பக்கங்கள்

இந்திய குடிமைப் பணித்தேர்வு - தமிழ் - 2 - (UPSC EXAM TAMIL)

ஞாயிறு, 24 ஜூன், 2012

பேச்சுத்திறமை - தென்கச்சியார்.

 உங்க நண்பர் எப்படி இறந்தார் என்று ஒருவர் இன்னொருவரைப் பார்த்துக் கேட்கிறார். அதற்கு இவர்..

“அவன் வயித்துல எலி ஓடுற மாதிரி இருந்துச்சுன்னு சொன்னான் அதான் அவனுக்கு "எலி மருந்து" கொடுத்தேன். அதுக்குள்ள அவனை எலி கொன்னுடுச்சு என்று.



எனக்கு ஒரு குறுந்தகவல் வந்தது.


எந்தஒரு சூழ்நிலையையும், பேச்சுத்திறமையால் ஒருவன் தனக்கு ஏற்றார்போல மாற்றிக்கொள்ளமுடியும்.என்பதற்கு இந்த நகைச்சுவை தக்கதொரு சான்று.

இந்த நகைச்சுவையைப் படித்தவுடன் நினைவுக்கு வந்த தென்கச்சியார் நகைச்சுவை...

                   அமெரிக்காவில் புகழ் பெற்ற வழக்கறிஞர் ஒருவர் இருந்தார்.     அவரை எதிர்த்து வாதாட ஆளில்லை எனும் அளவுக்கு, தனது வாதத் திறமையால் நீதிமன்றங்களைக் கலக்குவார். பத்திரிகைகளில் அவரை பேட்டியெடுக்க போட்டா போட்டி நடக்கும். ஒரு பத்திரிகையாளர் வித்தியாசமாக அந்த வழக்கறிஞரின் தாயாரை பேட்டியெடுத்தார்.

"உங்கள் பிள்ளை இந்தளவுக்கு புகழ் பெறுவார் என்று நினைத்தீர்களா?"
"அவன் சிறுவனாக இருந்த போதே, சில நிகழ்ச்சிகள் மூலம் அவனது சொல்லாற்றலைப் பார்த்து வியந்திருக்கிறேன். அவன் தனது வாய்த் திறமையால் பெரியாளாக வருவான் என யூகித்து விட்டேன்."

"என்ன அது... சொல்லுங்களேன்!"
"ஒரு நாள் சமையலறையில் வேலையாக இருந்தேன். இவன் அப்பா வெளியே செய்தித்தாள் படித்துக் கொண்டிருந்தார். அந்த நேரத்தில் அவன் அறையில் பூனை அலறும் சத்தம் கேட்டது. எப்போதும் பூனையின் வாலை இழுத்து விளையாடுவது அவன் வழக்கம். உடனே நான் அவனை அதட்டினேன்"
"டேய்.. பூனை வாலை பிடிச்சி இழுக்காதே..அது பாவம்" என்றேன்.

அதற்கு அவன் "பூனை வாலை நான் இழுக்கலை. அதோட வாலை அதுவே இழுத்துகிட்டு கத்துது. நான் சும்மா நிக்கறேன்" என்றான்.

எனக்கு குழப்பமாகி விட்டது. உடனே அந்த அறையை எட்டிப் பார்த்தேன். அங்கு பூனை வாலை அவன் மிதித்துக் கொண்டிருந்தான். பூனை வலி தாங்காமல் தன் வாலை இழுத்துக் கொண்டிருந்தது. நடந்த நிகழ்ச்சியை அப்படியே மாற்றிச் சொல்லி ஏற்றுக் கொள்ள வைக்கும் திறமை அவனுக்கு அப்போதே இருந்தது. -இது அந்த தாயாரின் மலரும் நினைவுகள்.

வார்த்தைகளை தனக்கு சாதகமாக்கி, அடுத்தவர்களை ஏற்றுக்கொள்ளச் செய்வது ஒரு கலை. அது வழக்கின் திசையை மட்டுமல்ல, வாழ்க்கையின் திசையைக் கூட மாற்றவல்லது.
மனஇயல் நிபுணர்கள் என்ன சொல்வது என்ன தெரியுமா?
"எவன் ஒருவன் தன் மீது வீசப்படும் கற்களைக் கொண்டே வலிமையான அடித்தளம் அமைத்து முன்னேறுகிறானோ, அவனே சாதனையாளன் ஆகிறான்"

இக்கதைகளின் வழியே...


  • குழந்தைகளின் விருப்பத்துக்கும், திறனுக்கும் முன்னுரிமைதரும்போது அவர்கள் வாழ்வில் பெரிய வெற்றியை அடைகிறார்கள் என்னும் வாழ்வியல் நுட்பமும் உணர்த்தப்படுகிறது.

29 கருத்துகள்:

  1. சிறு வயதில் இவரது 'இன்று ஒரு தகவலை' கேட்பதற்காக காலையில் ஏழு மணியிலிருந்தே ரேடியோ பெட்டிக்கு அருகில் தவம் இருப்பதுண்டு :)

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்கள் தொடர் வருகைக்கும் மறுமொழிக்கும் நன்றி நண்பா.

      நீக்கு
  2. அருமையான நகைச்சுவைகள். மிகவும் ரசித்தேன். பகிர்வுக்கு மிக்க நன்றி.

    பதிலளிநீக்கு
  3. தென்கச்சியார் சிறந்த பேச்சு திறமை கொண்டவர் இதற்க்காகவே இதற்கு முன் காலையில் தினமும் இவரை டிவியில் பார்ப்பேன் இவருடைய நகைச்சுவைகாகவே பார்ப்பேன்....

    பதிலளிநீக்கு
  4. //வார்த்தைகளை தனக்கு சாதகமாக்கி, அடுத்தவர்களை ஏற்றுக்கொள்ளச் செய்வது ஒரு கலை.//

    //"எவன் ஒருவன் தன் வீசப்படும் கற்களைக் கொண்டே வலிமையான அடித்தளம் அமைத்து முன்னேறுகிறானோ, அவனே சாதனையாளன் ஆகிறான்"//

    நல்ல கருத்துகள்.... இனிமையான பகிர்வுக்கு நன்றி குணா.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆழ்ந்த கருத்தை உள்வாங்கி்க்கொண்டமைக்கு நன்றி நண்பரே.

      நீக்கு
  5. குரலும்
    நகைச்சுவையும் வாழ்க்கைத் தத்துவமும்

    அப்படின்னா அது தென்கச்சியார் தான்

    நல்ல பதிவு

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. உண்மைதான் அன்பரே.
      தங்கள் தொடர் வருகைக்கு நன்றி நண்பரே.

      நீக்கு
  6. அரிய செய்திப் பெட்டகமாகத் திகழ்ந்த தென்கச்சி அவர்கள் அத்தனை புகழ் பெற்றிருந்தும் மிக எளிமையாக நடந்து எங்கள் வீட்டை கடந்து பேருந்து நிலையத்துக்கு செல்வதைப் பார்த்து பிரமித்திருக்கிறேன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அந்த எளிமைதான் அவரை இன்றும் பேசவைத்திருக்கிறது.

      மறுமொழிக்கு நன்றி நண்பரே.

      நீக்கு
  7. அருமையான பகிர்வுங்க முனைவர் ஐயா.

    பதிலளிநீக்கு
  8. தென்கச்சியாரின் இன்று ஒரு தகவலில் எத்தனை கருத்துக்கள்.
    நீங்கள் சொல்லிய கதையும் அருமை முனைவரே.

    பதிலளிநீக்கு
  9. ஒரு வழக்குரைஞருக்குத் தேவை வாய் சாதுர்யம். அதை அழகாய் வெளிப்படுத்திய கதைப் பகிர்வுக்கும், சிரிப்போடு சிந்தனையைத் தூண்டும் அரிய கருத்துக்களை அநாயாசமாகச் சொல்லிச் செல்லும் தென்கச்சியாரின் பெருமையை நினைவுகூரச் செய்தமைக்கும் மிகவும் நன்றி முனைவரே.

    பதிலளிநீக்கு