வேர்களைத்தேடி தளத்திற்குத் தங்களை அன்புடன் வரவேற்கிறேன்... இத்தளத்தில் சங்க இலக்கியம், கணினித்தமிழ் சார்ந்து எனது அனுபவங்களைப் பகிர்ந்து வருகிறேன். 13 ஆண்டுகளில் 1500க்கும் மேற்பட்ட பதிவுகளை வழங்கியுள்ளேன். தற்போது இந்தியக் குடிமைப் பணித்தேர்வுக்கான விருப்பப் பாடம் தமிழுக்குரிய விளக்கங்களைத் தொடர்ந்து வழங்கி வருகிறேன். தங்கள் மேலான வருகைக்கு நன்றிகளைத் தெரிவித்துக்கொள்கிறேன்.

வியாழன், 5 ஏப்ரல், 2012

கல்வி குறித்த சங்ககாலப் பார்வை..


சிந்தித்தபோது...
கல்வி மனிதனை விலங்கிலிருந்து வேறுபடுத்திக் காட்டியது!
ணம் குறித்து சிந்தித்தபோது..
கல்வி மனிதனை விலங்காக்கியது!


குடும்பச் சூழல், வறுமை, அறியாமை எனப் பல காரணங்கள் சொல்லப்பட்டாலும்..
கல்வி கற்போர் விழுக்காடு இன்னும் ஏற்றத்தாழ்வுடனேயே இருந்துவருகிறது.


கல்வி வணிகமாகிவிட்ட இந்தச் சூழலில் கல்வி கற்று அறிவை வளர்த்துக்கொள்ளவேண்டும் என்ற எண்ணத்தில் பலரும் கல்விச்சாலைகளில் சேர்வதில்லை..


கல்வி பணம் ஈட்டும் ஒரு தொழில் என்ற எண்ணத்திலேயே பலரும் முதலீடு செய்கின்றனர்..

கல்வி குறித்த இதுபோன்ற பல சிந்தனைகள் நமக்கிருந்தாலும்..
சங்ககாலத்தில் கல்வி குறித்த சிந்தனை எவ்வாறு இருந்தது என்பதை இவ்வழகிய பாடல் எடுத்துரைக்கிறது.


"உற்றுழி உதவியும் உறுபொருள் கொடுத்தும்
பிற்றை நிலை முனியாது கற்றல் நன்றே!
பிறப்போரன்ன உடன்வயிற்றுள்ளும்
சிறப்பின் பாலால் தாயும் மனம் திரியும்
ஒரு குடிப் பிறந்த பல்லோருள்ளும்
முத்தோன் வருக என்னாது அவருள்
அறிவுடையோன் ஆறு அரசும் செல்லும்
வேற்றுமை தெரிந்த நாற்பா லூள்ளும்
கீழ்ப்பால் ஒருவன் கற்பின்
மேல் பால் ஒருவனும் அவன் கண்படுமே" 
(புறம்-183)




Learning is a fine thing to have if a student helps a teacher
in his troubles, gives him mass of wealth and honors him
without ever showing disdain! Among those born from the same belly,
who share the same nature, a mother’s heart will be most tender
toward the most learned! Of all who are born into a joint family,
a king will not summon the eldest to his side but instead he will
show favor to the man among them who has the greatest knowledge!
And with the four classes of society distinguished as different,
should anyone from the lowest become a learned man,
someone of the highest class, reverently, will come to him to study!    
 Translated by George Hart


இப்பாடலின் பொருளை அறிந்துகொள்ள.. “சங்ககாலக் கல்விநிலை” என்ற இடுகைக்கு வருமாறு தங்களை அன்புடன் அழைக்கிறேன்.



16 கருத்துகள்:

  1. சங்ககாலத்தில் இருந்தே கல்வியின் முக்கியத்துவம் வலியுறுத்தப் பட்டபோதிலும் இன்னும் கல்வி நிலையில் பின்தங்கி இருப்பது வேதனைக்குரியது.புற நானூற்றில் இருந்து தாங்கள் எடுத்துக்காட்டியது நன்று.

    பதிலளிநீக்கு
  2. //கல்வி பணம் ஈட்டும் ஒரு தொழில் என்ற எண்ணத்திலேயே பலரும் முதலீடு செய்கின்றனர்

    //
    100 % உண்மை ஐயா ...

    பதிலளிநீக்கு
  3. அருமையான புறநானூற்றுப்பாடல்..அங்கு போய்ப் பொருளையும் தெரிந்துகொண்டேன்.

    பதிலளிநீக்கு
  4. ///உறுபொருள் கொடுத்தும்
    பிற்றை நிலை முனியாது கற்றல் நன்றே!//
    //மிகுதியான பொருளை அவருக்குக் கொடுத்தாவது கல்வி கற்றல் வேண்டும்.//



    அன்றைக்கு கொடுக்க ஆரம்பித்த "உறு பொருள்" தான் இன்றைக்கு
    வளர்ந்து, கல்வி வணிகம் என்ற நிலையில் நிற்கிறது.
    சங்க பாடல் ஆசிரியர்க்கு கொடுக்கச்சொன்னது, இன்றைக்கு அதனை கல்வி நிறுவனங்களை நடத்தும் தனியார் முதலாளிகள் எடுத்துக்கொள்கிறார்கள்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருகைகைக்கும் வாசித்தலுக்கும் புரிதலுக்கும் நன்றி பாரத் பாரதி.

      நீக்கு
  5. இந்த பதிவுக்கு வாக்குகளும், வாழ்த்துகளும்..

    பதிலளிநீக்கு
  6. இணைப்பின் தளம் பார்த்து பொருளறிந்தேன் முனைவரே.
    கல்வி கற்பவர்களும் சில கல்வி நிறுவனங்களும் இன்று வியாபார நோக்கில் நடந்து கொள்கிறார்கள் என்பது நிதர்சனமான உண்மை.
    ஆத்மா உணர்வுடன் கல்வியை கற்கவேண்டும் என்று உணர்த்தும் பாடல் மிக நன்று..

    பதிலளிநீக்கு
  7. புறம் தந்த அருமையா பாடல்1
    கல்வியின் மேன்மையை விளக்கும் பாடல்
    என்றோ படித்தது இன்று நினைவுக்குக் கொண்டு
    வந்தீர் நன்றி!

    சா இராமாநுசம்

    பதிலளிநீக்கு