பக்கங்கள்

இந்திய குடிமைப் பணித்தேர்வு - தமிழ் - 2 - (UPSC EXAM TAMIL)

வியாழன், 16 பிப்ரவரி, 2012

எல்லோருக்கும் பிடித்த ஒரே மொழி!

பொருளற்ற வாழ்க்கை வாழும்
பொருளற்றவரின் வாழ்க்கையைக்கூட
பொருளற்ற வார்த்தைகளால்
பொருள் பொதிந்த வாழ்க்கையாக்கிக் காட்டும்
பல்கலைக்கழமே குழந்தை!

ங்ங்ககா
அஅஆ
உஉஊ
த்த்த்ததா
ம்மா
ப்பாபு

என்ன மொழி இது!!
ஒவ்வொரும் அவரவர் அறிவுக்கு எட்டியவரை
 மொழிபெயர்த்துச் சொல்கிறார்கள்!

அம்மான்னு சொல்லுதுங்கறாங்க அம்மா
அப்பா சொல்லுதுன்றார் அப்பா
இல்லை தாத்தான்னுதான் சொல்லுதுங்கறார் தாத்தா
இல்லை மாமா சொல்லுதுங்கறார் மாமா.

இப்படி ஆளுக்கொரு ஆசைகளை
மொழிபெயர்த்துக்கொள்கிறார்கள்!

எத்தனையோ மொழிமாற்றி மென்பொருள்கள் 
வந்து என்ன பயன்?

இந்த மழலை மொழியை மொழிபெயர்பதல்லவா
மெய்யான தொழில்நுட்பம்!

நீ - நான் - நாம் 
உயர்திணை - அஃறிணை என
எந்த இலக்கண மரபுகளுமே கிடையாது மழலை உலகில்!

இயற்கையின் படைப்பில் உயர்வென்ன தாழ்வென்ன 
என்ற உண்மையைத் தான் 
தன்மொழியில் சொல்கிறதோ மழலை!

காற்றோடு
தீயோடு
பறவையோடு
விலங்கோடு
என எதோடு பேசினாலும் தன் மொழியிலேயே பேசுகிறது மழலை!

மழலை மொழி பொருளற்றது
என நம் கல்வியறிவு புறம்தள்ளினாலும்
இனிமையானது என உள்மனது சண்டைக்குவருகிறது!

கடவுள் இல்லையென்றே நீண்ட காலமாகச் சொல்லிவந்த
மனது இப்போதெல்லாம் சொல்கிறது

மழலையின் மொழியே கடவுளின் மொழி என்று..

ஒப்பீடு..
குழலினிது யாழினிது என்பார்தம் மக்கள்
மழலைச்சொல் கேளா தவர்

(திருக்குறள் 66)

தொடர்புடைய இடுகை

29 கருத்துகள்:

  1. ahaieeeeeeeeee
    சுப்பரா இக்குது ....

    பதிலளிநீக்கு
  2. நிச்சயம் ..மழலை மொழிக்கு எந்த மொழியும் ஈடு இணை கிடையாது.அதை தற்போது அனுபவித்து வருகிறேன்.நன்றி.

    பதிலளிநீக்கு
  3. //மழலையின் மொழியே கடவுளின் மொழி என்று..//
    சந்தேகமின்றி
    அருமை.

    பதிலளிநீக்கு
  4. மொழிகள் கோடிகள் எனினும்
    எல்லா மொழிக்கும் பொருந்தும்
    தனிச் சிறப்பான மொழி மழலை மொழி....

    துன்பங்களில் உழன்று மனம் நொந்து வந்தாலும்
    மழலையின் மொழி கேட்டால் மனமிளகி
    மற்றுமோர் மனதார உலகில் சஞ்சரிக்கும்..

    பதிலளிநீக்கு
  5. Theriyaatha mozhi!
    puriyum kavithai!

    mazhalai mozhi
    soonthu-
    thamil mozhi !
    vaazhukkal!

    பதிலளிநீக்கு
  6. //கடவுள் இல்லையென்றே நீண்ட காலமாகச் சொல்லிவந்த
    மனது இப்போதெல்லாம் சொல்கிறது
    மழலையின் மொழியே கடவுளின் மொழி என்று..//

    அருமையான கருத்து.அதுவும் குழந்தை பிறந்ததும் முதலில் அழத்தான் செய்கிறது.அந்த அழுகைகாக ஏங்கித்தவிக்கும் தாயின் கண்ணீர் சொல்லித்தெரிவதில்லை

    பதிலளிநீக்கு
  7. மாப்ள நல்லா சொல்லி இருக்கீங்க...மழலை சொல்லை ரசிக்க தெரியாதவன்,,,வாழ தகுதி அற்றவன்!

    பதிலளிநீக்கு
  8. மனிதன் என்ற மிருகம் மட்டுமே தன் தாய் மொழியை மறந்து விட்டது... மழலை மொழி தான் மனிதனின் தாய் மொழி என்பது என் கருத்து... கண்டிப்பாக இதை ஆய்வு செய்தால் உலகத்தில் உள்ள அனைத்து குழந்தைகளும் ஒரே மொழியை பேசுவதை கண்டு அறியலாம்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. மழலை மொழி தான் மனிதனின் தாய் மொழி என்ற தங்களின் கருத்து ஏற்புடையதுதான் அன்பரே..

      அறிவுறுத்தலுக்கு நன்றி.

      நீக்கு
  9. ஆம் உண்மைதான, எல்லோருக்கும் பிடித்த மொழி இதுதான், அழகாக சொல்லியிருக்கிறீர்கள்!

    பதிலளிநீக்கு
  10. நமது வாழ்வில் கவலையை மறக்கும் வித்தையைக் கற்றுக் கொடுக்க வந்த மாமேதைகள் அவர்கள். அவர்கள் பேசும் மழலையிலும் குதலையிலும் ரசிக்கிறது ங்ஙா... என்னும் முதல் அழுகை மொழி. மனம் நிறைத்தப் பதிவு. பாராட்டுகள் முனைவரே.

    பதிலளிநீக்கு
  11. எல்லா துயரத்திற்கும் ஒரே மருந்து மழலையின் சிரிப்பு

    பதிலளிநீக்கு
  12. அண்ணா, இந்த கவிதையை,

    "பொருளற்ற வாழ்க்கை வாழும்
    பொருளற்றவரின் வாழ்க்கையைக்கூட
    பொருளற்ற வார்த்தைகளால்
    பொருள் பொதிந்த வாழ்க்கையாக்கிக் காட்டும்
    பல்கலைக்கழமே குழந்தை!"

    எழுதியது தாங்களா??? அருமை...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆமாம் தம்பி..

      தங்கள் வருகைக்கும் மறுமொழிக்கும் நன்றி தம்பி.

      நீக்கு
  13. ''..காற்றோடு
    தீயோடு
    பறவையோடு
    விலங்கோடு
    என எதோடு பேசினாலும் தன் மொழியிலேயே பேசுகிறது மழலை!..''

    ஈடு இணையற்ற இறை மொழி..
    ஏடு இன்றி எழுந்த மொழி.
    பீடு தொலைக்கும் இன்ப மொழி
    வீடு ஒளி பெறும் மழலை மொழி.
    நல்ல பதிவு வாழ்த்துகள். முனைவரே.
    வேதா. இலங்காதிலகம்.
    http://kovaikkavi.wordpress.com

    பதிலளிநீக்கு
  14. // கடவுள் இல்லையென்றே நீண்ட காலமாகச் சொல்லிவந்த
    மனது இப்போதெல்லாம் சொல்கிறது

    மழலையின் மொழியே கடவுளின் மொழி என்று.//

    முற்றிலும் உண்மை முனைவரே!
    சா இராமாநுசம்

    பதிலளிநீக்கு