பக்கங்கள்

இந்திய குடிமைப் பணித்தேர்வு - தமிழ் - 2 - (UPSC EXAM TAMIL)

சனி, 21 ஜனவரி, 2012

!இவரால் தான் மழை பொழிகிறது!


நெல்லுக்கு இறைத்த நீர் வாய்க்கால் வழி ஓடிப்
புல்லுக்கும் ஆங்கே பொசியுமாம், தொல் உலகில்

நல்லார் ஒருவர் உளரே அவர் பொருட்டு

எல்லார்க்கும் பெய்யும் மழை



- ஔவையார்

உழவர்கள் தங்களுடைய நெற்பயிர் செழித்து வளர்வதற்காகத் தண்ணீர் இறைத்து ஊற்றுகிறார்கள். அந்தத் தண்ணீர் வாய்க்கால் வழியாக ஓடிப் பக்கத்தில் உள்ள புல்லின்மீதும் பாய்ந்து, அதையும் நன்கு வளரச் செய்கிறது.

அதுபோல, பழமையான இந்த உலகத்தில், நல்லவர் ஒரே ஒருவர் இருந்தால்கூடப் போதும், அவருக்காக மழை பெய்யும், மற்றவர்களும் அதில் பயனடைவார்கள்.
 அந்த ஒருவர் இவர்தானோ..!!!!


19:01:12 அன்று மால்டா கௌர் ரயிலில், சுத்தம் செய்யும் பணியாளரான சீமா ராய், பெட்டியை சுத்தம் செய்யும்போது, முதல் வகுப்புப் பெட்டியில் இருந்து ரூ.23 லட்சம் பணப் பெட்டிகளைக் கண்டெடுத்தார் பெட்டிகளை 

உடனே மேலதிகாரிகளுக்கு விவரத்தை தெரியப்படுத்தினார். அந்தப் பணத்தை பெற்றுக்கொண்ட, ரயில்வே பாதுகாப்பு அதிகாரி, அவருக்கு நேர்மைகான ரயில்வே விருதுக்கு பரிந்துரைக்கப் போவதாகக் கூறினார்.
இந்தப் பெண்மணி அந்த பணத்தை யாருக்கும் சொல்லாமல் எடுத்துச் சென்றிருந்தால் கூட இந்த அளவுக்குப் பேசப்பட்டிருக்க மாட்டார். இவரின் நேர்மையைப் பாராட்ட ஒவ்வொரு மனிதர்களும் கடமைப்பட்டிருக்கிறோம்.

இந்தப் பெண்மணிக்கு என் மனம் நிறைந்த பாராட்டுகளைப் பதிவு செய்கிறேன்..


17 கருத்துகள்:

  1. உண்மையில் வியப்பாக உள்ளது.வாழ்த்துக்களும்,பாராட்டுக்களும் அவருக்கு.பகிர்விற்கு நன்றி

    பதிலளிநீக்கு
  2. இதுதான நேர்மை இதுதான் செம்மை
    மதிக்கத் தக்கவர் குறித்த அழகான பதிவைத்
    தந்தமைக்கு நன்றி
    வாழ்த்துக்கள்
    த.ம 2

    பதிலளிநீக்கு
  3. அருமையான பதிவு. தான் உழைத்த பணம் மட்டுமே தனக்குச் சேர வேண்டுமென்ற நேர்மையாளர்கள் அருகிப் போன இக்காலச் சமூகத்தில் சீமாராய் போன்றவர்கள் நமக்கு முன்மாதிரிகள் என்று கூறுவதுதான் சரியானது. `செய்க பொருளை` என்று ஆணையிட்ட வள்ளுவன் ' அது திறன்றிந்து தீதின்றி வந்த பொருளாக இருக்க வேண்டும்' என்று அறிவுறுத்தியதை வசதியாக மறந்து போனது இன்றைய சமூகம்.

    பதிலளிநீக்கு
  4. ஏனோ நல்ல மனம் படைத்தவர்கள் வறுமையின் பிடியிலேயே இருக்கிறார்கள்.

    பதிலளிநீக்கு
  5. பத்திரிக்கைகளில் படித்ததும் மெய் சிலிர்த்தது இவரின் நேர்மையை பார்த்து...

    பதிலளிநீக்கு
  6. நேர்மை...வாழ்கிறது..அதனால்தான் சிறிதளவு மழை பொழிகிறது உண்மைதான்ங்க

    பதிலளிநீக்கு
  7. மனம் நிறைந்த பாராட்டுக்கள்!!!

    பதிலளிநீக்கு
  8. அருமையான தகவல் பதிவு.
    அந்தப்பெண்ணிற்கு பாராட்டுகள்.

    பதிலளிநீக்கு
  9. நேர்மையான உள்ளங்கள்.. வறுமையின் பிடியில்.. 23 லட்சம் திருப்பிக் கிடைப்பவர்.. அதில் ஒன்றையெனும் அந்த அம்மணிக்கு கொடுத்தால் அவரும் உயர்ந்தவர் ஆகலாம்..

    பதிலளிநீக்கு
  10. சுத்தம் செய்யும் வேலை செய்தாலும் எவ்வளவு சுத்தமாண மனம்!
    அவருக்கும் எடுத்துக்காட்டி இடுகை இட்ட தங்களுக்கும்
    உளம் நிறைந்த பாராட்டுக்கள்!

    புவலர் சா இராமாநுசம்

    பதிலளிநீக்கு
  11. பெருமைக்குரிய பெண்மணி ...பாராட்டுக்கள் ...பகிர்ந்தமைக்கு தங்களுக்கும்...

    பதிலளிநீக்கு
  12. அடுத்தவன் சொத்துக்கு ஆசைப்படாத அந்தப் பெண்ண மதிக்கப் படத்தக்கவர் . பணம் அதிகமாக உள்ளவர்களுக்குத்தான் பணத்தின்மேல் ஆசை ஏற்படும். காக்கைவிடு தூது லிங்க் தந்தமைக்கு மிக்க நன்றி. என்னுடைய இந்தப்பகுதியையும் சிறிது நோட்டம் இடுங்கள்

    http://kowsy2010.blogspot.com

    பதிலளிநீக்கு
  13. அடுத்தவன் சொத்துக்கு ஆசைப்படாத அந்தப் பெண்ண மதிக்கப் படத்தக்கவர் . பணம் அதிகமாக உள்ளவர்களுக்குத்தான் பணத்தின்மேல் ஆசை ஏற்படும். காக்கைவிடு தூது லிங்க் தந்தமைக்கு மிக்க நன்றி. என்னுடைய இந்தப்பகுதியையும் சிறிது நோட்டம் இடுங்கள்

    http://kowsy2010.blogspot.com

    பதிலளிநீக்கு
  14. நேர்மையாளர்கள் அங்கங்கே இருக்கத்தான் செய்கிறார்கள் என்பதற்கு அவர் ஒரு நல்ல எடுத்துக்காட்டு. இவர்களுக்காகவேதான் நாட்டில் மழை பெய்கிறது என்பதில் சந்தேகமேயில்லை

    பதிலளிநீக்கு
  15. வருகைக்கும் வாசித்தலுக்கும் பாராட்டுதலுக்கும் நன்றிகள் தமிழ் உறவுகளே..

    பதிலளிநீக்கு