வேர்களைத்தேடி தளத்திற்குத் தங்களை அன்புடன் வரவேற்கிறேன்... இத்தளத்தில் சங்க இலக்கியம், கணினித்தமிழ் சார்ந்து எனது அனுபவங்களைப் பகிர்ந்து வருகிறேன். 13 ஆண்டுகளில் 1500க்கும் மேற்பட்ட பதிவுகளை வழங்கியுள்ளேன். தற்போது இந்தியக் குடிமைப் பணித்தேர்வுக்கான விருப்பப் பாடம் தமிழுக்குரிய விளக்கங்களைத் தொடர்ந்து வழங்கி வருகிறேன். தங்கள் மேலான வருகைக்கு நன்றிகளைத் தெரிவித்துக்கொள்கிறேன்.

ஞாயிறு, 5 பிப்ரவரி, 2012

பழைய சோறும் பச்சை மிளகாயும்..

என்னதான் விலையுயர்ந்த பீங்கான் தட்டில் சுவைமிக்க துரித உணவை வயிறுநிறைய 
உண்டாலும்..
அன்று..

வெங்காயத்தையோ, பச்சைமிளகாயையோ கடித்துக்கொண்டு 
பழையசோறு சாப்பிட்டபோது கிடைத்த மனநிறைவு இப்போதெல்லாம் கிடைப்பதில்லை.

எனக்கு விவரம் தெரிந்து அந்தக்காலத்துல சர்க்கரைவியாதி, 
ரத்த அழுத்தம் என்பதெல்லாம் கேள்விப்பட்டது கூட கிடையாது.

இப்போது சிறு குழந்தைகளுக்குக் கூட ஏதேதோ வாயில் நுழையாத பெயரில்
 நோய் என்கிறார்கள்.

சத்தற்ற உணவாக இருந்தாலும், 
சுவைமட்டும் இருந்தால் போதும் 
என்ற மனநிலைக்கு மக்கள் வந்துவிட்டனர்.

பழையசோறு என்று சொல்வதைக் கூட இப்போதெல்லாம்
 தரக்குறைவாகவே  கருதும் போக்கு வந்துவிட்டது.

இதற்கு “கெர்டு ரைஸ்” “ஐஸ் பிரயாணி” என வேறு 
பெயர்கூட வைத்துவிட்டார்கள்.

வயிற்றுக்குத் தரும் உணவே மாறிப்போன சூழலில்..
செவிக்குத் தரும் உணவு மட்டும் இன்னும் மாறாமலா இருக்கும்..

திரைப்படப்பாடல்களே இன்றைய தலைமுறைக்கு பெரிய 
இலக்கியங்களாகக் கருதப்படுகின்றன.
அந்த அளவிலாவது தமிழை மறக்காமல் இருக்கிறார்களே என்று 
நாமும் நம் மனதைத் திடப்படுத்திக்கொள்ளவேண்டும்.

பழமையை மறக்காதவர்களின் செவிப்பசிக்காக
கொஞ்சம் சத்தான உணவு!

உண்ண வருமாறு அன்புடன் அழைக்கிறேன்..
வினைவலியும் தன்வலியும் மாற்றான் வலியும்

துணைவலியும் தூக்கிச் செயல்

குறள் 471
செயலின் வலிமையும், தன் வலிமையும், 
பகைவனுடைய வலிமையும், 
இருவருக்கும் துணையானவரின் வலிமையும் 
ஆராய்ந்து செய்யவேண்டும்
என்பது இதன் பொருளாகும்.


“காக்கைக்காகாகூகை

கூகைக்காகாகாக்கை

கோக்குக்கூ காக்கைக்குக் கொக்கொக்க – கைக்கைக்குக்

காக்கைக்குக் கைக்கைகா கா!”

என்னும் பழம்பாடலும் தன்மதிப்பீடு குறித்து சிந்திக்கச் செய்வதாக
 உள்ளது.
காக்கைக்காகா கூகை = காக்கைக்கு ஆகா கூகை
= கூகை(ஒரு வகை ஆந்தை) இரவில் வெல்லுவது காக்கையால்
ஆகாது.

கூகைக்காகா காக்கை = கூகைக்கு ஆகா காக்கை = பகலில் கூகையால்
காக்கையை வெல்வதற்கு முடியாது.
கோக்கு கூ காக்கைக்கு
கோ = மன்னன்;
கோக்கு = மன்னனுக்கு
கூ = புவி
காக்கைக்கு = காப்பதற்கு
கொக்கொக்க = கொக்கு ஒக்க = கொக்கைப் போன்று தகுந்த
சமயம் வரும் வரை காத்திருக்கவேண்டும்.
கைக்கைக்கு = பகையை எதிர்த்து
காக்கைக்கு = காப்பாற்றுதல்
கைக்கைக்காகா = கைக்கு ஆகா=(தகுந்த சமயமில்லாது போனால்)
திறமைமிக்க தலைவனுக்கும் கைக்கு எட்டாது போய்விடும்.
பாடலின் பொருள்:
தகுந்த சமயமும் வாய்ப்பும் பார்த்து, வாய்ப்புகளை
நழுவ விடாது செயலாற்ற வேண்டும்.
மேற்கண்ட பழந்தமிழ்ச் செய்யுள்களுடன் ஒப்பீடு செய்யத்தக்க
 இன்றைய மேலாண்மைக் கோட்பாடு..

SWOT analysis

From Wikipedia, the free encyclopedia

Setting the objective should be done after the SWOT analysis has been performed. This would allow 

SWOT analysis (alternately SLOT analysis) is a strategic planning method used to evaluate the 
Strengths, Weaknesses/Limitations,Opportunities, and Threats involved in a project or in a 
business venture. It involves specifying the objective of the business venture or project and
 identifying the internal and external factors that 
are favorable and unfavorable to achieve that objective. The technique is credited to Albert Humphrey, who
 led a convention at Stanford University in the 1960s and 1970s using data from Fortune 500 companies.
achievable goals or objectives to be set for the organization.


1.Strengths: characteristics of the business, or project team that give it an advantage over others
2.Weaknesses (or Limitations): are characteristics that place the team at a disadvantage
 relative to others
3.Opportunities: external chances to improve performance (e.g. make greater profits) in the 
environment
4.Threats: external elements in the environment that could cause trouble for the 
business or project
Identification of SWOTs is essential because subsequent steps in the process of planning for 
achievement of the  selected objective may be derived from the SWOTs.
First, the decision makers have to determine whether the objective is attainable, given the SWOTs.
 If the objective is NOT attainable a different objective must be selected and the process repeated.

சான்றுகளுக்காக உதவிய விக்கிப்பீடியாவுக்கு நன்றி.
மு.வரதராசனார் உரை

26 கருத்துகள்:

  1. நாம் வேணாம்னு ஒதுக்குறதல இவ்ளோ விஷயம் இருக்கா....தகவலுக்கு நன்றி சார்...

    பதிலளிநீக்கு
  2. எனது நண்பரும் தோழருமானவர் சொல்வார்.நாக்குக்கு அடிமையாகிவிட்டோம் நாம் என்பார்,உண்மைதான்,அதை தங்களது பதிவு திரும்பவுமாய் ஞாபகப்படுத்துகிறது.உணவே மருந்து என்பதை மறக்கடிக்க எவ்வளவ்ஃஜோ வேலைகள் செய்யப்படுகிற நாட்களில் இது போன்ற பதிவு மிகவும் பயனுள்ளதாய். வாழ்த்துக்கள்.

    பதிலளிநீக்கு
  3. நல்ல பதிவு! அருமையான ஒப்பீடு ! நன்றி சார் !

    பதிலளிநீக்கு
  4. பழைய சோறு விளக்கம், திருக்குறள், காளமேகப்புலவர் செய்யுள் அதற்கான ஆங்கில கோட்பாட்டு விளக்கம் என்று அத்தனையும் அருமை முனைவரே!.

    பதிலளிநீக்கு
  5. எத்தனையோ காலை உணவுகள் இருந்தாலும்..
    உறிஞ்சி குடிக்கச் செய்யும் பழைய சோற்றுக்கு இணை
    வேறில்லை ...

    அழகான விளக்கங்கள் முனைவரே.

    பதிலளிநீக்கு
  6. பின்னிடிங்க நண்பா...வேணாம்னு ஒதுகுருவங்களுக்கு அதன் அருமை தெரியாது .... நண்பரே
    நகரத்து மண்ணில் பாய்ந்த கிராமத்து உழவன் ...

    பதிலளிநீக்கு
  7. பழைய சோறு வயிற்றுக்கு உணவும் ,
    செவி உணவும் இரண்டுமே சுவை.

    பதிலளிநீக்கு
  8. wav...superaa solli irukkeenga.....enakku romba palaya soru pidikkum////

    பதிலளிநீக்கு
  9. பழைய சோறாய் குறளும், பழம்பாடலும் மனம் குளிர்விக்க, கர்டு ரைஸாய் இன்றைய மேலாண்மைக் கோட்பாட்டை எடுத்தாண்டவிதம் அருமை. அங்கிருந்து வந்ததுதான் இது என்னும் உண்மையை அழகாக ஒப்பிட்டுக் காட்டியவிதம் அருமை. பகிர்வுக்கு மிகவும் நன்றி முனைவரே.

    பதிலளிநீக்கு
  10. பழையது சாப்பிடுவது உடலுக்கு நல்லது, பழைய தமிழ் பாடல் கேட்பது உள்ளத்திற்கு நல்லது என அழகாக ஒப்பிட்டு காட்டியமைக்கு மிக்க நன்றி.

    பதிலளிநீக்கு