பக்கங்கள்

இந்திய குடிமைப் பணித்தேர்வு - தமிழ் - 2 - (UPSC EXAM TAMIL)

திங்கள், 23 ஜனவரி, 2012

பாராட்டத்தக்க முயற்சி!


தமிழகத்தில் நாமக்கல் மாவட்டத்தில் ராசிபுரத்தில் அன்றில் நற்பணிக்குழுவினர் தினமும் ஒரு மணி நேரத்துக்கு ஒருமுறை திருக்குறள் வாசித்து அதற்கான விளக்கமும் ஒளிபரப்பு செய்கிறார்கள். இதன்வாயிலாகப் படித்தவர்களும், படிக்காதவர்களும் கூட திருக்குறளை மனதில் பதியவைத்துக்கொள்ள, சிந்திக்க ஒரு வாய்ப்பு ஏற்பட்டிருக்கிறது.


உலகப் புகழ் பெற்ற திருக்குறள் தமிழர்களால் பெருமளவில் பின்பற்றப்படாததற்கு அடிப்படைக் காரணம்...

திருக்குறளை மாணவர்களுக்குப் பாடமாக வைத்ததுதான்! என்பது பரவலான கருத்து..

அது ஒருவிதத்தில் உண்மையும் தான்.
இவர்களின் இப்பணியை முன்மாதிரியாகக் கொண்டு நாமும் நம்மால் முடிந்தவரை திருக்குறளை சமகாலத்தினருக்கும், அடுத்த தலைமுறையினருக்கும் எடுத்துச் செல்வது நம் கடமையாகும்

இதுபோன்ற முயற்சிகளால் திருக்குறள் சராசரி மக்களின் மனதிலும் இன்னும் பரவலைப் பெறும் என்பதில் எவ்விதமான ஐயமும் இல்லை.

இம்முயற்சிக்கு என் மனம் நிறைந்த பாராட்டுக்களைப் பதிவுசெய்கிறேன்.

(செய்தியளித்தமைக்காக காலைமலர் நாளிதழுக்கு நன்றி)

9 கருத்துகள்:

  1. நல்ல, பயனுள்ள முயற்சி.
    வாழ்த்துகள்.

    பதிலளிநீக்கு
  2. நல்ல முயற்சி. தகவலுக்கு நன்றி.

    பதிலளிநீக்கு
  3. பாராட்டப் பட வேண்டிய செயல்தான்.

    பதிலளிநீக்கு
  4. நல்ல தகவல்
    பகிர்வுக்கு வாழ்த்துக்கள்

    பதிலளிநீக்கு
  5. மிகவும் பாராட்டத் தக்க செயல்.
    மனமார்ந்த நன்றிகள் மற்றும் பாராட்டுக்கள்.

    பதிலளிநீக்கு
  6. பயனுள்ள செயல் புரியும் அன்றில் நண்பர்களுக்கு வாழ்த்துக்கள்...

    பதிலளிநீக்கு
  7. பயன் தரும் முயற்சியே!
    பாராட்டுக்குரியது!

    சா இராமாநுசம்

    பதிலளிநீக்கு
  8. திருக்குறள் இரண்டே வரியாக இருந்தாலும் அந்த நண்பர்கள் செயல் பாராட்டத்தக்கது......

    பதிலளிநீக்கு
  9. நல்லதொரு செய்தி கேட்கும்போதே மகிழ்ச்சியாக இருக்கிறது...மெல்லத் தமிழ் இனி வளருமென்று நினைக்கிறேன்..

    பதிலளிநீக்கு