வேர்களைத்தேடி தளத்திற்குத் தங்களை அன்புடன் வரவேற்கிறேன்... இத்தளத்தில் சங்க இலக்கியம், கணினித்தமிழ் சார்ந்து எனது அனுபவங்களைப் பகிர்ந்து வருகிறேன். 13 ஆண்டுகளில் 1500க்கும் மேற்பட்ட பதிவுகளை வழங்கியுள்ளேன். தற்போது இந்தியக் குடிமைப் பணித்தேர்வுக்கான விருப்பப் பாடம் தமிழுக்குரிய விளக்கங்களைத் தொடர்ந்து வழங்கி வருகிறேன். தங்கள் மேலான வருகைக்கு நன்றிகளைத் தெரிவித்துக்கொள்கிறேன்.

ஞாயிறு, 19 பிப்ரவரி, 2012

முறைமாமன் சீரு.


தமிழ் மரபுகளையெல்லாம் மறந்துவிட்ட இன்றைய தலைமுறையினரிடையேயும் மரபுகளை மறக்காத சிலர் இருக்கத்தான் செய்கிறார்கள்.
இதோ தமிழ் மண்வாசனையோடு ஒருகவிதை..
இதை எழுதியவர் என் மாணவர் திரு.ச.கேசவன் என்பதைத் தெரிவித்துக்கொள்வதில் பெருமிதம் கொள்கிறேன்





முக்கனிகள் சேர்த்தெடுத்து
முறைமாமாமன் சீரெடுத்து
முச்சந்தியில் மக்களெல்லாம்
மூக்கின் மேல் விரலைவைக்க
மேளம் கொட்டி வாராண்டி!

பச்ச ஓலையில
உன்னைப் பூட்டப் போறாண்டி!

பித்தளையில் பாத்திரங்கள்
செப்புதனில் நீர்க்குடங்கள்
தங்கத்துல நகைசெஞ்சு
வாராண்டி!

உன்னத் தங்கத்துல செஞ்ச
வைரமுன்னு சொல்வாண்டி!

பலவனத்துப் பூவினங்கள்
ஊர்மயங்கும் பல நிறங்கள்
மாலையாகக் கோர்த்தெடுத்து
வாரண்டி!

அந்த மாலையில
உன்னக் கட்டப் போறாண்டி!

மொட்டு ஒன்னு மலர்ந்திருச்சி
நாணம் வந்து செவந்திடுச்சி
வண்டு போல மாமன் அவன் வாராண்டி!

உந்தன் நாணத்தை
வெல பேசப் போறாண்டி!

ஊரடக்கிப் பேசியவ
ஊரச்சுத்தித் திரிஞ்சபுள்ள
வாயடச்சி நிற்கிறத
பாருங்கடி!

இப்ப வட்டியும்
முதலுமா வாங்கிக்கடி!

மாமன் அவன் வாங்கிவந்த
பட்டுடுத்தி நடக்கயிலே
ஊருசனம் கண்ணுவெக்கும்
வாருங்கடி..
வந்து இவளுக்குக் கருநிலா
பொட்டெடுத்து வையுங்கடி!

தீட்டு வந்து சேருமின்னு
நல்லெண்ண தலைக்குவெச்சு
நட்டாத்தில் குளிச்சுப்புட்டு
வாராண்டி!

நல்லா கறிசமைச்சு
ஆக்கிப்போட வாருங்கடி..

பெண்ணாகப் பொறந்தவளே
கல்லாக இருந்த உன்ன
செலையாக செதுக்க மாமன்
வாராண்டி!

உன் சிரிப்பெடுத்து
தன்மனசுல கோர்க்கப் போறாண்டி!

ச.கேசவன்
இளம்கலை இயற்பியல் இரண்டாமாண்டு
கே.எஸ்.ஆர் கலை அறிவியல் கல்லூரி
திருச்செங்கோடு

17 கருத்துகள்:

  1. kavithai rasikkumpadi-
    irunthathu!

    maanavarkalin padaippai
    neengal veliyiduvathu!
    avarkalukku mikka urchaakam-
    oottum vaazhthukkal!

    பதிலளிநீக்கு
  2. மிகவும் சிறப்பான கவிதை. வாழ்த்துக்கள்.

    பதிலளிநீக்கு
  3. ஆஹா... இயற்பியல் மாணவரிடமிருந்து இப்படியொரு இனிய கவிதையா? பிறந்தவீட்டுப் பெருமை சொல்லும் தாய்மாமன் சீரை இன்றளவும் பெருமையாய் நினைக்கும் சமுதாயம் நம் சமுதாயம். இன்றைய இளந்தலைமுறையினருக்கு இதன் அருமை புரிந்திருப்பது மிகவும் பாராட்டுக்குரிய விஷயம். கவிதை புனைந்த மாணவருக்கும் அதைப் பகிர்ந்துகொண்ட தங்களுக்கும் என் மனமார்ந்த நன்றியும் பாராட்டும்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. எனக்கே அந்த மாணவரைப் பார்த்தால் வியப்பாகத்தான் உள்ளது அவரது சிந்தனைகளுக்கு மட்டும் அவரைவிட 20 வயது அதிகமாக இருக்கவேண்டும் என்றே எனக்குத் தோன்றும்..

      வருகைக்கும் மாணவரை ஊக்கப்படுத்தியமைக்கும் நன்றி

      நீக்கு
  4. ஆவலும் சந்தோஷமும் நிறைந்த கவிதை.பாராட்டுக்கள் கேசவன் அவர்களுக்கு !

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருகைக்கும் மாணவரை ஊக்கப்படுத்தியமைக்கும் நன்றி ஹேமா

      நீக்கு
  5. அருமையா எழுதியிருக்கார் கேசவன்.வாழ்த்துக்கள்!முறைமாமன் சீர் கொண்டு வந்ததை ஞாபகபடுத்தி பழைய நினைவுகளில் மூழ்கடித்து விட்டார் உங்கள் மாணவன். நன்றி!!!

    பதிலளிநீக்கு
  6. அன்புநிறை முனைவரே..
    தங்கள் மாணவர் கேசவனின் பல கவிதைகள்
    தங்களின் வலைத்தளம் மூலம் படித்திருக்கிறேன்..
    அவ்வளவு அற்புதமான உணர்வுக் கவிதைகள்..
    எழுத்துலகில் அவர் ஜொலிக்கும் காலம் வரும்.

    நம் இனிய மரபுகளில் மிக முக்கிய ஒன்று தாய்மாமன் சடங்குகளும்
    சீர்செனத்திகளும்..
    இன்றைக்கு இந்த மரபுகள் அழிந்துவரும் வேளையில்..
    இந்தக் கவிதை..
    மனதுக்கு இதமாக இருக்கிறது..

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருகைக்கும் மாணவரை ஊக்கப்படுத்தியமைக்கும் நன்றி நண்பரே..

      நீக்கு
  7. அழகான பதிவு!
    தமிழர் மரபினை நினைவூட்டிப்போகிறது!
    வாழ்த்துக்கள் கேசவன் அவர்களுக்கு!

    பதிலளிநீக்கு
  8. கவிதை கருத்தும் நடையும் மிக அருமை..
    தங்கள் மாணவர் கேசவனுக்கு என் வாழ்த்துகளைச் சொல்லி விடுங்கள்!

    பதிலளிநீக்கு
  9. தங்களுக்கும், தங்களின் மாணவருக்கும் வாழ்த்துக்கள் !

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருகைக்கும் மாணவரை ஊக்கப்படுத்தியமைக்கும் நன்றி நண்பரே

      நீக்கு