இன்றையை மட்டுமே நினைவுவைத்துக்கொள்ளும் தமிழரின் மூளைக்கு நேற்றை
நினைவுபடுத்தும் முயற்சியே இவ்விடுகை..
கூடங்குளம் அணுஉலை
பால்விலை உயர்வு
பேருந்து கட்டண உயர்வு
பணவீக்கம்
மீனவர் தாக்குதல்
முல்லைப் பெரியாறு
என நாள்தோறும் ஏதோ ஒரு கூட்டத்தைக் கூட்டிக்கொண்டு போராட்டம் செய்வதும்
மறுநாள் அதை மறந்து இன்னொரு போராட்டத்துக்குத் தயாராவதும் நம் வழக்கமாகப்
போய்விட்டது. மறந்த சில சமூக அவலங்கள் பன்முகப் பார்வையில்...
எங்கடா கூட்டமா கிளம்பிட்டாங்க..
மீதமிருக்கும் மரங்களையெல்லாம்
வெட்டப்போறாங்களா?
விலங்குகளின் பார்வையில்..
நாட்டில் வாழமுடியாம
நம்ம காட்டுக்குத் தான் கூட்டமா வருவாங்களோ..?
வானத்தின் பார்வையில்..
மழை தருவது நான்
பங்கிட்டுக்கொள்வது இவர்களா?
எமனின் பார்வையில்..
என்னோட எருமைமாடு தொலைஞ்சுபோச்சு
இவைதான் எனது புதிய ஊர்திகள்!
கடவுள் பார்வையில்..
நீ யார் என்று உன்னை உனக்கு
அடையாளம் காட்ட நான் தந்த அனுபவங்களே இவை!
ஊடகங்கள் பார்வையில்..
பர பரப்பூட்டும்
செய்தீகள்!
அரசியல்வாதிகளின் பார்வையில்..
இலவச
விளம்பரங்கள்!
சராசரி மக்களின் பார்வையில்
வாழ்வுக்கும் - சாவுக்கும்
இடையில் நடக்கும் போராட்டம்!!
இப்ப பரபரப்பா..ஜெதுச போயிட்டு இருக்குங்க நம்ம மக்களிடம்... (விளக்கம் : ஜெயலலிதா துரத்திய சசிகலா....)என்னங்க சரிதானே...
பதிலளிநீக்குவணக்கம் முனைவரே..
பதிலளிநீக்கு//வானத்தின் பார்வையில்..
மழை தருவது நான்
பங்கிட்டுக்கொள்வது இவர்களா?//
முற்றிலும் நிஜம்..
பிரமாதம்
பதிலளிநீக்குபார்வைகள் வித்தியாசமான சிந்தனை தான் குணா..
பதிலளிநீக்குநல்ல முயற்சிதான்:)
பதிலளிநீக்குமிக அருமை... நண்பரே...
பதிலளிநீக்கு////விலங்குகளின் பார்வையில்..
பதிலளிநீக்குநாட்டில் வாழமுடியாம
நம்ம காட்டுக்குத் தான் கூட்டமா வருவாங்களோ..?////
மனிதர்கள் மிருகங்களாகி விடுகையில்
காட்டிற்கு செல்ல வேண்டியதுதான்.
எத்தனை குரூரம் மனிதனின் மனதில்......
பதவியை தக்கவைத்துக் கொள்ள ஆடும்
நாடகங்களுக்கு அளவே இல்லை போலும்.......
மிருகங்கள் தேவலாம்.. அவை நாட்டுக்குள் வரட்டும்.
அருமையான வாக்கியமது முனைவரே.
வித்தியாசமாக, நல்லதொரு கோணத்தில் பார்த்திருக்கிறீர்கள். நன்றாக இருந்தது முனைவரையா...
பதிலளிநீக்கு//கூடங்குளம் அணுஉலை
பதிலளிநீக்குபால்விலை உயர்வு
பேருந்து கட்டண உயர்வு
பணவீக்கம்
மீனவர் தாக்குதல்
முல்லைப் பெரியாறு//
இப்ப எல்லோரும் ஜெ-சசி மேட்டருக்கு மாறிட்டாங்க...
வித்தியாசமான பார்வைகள்.........
பதிலளிநீக்குமிக அருமை...
பதிலளிநீக்குநல்ல பதிவு முனைவரே!
பதிலளிநீக்குகடந்த ஐந்தாறு தினங்களாக தங்கள் வலை
தட்டினால் வரும் ஆனால் நகராது அப்படியே முன்னோ பின்னோ போகாது
இன்று,mozilla firefox மூலம் தட்டினேன் வந்தது! கவனிக்க!
புலவர் சா இராமாநுசம்
Arumai. Vithiyasamana paarvai.
பதிலளிநீக்குTM 8.
நம்ம மக்களை நடத்தும் தலைவர்களும் , அரசியல்வாதிகளும் மக்களை நிம்மதியாக தூங்க விடமாட்டார்கள் . அப்படி செய்தால் தான் நாளேடுகளில் புகைப்படம் தினம் வரும் என்பது சிலரின் எண்ணம் . என்ன செய்ய ...? விவேக் போல மிருகங்கள் பேசும் பாஷையை நாம் அறியும் சக்தி கொண்டு இருந்தால் நீங்கள் சொன்னது போல தான் மிருகங்கள் பேசும் ....
பதிலளிநீக்குஉண்மைதான் வீடு சுரேஷ் வருகைக்கு நன்றி.
பதிலளிநீக்குநன்றி சம்பத்
பதிலளிநீக்குநன்றி நிவாஸ்
மகிழ்ச்சி தமிழ்
நன்றி மழை
நன்றி இராஜா
நன்றி மகேந்திரன்
பதிலளிநீக்குமகிழ்ச்சி கணேஷ் ஐயா
உண்மைதான் சசி
நன்றி அம்பலத்தார்
நன்றி நாகா
தங்கள் அறிவுறுத்தலுக்கு நன்றி புலவரே
மகிழ்ச்சி டேனியல்
அழகாகச் சொன்னீர்கள் இருதயம்..
பதிலளிநீக்கு//நாள்தோறும் ஏதோ ஒரு கூட்டத்தைக் கூட்டிக்கொண்டு போராட்டம் செய்வதும் மறுநாள் அதை மறந்து இன்னொரு போராட்டத்துக்குத் தயாராவதும் நம் வழக்கமாகப் போய்விட்டது.//
பதிலளிநீக்குநீங்கள் சொல்வது உண்மை தான்...
கோடைக்காலத்தில் பெரிதாய் ஒரு "கா"(காவிரி), நடுநிலையாய் ஒரு "குபி" (குடிநீர் பிரச்சனை) எப்போதும் இந்த பட்டியலில் சேரும். மழை மண்ணில் பட்ட மறுநிமிடம் அது காணாமல் போய் விடும்..
மழை வந்தபின்னோ புதிதாய் சில "மதே" (மழை நீர் தேக்கம்), "வெ" (வெள்ளம்), "ஆ" (ஆக்கிரமிப்பு அகற்றல்) ஆகியவை பூதகரமாக தோன்றும்..ஆனால், மழை நின்று நீர் வடிந்த பின் அவற்றைப் பற்றி பேச யாரும் இல்லை..
ஒரு பிரச்சனையைக்கை யில் எடுத்தால் அதனை முழுதே ஒரு முறையேனும் முடித்தால், மறுமுறை மீண்டும் தலைதூக்காது அல்லவா? இதனை நான் என்று உணரப் போகிறோம்?
மன்னிக்கவும்...
பதிலளிநீக்கு//இதனை நான் என்று உணரப் போகிறோம்? //
இதனை நாம் என்று உணரப் போகிறோம்?
தங்கள் வாசித்தலுக்கு நன்றி ஆளுங்க.
பதிலளிநீக்கு