவே வந்திருக்கிறது புதிய தொழில்நுட்பம்..
- நேற்று திருச்செங்கோட்டிலிருந்து ஈரோடுக்கு ஒரு தனியார் பேருந்தில் வந்தேன். பேருந்தில் திரையரங்கில் காண்பதுபோல அதிக ஒலியோடு திரைப்படம் ஓடிக்கொண்டிருந்தது. திடீரென்று அந்த ஒலியைவிட அதிகமான ஒலியோடு தொடர்வண்டிநிலையத்தில் அறிவிப்பு செய்வதுபோல... டிங் டிங் டிங்... என மணியொலியோடு...
“பள்ளிப்பாளையத்தில் இறங்கும் பயணிகள்
இறங்குவதற்குத் தயாராகவும்..”
என்று ஒரு அறிவிப்பு தமிழ் மற்றும் இந்தி மொழியில் வந்தது. வியந்துபோனேன்.
அடுத்து கருங்கல்பாளையம் வந்தவுடன் அதே போல ஒரு அறிவிப்பு..
“கருங்கல் பாளையம் இறங்கும் பயனிகள் இறங்குவதற்குத் தயாராகவும்..” என்று..
ஈரோடு பேருந்து நிலையத்திற்குள் நுழைந்தவுடன்...
“ஈரோடு பேருந்துநிலையம் தங்களை அன்புடன் வரவேற்கிறது.” என்றொரு அறிவிப்பு வந்தது..
தமிழகத்தில், பயணிகளுக்கும் நடத்துனருக்கும் நாள்தோறும் நடக்கும் சண்டைகளுக்கு முற்றுப்புள்ளி வைப்பது போல இந்தத் தொழில்நுட்பம் வந்திருக்கிறது. இதே தொழில்நுட்பத்தை எல்லாப் பேருந்துகளிலும் பயன்படுத்தலாமே என்று நினைத்துக்கொண்டே வந்தேன்.
தாங்கள் சுட்டிக்காட்டிய முதல் நிகழ்வு மிக அருமையாக உள்ளது. எவ்வளவு சாமர்த்தியமான பெண்மணி அவள்!
பதிலளிநீக்குதாங்கள் அடுத்து சொன்ன ஆலோசனையும் மிகவும் சிறப்பாகவே உள்ளது. அனைத்துப்பேருந்துகளிலும் பின்பற்றினால் மிகவும் நல்லது தான்.
பாராட்டுக்கள். பகிர்வுக்கு நன்றிகள்.
வருகைக்கும் மறுமொழிக்கும் நன்றி ஐயா.
நீக்குநல்ல விஷயம். தில்லியில் பேருந்துகளில் சில காலமாகவே இம்முறை இருக்கிறது முனைவரே...
பதிலளிநீக்குதமிழகத்திலும் வந்திருப்பது நல்ல விஷயம்.
ஓ அப்படியா.. நன்றி நண்பரே.
நீக்குஅந்தப் பெண்ணின் நுட்பத்தையும்
பதிலளிநீக்குதொழிற் நுட்பத்தையும் இணைத்துச் சொன்னவிதம்
மனம் கவர்ந்தது
சுவாரஸ்யமான படம்.பதிவு
தொடர வாழ்த்துக்கள்
மகிழ்ச்சி அன்பரே.
நீக்குசிலர் இப்படித்தான் ரொம்பவும் விபரமாக இருப்பார்கள்!
பதிலளிநீக்குஆம் நண்பா. வருகைக்கு நன்றி.
நீக்குஇதேபோல நானும் ஒரு இடத்தில் கண்டதுண்டு. புதிய தொழில்நுட்பம் வந்துவிட்டால், புதிய ஊர்களுக்கு செல்லும் இடங்களில் "அந்த இடம் வந்தவுடனே சொல்லுங்க" என்று சக பயணியிடம் வேண்டுகோள் வைக்கும் சிரமமும் போய்விடும்!
பதிலளிநீக்குஉண்மைதான் மணி.. வருகைக்கு நன்றி.
நீக்குவேடிக்கை மனிதர்கள் !!
பதிலளிநீக்குவருகைக்கும் மறுமொழிக்கும் நன்றி இராஜேஸ்வரி.
நீக்குnalla visayam!
பதிலளிநீக்குநன்றி சீனி.
நீக்குவணக்கம் முனைவரே...
பதிலளிநீக்குமுன்னம் கூறியது போல
பேருந்தில் இப்படியான சம்பவங்கள்
நிறைய நடக்கும்
பொதுவாக நகரப் பேருந்துகளில் ....
எல்லாவற்றிலும் தொழில்நுட்பம்
தலைதூக்கி இருக்கும் இவ்வேளையில்
பேருந்துகளில் இப்படியான
தொழில்நுட்பம் கொண்டு வந்தது
நடத்துனருக்கு நிம்மதியையும்
பயணிகளுக்கு மகிழ்ச்சியையும் கொடுக்கும்...
உண்மைதான் அன்பரே வருகைக்கும் மறுமொழிக்கும் நன்றி.
நீக்குஇரண்டு நல்ல தொழில் நுட்பங்கள். அம்மா (1) பஸ் டி.வி.(2)
பதிலளிநீக்குவருகைக்கும் வாசித்தலுக்கும் நன்றிகள் ஐயா.
நீக்குபுதிய தொழில்நுட்பம், அனைவரும் விரும்புவர்.
பதிலளிநீக்குவருகைக்கு நன்றி நிசாமுதீன்.
நீக்குபயன்மிக்க தொழில்நுட்பம்..! நன்றி...! நடத்துனர்களின் சிரமத்தைக் குறைக்கும் வகையில் அமைக்கப்பட்ட இத்தொழில்நுட்பம் பேருந்துகளெங்கும் பரவ வேண்டும்.
பதிலளிநீக்குகையில் ஒரு Smart போன் இருந்தாலே போதும் நீங்கள் நினைத்த பொருட்களை உடனே வாங்கமுடியும். அதுமட்டுமா, அப்பொருளைப் பற்றிய விபரங்களையும் தெரிந்துகொள்ள முடியும்... அதுமட்டுமா... இன்னும் நிறைய பயனுள்ள தகவல்களைத் தாங்கி வந்திருக்கிறது கீழ்க்கண்ட பதிவு...
தொழில்நுட்பங்கள் செய்யும் மாயைகளை இங்கேயும் விளக்கியிருக்கிறேன்.. வந்து வாசித்துப் பாருங்களேன்...!!
புதிய தொழில் நுட்பம் NFC
வருகைக்கும் மறுமொழிக்கும் நன்றி நண்பா.
நீக்குபுத்திசாலியான பெண்மணிதான்! புதிய தொழில்நுட்பம் எல்லா பேருந்துகளிலும் வருமானால் பயனளிப்பதாக இருக்கும்!
பதிலளிநீக்குஉண்மைதான். தங்கள் வருகைக்கு நன்றி சுரேஸ்
நீக்குஅந்தப் பெண் உண்மையில் விவரமானவர் தான்..
பதிலளிநீக்குநிறுத்தம் குறித்து அறிவிப்பு செய்யும் நுட்பம் மிக அவசியமானதே!! பல சங்கடங்களைத் தவிர்க்கலாம்.
ஆனால், நம்மவர்கள் எத்தனை நாட்கள் பயன்படுத்துவார்கள் என்று தெரியவில்லை.
2005-2007 காலக் கட்டத்தில் பல பேருந்துகளிலும் தொலைக் காட்சி அறிமுகப் படுத்தப்பட்ட காலம்.
அப்போது, திருச்சி- சேலம் அரசுப் பேருந்துகள் பலவற்றில், ஒவ்வொரு நிறுத்தத்திலும், அந்த நிறுத்தத்தின் பெயரையும், அங்கிருந்து அடுத்து வரும் முக்கிய நிறுத்தங்களுக்கான பயணச்சீட்டு கட்டணத்தைத் திரையில் காட்டுவர்.
இந்த வசதி பல புதிய பயணிகளுக்கு வசதியாக இருந்தது.
ஆனால், இது தற்போது இருப்பது போல் தெரியவில்லை!
தங்கள் அனுபவப் பகிர்வுக்கு நன்றிகள் அருண.
நீக்குரொம்ப புத்திசாலியான பெண்மணி....
பதிலளிநீக்குநன்றி,
மலர்
http://www.ezedcal.com/ta (வலைப்பூ உரிமையாளர்களுக்கான தலையங்க அட்டவணை உருவாக்க உதவும் வலைதாளம் பயன்படுத்தி பயன்பெறுங்கள்)
தங்கள் வருகைக்கும் மறுமொழிக்கும் நன்றி.
பதிலளிநீக்கு