பக்கங்கள்

இந்திய குடிமைப் பணித்தேர்வு - தமிழ் - 2 - (UPSC EXAM TAMIL)

செவ்வாய், 29 மே, 2012

பக்கம் பார்த்துப் பேசு!




நம்மைச் சுற்றி எத்தனை எத்தனை காதுகள்..!

  •   நாம் ஒருவரைப் பாராட்டிப் பேசினால் கண்டுகொள்ளாத 

காதுகள்ஒருவரைத் தவறாகப் பேசும்போதுமட்டும் 


முழுமையாக உள்வாங்கிக் கொள்கின்றன.


 
  •  பேருந்திலோ, தொடர்வண்டியிலோ நாம் 
செல்லும்போது நம் உறவினர்களிடமோ, நண்பர்களிடமோ நம் 


தனிப்பட்ட இன்ப துன்பங்களையோ, அலுவலகம் சார்ந்த 

செய்திகளையோ நாம் பேசிக் கொண்டுவருவோம். நம் அருகே 

பயணிக்கும் ஒருவர் நமக்கு எந்தவிதத்திலும் தொடர்பில்லாதவராக 

இருந்தாலும் தம் காதுகளைக் கூர்தீட்டிக்கொண்டு 

கேட்பார்.சிலநேரங்களில் நம்மோடு கலந்து 


நமக்கு சில ஆலோசனைகள் கூட சொல்வார். இது உணவகத்தில் 


உணவு பரிமாறிய பணியாள் நாம் உண்பதையே உற்றுநோக்கிக் 


கொண்டிருப்பதுபோலவே இருக்கும்.


  •          அடுத்தவர் தனிப்பட்ட வாழ்க்கையை அறிந்துகொள்வதில் சிலருக்கு இருக்கும் ஆர்வம் இன்று பலருக்கு அவர்களின் வாழ்வில் கூட இருப்பதில்லை.

  • இன்றும் பார்க்கிறோம் அரசியல்வாதிகள், சினிமா நடிகர்கள்
விளையாட்டு வீரர்களின் தனிப்பட்ட வாழ்க்கையை அறிந்து 


கொள்வதில் நாமோ, நம்மைச்சுற்றி இருப்பவர்களோ எவ்வளவு 


ஆர்வம் கொள்கிறோம்..!

  •   பசி, தண்ணீர் தாகம்போல ஒட்டுக்கேட்டல்என்னும் பண்பு 

சிலருக்கு கூடப்பிறந்த பழக்கமாகவே இருக்கிறது.


  •    சங்ககாலத்தில் இப்படி காதுகொடுத்துக் கேட்பதை அம்பல், என்றும் அலர்  என்றும் பெயரிட்டு அழைத்தனர்.
அதனால் தான் நம் முன்னோர்கள் சொல்லியிருக்கிறார்கள்..


'பகலில் பக்கம் பார்த்துப் பேசு இரவில் அதுதானும் பேசாதே'


என்று..

நினைவுக்கு வந்த திரையிசைப்பாடல் ஒன்று..

  “அந்த இருட்டுக்கும் பார்க்கின்ற விழியிருக்கும்

எந்த சுவருக்கும் கேட்கின்ற காதிருக்கும்

சொல்லாமல் கொள்ளாமல் காத்திருக்கும்  

சொல்லாமல் கொள்ளாமல் காத்திருக்கும் தக்க 

சமயத்தில் நடந்ததை எடுத்துரைக்கும்    

ஏமாற்றாதே  ஏமாற்றாதே  ஏமாறாதே ஏமாறாதே“


  • அதனால் தமிழ் உறவுகளே..

 நம்மைச்சுற்றி நிறைய காதுகள் இருக்கின்றன 

என்பதை அறிந்து பக்கம் பார்த்துப் பேசுவோம், இன்னொருவர் 


பேசுவதை  அவர் அறியாது கேட்டல், அதை இன்னொருவரிடம் 


சொல்லுதல் அநாகரீகம் என்பதை உணர்வோம்.

மனிதர்கள் வெறும் காதுகளில் ஒட்டுக்கேட்ட காலம் கடந்து

இன்று



  • தொலைபேசிகள், அலைபேசிகள்,இணையங்கள் 

வழியே ஒட்டுக் கேட்கும் காலத்தில் நாம் வாழ்ந்துவருகிறோம் 

என்பதையும் நினைவில் கொள்வோம்.


தொடர்புடைய இடுகை



21 கருத்துகள்:

  1. உண்மை தான் சார் ! அந்த பாடல் சூப்பர் !

    பதிலளிநீக்கு
  2. பேச்சை குறைக்கணும்னு சொல்றீங்க .. :)

    பதிலளிநீக்கு
  3. ஒட்டுக்கேட்டல் என்ற குணமற்ற
    தன்மையை அழகாய் விளக்கம் கொடுத்தமை
    அழகு முனைவரே...

    பதிலளிநீக்கு
  4. படங்களே கதையை சொல்கிறதே

    பதிலளிநீக்கு
  5. உண்மையை அழகாகச் சொன்னீர்கள்.
    வாழ்த்துக்கள் முனைவரே...
    ஆமா ரொம்ப பிஸியா...
    நம்ம பக்கம் வந்து ரொம்ப நாளாச்சே...

    பதிலளிநீக்கு
  6. நல்லதொரு பண்பினை எடுத்துரைக்கும் பதிவுக்கும் அதைச் சுட்டும் பாடல் வரிகளைக் குறிப்பிட்டமைக்கும் நன்றி முனைவரே. பத்தாம், பன்னிரண்டாம் மாணவ மாணவியரின் தேர்வு முடிவுகளை அறிய வழிவகுத்திருப்பதற்குப் பாராட்டுகள்.

    பதிலளிநீக்கு
  7. சுவையான பதிவு. அன்பரே!
    மாணவ மாணவியரின் தேர்வு முடிவுகளை அறிய வழிவகுத்திருப்பது ஒரு பாராட்டத் தகுந்த முயற்சி

    பதிலளிநீக்கு
  8. ''...நாம் ஒருவரைப் பாராட்டிப் பேசினால் கண்டுகொள்ளாத

    காதுகள், ஒருவரைத் தவறாகப் பேசும்போதுமட்டும்


    முழுமையாக உள்வாங்கிக் கொள்கின்றன...''
    முழுக்க முழுக்க நானும் அனுபவித்தது.ஆனால் யாருமே மாறமாட்டார்களே! பிடித்தமான கரு. நன்றி.
    வேதா. இலங்காதிலகம்.

    பதிலளிநீக்கு
  9. @கோவிவருகைக்கும் வாசித்தலுக்கும் நன்றி கோவி.

    பதிலளிநீக்கு
  10. @சே. குமார் அன்பு நண்பரே தங்கள் வலைப்பக்கம் வருவதற்குப் பலமுறை முயற்சித்தேன். கூகுள்+ பக்கத்துக்கே செல்லமுடிகிறது..

    பதிலளிநீக்கு
  11. நல்ல நடுநிலைமையான பதிவு.கருத்துகளும் ஆழமாக இருக்கு.வாழ்த்துகள்.

    பதிலளிநீக்கு