வேர்களைத்தேடி தளத்திற்குத் தங்களை அன்புடன் வரவேற்கிறேன்... இத்தளத்தில் சங்க இலக்கியம், கணினித்தமிழ் சார்ந்து எனது அனுபவங்களைப் பகிர்ந்து வருகிறேன். 13 ஆண்டுகளில் 1500க்கும் மேற்பட்ட பதிவுகளை வழங்கியுள்ளேன். தற்போது இந்தியக் குடிமைப் பணித்தேர்வுக்கான விருப்பப் பாடம் தமிழுக்குரிய விளக்கங்களைத் தொடர்ந்து வழங்கி வருகிறேன். தங்கள் மேலான வருகைக்கு நன்றிகளைத் தெரிவித்துக்கொள்கிறேன்.

வியாழன், 3 மே, 2012

யானைச் சாமியும் - பாகச்சாமியும்

ஒரு குரு தன் சீடர்களிடம் சொற்பொழிவாற்றினார்.


“கடவுள் எங்கும் நிறைந்திருக்கிறார். எல்லா உயிர்களிலும் இறைவன் குடிகொண்டிருக்கிறார். எனவே எல்லா உயிர்களையும் கடவுளாகப் போற்றி வழிபடவேண்டும்”

இதைக் கேட்ட சீடன் ஒருவன் கடைவீதி வழியாகச் சென்றுகொண்டிருந்தபோது,
யானை ஒன்று மதம்பிடித்து ஓடிவந்தது. பாகனோ, யானையைக் கட்டுப்படுத்தமுடியாமல் பின்னால் ஓடிவந்து மக்களை எச்சரித்துக்கொண்டிருந்தான்.

சீடனோ,  யானையைக் கண்டதும் குருசொன்னபடி கடவுள் யானை வடிவில் வருகிறது என்று கையெடுத்துக் கும்பிட்டான். யானையின் அருகில் சென்றான்.

பாகனோ யானை மதம்பிடித்து வருகிறது அருகில் செல்லாதீர்கள் என்று எச்சரி்த்தான்.

சீடனோ பாகன் கூறியதைக் கவனிக்கவில்லை. 

யானை சீடனைத் தூக்கிவீசியது. விழுந்து எழுந்த சீடன் நொண்டிக்கொண்டே சென்று தம் குருவிடம் நடந்ததைச் சொன்னான். குரு சொன்னார்.

யானைச் சாமியை நீ கடவுளாகக் கருதி வழிபட்டது சரிதான். ஆனால் பாகன் வடிவில் வந்த சாமியின் எச்சரிக்கையை நீ ஏன் அலட்சியம் செய்தாய்? பாகச் சாமியின் பேச்சைக் கேளாததால் நீ இந்தத் துன்பத்தை அனுபவிப்பது சரிதான் என்றாராம் குரு.

எங்கோ படித்த கதையிது. இந்தக் கதையோடு தொடர்புபடுத்திப் பார்க்கவேண்டிய இடுகைகள் இரண்டினை உங்கள் பார்வைக்குத் தருகிறேன்.

18 கருத்துகள்:

  1. எச்சரிக்கை எவ்வழி வேண்டுமானாலும் வரலாம் தக்க சமயத்தில் நம்மை நாம் தான் காத்துக்கொள்ளவேண்டும் ....

    நன்று நண்பரே...

    பதிலளிநீக்கு
  2. கேட்பதை அப்படியே செயல்வடிவில் செய்யாது..
    சற்று சிந்திக்கும் தன்மையையும் வளர்த்துக்கொள்ள வேண்டும்
    என்று உரைக்கும் அழகான கதை முனைவரே..
    பகிர்வுக்கு நன்றிகள்.

    பதிலளிநீக்கு
  3. படிப்பினையைக் கற்றுக்கொள்வதிலும் சாமர்த்தியம் தேவைப்படுகிறது. சிந்திக்கத் தூண்டும் அருமையான பதிவு. பகிர்வுக்கு மிகவும் நன்றி முனைவரே.

    பதிலளிநீக்கு
  4. சிந்தித்து செயல்பட வேண்டும் என்று உணர்த்தும் கதை !

    பதிலளிநீக்கு
  5. சிந்தனையைத் தூண்டும் பதிவு

    சா இராமாநுசம்

    பதிலளிநீக்கு
  6. மிகவும் அருமையான நீதிக்கதை. நன்றி பகிர்வுக்கு.

    பதிலளிநீக்கு