எங்கோ எப்போதோ...
படித்த, கேட்ட மனதைவிட்ட நீங்காத நகைச்சுவைகள் சில..
நகைச்சுவை -1
ஆசிரியர் – இன்று
ஏதாவது நன்மை செய்தாயா?
மாணவர் – இன்று
இரண்டு நன்மைகள் செய்தேன் ஐயா.
ஆசிரியர் – என்ன
செய்தாய்?
மாணவர் –
முதலில் தண்ணீரில் சிக்கி உயிருக்குப் போராடிக்கொண்டிருந்த பறவை ஒன்றைக்
காப்பாற்றினேன்.
ஆசிரியர்- அட! பரவாயில்லையே பாராட்டுக்கள். இன்னொரு நன்மை என்ன?
மாணவர் –
அந்தப் பறவையைப் பசியோடு காத்திருந்த எங்கள் வீட்டு நாயிடம் தந்துவிட்டேன்..
ஆசிரியர் - !!!
--------0OO0------------------0OO0------------------0OO0------------------0OO0----------
மேடையில் ஒரு பாடகர் இரசித்து இரசித்து பாடல் பாடிக்கொண்டிருக்கிறார்..
முன் வரிசையில் ஒரு பையன் அவரைப் பார்த்துக் கொண்டே அழுதுகொண்டிருக்கிறான்..
அவரும் அவனைப் பார்த்துக்கொண்டே சத்தமாகப் பாடிக்கொண்டிருக்கிறார்.
அதற்கு அந்தப் பையன்...
உங்களை மாதிரியே தான் எங்கள் வீட்டில் ஆடும் சாவதற்கு முன்னால் கத்திக்கொண்டே
இருந்தது என்றான்.
திரு திரு வென விழித்தார் பாடகர்.
--------0OO0------------------0OO0------------------0OO0------------------0OO0----------
நகைச்சுவை -3
மாணவர் – ஐயா
சும்மா திட்டாதீங்க.. நான் 4 இலட்சம் கொடுத்துதான் இந்த சீட்டையே வாங்கினேன்.
ஆசிரியர் – தம்பி
நீ ரொம்ப பேசாத 14 இலட்சம் கொடு்த்துதான் நான் இந்த வேலைக்கே வந்திருக்கேன்.
மாணவர் - !!
நகைச்சுவை -4
கணவனும் மனைவியும் மிகவும்
கஞ்சத்தனமானவர்களாம். எச்சில் கையால் காக்கை கூட விரட்ட மாட்டார்களாம்.
அவர்களுக்கு விமானத்தில செல்லவேண்டும் என்று ஆசைமட்டும் இருந்ததாம். அவர்களின்
குடும்ப நண்பர் ஒருவர் விமானத்துறையில் இருந்தால் அவரிடம் சென்று கேட்டார்களாம்.
அவரும் சரி 2000 ரூபாயாகும் என்றாராம். இவர்களா தருவார்கள்.. அவ்வளவு பணமெல்லாம்
எங்களிடம் இல்லை என்றார்களாம் அவர்கள்.
இவர்களைப் பற்றி நன்கு அறிந்த அந்த
நண்பர்..
ஒரு வழி சொன்னாராம்..
சரி உங்களைப் பற்றி நன்றாகவே எனக்குத் தெரியும்.உங்களுக்காக ஒரு வாய்ப்பு
தருகிறேன். உங்களை இலவசமாகவே விமானத்தில் அழைத்துச் செல்கிறேன். ஆனால் ஒரு
விதிமுறை..
நான் எப்படி விமானத்தை ஓட்டினாலும்
நீங்கள் சத்தமே போடக்கூடாது என்றாராம்.
அவர்களும் இப்படியொரு வாய்ப்புக்கு மகிழ்ச்சியடைந்து
விமானத்தில்
சென்றார்களாம்.
விமானம் மேலும் கீழும் குறுக்கும் நெடுக்குமாக மிக விரைவாகச் சென்றது...
எந்தச்சூழலிலும் கணவனும் மனைவியும் சத்தமே போடவில்லை.
வியந்துபோன அந்த விமான ஓட்டி முதலில் இறங்கி வந்த தன் நண்பரின் மனைவியிடம்
கேட்டாராம் எப்படி உங்களால் சத்தமே போடாமல் இருக்கமுடிந்தது என்று.
அதற்கு அந்தப் பெண்மணி சொன்னாராம்..
மிகவும் பயமாகத் தான் இருந்தது.
சத்தம் போடுவது போல ஒரு சூழல் வந்தது அப்போது கூட நான் சத்தமே போடவில்லை
என்றாராம்.
எப்போது என்று அந்த நண்பர் கேட்க..
இந்தப் பெண்மணி சொன்னாராம்...
என் கணவர் விமானத்திலிருந்து கீழே விழுந்தபோது என்று..
--------0OO0------------------0OO0------------------0OO0------------------0OO0----------
நல்ல பகிர்வு... ரசித்தேன்...
பதிலளிநீக்குசற்றும் எதிர்பாராத பதில்கள் முனைவரே.
பதிலளிநீக்குநகைச்சுவைகளுடன் கூடிய
சிந்தனைத் தொகுப்பு...
வாசித்து முடிக்கையில் ஐயோ என்று என்னையுமறியாமல் சொல்லிவிட்டேன் !
பதிலளிநீக்குNice
பதிலளிநீக்குபடித்தேன் சிரித்தேன்..நன்றி..
பதிலளிநீக்குநகைச்சுவை தான் கொஞ்சம் வன்முறை கலந்தது.( 1,2, இறுதி) வாழ்த்துகள்.
பதிலளிநீக்குவேதா. இலங்காதிலகம்.
ஹா...ஹா.......ஹ..
பதிலளிநீக்குநல்ல நகைச்சுவை!
பதிலளிநீக்குநகைச்சுவை அனைத்தும் அருமை... குறிப்பாக முதல் நகைச்சுவை!!
பதிலளிநீக்குஎன் பங்கிற்கு ஒன்று.....
// தமிழ் ஆசிரியர் ஒருவர் தன் மாணாக்கர் முடிந்தளவு தீந்தமிழ் சொற்களைப் பயன்படுத்த வேண்டும் என்று எண்ணினார்.. எனவே, தன் வகுப்பில் 'தீந்தமிழ் சொல் பயன்படுத்தாவிடில் பிரம்படி நிச்சயம்' என்று அறிவித்தார்.
ஒரு நாள் மாலை ஆசிரியர் நடந்து சென்று கொண்டிருந்த போது, எதிரில் வந்த மாணவன் "ஐயா!! ஆ!!" என்றான்..
அவர் "என்ன?" என்று கேட்டார்..
அவன் திரும்ப "ஐயா!! பின்னால் ஆ!! " என்றான்..
அவர் "என்னடா!! என்னை நக்கல் பண்ணுகிறாயா?" என்று சத்தம் போட்டார்..
பையன் திரும்ப "ஐயா!! பின்னால் ஆ!! " என்றான்..
அவர் கோபமடைந்து "இப்ப என்ன பண்றேன் பாரு!!" என்று சொல்லிக்கொண்டிருக்கும் போது..
அவரை ஒரு மாடு பின்னாலில் இருந்து முட்டியது//
3& 4 நல்லா இருக்கு சார்!
பதிலளிநீக்குதங்களுக்கு மனமார்ந்த புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்!
அன்புடன் அழைக்கிறேன் :
"மெய்ப் பொருள் காண்பது அறிவு-ஏன்?"
நன்றி வெங்கட்
பதிலளிநீக்குநன்றி மகேந்திரன்
நன்றி ஹேமா
நன்றி பிரிதிவிராஜ்
நன்றி மதுமதி
நன்றி இலங்காதிலகம்
நன்றி சுந்தரபாண்டியன்
நன்றி தென்றல்
நன்றி ஆளுங்க
நன்றி தனபாலன்