பக்கங்கள்

இந்திய குடிமைப் பணித்தேர்வு - தமிழ் - 2 - (UPSC EXAM TAMIL)

வெள்ளி, 3 பிப்ரவரி, 2012

"குடி“மக்கள் சிந்தனைக்கு..


  • உலக நாடுகளோடு இந்தியா எதில் போட்டி போடுகிறதோ இல்லையோ, மது விற்பனையில் போட்டி போட்டு முன்னேறிவருகிறது.
  • குடிப்பவர்கள் தம் உயிரோடு தம்குடும்பத்தின் உயிரையும் வாங்குகிறார்கள் என்பது ஒருபுறமிருக்க குடித்துவிட்டு வாகனங்களை ஓட்டுவதால் தனக்குத் தொடர்பே இல்லாதவர்களின் உயிர்களையும் பறித்துவருகிறார்கள் என்பது சிந்திக்கத்தக்கதாகவுள்ளது.
  • 2010 – 11-ஆம் ஆண்டுகளில் அரசுமதுபானக்கடைகள் வழியாக  தமிழக அரசுக்கு    கிடைத்த வருவாய் ரூ.14,965 கோடி என்கிறது புள்ளிவிவரம்.
  • இதில் வருந்தத்தக்க உண்மை என்னவென்றால் பள்ளிமாணவர்கள் இன்றைய சூழலில் அதிகமாக மதுவுக்கு அடிமையாகிவருகிறார்கள் என்பதுதான்.
  • சில மாநிலங்களில் 18 வயதுக்கு மேல்தான் மது வாங்கமுடியும் என்றெல்லாம் சட்டங்கள் இருக்கின்றன.

சிந்தனைக்காக சில..

மது உள்ளே போனால்
உன் மதி வெளியே போகும்


கள்ளுக் குடிச்சவனுக்கு
சொல்லுப் புத்தி ஏறாது

குடிகாரன் பேச்சு விடிஞ்சா போச்சு

குடி குடியைக் கெடுக்கும்
குட்டக்கலப்பை காட்டைக் கெடுக்கும்

சாராயம் உள்ளே போனால்
பூராயம் எல்லாம் வெளியே வந்துவிடும்



சங்க இலக்கியத்தில் மதுரைக்காஞ்சியில் குடித்துவிட்டுக் குழந்தை மொழிபேசுவோரை..

“உண்டு மகிழ்ந்தட்ட மழலை நாவின்
பழஞ்செருக்காளர் தழங்கு குரல் தோன்ற
(மதுரைக்காஞ்சி -668-669)
என்று உரைப்பார் மாங்குடி மருதனார்.


சிறியகட் பெறினே, எமக்கீயும்; மன்னே!
பெரிய கட் பெறினே,
யாம் பாடத், தான்மகிழ்ந்து உண்ணும்; மன்னே!
சிறுசோற் றானும் நனிபல கலத்தன்; மன்னே!
பெருஞ்சோற்றானும் நனிபல கலத்தன்; மன்னே!
என்பொடு தடிபடு வழியெல்லாம் எமக்கீயும்; மன்னே!
அம்பொடு வேல்நுழை வழியெல்லாம் தான்நிற்கும் மன்னே!
நரந்தம் நாறும் தன் கையால்,
புலவு நாறும் என்தலை தைவரும்! மன்னே
அருந்தலை இரும்பாணர் அகன்மண்டைத் துளையுரீஇ,
இரப்போர் புன்கண் பாவை சோர,
அஞ்சொல் நுண்தேர்ச்சிப் புலவர் நாவில்
சென்றுவீழ்ந் தன்று, அவன்
அருநிறத்து இயங்கிய வேலே!
ஆசாகு எந்தை யாண்டுஉளன் கொல்லோ?
இனிப், பாடுநரும் இல்லை; படுநர்க்குஒன்று ஈகுநரும் இல்லை;
பனித்துறைப் பகன்றை நறைக் கொள் மாமலர்
சூடாது வைகியாங்குப், பிறர்க்கு ஒன்று
ஈயாது வீயும் உயிர்தவப் பலவே! 
பாடியவர்: ஔவையார்.

பாடப்பட்டோன்: அதியமான் நெடுமான் அஞ்சி.
திணை: பொதுவியல். துறை: கையறுநிலை.



குறைந்த அளவே கள் கிடைத்தால் எங்களுக்குக் கொடுத்துவிடுவாயே..

பெரிய அளவில் கள் கிடைத்தால் எங்களுக்கும் கொடுத்து நாங்கள் பாட, நீயும் மகிழ்ந்து உண்பாயே...

சிறிய சோறானாலும் மிகப் பலரோடு பகிர்ந்து கொள்ளுவாயே..
பெருஞ்சோறானாலும் மிகப் பலரோடு பகிர்ந்து கொள்ளுவாயே...

எலும்போடு ஒட்டிய ஊன்தசைகளை அனைத்தையும் எமக்கே தந்து மகிழ்வாயே..

அம்பும் வேலும் நுழையும் வழியெல்லாம் நீ நின்றுகொள்வாயே..
நரந்தம் புல் நாறும் தன் கையால் புலவு நாறும் எங்கள் தலையைக் கோதிவாயே..

தலைமைப் பாணர்களது அகன்ற சோற்றுக் கலனைத் துளைத்து,
அவனிடம் இரந்தோரின் கைகளுள்ளும் போய்,
அவனாற் காப்பாற்றப்படுவோரின் புல்லிய கண்பாவை சோர்ந்துபோகச் செய்து. அருஞ்சொல்லை நுணுகத் தேடிப் பெய்யும் புலவருடைய நாவிலும் குத்திச் சென்று, வீழ்ந்தது அவன் மார்பிற் தைத்த வேல்.

எம்மைப் பற்றும் தலைவன் எங்குள்ளான்?

இனி,
அவனைப் பாடுநரும் இல்லை!.பாடுநருக்கு ஈபவரும் இல்லை!

குளிர்ந்த துறையில் மலரும் தேன்கொண்ட பகன்றை யாராலும் சூடப்படாது கழிந்தாற்போல பிறர்க்கு ஒன்றும் ஈயாது வீணே வீழும் உயிர்கள் மிகப்பல.

என்ற பாடல் அக்கால நிலையைப் புலப்படுத்துவதாக உள்ளது.


இதன் ஆங்கில வடிவம்..

If he found a little liquor,

he would give it to us.
If he had more,
he would drink happily
while we sang. 
where is he now? 
If he had even a little rice. 
he shared it 
in many plates. 
where is he now? 
If he had more, 
he shared it 
in many more plates. 
where is he now? 
He gave us 
all the flesh 
on the bones 
where is he now? 
Wherever spear and arrow flew, 
he was there. 
where is he now? 
With his palms scented 
with lemon grass, 
he carressed my hair 
smelling of meat. 
where is he now? 
The spear that pierced his chest 
pierced at once 
the wide eating bowls 
of great and famous minstrels, 
pierced many begging patms,
and, dimming the images in the eyes
of men he sheltered,
it went right through the subtle tongues 
of poets 
skilled in the search 
for good words. 
Where is he now,
father, mainstay,
king? 
where is he now? 
No more, 
No singers any more 
nor anyone to give anything 
to singers 
As in the cold waters
jalap flowers blossom,
large, full of honey, 
but die untouched, unworn, 
there are many now living
and dying,
without giving
one thing
to others. 

-Translated by A.K.Ramanujam "Poems of War and Love" pp 169-170, Columbia University Press, 1985

சங்ககாலத்தில் கள் குடித்தல் அந்த அளவுக்கு குற்றமாகக் கருதப்படவில்லை..
நீதி இலக்கிய காலத்தில் இச்செயல் கடுமையாக தண்டிக்கப்பட்டது..


நிலம், காலம், சூழல் என்ற அடிப்படையில் சில மரபுகள் தவிர்க்கமுடியாதவையாகின்றன.

குளிர்ந்த நாடுகளில் கள் உணவின் ஒரு பகுதியாகவே இருக்கிறது.
நம் நாட்டில் சிலருக்கு உணவாகவே கள் இருத்தல் கேலிக்கூத்தாகத்தான் இருக்கிறது..!!

ஆரம்பத்தில் மது அருந்துதல் விளையாட்டாக ஆரம்பிக்கிறது..
இறுதியில் மது மனிதனி்ன் உயிரோடு விளையாட ஆரம்பித்துவிடுகிறது.


கவிஞர் கண்ணதாசன் குடியைப் பற்றிப் பேசும்போது...

தண்ணீரையும் குடிக்கிறோம்
பாலையும் குடிக்கிறோம்
ஆனால் எதையும் குடி என்று அழைப்பதில்லை
இதைமட்டும் ஏன் குடி என்று அழைக்கிறோம்?
இது ஒன்றுதான் உயிரைக் குடிக்கிறது
 என்று உரைக்கிறார்.



நாம் விரும்பி இந்த உலகத்தில் பிறக்கவில்லை
நாம் விரும்பினாலும் உடனே இந்த உலகத்தைவிட்டு சென்றுவிடமுடியாது.

தற்கொலை செய்ய நினைத்து பிழைத்தவர்களையும்
வாழ நினைத்து செத்தவர்களையும் நாள்தோறும் காண்கிறோம்..

இயற்கையாக வந்த உயிர் இயற்கையாகவே செல்லவேண்டும்
அதுதான் நாம் நம் உயிருக்குத் தரும் மதிப்பு

-0O0--0O0--0O0--0O0--0O0--0O0--0O0--0O0--0O0--0O0--0O0--0O0--0O0--0O0--0O0--0O0--0O0-

11 கருத்துகள்:

  1. அருமையான விழிப்புணர்வு பதிவு புள்ளி விவரங்களுடன் அருமை.குடி என அழைப்பதற்கான விளக்கம் நன்றாக இருந்தது.

    பதிலளிநீக்கு
  2. அருமையான கட்டுரையை சிறப்பாக உரிய நேரத்தில் தந்தது உங்கள் சிறப்பு .வாழ்த்துகள்.
    முஸ்லிம்கள் புனிதராகப் போற்றும் முகம்மது நபிகள் நாயகம் பிறந்தநாளை முன்னிட்டு தமிழகத்தில்க்குத் தடைவிதித்து தமிழக அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது.
    ஒருநாள் தடை அதனால் முதல் நாள் மதுபான விற்பனை அதிகமாக இருக்கும். தடை செய்த நாளில் குடிக்க . குடியை தடுக்க முயன்று தடை வந்தால் அரசின் கஜானா காலி. மக்கள் நலம் முக்கியமல்ல வோட்டு முக்கியம்.

    பதிலளிநீக்கு
  3. திருடனாய் பார்த்து திருந்தா விட்டால் திருட்டை ஒழிக்க முடியாது சார் ! நன்றி !

    பதிலளிநீக்கு
  4. நம்மவர்கள் குடிப்பதற்காக வாழ்பவர்கள்.வெளிநாடுகளில் வாழ்வதற்காகக் குடிக்கிறார்கள்.அருமையான பதிவு குணா !

    பதிலளிநீக்கு
  5. nalla karuththu ulla
    thokuppu!
    naan ariua uthaviyathukku-
    ungalukku nantri

    பதிலளிநீக்கு
  6. ITHU NIYAAYAMA..
    entru naan dec maatham ullathil
    ezhuthi ullen!
    ithanudan sampantham ullathu!

    பதிலளிநீக்கு