மக்கு மனுசன்
பயன்படுத்துவதெல்லாம் மக்காப் பொருள்கள்
அதனால் மண்ணே மக்கா போச்சு
மக்கா யோசிங்க...
நாமெல்லாம் மக்கிப் போகலாம்
இந்த மண்ணு மக்காமப் போகலாமா..?
சொல்லும் பொருளும்
மக்கு மனுசன் - முட்டாள் மனிதன்
மக்கா பொருள்கள் - மக்காத பொருள்கள்
மண்ணே மக்காப் போச்சு - மண் மலடாப் போச்சு
மக்கிப் போகலாம் - மறைந்து மண்ணில் கலந்துபோகலாம்
மக்காமப் போகலாமா - மக்கித்தான் போகனும்
அதனால் மரங்களை வெட்டாதீர்கள்
நாளைய குடிநீர்
மக்கிப் போகலாம் - மறைந்து மண்ணில் கலந்துபோகலாம்
மக்காமப் போகலாமா - மக்கித்தான் போகனும்
தொடர்புடைய இடுகைகள்
அதனால் மரங்களை வெட்டாதீர்கள்
நாளைய குடிநீர்
மக்காத எண்ணங்களுடன் வந்த
பதிலளிநீக்குமக்கும் விடயம்,
மக்காத விடயம் பற்றி வாசித்தேன் நன்றி.
இப்படிப் போடும் போது பலர்
புதிய வார்த்தைகளையும் அறிவார்கள் அல்லவா!.
நன்றி. நல்வாழ்த்து.
வேதா. இலங்காதிலகம்.
உண்மைதான் கவிஞரே..
நீக்குவருகைக்கும் மறுமொழிக்கும் நன்றி.
அருமையான பகிர்வு...
பதிலளிநீக்குவார்த்தைகளுக்கான விளக்கமும் அருமை.
மக்கு, மக்கிப் போச்சு, இன்னும் மக்கலை எல்லாம் எங்க பக்க பேச்சு வழக்குகள்தான்.
அருமை முனைவரே.
தங்கள் வருகைக்கும் மறுமொழிக்கும் நன்றி நண்பா.
நீக்குசொல்லும் பொருளும் - விளக்கம் அருமை சார்...
பதிலளிநீக்குநன்றி... வாழ்த்துக்கள்...
நன்றி தனபாலன்.
நீக்குசுற்றுப்புற சூழலை சீர்கேடடைய செய்துகொண்டிருக்கும் முக்கிய காரணிகளில் ஒன்றான பிளாஸ்டிக்கை வைத்து நல்ல கவிதை நண்பரே!
பதிலளிநீக்குதங்கள் தொடர்வருகைக்கும் மறுமொழிகளுக்கும் நன்றிகள் நண்பா.
நீக்குஅருமையாக சொல்லப்பட்ட சிந்தனை செய்ய வேண்டிய அருமையான பதிவு.
பதிலளிநீக்குநன்றி கிரேஸ்
நீக்குமக்கு நானு.. இன்னொரு வாட்டி சொல்றீங்களா?
பதிலளிநீக்குதான் ஒரு அறிவாளி என எண்ணிக்கொள்ளும்போது அறிவளி முட்டாளாகிறான்.
நீக்குதான் ஒரு முட்டாள் என உணரும்போது முட்டாள் அறிவாளியாகிறான்.
தாங்கள் தங்களை மக்கு என உணர்ந்தால் நீங்கள் அறிவாளிதான் நண்பரே..
உண்மை.....
பதிலளிநீக்குஅழகான பதிவு
ஒரு வித்தியாசமான ஆளுமை உங்கள் ஆக்கத்தில் கண்டு
பதிலளிநீக்குமகிழ்ந்தேன் .தொடர வாழ்த்துக்கள் .