பக்கங்கள்

இந்திய குடிமைப் பணித்தேர்வு - தமிழ் - 2 - (UPSC EXAM TAMIL)

வியாழன், 16 ஆகஸ்ட், 2012

யாருக்கும் வெட்கமில்லை!



  1. உனக்கு அந்த நாள் நினைவிருக்கா..?

  2. ஆகஸ்ட் 15 நாம இரண்டுபேரும் தேசியக் கொடி வாங்குவதற்காகக் கடைக்குப் போனோம்..

    கடைக்காரன் கொடி தந்தபோது நீ அவனைப் பார்த்துக் கேட்ட பாரு ஒரு கேள்வி..

    வேற கலர் இருக்கா?“ என்று..

    நினைவிருக்கா?

    வெட்கமா இல்லை... சிரிக்காத..

    சுதந்திரத்திருநாள் வாழ்த்துக்கள்.

    என்றொரு குறுந்தகவல் உலவி வருகிறது.


  3. ஒரு காலத்தில் அரசாங்கம் சொன்னது...

  4. குடிமக்களே வீட்டுக்கு வீடு மரம் வளருங்கள் என்று..

    மக்கள் அரசிடம் கேட்டார்கள்...

    மரம் வளர்க்கிறோம் வீடு தாருங்கள் என்று..


  5. இன்று அரசு சொல்கிறது வட்டியில்லாக் கடன் ஐந்து இலட்சம் ரூபாய் தருகிறோம் வீடு கட்டிக் கொள்ளுங்கள் என்று...

  6. இன்றும் மக்கள் அரசிடம் கேட்கிறார்கள்...

    நீங்கள் தரும் பணம் வீடு கட்டிக்கொள்வதற்கே சரியாக இருக்கும் நிலத்தை யார் தருவார்கள்...? 
    இந்தப் பணத்தை வைத்துக்கொண்டு நாங்கள் என்ன மரங்களிலா வீடு கட்டிக் கொள்வோம் என்று...


  7. அரசும் கொடுப்பதை நிறுத்தப்போவதில்லை
  8. இந்த மக்களும் வாங்குவதை நிறுத்தப் போவதில்லை

  9. ஏனென்றால் யாருக்கும் வெட்கமில்லை.

    நல்ல கல்வியைத் தவிர வேறு எதையும் அரசு மக்களுக்குக் கொடுக்கவேண்டியதில்லை.
    அப்படிக் கொடுத்தால் அரசு அதற்குப் பதிலாக வேறு ஏதோ எதிர்பார்க்கிறது என்று தானே பொருள்...!

    கொஞ்சநேரம் இருங்க மக்கள் கூட்டமா எங்கேயோ ஓடுறாங்க.. எங்கே என்று  கேட்டுட்டு திரும்பி வருகிறேன்..


    ம்பா.......
    எங்கே எல்லோரும் கூட்டமா ஓடுறீங்க...

    என்னது....
    அரசாங்கம் இலவசமா.... அலைபேசி (செல்போன்) கொடுக்கறாங்களா...???

    தொடர்புடைய இடுகை



18 கருத்துகள்:

  1. //கேட்ட பாரு ஒரு கேள்வி..

    “வேற கலர் இருக்கா?“ என்று..

    நினைவிருக்கா?

    வெட்கமா இல்லை... சிரிக்காத..//

    ஹா..ஹா...


    பதிலளிநீக்கு
  2. அருமை முனைவரே!
    வெட்கமில்லை,வெட்கமில்லை இங்கு யாருக்கும் வெட்கமில்லை!

    பதிலளிநீக்கு
  3. நாடு எந்தளவு மோசமாகி வருகிறது என்பதை, பதிவின் மூலம் அறிய முடிகிறது. நன்றி. (TM 4)

    பதிலளிநீக்கு
  4. //நல்ல கல்வியைத் தவிர வேறு எதையும் அரசு மக்களுக்குக் கொடுக்கவேண்டியதில்லை/

    சத்தியமான உண்மை!

    பதிலளிநீக்கு
  5. அருமை அருமை
    மக்களின் பிச்சைக்கார மன நிலையையும்
    அதனி மிகச் சரியாகப் பய்ன்படுத்திக் க்கொள்ளும்
    அரசியல்வாதிகளையும் மிக அழகாகப் படம்பிடித்துக் காட்டியுள்ளீர்கள்
    மனம் தொட்ட பதிவு
    தொடர வாழ்த்துக்கள்

    பதிலளிநீக்கு
  6. சரியாகச் சொன்னீர்கள். இலவசமாய் எது கிடைக்கும் என்றே முக்கால்வாசி மக்களின் எண்ணம் இருக்கிறது, ஏழையோ பணக்காரரோ!
    கல்வி மட்டுமே தனிமனித வாழ்வையும் நாட்டையும் உயர்த்தும்!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஏழையோ பணக்காரரோ!
      கல்வி மட்டுமே தனிமனித வாழ்வையும் நாட்டையும் உயர்த்தும்!

      அழகாகச் சொன்னீர்கள் கிரேஸ்

      தனிமனித உயர்வு சமூகத்தின் உயர்வல்லவா.

      நீக்கு
  7. சிறப்பான பகிர்வு! நன்றி!

    இன்று என் தளத்தில்
    திருப்பாலீஸா! திருவருள் தருவாய்!
    http://thalirssb.blogspot.in/2012/08/blog-post_17.html
    குடிபெயர்ந்த கிராமமும் குளித்த டாக்டரும்!
    http://thalirssb.blogspot.in/2012/08/blog-post_4286.html




    பதிலளிநீக்கு