வேர்களைத்தேடி தளத்திற்குத் தங்களை அன்புடன் வரவேற்கிறேன்... இத்தளத்தில் சங்க இலக்கியம், கணினித்தமிழ் சார்ந்து எனது அனுபவங்களைப் பகிர்ந்து வருகிறேன். 13 ஆண்டுகளில் 1500க்கும் மேற்பட்ட பதிவுகளை வழங்கியுள்ளேன். தற்போது இந்தியக் குடிமைப் பணித்தேர்வுக்கான விருப்பப் பாடம் தமிழுக்குரிய விளக்கங்களைத் தொடர்ந்து வழங்கி வருகிறேன். தங்கள் மேலான வருகைக்கு நன்றிகளைத் தெரிவித்துக்கொள்கிறேன்.

சனி, 11 பிப்ரவரி, 2012

சிரிக்கவும் சிந்திக்கவும்..

வறுமை

வறுமை பற்றி கவிதை எழுத
எனக்கு ஆசைதான்
ஆனால் 
என்ன செய்வது?
மை வாங்கக் கூட என்னிடம் காசு இல்லை!

--0O0----0O0----0O0--


முள்

ஒரு நிமிடம் கூட என்னைவிட்டுப் பிரியாதே
என் அழகிற்குப் பாதுகாப்பு இல்லை
முள்ளிடம் சொன்னது ரோஜா!



                                                   --0O0----0O0----0O0--

திரும்பிப் பார்

வெற்றி கிடைக்கும் வரை திரும்பிப் பார்க்காதே
வெற்றி கிடைத்த பின் திரும்பிப் பார்க்க மறக்காதே!
 --0O0----0O0----0O0--



வெற்றி

வெற்றி என்பது அழாகான காதலிபோல
தோல்வி என்பது அம்மா போல
காதலி எப்போது வேண்டுமானாலும் உன்னை விட்டுப் போகலாம்
அம்மா உன் தோல்விக்கான காரணத்தை உணர்த்தாமல் செல்வதில்லை!
 --0O0----0O0----0O0--
வரலாறு

வரலாறு என்றும் வெற்றியாளர்களை மட்டுமே நினைவில் வைத்துக்கொள்கிறது!
படை வீரர்களைக் கணக்கில் எடுத்துக்கொள்வதில்லை!

 --0O0----0O0----0O0--


21 கருத்துகள்:

  1. ஒவ்வொரு கவிதையும் அழகான வரிகளில் சிந்திக்க செய்தாலும் . வெற்றியும் ,வரலாறும் மிக சிந்திக்கவும் ரசிக்கவும் வைத்தன

    பதிலளிநீக்கு
  2. சிந்திக்கவும் மனதில் நிலையாய் பதிக்கவும்
    என தலைப்ிட்டிருக்கலாமோ ?
    மனம் கவர்ந்த பதிவு.வாழ்த்துக்கள்

    பதிலளிநீக்கு
  3. ஒவ்வொன்றும் அழகு வரிகள் சார். கடந்த சில பதிவுகளுக்கு தொடர்ந்து வர முடியவில்லை. இனி வருகிறேன். தங்களது ஒவ்வொரு பதிவுமே அருமைதான்.

    பதிலளிநீக்கு
  4. அத்தனையில் பொன்னேட்டில் பதித்து வைக்க வேண்டிய
    வைர வரிகளால் தீட்டப்பட்ட மொழிகள்.

    பதிலளிநீக்கு
  5. காதலி எப்போது வேண்டுமானாலும் உன்னை விட்டுப் போகலாம்
    அம்மா உன் தோல்விக்கான காரணத்தை உணர்த்தாமல் செல்வதில்லை! varigal arumai vaazhthukkal Nanbare.(vimal)

    பதிலளிநீக்கு
  6. வரலாறு' கவிதை சிந்திக்க வைக்கிறது. வெற்றிக்காக போரிட்ட வீரர்களை நாம் மறந்துவிடுகிறோம்.

    பதிலளிநீக்கு
  7. அனைத்து கவிதைகளுமே சிறப்பாக இருக்கு.

    பதிலளிநீக்கு
  8. வறுமையும் , வெற்றியும் ...
    ரசித்து படித்தேன் அருமை .

    பதிலளிநீக்கு
  9. சிந்தனைத் துளிகள் சிறப்பு முனைவரே!
    வாழத்துக்கள்!

    புலவர் சா இராமாநுசம்

    பதிலளிநீக்கு