சிறுவிதைக்குள் ஒரு பெரிய மரமே மறைந்திருப்பதுபோல ஒவ்வொருவருக்குள்ளும் அவர்களின் தனித்தன்மை மறைந்திருக்கிறது.
சில விதைகள் செடியிலேயே அழிந்துபோகின்றன
சில விதைகள் மரங்களாகி நிழல்தருகின்றன.
இதுபோலவே மனிதர்களும்..
ஒரு செடி வளர்வதற்கு மண், நீர், வெப்பம் என எல்லாச் சூழல்களும் தேவை..
மனிதர்களுக்கும் தம்மைத் தாம் புரிந்துகொள்ள இதுபோன்ற சூழல்கள் பல தேவைப்படுகின்றன.
சிலர் அச்சூழல்களைப் பார்க்கிறார்கள்
சிலர் அச்சூழல்களைப் புரிந்துகொள்கிறார்கள்..
இந்தப் புரிதலுக்குத் திருப்புமுனை என்று நாம் பெயர்வைத்திருக்கிறோம்.
வரலாறு படைத்த சாதனையாளர்களுக்கு திருப்புமுனையாக அமைந்த சூழல்களைத் தொடர்ந்து “திருப்புமுனை என்ற பெயரில் இடுகைகளாக வெளியிடவுள்ளேன்.
தனித்தமிழ் இயக்கத்தின் தானைத்தலைவர், தனித்தமிழ் இயக்கத்தின் தந்தை எனப் போற்றப்படும் மறைமலையடிகள் சைவ சமயத்தில் ஆழ்ந்த ஈடுபாடு கொண்டிருந்தார்.
அவர் பல்லவபுரத்தில் தம் மகளாருடன் ஒருநாள் உலவிக்கொண்டிருந்தார். பின்னர் அமர்ந்து பேசிக்கொண்டிருந்த போது அவருடைய மகளார் நீலாம்பிகை அம்மையார் இராமலிங்க அடிகளாரின் திருவருட்பாவிலிருந்து ஒரு பாடலை இனிமையாகப் பாடினார்.
மனமுருகிப் பாடிய அவர் பாட்டின் இடையே “தேகம்“ என்னும் ஒரு வடசொல் வருவதைக் கண்டு அது பற்றித் தந்தையிடம் பேசினார்.
இப்பாட்டில் எல்லாச் சொற்களும் தமிழாய் இருக்கின்றன. ‘தேகம்’ என்னும் ஒருவடசொல் மட்டும் இருக்கிறது. அதையும் மாற்றினால் நன்றாக இருக்குமே என்று அவர்கள் உரையாடல் அமைந்தது. ‘தேகம்’ என்பதற்கு மாற்றாக "யாக்கை" என்னும் தனித்தமிழ்ச் சொல் இருந்தால் இனிமையாய் இருக்கும் என்று அடிகள் கூறினார்.
அவரின் மகளார், ‘தந்தையே இனிமேல் நாம் ஏன் வடசொற்களை நீக்கி முற்றிலும் தனித்தமிழைப் பயன்படுத்தக்கூடாது?’ என்று கேட்டார். இது 1916 இம் ஆண்டு நிகழ்ந்தது. அது முதல் அப்படியே செய்ய எண்ணிப் பல மாற்றங்களை மறைமலையடிகள் செய்யத் தொடங்கினார்.
இந்த நிகழ்ச்சி இவர்வாழ்வின் திருப்புமுனையாக அமைந்தது.
தொடர்புடைய இடுகைகள்
மறைமலையடிகள் பற்றிய விக்கிப்பீடியாவின் பக்கம்பிறமொழிச் சொற்களுக்கு இணையான தமிழ்ச்சொற்கள்
மறைபொருள் தெரிகிறதா?
தகவலுக்கு நன்றி முனைவரே
பதிலளிநீக்குநன்றி செய்தாலி
நீக்குmunaivare!
பதிலளிநீக்குthodarnthu varattum-
ungal thiruppu munaikal!
ethirpaarkkiren!
தருகிறேன் சீனி.
நீக்குவருகைக்கு நன்றி.
அந்த உந்துதல் தானே வேதாசலத்தை மறைமலையடிகள் ஆக்கியது?
பதிலளிநீக்குநன்றி முனைவரே!
வருகைக்கு நன்றி நண்பா.
நீக்குஅருமையான முயற்சி அண்ணா..
பதிலளிநீக்குநன்றி ஸ்ரீதர்
நீக்குசாதனையாளர்களுக்கு நிகழ்ந்த திருப்புமுனைகள் பற்றியத் தெளிவும் அறிவும் நம்மிலும் சிலருக்குத் திருப்புமுனையாகலாம். நல்லதொரு பகிர்வுத் தொடருக்கு நன்றி முனைவரே.
பதிலளிநீக்குநன்றி கீதா
நீக்குதிருப்புமுனை என்பது திட்டமிட்டு நடப்பதல்ல, திடீரென்று நடப்பது... பகிர்வுக்கு நன்றி
பதிலளிநீக்குநன்றி பாலா
நீக்குநான் அறியாத நல்ல தகவல்!
பதிலளிநீக்குநன்றி முனைவரே!
சா இராமாநுசம்
நன்றி புலவரே
நீக்கு