பக்கங்கள்

இந்திய குடிமைப் பணித்தேர்வு - தமிழ் - 2 - (UPSC EXAM TAMIL)

ஞாயிறு, 8 ஏப்ரல், 2012

ஈரோட்டுக்கு வந்த சோதனை

தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலும் நீர்நிலைகளிலெல்லாம் இப்போது ஆகாயத்தாமரை படர்ந்துள்ளதை அதிகமாகவே பார்க்கமுடிகிறது.

ஆகாயத்தாமரை பற்றிய விக்கிப்பீடியா(நன்றி) செய்திகள் சில..
இத்தாவரம் மிகவும் வேகமாகவும் மற்றும் எத்தகைய மாசடைந்த நீர்நிலைகளிலும் வளரும் தன்மையுடையது. ஓர் ஏரியிலோ அல்லது குளத்திலோ உள்ள ஆகாயத்தாமரை ஒரே வாரத்தில் இரண்டு மடங்காக வளரும் தன்மையுடையது. மேலும் இத்தாவரத்தின் விதை 30 வருடங்களுக்கு முளைக்கும் தன்மையைத் தக்கவைத்திருக்கும். இத்தகைய பண்புகள் இத்தாவரம் வேகமாக வளர்ந்து பரவுவதற்கும் மற்றும் அழியாமல் இருப்பதற்கும் காரணமாகும். தற்போது இது தாயகமான தென்னமெரிக்காவைத் தவிர மற்ற கண்டங்களிலும் மிக அதிகமாக வளர்ந்து உள்நாட்டு நீர் வளங்களுக்கு மிகப்பெரிய அச்சுறுத்தலை உண்டாக்கியுள்ளது.

அன்று..

வேறு எங்கும் இல்லாத அளவிற்கு,ஈரோடு காவிரி ஆற்று பகுதியில் வண்ணமாய் பறந்து திரியும் பட்டாம் பூச்சிகளைக் காணமுடிந்தது!




                                 
                          இன்று..
ஈரோட்டில் காவிரி ஆறு எங்கே உள்ளது? என்று தேடும் அளவுக்கு ஆகாயத்தாமரை ஆக்கிரமித்துள்ளது. இந்தக்காட்சியைப் பார்க்கும்போது...

இயற்கைக்கும் மனிதனுக்கும் நடக்கும் போராகவே தோன்றுகிறது.
தொடர்புடைய இடுகை

13 கருத்துகள்:

  1. படத்தில் பார்க்கும் போது நிஜமாகவே காவேரி இருக்கிறதா இங்கே என்று கேட்கத் தோன்றுகிறது!

    பதிலளிநீக்கு
  2. மனிதன் என்று இயற்கையைத் தொந்தரவு பண்ண ஆரம்பித்தானோ அன்று தொடங்கிய போர் அல்லவா இது? முடிவேயிலாதபடி என்றும் தொடரும் போர் என்றுதான் தோன்றுகிறது.

    பதிலளிநீக்கு
  3. எல்லா இடங்களிலும் இப்படித்தான் இருக்கின்றன.
    நன்றி ஐயா.

    பதிலளிநீக்கு
  4. ” திருவிளையாடல் “ திரைப் படத்தில் வட இந்தியப் பாடகராக வரும் நடிகர் பாலையா, ஒரு காட்சியில் “ என்னே மதுரைக்கு வந்த சோதனை? “ என்று சொல்லுவார். அது போல ஆகாயத் தாமரை பற்றிய உங்கள் பதிவைப் படித்ததும் “ என்னே ஈரோட்டுக்கு வந்த சோதனை? “ என்று சொல்லத் தோன்றுகிறது.

    பதிலளிநீக்கு
  5. இதற்கான உரிய முயற்சிகளை
    அரசாங்கம் எடுத்து நதி நீர் காக்க வேண்டும்..
    ஆவன செய்வார்களா?/!!

    பதிலளிநீக்கு
  6. ஆகாய தாமரை இல்லாமலே எண்கள் ஊரில் காவிரியை காணவில்லை

    பதிலளிநீக்கு
  7. ஆம். முனைவரே! உண்மைதான். நான் கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பாக ஈரோடு சென்றிருந்தேன். அங்கு என் கண்ணால் கண்ட காட்சியை பதிவாக பார்த்தபோது கண்ணீர்தான் வருகிறது.

    அது ஒரு புறம் இருக்கட்டும். எனக்கு ஒரு சந்தேகம். பூமியில தான இருக்கு. பிறகென்ன 'ஆகாயத்தாமரை'ன்னு பேரு? (ஹி...ஹி).

    பதிலளிநீக்கு
  8. மனம் வருத்தம் தரும் தகவல். அவற்றை அகற்ற இதுவரை முயற்சி எதுவும் செய்யப்படாததன் காரணம்தான் என்ன?

    பதிலளிநீக்கு