பக்கங்கள்

இந்திய குடிமைப் பணித்தேர்வு - தமிழ் - 2 - (UPSC EXAM TAMIL)

செவ்வாய், 31 ஜனவரி, 2012

உயிரோடு செத்தவர்கள்!



உயிர் இருக்கிறது
உணர்ச்சி இல்லை!
உதடு இருக்கிறது
சிரிப்பு இல்லை!

என்ன இது?
இக்கால இயந்திரமா?
உற்றுப் பார்க்கிறேன்..

அட!
இவர்கள் மனிதர்கள்தான்!

நீங்களெல்லாம்..
உயிரோடு செத்துவிட்டீர்களா?
இல்லை
செத்தபின்னும் உயிர்வாழ்கிறீர்களா?
என்று கேட்கிறேன்..

நாணயங்களின் ஓசையில் என்
நா நயங்களின் ஓசை
இவர்களுக்குக் கேட்கவில்லை!

மீண்டும் கேட்கிறேன்..
அகத்தின் அழகு முகத்தில் தெரியும்
முகத்தின் அழகு சிரிப்பில்தானே தெரியும்..?

எங்கே உங்கள் சிரிப்பு? என்று..
சிரிப்பை அடக்கம் செய்த
கல்லறைஉதடுகள் திறந்து
இவர்கள் சொல்கிறார்கள்..

ஒன்றை இழந்தால்தானே
இன்னொன்றைப் பெறமுடியும்!

நாங்கள் சிரிப்பை விதைத்து
பணத்தை அறுவடை செய்யும் உழவர்கள் என்று..


27 கருத்துகள்:

  1. //நாங்கள் சிரிப்பை விதைத்து
    பணத்தை அறுவடை செய்யும் உழவர்கள் என்று..//
    அருமை,குணசீலன்.

    பதிலளிநீக்கு
  2. //நாங்கள் சிரிப்பை விதைத்து
    பணத்தை அறுவடை செய்யும் உழவர்கள் என்று..//

    ஒரே வரியில் உழவர்களின் நிலையை எடுத்துச் சொல்லி விட்டீங்க.சிறப்பாக இருக்கு.

    பதிலளிநீக்கு
  3. இப்படி பல பொம்மைகளை நித்தம் காண முடிகிறது ..
    ஏன் நானே சில நேரங்களில் இப்படி தான் இருந்து வருகிறேன் ..
    கவிதை சுடுகிறது

    பதிலளிநீக்கு
  4. உதடு இருக்கிறது
    சிரிப்பு இல்லை!


    எங்கே உங்கள் சிரிப்பு? என்று..
    சிரிப்பை அடக்கம் செய்த
    கல்லறைஉதடுகள் திறந்து
    இவர்கள் சொல்கிறார்கள்..

    சிறப்பு..

    பதிலளிநீக்கு
  5. பணம் தேடும் வாழ்க்கையில் நாம் தொலைத்தவை எவ்வளவோ. அதில் சிரிப்பும் ஒன்று. நானும் இவ்வித மனிதர்களை சந்தித்திருக்கிறேன். கொஞ்சமேனும் சிரிக்கத் தெரியாத இவர்கள் வாழ்ந்துதான் என்ன ஆக வேண்டி கிடக்கிறது? அருமையான பதிவு சார்.

    பதிலளிநீக்கு
  6. சிரிப்பை தொலைத்து
    சில்லறையை தேடும்
    முகங்கள் பெருகிக் கொண்டே
    தான் இருக்கின்றன முனைவரே...
    அழகுக் கவிதை படைத்தீர்கள்...
    நன்று.

    பதிலளிநீக்கு
  7. சிரிப்பு என்னும் அற்புத உணர்வு வெளிப்பாட்டை அடியோடு மறந்துவிட்டவர்களைச் சாடாமல் சாடியவிதம் வெகுநன்று. போகும் போக்கில் சிறு புன்னகையும் சிந்த மறந்தவர்களின் இறுகிய முகங்களைப் பார்க்கும்போது நமக்குள்ளும் இறுக்கம் தொற்றிக்கொள்வது உண்மைதான்.

    பதிலளிநீக்கு
  8. படித்து விட்டு மனம் நெகிழ்ந்தது ! பகிர்வுக்கு நன்றி Sir !

    பதிலளிநீக்கு
  9. குண சீலன் உங்களை நினைகையில் பெருமை எனக்கு தமிழ் படித்தோர் எல்லாம் தமிழன் என்று சொல்லிவிட முடியாது தமிழன் பெருமையை உணர்த்துபவன் மட்டுமே உண்மை தமிழன் வளர்க உங்கள் தமிழ் பணி

    பதிலளிநீக்கு
  10. உணர்வுகளை அழகாகச் சொல்லியிருக்கிறீர்கள் குணா !

    பதிலளிநீக்கு
  11. மனிதன் இக்கால இயந்திரம்..... நல்ல வருணனை.... இக்கால மனித இயல்புகளை வேதனையுடன் எடுத்தியம்பிய விதம் மிக அருமையாய் இருந்தது..... நன்றி.....

    பதிலளிநீக்கு