பக்கங்கள்

இந்திய குடிமைப் பணித்தேர்வு - தமிழ் - 2 - (UPSC EXAM TAMIL)

வியாழன், 22 டிசம்பர், 2011

செருப்பு.. பிஞ்சுபோச்சு!



கதை 1

ஒரு ஊரில் ஒரு செல்வந்தர் இருந்தார். ஒருநாள் ஏதோ வேலையாக நடந்துசென்றார்.அப்போது
செருப்பு பிஞ்சுபோச்சு.. அருகே இருந்த வீட்டுக்குச் சென்றார். அந்த வீட்டுக்காரரை அழைத்து...

ஐயா இந்தமாதிரி வரும்போது  என் செருப்பு பிஞ்சுபோச்சு. புதுசெருப்பு வேற.. அதனால இதை இப்படியே தூக்கியெறிய மனசு வரல. இங்க உங்க வீட்டு வாசல் ஓரமா வெச்சிட்டுப்போறேன்... காலையில என் வீட்டு வேலைக்காரனை  அனுப்பி எடுத்துக்கிறேன் என்றார். அதற்குத் தாங்கள் அனுமதி தரவேண்டும் என்றார்.
அதற்கு அந்த வீட்டுக்காரர் அந்த செல்வந்தரைப் பார்த்து...
ஐயா.. “ நீங்க எவ்வளவு பெரிய செல்வந்தர்..! எங்க வீட்டு வாசலில் உங்க செருப்பு கிடப்பது கூட எங்களுக்கு கௌரவம் தான். நீங்க தாராளமா வெச்சிட்டுப்போங்க“ என்று சொன்னார்.

சில ஆண்டுகள் கடந்தன...
ஒருநாள் அந்த செல்வந்தரே இறந்து போனார். அவரின் இறுதி ஊர்வலம் நடந்தது. செருப்பு வைத்தாரே அந்த வீட்டு வழியே வந்தது. அப்போது நல்ல மழை. பிணத்தைத் தூக்கி வந்தவர்கள் அந்த வீட்டுக்காரரிடம் சென்று...

ஐயா சரியான மழையாக இருக்கிறது தூக்கிச்செல்லமுடியவில்லை. அந்த உடலை இங்கு மழை நிற்கும் வரை வைத்துவிட்டு. பிறகு எடுத்துக்கொள்ள அனுமதி தருவீர்களா? என்று கேட்டனர்.

அந்த வீட்டுக்காரர் அவர்களிடம் சொன்னார்..

ஏன்டா யார் வீட்டுப் பிணத்தை யார் வீட்டு வாசல்ல வைக்கப்பார்க்கிறீங்க? மரியாதையா எடுத்திட்டுப் போயிடுங்கஎன்று..

(உயிர் உடம்புக்குள்ள இருக்கும் வரைதாங்க மனுசனுக்குமரியாதை)

கதை 2

ஒரு துறவி ஒருநாள் நல்ல வெயிலில் நடந்து சென்றார். அப்போது அவரது செருப்பு பிஞ்சுபோச்சு. தொடர்ந்து நடக்கமுடியாதவராக அருகே இருந்த செருப்பு தைப்பவனிடம் சென்றுகொடுத்தார். அவரோ அந்தச் செருப்பைப் பார்த்துவிட்டு ஐயா நிறைய தைக்கவேண்டியிருக்கிறது. நீங்கள் உங்கள் செருப்பைத் தந்துவிட்டு. மாலை வாருங்கள் தைத்து வைக்கிறேன் என்றார்.

துறவியோ அந்த செருப்புத் தைப்பவரிடம்..
 ஐயா இந்த வெயிலில் நான் எவ்வாறு நடந்துபோவேன்..? என்றார். 
அதற்கு அந்த செருப்பு தைக்கும் தொழிலாளி...

ஐயா உங்களுக்கு வேண்டுமானால் நான் வேறு செருப்புத் தருகிறேன். இதை அணிந்துகொண்டு செல்லுங்கள். மாலை வரும்போது இந்தச் செருப்பைத் தந்துவிட்டு. உங்கள் செருப்பைப் பெற்றுச் செல்லுங்கள் என்றார்.

ஒரு நொடி சிந்தித்த அந்தத் துறவி...
 என்னது இன்னொருவர் செருப்பை நான் அணிவதா...!! 

என்று சிந்தித்தார்..

அவர் மனசாட்சி பேசியது..
“இன்னொருவர் செருப்பை அணிவதற்கே இவ்வளவு சிந்திக்கிறோமே..
இன்னொருவர் பற்றிய தவறான எண்ணங்களையும், 
அவர் மீதான கோபத்தையும், 
பொறாமையையும் இறக்கிவைக்காமல் தூக்கிசுமக்கிறோமே... என்று

(இன்னொருவர் பற்றிய தவறான எண்ணங்களை நம் மனதில் சுமப்பது, இன்னொருவர் செருப்பை அணிவதுபோல இழிவானது)


34 கருத்துகள்:

  1. //உயிர் உடம்புக்குள்ள இருக்கும் வரைதான் மனுசனுக்குமரியாதை)//

    சிறப்பான கருத்து.

    பியிந்து போன செருப்பை வைத்து அருமையான தத்துவக்கதைகள்.
    நன்றி பகிர்வுக்கு.

    பதிலளிநீக்கு
  2. எளிமையான வலுவான கருத்தும் கதையும்...

    பதிலளிநீக்கு
  3. ரெண்டுமே நெத்தியடி...
    என்னுடைய விருப்பம் இரண்டாம் கதை...

    பதிலளிநீக்கு
  4. செருப்பை வைத்தும் ரசிக்கும் படியாக
    ஒரு கருத்துள்ள கதை தந்தமைக்கு வாழ்த்துக்கள்
    த.ம 2

    பதிலளிநீக்கு
  5. அழகான கருத்து கொண்ட பதிவு அருமை நண்பா
    த.ம 3

    பதிலளிநீக்கு
  6. நல்ல தத்துவ கதைகள் .. செருப்பு தானே என்று உதற முடியாது.
    சிறப்பான நீதிகள்.

    பதிலளிநீக்கு
  7. மனசாட்சி சொன்னதாய் குறிப்பிட்ட செய்தி..அருமை..


    அன்போடு அழைக்கிறேன்..

    இறப்பதை எதிர்பார்க்கிறோம்

    பதிலளிநீக்கு
  8. பிய்ந்த செருப்புகளை வைத்து அருமையான சிந்தனைத் தொகுப்பு. பகிர்வுக்கு நன்றி முனைவரே.

    பதிலளிநீக்கு
  9. அருமையான பதிவு. அருமையான கருத்துகள்

    பதிலளிநீக்கு
  10. செருப்பு அருகி வந்து சொலி விட்டுப்போகிறது.நல்ல சிந்தனை,நல்ல பதிவு வாழ்த்துக்கள்.

    பதிலளிநீக்கு
  11. அன்புநிறை முனைவரே,
    அழகான இரண்டு கதைகள்.
    ஒன்று,
    மனிதனின் சுய நலத்தை பட்டவர்த்தனமாக
    தெரிவிக்கிறது. செல்வந்தரின் செருப்புக்கு நாம்
    அடைக்கலம் கொடுத்தால் நமக்கு ஏதாவது கிடைக்கும்
    என்ற நப்பாசை. அதே செவந்தர் உயிரற்றுப் போனபின்
    அவரால் நமக்கு என்ன ஆகப்போகிறது என்ற
    எண்ணம்.
    இரண்டாவது,
    துறவி என்றால் முற்றும் துறந்தவர், அடுத்தவரின்
    செருப்பை காலிலே சுமக்க யோசிக்கும் அவர் எப்படி
    முற்றும் துறந்தவர் ஆக முடியும். நெஞ்சில் பல
    வஞ்சகங்களை சுமக்கையில் அடுத்தவரின் செருப்பை சுமக்க
    முடியாதா??....

    அருமையான கதைகள் முனைவரே. மனோவியல் தத்துவங்கள்
    கூறி நிற்கின்றன.

    பதிலளிநீக்கு
  12. (இன்னொருவர் பற்றிய தவறான எண்ணங்களை நம் மனதில் சுமப்பது, இன்னொருவர் செருப்பை அணிவதுபோல இழிவானது)

    மிக அருமையான பொன் மொழி முனைவரே!
    இதைப் பொன்மொழியாகப் போற்ற வேண்டும்!

    புலவர் சா இராமாநுசம்

    பதிலளிநீக்கு
  13. முதல் கதையை சிலர் சிந்தித்தால் நல்லது....வைரமுத்துவின் வரிகளைப்போல...மீன் செத்தா கருவாடு..மனிதா நீ....இறந்தால்...வெறும்கூடு அதற்க்கும் மதிப்பில்லை..

    பதிலளிநீக்கு
  14. It's very nice.my friends are very happy after seeing this stories.

    பதிலளிநீக்கு
  15. செருப்புகள் சொல்லும் தத்துவங்கள்
    செவிசாய்த்தால் மகத்துவங்கள்
    அருமை முனைவரே!

    மனம் கவர்ந்த பதிவு.
    தஓ 11.

    பதிலளிநீக்கு
  16. unga blog nalla iruku friend


    Life is beautiful, the way it is...
    90 ரூபாய் பூஸ்டர் பேக் போடுங்க 30 நாட்களுக்கு நான் ஸ்டாப் ஆ பேசுங்க மேலும் விபரங்களுக்கு இங்கே கிளிக் பண்ணுங்க 365 Days Free Unlimited Calls Click Here

    பதிலளிநீக்கு
  17. நல்ல ஆழமான கருத்தை சொல்லும் கதைகள்...

    துறவியின் மனசாட்சி சொன்ன கருத்தும்...

    அருமை... நண்பரே...

    பதிலளிநீக்கு
  18. அருமை! த.ம. 12 வாழ்த்துக்கள்!
    பகிர்விற்கு நன்றி Sir!
    சிந்திக்க :
    "உங்களின் மந்திரச் சொல் என்ன?"

    பதிலளிநீக்கு
  19. அருமையான கதை...காலில போடறது தானேன்னு விடாம நல்ல கதை புனைந்திருக்கிறீர்கள்!

    பதிலளிநீக்கு
  20. உண்மைதான் அய்யா .ஒரு மனிதனுக்கு உயிர் இருக்கும் வரைதான் மதிப்பும் மரியாதையும் முதல் கதை அருமை .

    பதிலளிநீக்கு
  21. கிழிந்த செருப்பும் கதை பேசுமா?
    நல்ல கருத்தும்,நல்ல கதையும்.

    பதிலளிநீக்கு
  22. செருப்பிலும் இருக்கொரு சிற‌ப்பான‌ ப‌டிப்பினை! ப‌திவின் இறுதி எல்லோர்க்கும் உச்ச‌ந்த‌லையிலொரு 'ந‌ச்'

    பதிலளிநீக்கு
  23. அருமையான கதைகள். பணம் செல்வாக்கு இருக்குறவரைக்கும்தான் மனிதனுக்கு மரியாதை. அருமையான கருத்துக்கள். நல்ல பகிர்வு குணா சார்.

    பதிலளிநீக்கு
  24. மனிதர்கள் காலில் அணியும் செருப்பை வைத்து அருமையான இரண்டு கதைகள்..

    "உயிர் இருக்கும் வரை தான் உடலுக்கு மரியாதை" என்கிற கருத்தை வலியுறுத்தும் முதல் கதை நிதர்சனத்தைக் காட்டுகிறது. "இன்னொருவர் பற்றிய தவறான எண்ணங்களை நம் மனதில் சுமப்பது, இன்னொருவர் செருப்பை அணிவதுபோல இழிவானது" என்கிற கருத்தை வலியுறுத்தும் இரண்டாவது கதை நம் மனதில் இருக்கும் பிறரது செருப்பைக் கழட்டி போட வைக்கிறது..

    நன்றி ஐயா!

    பதிலளிநீக்கு
  25. நன்றி இராம்வி
    நன்றி சுந்தரபாண்டியன்
    நன்றி மயிலன்
    நன்றி இரமணி ஐயா

    பதிலளிநீக்கு
  26. நன்றி பட்டர்
    நன்றி எம்ஆர்
    நன்றி குடிமகன்
    நன்றி ஸ்ரவாணி
    நன்றி மதுமதி
    நன்றி கீதா
    நன்றி சேகர்.

    பதிலளிநீக்கு
  27. நன்றி விமலன்
    நன்றி மகேந்திரன்
    நன்றி புலவரே
    நன்றி வீடு சுரேஸ்
    நன்றி விவேக்
    நன்றி டேனியல்

    பதிலளிநீக்கு
  28. நன்றி மஞ்சு
    நன்றி சத்ரியன்
    நன்றி இராஜா
    நன்றி தனபாலன்

    பதிலளிநீக்கு
  29. நன்றி அருணா
    நன்றி தென்றல்
    நன்றி சதீசு
    நன்றி திருமதி செயசீலன்
    நன்றி நிலாமகள்
    நன்றி ஸ்டார்சான்
    நன்றி ஆளுங்க

    பதிலளிநீக்கு