பக்கங்கள்

இந்திய குடிமைப் பணித்தேர்வு - தமிழ் - 2 - (UPSC EXAM TAMIL)

ஞாயிறு, 12 ஆகஸ்ட், 2012

(IQ) குழந்தைகளின் நுண்ணறிவு (IQ)


    IQ
    ஆளும் வளரனும் அறிவும் வளரனும் அதுதான்டா வளர்ச்சி!

    ஐந்தில் வளையாதது ஐம்பதில் வளையாது!

    விளையும் பயிரு முளையிலேயே தெரியும்!

    என்றெல்லாம் சொல்லப்பட்ட அனுபவமொழிகள் எவ்வளவு ஆழமானவை என்பது இன்றைய அறிவியல் உண்மைகளைக் காணும் போதுதான் புரிகிறது.



    IQ - 120 இருந்தால் ஐஏஎஸ் படிக்கவைக்கலாம்
    IQ - 110 இருந்தால் மருத்துவம் படிக்கவைக்கலாம்
    IQ - 100 அல்லது அதற்குக் கீழே இருந்தால் ஏதாவது ஒரு பட்டம் படிக்கவைக்கலாம்
    IQ - 80 க்கும் கீழே இருந்தால் சும்மா அவர்களைப் படி படி என்று துன்புறுத்துவதைவிட அவர்களின் பிழைப்புக்கான ஏதாவது தொழிலைக் கற்றுக்கொடுக்கலாம் என்று உளவியலாளர்கள் பரிந்துரை செய்கிறார்கள்.


    அந்தக் காலத்தில் மாணவர்களை, கற்பூர புத்தி, கரித்துண்டு, வாழை மட்டை புத்தி என்று பாகுபாடு செய்வார்கள்

    கற்பூர புத்தி - இந்த வகை குழந்தைகள் சொன்னவுடனேயே புரிந்துகொள்வார்கள்..


    கரித்துண்டு - இரண்டுமுறை சொன்னால் புரிந்துகொள்வார்கள்.

    வாழை மட்டை புத்தி - எத்தனை முறை சொன்னாலும் புரிந்துகொள்ளமாட்டார்கள்.

    இதில் பெற்றோர் தம், குழந்தைகள் எந்த வகையில் இருக்கிறார்கள், என்பதை அறிந்துகொண்டால் குழந்தைகளின் எதிர்காலம் நன்றாக இருக்கும்.

    குழந்தைகளின் நுண்ணறிவு அதிகரிக்க

  1. ஐந்து வயது வரை குழந்தைகளுக்குத் தரும் உணவு மிகவும் சத்தானதாக இருக்கவேண்டும்.
  2. குழந்தைகளுக்குப் பாடம் மட்டுமே அறிவல்ல என்பதைப் புரியவைக்கவேண்டும்.
  3. அவர்களின் கேள்விகளை மதித்து பொறுமையாக பதிலளிக்கவேண்டும். நமக்குத் தெரியாத வினாவாக இருந்தாலும் நாம் தெரிந்துகொண்டு அவர்களுக்குப் புரியவைக்கவேண்டும்.
  4. குழந்தைகளை தலைமேல் தூக்கிவைத்துக்கொண்டாடுவதும், கண்டுகொள்ளாமலே விடுவதும் ஒருவிதமான தவறுதான்.
  5. குழந்தைகளின் நினைவுத்திறனை அதிகரிக்க, செயல்திறனை விரைவுபடுத்த நிறைய ஆலோசனைகளை இன்று பல இணையதளங்களே வழங்குகின்றன. அவற்றைத் தேடிப் பெற்றோர் அறிந்துகொண்டு குழந்தைக்கும புரியவைக்கலாம்.
  6. நல்ல நூல்களைப் படிக்கும் வழக்கத்தை, இணையத்தைப் பயனுள்ளவாறு பயன்படுத்தும் முறைகளையும், நல்ல ஒழுக்கங்களையும் அவர்களுக்கு நாம் சொல்லித்தரவேண்டுமானால் முதலில் நாம் அந்த பழக்கங்களைக் கடைபிடிக்கவேண்டும்.
  7. ஒவ்வொருநாளும் அவர்கள் என்னென்ன புதிதாகக் கற்றுக்கொண்டிருக்கிறார்கள் என்பதை உற்றுநோக்கிவரவேண்டும்.

  8. குழந்தைகளோடு அதிக நேரம் ஒதுக்கி அவர்களின் உலகத்தில் வாழும் பெற்றோரால் அவர்களின் நுண்ணறிவுத்திறனையே மாற்றியமைக்கமுடியும் என்பது என் எண்ணம்.


தொடர்புடைய இடுகைகள்

20 கருத்துகள்:

  1. /// குழந்தைகளோடு அதிக நேரம் ஒதுக்கி அவர்களின் உலகத்தில் வாழும் பெற்றோரால் அவர்களின் நுண்ணறிவுத்திறனையே மாற்றியமைக்கமுடியும் என்பது என் எண்ணம். ///

    என் அனுபவத்தில் சொல்கிறேன்... இது தான் உண்மை முனைவரே....

    தொடர வாழ்த்துக்கள்... நன்றி...(TM 2)

    பதிலளிநீக்கு
  2. // குழந்தைகளின் நுண்ணறிவு அதிகரிக்க//

    நல்ல யோசனைகள்.

    பதிலளிநீக்கு
  3. //நல்ல நூல்களைப் படிக்கும் வழக்கத்தை, இணையத்தைப் பயனுள்ளவாறு பயன்படுத்தும் முறைகளையும், நல்ல ஒழுக்கங்களையும் அவர்களுக்கு நாம் சொல்லித்தரவேண்டுமானால் முதலில் நாம் அந்த பழக்கங்களைக் கடைபிடிக்கவேண்டும்.//

    - ஆணித்தரமான கருத்து இதுவே. நம்முடைய வாழ்க்கையே அவர்களுக்கான பாதையாகும். மற்றவை அப்புறமே. அழகான பதிவு. வாழ்த்துக்கள் முனைவரே!

    பதிலளிநீக்கு
  4. மிக அருமையான பதிவு...முனைவரே....

    பதிலளிநீக்கு
  5. வணக்கம் முனைவரே..
    தேவையான பதிவு..
    நம் குழந்தைகளின் அறிவு நிலை பற்றி
    அறிந்துகொள்ள எதுவாக அமைந்த பதிவு...
    புரிந்துகொள்ளும் தன்மையைப் பொறுத்து
    பிரித்த பாகுபாடுகள் அருமை..
    குழந்தைகளின் நிலைக்கேற்ப
    அவர்களின் வருங்கால நிகழ்வுகளை
    உறுதி செய்ய வேண்டும்...

    கடைசி புதிருக்கான விடை
    126 என்பது சரியா...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்கள் ஆழமான புரிதலுக்கும் சரியான புதிர்விடைக்கும் நன்றிகளும் பாராட்டுக்களும் நண்பரே..

      நீக்கு
  6. கடவுளால் தானே கடவுளை வடிவப்படுத்தமுடியும்..

    பூமியப் படைச்சது சாமியா?
    சாமியப் படைச்சது பூமியா?

    என்ற கேள்விக்கு விடை கிடைத்துவிட்டது.
    சாமியப் படைச்சது பூமிதான்.. --

    ரமணி ஐயா பதிவிற்கு நீங்கள் இட்ட பின்னோட்டம் இது.
    அருமையான கருத்து. வணங்குகிறேன் முனைவரே.
    நன்றி. பிறகு வருகிறேன்.

    பதிலளிநீக்கு
  7. ஆக்கப்பூர்வமான ஆலோசனைகள்! நன்றி!

    இன்று என் தளத்தில்
    இதோ ஒரு நிமிஷம்!
    மணிப்பூர் மகாராணியும் அம்மன் வேஷக்காரியும்!
    http://thalirssb.blospot.in

    பதிலளிநீக்கு
  8. கற்பூரமும்,கரித்டுண்டும் ,வாழைமட்டையும் அந்தக்கால உதாரணங்கள்.இப்பொழுது இருக்கிற தலைமுறை வேறு விதங்களில் நிலைகொண்டு இருக்கிறார்கள்,கணிணி,செல்போன் இயக்குவது,மற்ற நுண் அறிவுகள் தேவை என போய்விட்ட உலகமாய் இருக்கிறது.

    பதிலளிநீக்கு
  9. பயனுள்ள பதிவு. நல்ல புத்தகங்களே குழந்தைகளை நெறிப்படுத்தும். இப்போது, இணையத்தின் மூலமாக, விரைவாக நல்லதும், அதைவிட விரைவாக தீயதும் கற்க வாய்ப்பு உள்ளது. பெற்றோர்கள் கூடுதல் கவனம் செலுத்தவேண்டும்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. உண்மைதான் விருச்சிகன் தங்கள் அறிவுறுத்தலுக்கு நன்றிகள்.

      நீக்கு