பக்கங்கள்

இந்திய குடிமைப் பணித்தேர்வு - தமிழ் - 2 - (UPSC EXAM TAMIL)

செவ்வாய், 10 ஜனவரி, 2012

ஏமாந்த நிலம்!



நிலத்தை
மனிதன் வாங்குவதாகச் சொல்கிறான்
நிலம் தான் மனிதனை வாங்குகிறது

நிலத்தை வாங்கும்போது
மனிதன் ஏமாறுவதுபோல
மனிதனை வாங்கும்போது
சிலநேரம் நிலமும் 
ஏமாந்துபோகிறது!
புகழ்பெற்று வாழ்வாங்கு வாழந்தவரைச்
சுமக்கும் நிலம் பெருமிதம் கொள்கிறது
அதன் முகம் பசுமை ஒளிவீசுகிறது!

புகழின்றி பத்தோடு பதினொன்றாய்
வாழ்ந்துதொலைத்தவரை வாங்கிய நிலம்
அழுது புலம்புகிறது.
அதன் முகம் வறட்சியாகவே உள்ளது.



வசைஇலா வண்பயன் குன்றும் இசைஇலா
யாக்கை பொறுத்த நிலம்

திருக்குறள் - 239

தொடர்புடைய இடுகை

15 கருத்துகள்:

  1. சிலநேரம் நிலமும்
    ஏமாந்துபோகிறது!

    உண்மை தோழரே..
    வாசித்தேன்..வாக்கிட்டேன்..

    சந்தேகம்

    பதிலளிநீக்கு
  2. அருமையான விளக்கம். தம்மை அகழ்வாரைத் தாங்கும் நிலமும் புகழில்லாரைத் தம்முள் தாங்கவியலாது விளையா நிலையை அழகாகக் காட்சிப்படுத்தியுள்ளீர்கள். பகிர்வுக்கு மிகவும் நன்றி.

    பதிலளிநீக்கு
  3. உன்னைச் சுமந்து என்ன பயன்
    ஊதாரியாய் திரிந்துவிட்டு மீண்டும் என் கருவறை புகுந்து
    என்னை நீரற்றுப் போகச் செய்துவிட்டாயே...

    சோம்பித் திரிந்து இறுதியில் யாருக்கும் பயனற்ற வாழ்க்கை வாழ்ந்து இடுகாடு செல்கையில் அவனை ஏற்க மறுக்கும் பூமித்தாயின் புலம்பல்.

    அருமை அருமை
    அருமையான படைப்பு முனைவரே.

    பதிலளிநீக்கு
  4. அருமையான விளக்கம்!

    சா இராமாநுசம்

    பதிலளிநீக்கு
  5. //நிலத்தை
    மனிதன் வாங்குவதாகச் சொல்கிறான்
    நிலம் தான் மனிதனை வாங்குகிறது//

    மிக அருமையான வரிகள்.

    புத்தாண்டு மற்றும் பொங்கல் திருநாள் வாழ்த்துக்கள்.

    பதிலளிநீக்கு
  6. கவிதை வரிகளுக்குப் பிறகு உற்று யோசிக்கிறேன்.நிலம்தான் எம்மை வாங்குகிறது.சரியான உண்மை !

    பதிலளிநீக்கு