இந்த காலத்துல பார்த்தீங்ன்னா..
கொலை,கொள்ளை, வழிப்பறி, மோசடி இதெல்லாம் காலந்தோறும்
இருப்பதுதான் என்றாலும்..
இப்போது இளம் தலைமுறையினரிடையே பரவி வரும் வன்முறைச்
செயல்களுக்கு ஊடகங்களும் பெரும்பங்கு வகிப்பனவாக உள்ளன.
சென்னையில் ஆசிரியரைக் கொன்ற மாணவரின்
வெறிச்செயலுக்குக் காரணம் யார்?
பெற்றோரா?
ஆசிரியர்களா?
கல்விமுறையா?
ஊடகங்களா?
சட்டங்களா?
என ஆயிரம் பேரைக் காரணம் சொல்லலாம் என்றாலும். போன உயிர் மீண்டு வருவதில்லை.
இப்போதெல்லாம் இணையம் உலகத்தையே சிறுகிராமமாக மாற்றிவிட்டது. இன்றைய
தலைமுறையினர் இங்கு இருந்துகொண்டே உலகத்தில் நடக்கும் ஒவ்வொரு அசைவுகளையும்
பார்க்கிறார்கள்.
அதனால் நலமான, வளமான, வலிமையான சமூகம் உருவாக நாம் யாரையும் குறைகூறாது
நம்மால் முடிந்தவரை நேர்மறையான எண்ணங்களை இளம் தலைமுறையினரிடம் விதைப்பது நம்
அடிப்படைக் கடமையாகும்.
இந்த பள்ளிமாணவனின் செயலுக்குப்பின் தமிழகத்தில் நிறைய பள்ளிகளில் கட்டண சலுகை
அறிவித்திருக்கிறார்கள். மாணவர்களை திட்டக்கூடாது என ஆசிரியர்களுக்கு
வலியுறுத்தியிருக்கிறார்கள்.
இது மாணவர்களுக்கு மேலும் கொம்பு சீவிவிட்டதுபோல உள்ளது.
என் நண்பர் ஒருவர் புலம்பினார்.
என்னங்கய்யா இப்பல்லாம் வகுப்புக்குப் போயிட்டுவருவது ஏதோ போர்க்களத்துக்குப்
போயிட்டுவருவதுபோல இருக்குது என்று..
ஏன் என்று கேட்டேன்..
அவர் சொன்னார்...
ஐயா ஒரு பையன் என்னைப் பார்த்து கேட்கிறான்..
என்னங்க ஐயா...
உங்க முகத்துல ஒரு மரண பீதி தெரியுதே.. !
பயப்படாதீங்க..
நாங்க உங்கள எதுவும் செய்யமாட்டோம் என்றானாம்.
இவர் அவனைத் தனியாக அழைத்துச் சென்று அவனுக்கு அறிவுரை சொல்லி அனுப்பினாராம்..
திரும்பி வகுப்புக்கு வந்த மாணவனைப் பார்த்து அவன் நண்பர்கள் கேலி
செய்தார்களாம் இப்படி
என்னடா..
இப்ப உன்னோட முகத்துல மரண பீதி தெரியுது?
என்று
மாணவர்களைத் திருத்த அடிப்பது சரியா? தவறா?
என்பதெல்லாம் இன்றைய காலத்தில் விவாதத்துக்குக் கூட எடுத்துக்கொள்ள முடியாது..
காலம் ரொம்ப மாறிப்போச்சு பாருங்க..
அன்று பிள்ளைகளைப் பள்ளியில் சேர்க்கும்போதே பெற்றோர்கள் சொல்லிச்
சேர்ப்பார்கள்.
கண்ணு, காது, மூக்க மட்டும் விட்டு எங்க வேண்டுமானலும் அடிங்க
எம்புள்ளய படிக்கவெச்சு அவனோட கண்ணைத் திறந்துவிடுங்கய்யா போதும் என்பார்கள்.
ஏன் என்று கேட்டால் அடியா மாடு படியாது என்பார்கள்.
இன்று நிலை வேறு!
அடிக்கக் கூட வேண்டாம் திட்டினாலே போதும்
இந்த மாணவர்கள் தவறான முடிவெடுத்துவிடுகிறார்கள்.
பேருந்தில் வரும்போது இரு மாணவர்கள் என்னருகே பேசிக்கொண்டு வருகிறார்கள்.
டேய் மச்சான் இவங்க டார்ச்சர் தாங்கமுடியலடா என்று
அதற்கு இவன் சொல்கிறான்.
டேய் மாப்பிள நான் சொல்றத நீ கேட்க மாட்டேங்கிற
பள்ளிக்கூடத்துல மாடில இருந்து குதிச்சிடுறா
அப்புறம் பாரு உனக்கு இராஜ மரியாதைதான் என்று
கேட்ட எனக்கு ஒரு மணித்துளி இதயத்துடிப்பே நின்றுவிட்டது.
யாரைக் குறை சொல்வது..
என்னைக் கேட்டால் மாணவர்களை அடிக்காமல் கூட அன்பால் திருத்திவிடமுடியும். அதற்கு
ஆசிரியர் மட்டும் தன்னை மாற்றிக்கொண்டால் போதாது.
இதில் குறிப்பிடத்தக்க பங்கு
பெற்றோருக்கும்
ஊடகங்களுக்கும்
நாட்டை ஆள்வோருக்கும்