வேர்களைத்தேடி தளத்திற்குத் தங்களை அன்புடன் வரவேற்கிறேன்... இத்தளத்தில் சங்க இலக்கியம், கணினித்தமிழ் சார்ந்து எனது அனுபவங்களைப் பகிர்ந்து வருகிறேன். 13 ஆண்டுகளில் 1500க்கும் மேற்பட்ட பதிவுகளை வழங்கியுள்ளேன். தற்போது இந்தியக் குடிமைப் பணித்தேர்வுக்கான விருப்பப் பாடம் தமிழுக்குரிய விளக்கங்களைத் தொடர்ந்து வழங்கி வருகிறேன். தங்கள் மேலான வருகைக்கு நன்றிகளைத் தெரிவித்துக்கொள்கிறேன்.

புதன், 28 டிசம்பர், 2011

கொலைபேசி!




சில நேரங்களில்
நம் கையில்
பலநேரங்களில்
நாம் அதன் கையில்!





சில நேரங்களில்
பாதையாகிறது
பல நேரங்களில்
போதையாகிறது!

சில நேரங்களில்
பொழுதுபோக்காகிறது
பலநேரங்களில்
பொழுதுகளைத் தின்றுவிடுகிறது!

சில நேரங்களில்
தூரம் குறைக்கிறது
பலநேரங்களில்
நாயாய் குரைக்கிறது!

சில நேரங்களில்
உயிர் காக்கிறது
பலநேரங்களில்
உயிர் பறிக்கிறது!


காலந்தோறும் ஏதோவொரு கருவியோடுதான் நாம் வாழ்ந்துவந்திருக்கிறோம்..
கல்....வில்..வேல்.. என இதன் பட்டியல் பெரியது..
இருந்தாலும்

இக்கருவிகள் எல்லாம் நமக்குத்தான் அடிமையாக இருந்தன
இந்தக் கருவிகளுக்கு நாம் என்றும் அடிமையாக இருந்ததில்லை!

ஆனால் இந்த அலைபேசியோ இதுவரை வந்த வானொலி, தொலைக்காட்சி,கணினி, இணையம் என எல்லாவற்றையும் உள்ளடக்கி மனிதனின் மந்திரக்கோலாக, இன்னொரு கையாக, இன்றைய உலகில் உலா வருகிறது.
அதனால் மனிதனைப் பல நிலைகளில் அடிமைப்படுத்தி வருகிறது.

சிலரின் கைகளைவிட்டு
சிலரின் கண்களைவிட்டு
சிலரின் காதுகளைவிட்டு

இந்த அலைபேசியை இன்று பிரிக்கமுடிவதில்லை. 

சிலர் அலைபேசியில் குறுந்தகவலுக்காக தட்டச்சிடும் வேகத்தைப் பார்த்தால் இவர்களெல்லாம் கணினி மையங்களில் தட்டச்சு செய்தாவது பிழைத்துக்கொள்வார்கள் என்று தான் தோன்றுகிறது.


சிலர் அலைபேசியில் தான் காலை முகம் பார்க்கிறார்கள். முகநூல் மட்டுமே இவர்களது முதல் உலகமாக இருக்கிறது..


சிலர் கூகுள்+, சிலர் டுவைட்டர், சிலர் வலைப்பதிவு..
என ஏதோ ஒரு நிலையில் அலைபேசியின் அடிமைகளாகவேதான் இன்றைய சூழலில் நாம் வாழ்கிறோம்.

சிலருக்கு மட்டுமே இந்த அலைபேசி அடிமையாக இருக்கிறது.

எல்லா தொழில்நுட்பங்களையும் உள்ளடக்கிய
இந்த அலைபேசி
நம் அறிவுத்திறனையும், மானத்தையும், உயிரையும் தான்
உள்ளடக்கி வைத்திருக்கிறது என்பது புரிந்தால்..
அறிவியலின் குழந்தையான அலைபேசிக்கு கொலைபேசி என்று
 இன்னொரு பெயரி்டும் தேவை வந்திருக்காது.


தொடர்புடைய இடுகைகள்


16 கருத்துகள்:

  1. அருமையான பதிவு
    நம் கைப் பிடிக்குள் அது இருப்பதாக நாம் நினைக்கிறோம்
    உண்மையில் அதன் பிடியில்தான் நாம் இருக்கிறோம் என்பதே நிஜம்
    இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்

    பதிலளிநீக்கு
  2. நல்ல கருத்து. என் மனதிற்கு ஏற்புடைய கருத்து. அழகாகச் ‌சொல்லியுள்ளீர்கள். கடைசியில் உள்ள படமே பல பக்கம் பேச வேண்டிய விஷயத்தை எடுத்துரைக்கறது. அருமை முனைவரையா. உங்களுக்கு என் இதயம் கனிந்த புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்!

    பதிலளிநீக்கு
  3. அன்புநிறை முனைவரே,
    மனிதனின் தேடல்களில் அடுத்த பருவம்
    தொலைத் தொடர்புகளுக்காக சரியான
    சாதனம் எதிர்பார்த்துக் கொண்டிருந்தவன்
    கனகச்சிதமாக பிடித்துக்கொண்ட ஓர்
    கருவி.
    கிட்டத்தட்ட அடிமையாகிவிட்டான் என்றே
    சொல்லவேண்டும்.
    அலைபேசி .. கொலைபேசி ஆனது என்ற
    வார்த்தை சாத்தியமானது.

    பதிலளிநீக்கு
  4. ஒரு நாள் அலைபேசியும் கணிணியும் இல்லாம இருந்தா நமக்கு ஏதோ 50 வருசம் ரீவைண்ட்ல போன மாதிரி தோணுது...

    பதிலளிநீக்கு
  5. //சிலர் அலைபேசியில் குறுந்தகவலுக்காக தட்டச்சிடும் வேகத்தைப் பார்த்தால் இவர்களெல்லாம் கணினி மையங்களில் தட்டச்சு செய்தாவது பிழைத்துக்கொள்வார்கள் என்று தான் தோன்றுகிறது.//

    உண்மையான வரிகள். நான் நேரில் கண்டிருக்கின்றேன். இன்று தட்டச்சு மையங்களில் பயிற்சி பெறுவதெல்லாம் மலையேறி வருகிறது.
    சான்றிதழுக்காக தவிர..

    பதிலளிநீக்கு
  6. நறுக்குத் தெறித்த பயனுள்ள சிந்தனை ...

    பதிலளிநீக்கு
  7. அருமையான பதிவு! நிறைய பேருக்கு இது ஒரு DRUG மாதிரி! நல்ல பண்புகள், மற்ற‌வர்களை மதித்தல், தன் அந்தரங்கங்களைக் காத்தல் இதெல்லாமே கைபேசி எடுத்ததுமே காற்றோடு போகிறது!! இன்றைய நிலைமையில் இது ஒரு அவசியப்பதிவும் கூட!!

    பதிலளிநீக்கு
  8. மின்னணுக்கள் அனைத்தும் அடிமைப்படுத்தும் சக்தி வாய்ந்தவை..
    முன்பு..
    தொலைக்காசி தொல்லைக்காட்சி ஆனது.
    பிறகு, கணிணி நமக்கு கண்ணி (வெடி) போல ஆனது..
    இணையமோ அனைவரையும் பிணைக் (கைதி)கிறது

    முதலில், சாதுவாக இருந்த அலைபேசி மெல்ல அனைத்தையும் தன்னுள் இழுத்து "கொலைபேசி" ஆகி வருகிறது!

    அலையும் போது பேச கண்டறியப்பட்ட சாதனம் இன்றோ யாரையும் அலையவிடாமல் இருத்தி விடுகிறது!!

    பதிலளிநீக்கு
  9. நன்றி இரமணி ஐயா
    நன்றி கணேஷ் ஐயா
    நன்றி மகேந்திரன்
    நன்றி சுந்தரபாண்டியன்
    நன்றி மதுமதி

    பதிலளிநீக்கு
  10. நன்றி ஜெயராசன்
    நன்றி மனோ
    நன்றி ஸ்டாலின்
    நனற் நிவாஸ்
    நன்றி ஆளுங்க
    நன்றி டேனியல்

    பதிலளிநீக்கு