வேர்களைத்தேடி தளத்திற்குத் தங்களை அன்புடன் வரவேற்கிறேன்... இத்தளத்தில் சங்க இலக்கியம், கணினித்தமிழ் சார்ந்து எனது அனுபவங்களைப் பகிர்ந்து வருகிறேன். 13 ஆண்டுகளில் 1500க்கும் மேற்பட்ட பதிவுகளை வழங்கியுள்ளேன். தற்போது இந்தியக் குடிமைப் பணித்தேர்வுக்கான விருப்பப் பாடம் தமிழுக்குரிய விளக்கங்களைத் தொடர்ந்து வழங்கி வருகிறேன். தங்கள் மேலான வருகைக்கு நன்றிகளைத் தெரிவித்துக்கொள்கிறேன்.

திங்கள், 27 ஆகஸ்ட், 2012

தெரியுமா செய்தி..?


    ண்மை உலகை ஒரு முறை சுற்றிவருவதற்குள்
    பொய் உலகை மூன்று முறை சுற்றிவந்துவிடும் என்றொரு பொன்மொழி உண்டு.

  1. பிள்ளையார் பால் குடித்தார் என்றதும் நம்பி கையில் பாலோடு சென்றது ஒரு கூட்டம்.

  2. அனுமார் சிலையில் தண்ணீரை ஊற்றினால் பால் வடிகிறது என்றதும் கையில் தண்ணீர் பாட்டில்களைத் தூக்கிச் சென்றது ஒரு கூட்டம்.

  3. ரம்ஜானுக்கு முதல்நாள், கைகளில் மெகந்தி வைத்தவர்களுக்கு மரணம் வரும் என்றதும் மருத்துவமனை நோக்கி படையெடுத்தது ஒரு கூட்டம்.

  4. உடன்பிறந்த பெண்களுக்கு பச்சை, நீலம், மஞ்சள் நிறத்தில் சேலை எடுத்துக்கொடுக்கவேண்டும் என்றதும் துணிக்டையைநோக்கிப் படையெடுதத்து ஒரு கூட்டம்.

  5. ஒரு நாள் கடல்நீர் இனிக்கிறது என்று பெருங்கூட்டம் கூடியது. ஆளாளுக்கு தண்ணீரைப் பிடித்துக் குடித்தது போதாதென்று பாட்டில்களில் நிரப்பிக்கொண்டுவேறு சென்றார்கள். ஆய்வாளர்கள் வந்து ஆராய்ச்சி செய்துவிட்டு சொன்னார்கள். பிறகுதான் தெரிந்தது, கடலின் அருகே இருந்த தொழிற்சாலைக் கழிவுகள் கலந்ததால் அந்தப் பகுதி தண்ணீர் இனிக்க ஆரம்பித்தது என்று. அடுத்து என்ன நடந்திருக்கும் என்று நான் சொல்லவா வேண்டும்.

  6. திருப்பூரில் பிறந்த குழந்தை பேசியது. தான் அரைமணிநேரம் தான் உயிரோடு இருப்பேன் பிறகு இறந்துவிடுவேன். 4000 குழந்தைகளாவது இறந்துபோவார்கள். அதற்கு தேங்காய் உடைத்து நேத்திக்கடன் செய்யவேண்டும் என்று ஒரு வதந்தி... அதனால் தமிழகத்தில் பல ஊர்களிலும் தேங்காய் விலை உயர்ந்தது.

  7. என்ன சொன்னாலும் நம்புறாங்கப்பா..

    கேப்பையில நெய் வடியுதுன்னா
    கேப்பாருக்கு புத்தி எங்கே போகுது..?

    என்பார்கள் மூத்தவர்கள்.

    படித்தவர்கள், படிக்காதவர்கள் என்ற எந்த பாகுபாடும் கிடையாது. எல்லோருமே இந்த வதந்திகளை நம்புகிறார்கள்..!

    அந்தக் காலத்திலெல்லாம் 25பைசா அஞ்சல் அட்டையில் ஏதாவது சாமி பெயரோடு கடிதம் வரும் 10 நாட்களுக்குள் இதை 10 பேருக்காவது கடிதவழியே அனுப்பவேண்டும் இல்லாவிட்டார் 10 நாட்களில் நீங்கள் இரத்தம் கக்கி செத்துப்போவீர்கள் என்று வரும். வேறு வழியில்லாமல் பலரும் அந்தக் காலத்தில் அஞ்சல் அலுவலகங்களுக்குப் படையெடுத்தார்கள்.

    இன்று இந்த வதந்தி அதிகமாக அலைபேசிகளில் குறுந்தகவல் வழியே பரவுகிறது.


  • அதனால் வதந்திகளை நம்பாதீர்கள்!
  • குறுந்தகவல் இலவசம் தானே என்று எல்லாவற்றையும் எல்லோருக்கும் முன்னனுப்பாதீர்கள்.


               காலம் மாறிப்போச்சு பாருங்க..


    அன்று
    இன்று..



    தொடர்புடைய இடுகைகள்


    பக்கம் பார்த்துப் பேசு
    பெரிய பொய்

    அதனால் தெரியுமா செய்தி..? என்று யாரும் கேட்டால் அவர்களிடம் நீங்கள் கேளுங்கள்..








    நீங்கள் சொல்லும் செய்தி உண்மைதானா என்பது உங்களுக்குத் தெரியுமா? என்று கேளுங்கள்

21 கருத்துகள்:

  1. //நீங்கள் சொல்லும் செய்தி உண்மைதானா என்பது உங்களுக்குத் தெரியுமா? என்று கேளுங்கள்//

    அட எங்கேயோ படித்த ஞாபகம் ஆனாலும் உங்கள் பதிவு சூப்பர்

    பதிலளிநீக்கு
  2. உண்மை உலகை ஒரு முறை சுற்றிவருவதற்குள்
    பொய் உலகை மூன்று முறை இல்லை முனைவரே மூன்று லட்சம் முறை சுற்றிவருகிறது! :(

    (TM 4)

    பதிலளிநீக்கு
  3. வதந்திகளை நம்பக்கூடாது என்று நல்ல தகவல் சொல்லியுள்ளீர்கள்.

    //அதனால் தெரியுமா செய்தி..? என்று யாரும் கேட்டால் அவர்களிடம் நீங்கள் கேளுங்கள்..

    நீங்கள் சொல்லும் செய்தி உண்மைதானா என்பது உங்களுக்குத் தெரியுமா? என்று கேளுங்கள்//

    நீங்கள் சொல்லும் இந்தச்செய்தி உண்மை தான்.
    பகிர்வுக்கு மிக்க நன்றிகள்.

    பதிலளிநீக்கு
  4. அருமையான படைப்பு. வாலை வைத்து தலையை எடை போடும் இனத்தனமான செயல் புரிவோரும் இப்ப
    நாட்டில் அதிகரித்த வண்ணமே உள்ளனர் .தங்கள்
    ஆக்கம் கண்டு மகிழ்ந்தேன் .தொடர வாழ்த்துக்கள் .

    பதிலளிநீக்கு
  5. நல்ல பதிவு...இந்த மாதிரி அலைபேசியில் மாதம் ஒன்று வந்து விடுகிறது...

    பதிலளிநீக்கு
  6. வதந்திகளை மட்டுமல்ல ,இன்னும்நிறைய மாய்மாலங்களில் சிக்கித் தவிக்கிறார்கள் மக்கள்.நல்ல பதிவு வாழ்த்துக்கள்.

    பதிலளிநீக்கு
  7. நல்ல பகிர்வு. வதந்திகளைப் பரப்பியே கலவரம் உண்டுபண்ணும் காலமிது! தேவையான பகிர்வு முனைவரே.

    பதிலளிநீக்கு
  8. சிறப்பான பகிர்வு சார்...

    வாழ்த்துக்கள்... நன்றி… (த.ம. 8)

    பதிலளிநீக்கு
  9. பொழுதுபோகாம எதையாவது இப்படி பரப்பிடுறாங்க.
    கேக்குறவங்களும் யோசிக்கிறதேயில்ல.

    பதிலளிநீக்கு