வேர்களைத்தேடி தளத்திற்குத் தங்களை அன்புடன் வரவேற்கிறேன்... இத்தளத்தில் சங்க இலக்கியம், கணினித்தமிழ் சார்ந்து எனது அனுபவங்களைப் பகிர்ந்து வருகிறேன். 13 ஆண்டுகளில் 1500க்கும் மேற்பட்ட பதிவுகளை வழங்கியுள்ளேன். தற்போது இந்தியக் குடிமைப் பணித்தேர்வுக்கான விருப்பப் பாடம் தமிழுக்குரிய விளக்கங்களைத் தொடர்ந்து வழங்கி வருகிறேன். தங்கள் மேலான வருகைக்கு நன்றிகளைத் தெரிவித்துக்கொள்கிறேன்.

செவ்வாய், 5 ஜூன், 2012

108ஐ அழைக்காதே......!


    இன்று மாலை சாலை வழியே நடந்து வந்துகொண்டிருந்தேன். என்னைக் கடந்து ஒரு ஆட்டோ சென்றது.
    வழக்கமாக ஆட்டோக்களின் பின்னால் எழுதப்பட்ட வாக்கிங்களைப் படிப்பது என் பழக்கம். இன்றும் இந்த ஆட்டோவில் என்ன எழுதியிருக்கிறார்கள் படிக்கலாம் என்று பார்த்தேன்..

    ........................108 ஐ அழைக்காதே..

    என்ற செய்தி தான் முதலில் என் கண்களுக்குப் பட்டது.

    வியப்புடன் ஏன் இப்படி எழுதியிருக்கிறார்கள்? 108 அவரசரகால மருத்துவஉதவி வாகனமல்லவா? அதை அழைக்காதே என்று ஏன் சொல்லவேண்டும் என்ற ஆர்வத்தில் முதலில் எழுதப்பட்ட செய்தியைப் பரபரப்பாகத் தேடின என் கண்கள்.

    100ல் போகாதே 108ஐ அழைக்காதே என்பதுதான் அதில் எழுதப்பட்டிருந்த முழுமையான வாக்கியம்.

    படித்து முடித்தவுடன் நல்லவொரு சாலை விழிப்புணர்வுதரும் செய்தியைப் படித்த மனநிறைவு ஏற்பட்டது.

    விரைவாகச் செல்லுதல் தானே நடைபெறும் சாலைவிபத்துகளில் குறிப்பித்தக்கதாகவுள்ளது..!

    என சிந்தித்துக்கொண்டே நடந்து வரும் போது உள்மனம் சொன்னது...
    இந்த விழிப்புணர்வுதரும் செய்தியை எழுதிவைத்திருந்த அந்த ஆட்டோ, இவ்வளவு விரைவாகச் சென்று கண்ணில் மறைந்துவிட்டதே என்று..

    அறிவுரைகள் அடுத்தவருக்குத்தான் என்பதே வாழ்வியல் உண்மை!
    அதனால் இந்த இடுகை உங்களுக்கு நான் சொல்லும் அறிவுரையல்ல.

    என் வாழ்வில் நான் ஏற்கும் உறுதிமொழி.(முடிந்தால் நீங்களும்...)

  1. 100ல் போகாதே 108ஐ அழைக்காதே என்ற  விழிப்புணர்வு வாக்கியத்தை வாகனம் ஓட்டும் போதெல்லாம் நான் நினைவில் கொள்வேன். 

      

25 கருத்துகள்:

  1. அருமையான சிந்தனை முனைவர் சார் .. :)

    பொதுவாக நான் பைக்கில் செல்லும் போது 40km வேகத்திற்கு மேல் எப்போதுமே செல்லவதில்லை .. :) வச்சிருக்கிறது யமஹா RX100.., யமஹாவிற்கு உண்டான மரியாதை போச்சே உன்னால என்று யாரும் கூற வேண்டாம் ஹி ஹி ஹி :D

    பதிலளிநீக்கு
  2. வேகம் விவேகமல்ல என்ற புரிதலுக்கு நன்றி நண்பா.

    10 நிமிடம் தாமதமா போகலாம் தப்பில்ல
    10 வருடம் முன்னாடியே போயிடக்கூடாது பாருங்க..

    வருகைக்கும் மறுமொழிக்கும் நன்றி நண்பா.

    பதிலளிநீக்கு
  3. வேகம் விவேகமல்ல என்பதை அழகாய்ச் சொல்லிய வாசகம். திருச்சியிலும் ஒரு வண்டியில் இது எழுதி இருந்ததை சமீபத்திய திருச்சி பயணத்தில் பார்த்தேன்....

    வேகமாகச் செல்பவர்களுக்குப் புரிந்தால் சரி....

    பதிலளிநீக்கு
  4. ககக போ.. (கருத்துகளை கச்சிதமாக கவ்விக்கொண்டு போ என்றேன்)

    பதிலளிநீக்கு
  5. @வெங்கட் நாகராஜ்வருகைக்கும் வாசித்தலுக்கும் அறிவுறுத்தலுக்கும் நன்றி நண்பரே

    பதிலளிநீக்கு
  6. அழகாக சொல்லி விட்டீர்கள் முனைவரே !

    பதிலளிநீக்கு
  7. சாலைகளில் வேகமாக வாகனம் செலுத்துபவர்களால் அவர்களுக்கு மட்டுமல்லாது எதிர்வருபவர்களுக்கும் நடைபாதை மக்களுக்கும் அல்லவா ஆபத்து உண்டாகிறது! ஒவ்வொரு வாகன ஓட்டியும் விதிமுறைகளைக் கருத்தில் கொண்டு பின்பற்றினால் அனைவருக்கும் நல்லது. சிலர் நேரம் குறைக்க, ரவுண்டானாக்களை எதிர்ப்புறத்தில் கடப்பார்கள். தவறென்று அறிந்தே செய்யும் அவர்களைப் போன்றவர்களை என்னவென்று சொல்வது?

    மிகவும் ஆக்கபூர்வ பதிவுக்கு நன்றி முனைவரே.

    பதிலளிநீக்கு
  8. நல்ல விழிப்புணவு ஊட்டும் பதிவு!

    நன்றி1 முனைவரே!


    சா இராமாநுசம்

    பதிலளிநீக்கு
  9. ////பொதுவாக நான் பைக்கில் செல்லும் போது 40km வேகத்திற்கு மேல் எப்போதுமே செல்லவதில்லை .. :) வச்சிருக்கிறது யமஹா RX100.., யமஹாவிற்கு உண்டான மரியாதை போச்சே உன்னால என்று யாரும் கூற வேண்டாம் ஹி ஹி ஹி ////

    எனக்கு....நான் ஸ்கார்பியோ ல செல்லும் போது என்று மாற்றி கொள்கிறேன்...

    பதிலளிநீக்கு
  10. அறிவுரைகள் கசக்கத்தான் செய்யும் அவரவர் உணர்த்தல் சரி . நல்ல பகிர்வு .

    பதிலளிநீக்கு
  11. @கீதமஞ்சரி தங்கள் வருகைக்கும், புரிதலுக்கும், அறிவுறுத்தலுக்கும் நன்றி கீதா

    பதிலளிநீக்கு
  12. @கோவை நேரம் தங்கள் தன்மதிப்பீட்டுக்கு நன்றி கோவைநேரம்.

    பதிலளிநீக்கு
  13. @Sasi Kalaவருகைக்கும் மறுமொழிக்கும் நன்றி சசிகலா.

    பதிலளிநீக்கு
  14. அப்போ...120 ல் போகலாமா? இப்படியிருந்தால் இன்னும் சிறப்பாக இருந்திருக்கும். 100 க்கு மேல் போகாதே...108ஐ அழைக்காதே!..

    ஆனால் இதில் இன்னொரு அர்த்தமும் இருக்கிறது....

    100ல் ( 100மிலி சரக்கடிச்சுட்டு) போகாதே.. 108ஐ அழைக்காதே !

    பதிலளிநீக்கு
  15. வணக்கம் முனைவரே..
    இன்றைய சூழலுக்கு தேவையான வாசகம் இது..
    சாலைகளில் கண்ணை மூடிக்கொண்டு
    கடும் வேகத்தில் செல்லும் வாகனங்களை
    காண்கையில் மனதுக்கு வேதனையாக இருக்கும்..
    எதைச் சாதிக்க இவர்கள் இவ்வளவு வேகமாக
    பறக்கிறார்கள் என்று...

    விவேகமான வேகம் நன்று என்று உரைத்திட்ட
    பதிவு மிக நன்று முனைவரே..

    பதிலளிநீக்கு
  16. @Manimaranவருகைக்கும் மறுமொழிக்கும் நன்றி மணிமாறன்.

    பதிலளிநீக்கு
  17. @மகேந்திரன்விவேகமான வேகம் நன்று என்பதை உள்வாங்கிக்கொண்டமைக்கு நன்றிகள் நண்பரே.

    பதிலளிநீக்கு
  18. உண்மையில் வாகனத்தில் செல்லும் அனைவரும் அறிய வேண்டிய வசனம் பெரும்பாலனோர் அதிகமான வேகத்தில் தான் செல்கின்றனர் அதிகபடியான இறப்பும் இந்த சாலை விபத்தில் தான் ஏற்படுகிறது இதை புரிந்து கொண்டு அனைவரும் மெதுவாக சென்றால் நலம்... இதை அறிவித்த தங்களுக்கு நன்றி அண்ணா...

    பதிலளிநீக்கு