பக்கங்கள்

இந்திய குடிமைப் பணித்தேர்வு - தமிழ் - 2 - (UPSC EXAM TAMIL)

வெள்ளி, 20 ஜனவரி, 2012

உங்கள் பெயருக்குள் உயிர் உள்ளதா?

யிரற்ற உடலுக்கு மதிப்பில்லை!
உடலற்ற உயிருக்கு வடிவம் இல்லை!
உடலோடு உயிர் சேரும்போதே இரண்டும் மதிப்படைகின்றன.

உடலோடு சேர்ந்த இந்த உயிருக்கு..
பெற்றோர், உற்றார், உறவினர் என யார் வேண்டுமானாலும்..
என்ன பெயர்வேண்டுமானாலும் வைக்கலாம், அழைக்கலாம்..

என்றாலும்..
எல்லாப் பெயர்களையும் காலம் தன் பேரேட்டில் பதிவு செய்துகொள்வதில்லை.

பெயர்களுக்கும் வாழ்நாள் உண்டு.
சராசரியான பெயர்களும், சராசரியான மனிதர்களும் நீண்டகாலம் வாழ்வதில்லை.
உடலைவிட்டு உயிர் நீங்கியவுடனேயே சிலரது பெயர்களும் அவர்களைவிட்டு நீங்கிவிடுகின்றன.

உண்மையில் உடலைவிட்டு உயிர் நீங்கிய பிறகுதான் ஒவ்வொரு மனிதனின் பெயர்களும் உயிர்பெறுகின்றன!

ஒருவன் தன் வாழ்நாளை..

எப்படி வாழ்ந்தான்?
என்ன செய்தான்?
எதை விட்டுச் சென்றான்?

என்னும் அளவீடுகளே அவன் பெயர் உயிர் பெறுவதற்கும், அந்தப் பெயர் உயிரோடு நீண்ட காலம் வாழ்வதற்கும் அடிப்டையாக அமைகின்றன.

ஒரு குழந்தை பிறந்தவுடன் அதன் பெற்றொர் அந்தக் குழந்தைக்கு எவ்வளவு ஆசை ஆசையாகப் பெயரிடுகின்றனர்.
எத்தனை குழந்தைகள் வளர்ந்த பிறகு தம் பெயருக்கான பொருளை அறிந்துகொள்கிறார்கள்?
எத்தனை பேர் தம் பெயருக்குப் பெருமை சேர்க்கும் விதமாக வாழ்கிறார்கள்?

ஒரு கதை..

சாலை வழியே தலையில் சுமையோடு ஒருவன் நடந்து சென்றான். அப்போது அவ்வழியே மாட்டு வண்டியில் வந்த ஒருவன் இவனை தம் வண்டியில் ஏற்றிக் கொண்டான். வண்டியில் ஏறி அமர்ந்த பின்னும் இவன் தம் தலைச்சுமை கீழே வைக்கவில்லை.

வண்டிக்காரன் கேட்டான்..
ஏம்பா இப்படி இதைத் தூக்கி்ச் சுமக்கிறாய். கீழே வைக்கலாமே என்று..

அதற்கு இவன் சொல்கிறான்..
“ஐயா நீங்க உங்க வண்டியில் எனக்கு இடம் கொடுத்ததே பெரிது! இதில் என் சுமைகளை வேறு வைத்து உங்களுக்கு மேலும் சுமை தர விரும்பவில்லை என்றானாம்.

இந்தக் கதையில் வரும் அப்பாவி போலத்தான் நாமும்
வாழ்ந்து தொலைக்கிறோம்! நம் பெயர்களைச் சுமக்கிறோம்!
வாழ்க்கையின் அடையாளங்களைத் தொலைக்கிறோம்!

நம் பெயரின் பொருளை உணர்ந்து கொள்வதுமில்லை..
ஆசை ஆசையாக பெயர்வைத்த பெற்றோரின் கனவுகளை நினைவாக்குவதுமில்லை.
பெயருக்குப் பொருத்தமாக வாழ்வதும் இல்லை.

பெயருக்கும் உயிர் உண்டு என்ற உண்மையை உணர்ந்த சிலர் மட்டுமே..

தம் செயல்பாடுகள் வழியே தாம் மறைந்த பின்னரும் தம் உயிரைத் தம் பெயர்களுக்குத் தந்து செல்கிறார்கள்.

காலத்தைத் திரும்பிப் பார்க்கிறேன்....

எத்தனை எத்தனை பெயர்கள்..

நிலம், இனம், மொழி என பாகுபாடுகள் பல இருந்தாலும்..

பலர் தம் உடல்களைத் தொலைத்தாலும் தம் தெளிவான பதிவுகளால் பெயர்களில் உயிர் வாழ்கின்றனர்.

இப்படி வாழ்வோருள் தமிழருக்கும் தனித்துவமான இடம் உள்ளமை எண்ணிப் பெருமிதம் கொள்கிறேன்.

இவர்களுள் பல ஆயிரம் ஆண்டுகளானாலும் தம் பதிவுளால் பெயர்களில் இன்னும் உயிரோடு வாழ்வோருள் சங்கப்புலவர்கள் குறிப்பிடத்தக்கவர்களாவர். சங்கப்புலவர்களுள் என் மனம் கவர்ந்த சிலரை மட்டும் இங்கு நினைவுபடுத்திப் பார்க்கிறேன்.

பாலை பாடிய பெருங்கடுங்கோ
மருதன் இளநாகனார்
கயமனார்
காக்கைப் பாடினியார்
மடல்பாடிய மாதங்கீரனார்
வெறிபாடிய காமக்கண்ணியார்
என்னும் புலவர்கள் தம் உடலுக்குள் இருந்த உயிரைப் பெயர்களுக்கு வழங்கிச் சென்றுள்ளனர்.

இவர்களின் வரிசையில் தொடரால் பெயர் பெற்ற புலவர்கள் இருபத்து ஏழுபேரும் தனிச்சிறப்புடையவர்களாகத் திகழ்கின்றனர்.


1. அணிலாடு முன்றிலார் குறுந்-41.
2.
இம்மென் கீரனார்-அக-398
3.
இரும்பிடர்த்தலையார்-புற-3
4.
ஊட்டியார்-அக-68
5.
ஓரிற் பிச்சையார்-குறுந்-277.
6.
ஓரேருழவர்-குறுந்-131.
7.
கங்குல் வெள்ளத்தார்-குறுந்-387.
8.
கல்பொரு சிறுநுரையார்-குறுந்-290.
9.
கவைமகன்-குறுந்-324.
10.
காலெறி கடிகையார்-குறுந்-267.
11.
குப்பைக் கோழியார்-குறுந்-305.
12.
குறியிறையார்-குறுந்-394.
13.
கூகைக் கோழியார்-புற-364
14.
கூவன் மைந்தன்-குறுந்-224.
15.
கொட்டம்பாலனார்-நற்-95
16.
கோவேங்கைப் பெருங்கதவனார்-குறுந்-134.
17.
செம்புலப்பெயனீரார்-குறுந்-40.
18.
தனிமகனார்- நற்-153.
19.
தும்பி சேர் கீரனார்-குறுந்-393.
20.
தேய்புரி பழங்கயிற்றினார்- குறுந்-284.
21.
தொடித்தலை விழுத்தண்டினார்- புற-243.
22.
நெடுவெண்ணிலவினார்-குறுந்-47.
23.
பதடி வைகலார்-குறுந்-323.
24.
மீனெறி தூண்டிலார்-குறுந்-54.
25.
விட்ட குதிரையார்-குறுந்-74.
26.
வில்லக விரலினார்-குறுந்-370.
27.
விழிகட் பேதைப் பெருங்கண்ணனார்- நற்-242.

இப்புலவர்களுக்கெல்லாம் ஒரே ஒற்றுமை இவர்களின் பெயர்கள் எதுவுமே இயற்பெயர் அல்ல என்பதுதான்.

“இவர்களின் எழுத்தாளுமை இவர்களுடைய
இயற்பெயரைப் பறித்ததா?
இவர்களின் இயற்பெயர் தொலைந்ததால்
தமிழே இவர்களுக்குப் பெயர் வழங்கியதா?

என்ற மயக்கமே இப்பெயர்களைக் காணும்போது தோன்றுகிறது.

இக்கட்டுரை வழியாக நாம் புரிந்துகொள்ளவேண்டிய சில கருத்துக்கள்.

  • பெயருக்கும் உயிர் உண்டு.
  • ஒருவன் இறந்தபின்தான் நிலையான பெயர் உயிர்கொள்கிறது.
  • மறைவுக்குப் பின்னும் மக்கள் நினைவுபடுத்திப் பார்க்கும் நாள் வரை அந்தப் பெயர் உயிரோடு வாழ்கிறது.
  • நாம் நம் பெயருக்குப் பொருள் அறிந்து வைத்திருக்கிறோமா? அதற்குப் பொருத்தமாக இருக்கிறோமா? 
  • நம் பெயருக்குப் பெயர் சேர்க்குமாறு வாழ்கிறோமா?
என தன்மதிப்பீடு செய்துகொள்ளவே இவ்விடுகையைப் பதிவு  செய்கிறேன்.

தொடர்புடைய இடுகைகள்

உங்கள் பெயரின் பொருள்??

நம் உயிர் உள்ள இடம்...?

எதை விட்டுச் செல்வீர்கள்..??

தொடரால் பெயர் பெற்றபுலவர்கள். 



16 கருத்துகள்:

  1. வாழ்வை கால சுவட்டில் பதித்து செல்ல.. பெயர் அடையாளமாகிறது. திறம்பட வாழச்சொல்லும் பதிவு. மிக மிக அருமை.

    பதிலளிநீக்கு
  2. பெயர் மனிதனுக்கு முகவரியாகிறது
    காலம் கடந்த பின்னும் சரித்திரங்கள் மாறிய பின்னும்
    இன்னும் பல பெயர்கள் நடமாடிக் கொண்டிருக்கின்றனவே

    பெயருக்கு உயிருண்டு என்பது மிகச் சரி.

    சிறுகதை மூலம் அருமையாக விளக்கியிருக்கிறீர்கள் முனைவரே.

    பதிலளிநீக்கு
  3. பெயருக்கு உயிருண்டு என்பதை அழகான ஆழமான விளக்கத்தோடு பதிவிட்டிருக்கிறீர்கள்..உங்கள் தளம் வந்தால் தமிழ் மீதான தாகம் அதிகரிக்கிறது..வாசித்தேன் வாக்கிட்டேன் நன்றி முனைவரே..

    நேரமிருந்தால் வாசியுங்கள்..

    நீ யாரெனத் தெரியவில்லை

    பதிலளிநீக்கு
  4. பெயருக்கும் உயிருண்டு.நீங்கள் சொன்ன கருத்துக்களின்படி உண்மைதான்.உணர்த்தும் சிறுகதையும் சிறப்பு !

    பதிலளிநீக்கு
  5. எமது உள்ளத்திடம் நாமே கேட்கும் கேள்வி. முற்காலத்தல் ஆயிரம் ஆண்டுகள் வாழ்ந்தார்கள் என்பது எல்லாம் இதைவைத்துத்தான் சொனஇனார்கள். இறந்தும் வாழுகின்ற தன்மையை என்றே நினைக்கின்றேன். காக்கைய் விடுதூது பாடல் கிடைக்குமானால் அந்தப் பதிவு ஒன்று இடுவீர்களா? இல்லையென்றால் அது எங்கே கிடைக்கும் என்று அறியத் தருவீர்களா? நான் தேடுகின்றேன். பதிவுக்கு மிக்க நன்றி

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. http://www.openreadingroom.com/2011/11/%E0%AE%95%E0%AE%BE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%81-%E0%AE%A4%E0%AF%82%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%B5%E0%AF%86%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3%E0%AF%88%E0%AE%B5/

      இந்த முகவரியில் பதிவிறக்கிக்கொள்ளங்கள் கௌரி

      நீக்கு
  6. uyir vaazha-
    unavu thevai!

    per vaazha-
    saathanai thevai!
    enpathai unarthiyathu-
    enakku!

    nalla thokuppu!

    பதிலளிநீக்கு
  7. உண்மைதான். நம்மை அடையாளப்படுத்திய பெயரை நாம் அடையாளப்படுத்தி உயிர்ப்புடன் வைத்திருக்கிறோமா என்பது நாம் வாழும் வாழ்க்கையிலும் சுயநலமில்லா அர்ப்பணிப்பிலும் இருக்கிறது.

    பதிலளிநீக்கு
  8. ahaa ..kuttip pillaigalukkuth thaan chellap paeyaroo nu ninaithen...per sollum pilaiyaa irukkanum sollitinga ....super .....

    பதிலளிநீக்கு