பக்கங்கள்

இந்திய குடிமைப் பணித்தேர்வு - தமிழ் - 2 - (UPSC EXAM TAMIL)

வெள்ளி, 9 டிசம்பர், 2011

மருந்தில்லா நோய்களுக்கான மருந்து!

காலந்தோறும்...
நோய்களின் பெயர்கள் தான் மாறுகின்றன!
நோய்கள் மாறுவதில்லை!
மருந்துகளின் பெயர்கள்தான் மாறுகின்றன!
மருந்துகள் மாறுவதில்லை!

கண், காது, மூக்கு என ஒவ்வொரு உறுப்புகளையும் ஆய்வு செய்ய ஒவ்வொரு மருத்துவத் துறைகள் வந்துவிட்டன. ஆனாலும் இன்றுவரை எந்த மருத்துவராலும் தீர்க்கப்படாத நோய்கள் பல! அவற்றுள்..

“பிறவி, பசி காதல்” என்னும் மூன்று நோய்களும் குறிப்பிடத்தக்கன.

உயிரின் வேட்கை - பிறவி!
உடலின் வேட்கை - பசி!
உள்ளத்தின் வேட்கை காதல்!

பிறவிநோய்

பிறவிநோய் தீர்ப்பவர் யார்?
கண்ணுக்குத் தெரியாத கடவுளைத் தேடுவதைவிட. அந்தக் கடவுளே நாம் தான் என்தை உணர்வது சிறந்தது.

அந்தந்த மணித்துளிகளில் வாழ்தல்!
சுயநலம் துறத்தல்
பொதுநலம் விரும்புதல் 
ஆகியன நம் மனதில் தோன்றினால் இப்பிறவி ஒரு நோயாகவே தெரியாது. அதற்குப் பிறகும் இப்பிறவி ஒரு நோயாகத் தோன்றினால்...

“கொஞ்சம் கடவுள் நம்பிக்கையும் - நிறைய மனநிறைவையும்”

மூன்று வேளையும் மருந்தாக எடுத்துக்கொள்ளலாம்.

பசி

நாம் பல நேரங்களில் வயிற்று மனிதர்களாகவே வாழ்கிறோம். அதனால் நமக்குக் கழுத்துக்குக் கீழே வயிறு மட்டும் தான் பலநேரங்களில் இருக்கிறது. அதனால் பசி ஒரு பெரிய நோயாகத் தான் உள்ளது. வயிறு நிறைய உண்டாலும் மீண்டும் பசிக்கிறது. இந்த நோய் தீர என்ன வழி?

நானறிந்தவரை...

“அளவாக உண்டாலும் அன்போடு வழங்கப்படும் உணவுக்கு பசி என்னும் இக்கொடிய நோயை நீக்கும் ஆற்றல் உண்டு” என்று நம்புகிறேன்.

காதல்

பண்பாட்டுக் கலப்பாலும், திரைப்படங்களாலும் இன்றைய சூழலில் காதல் என்ற சொல்லின் பொருள் நிறையவே மாறியிருக்கிறது.

உள்ளம் சார்ந்த காதல்
உடல் சார்ந்த தேடலாகப் புரிந்துகொள்ளப்பட்டுவருகிறது.

உணவில் உப்பு போல..
காதலின் ஒரு கூறுதான் உடல்..

உணவில் உப்பின் அளவு அதிகமானால்..??

மலரினும் மெலிதல்லவா காமம்!!

காதல் நோய்கான மருந்து...

நிறைய புரிதல்
அவ்வப்போது விட்டுக்கொடுத்தல்
சின்னச் சின்னச் சண்டைகள்...

இம்மருந்துகளை காலை, மாலை, இரவு என உட்கொள்வதால் இந்நோய் தீரும்.

தொடர்புடைய இடுகைகள்

43 கருத்துகள்:

  1. அருமையான பயனுள்ள பதிவு..மிக்க நன்றிகள்.

    பதிலளிநீக்கு
  2. நீங்கள் (Ph.D) மருத்துவர் பட்டம் பெற்றவர் என நிரூபித்துவிட்டீர்கள். கண்ணுக்கு தெரியா நோய்களுக்கான மருந்து நம்மிடம்தான் உள்ளது என்ற தங்களது மருத்துவ ஆலோசனை அனைவருக்கும் பயன்தரும். பதிவுக்கு நன்றி அண்ணா!

    பதிலளிநீக்கு
  3. நீங்கள் குறிப்பிடுகிற நோய்கள் மூன்றும்
    விசித்திர நோய்கள்
    அதைப் புரிந்து கொள்ளுதலே அதற்கான
    சிறந்த மருந்து
    மனம் கக்வர்ந்த அருமையான பதிவு
    தொடர வாழ்த்துக்கள்
    த.ம 2

    பதிலளிநீக்கு
  4. உயிரின் வேட்கை - பிறவி!
    உடலின் வேட்கை - பசி!
    உள்ளத்தின் வேட்கை காதல்!// விசித்திர நோய்கள்...

    பதிலளிநீக்கு
  5. //கண்ணுக்குத் தெரியாத கடவுளைத் தேடுவதைவிட. அந்தக் கடவுளே நாம் தான் என்தை உணர்வது சிறந்தது.//

    நான் மட்டும் தான் கடவுள் என்று நினைத்தால் அது தனி நோய்...

    பதிலளிநீக்கு
  6. அருமையான, கருத்துள்ள, அனைவரும் தெரிந்து கொள்ள வேண்டிய பதிவு. நன்றி Sir!
    இதையும் படிக்கலாமே :
    "அறிந்ததா? தெரிந்ததா? புரிந்ததா?(3) எது சிறந்தது? (நிறைவுப் பகுதி)"

    பதிலளிநீக்கு
  7. குணா சுருக்கமா தெளிவா நல்ல கருத்தை முன்னெடுத்து வச்சிருக்கீங்க..

    பதிலளிநீக்கு
  8. அன்புநிறை முனைவரே,
    அழகான ஆழ்ந்த விளக்கங்களுடன்
    மருந்தில்லா நோய்களுக்கு மருந்துகளை சொல்லியிருக்கிறீர்கள்.
    மூன்று வகை அடிப்படை நோய்களை நீங்கள்
    வகைப்படுத்திய விதம் அருமை.
    மெய்யடி தேடுதலே பிறவிப் பிணியின் அருமருந்தாம்...
    எனக்கூறியது சாலச் சிறந்தது.
    அளவுடன் உட்கொள்ளுதலும், அன்பு கலந்து பரிமாறுதலும்
    பசிப்பிநிக்கான மருந்தை சொன்னது மிக அருமை.
    உள்ளவேட்கையாய் வரும் காதல் உடல் வேட்கையால் வந்தாள் தான் சிக்கலே..
    காதலப் பிணிக்கான மருந்துகள் மிக அருமை..

    பதிலளிநீக்கு
  9. அழகான வரிகள்! ஆழமான கருத்துக்கள்! நன்றி முனைவரையா!

    பதிலளிநீக்கு
  10. அழகாகவும் அருமையாகவும் சொன்னீர் முனைவரே!

    புலவர் சா இராமாநுசம்

    பதிலளிநீக்கு
  11. //அந்தந்த மணித்துளிகளில் வாழ்தல்!
    சுயநலம் துறத்தல்
    பொதுநலம் விரும்புதல் //

    அருமையான கருத்து.எல்லோரும் இப்படி இருந்துவிட முடியுமா என்ன???
    சிறப்பான பதிவுக்கு நன்றி.

    பதிலளிநீக்கு
  12. முதல் நோய்யை தீர்த்துவிட்டால் மற்ற நோய்கள் வர வாய்ப்பே இல்லை...

    தெளிவான விளக்கத்துடன், பகிர்வு அருமை... நண்பரே...

    பதிலளிநீக்கு
  13. ஆம்..மலரினும் மெலிதானதுதான் காமம்!!

    பதிலளிநீக்கு
  14. //உயிரின் வேட்கை - பிறவி!
    உடலின் வேட்கை - பசி!
    உள்ளத்தின் வேட்கை காதல்!//-

    அருமை முனைவரே!நெகிழ்ச்சியான பதிவு.

    பதிலளிநீக்கு
  15. அருமையான கருத்துகள்..

    பிறவி, பசி, காதல் -இம்மூன்று நோய்களுக்கும் அருமையான மருந்து..
    இவற்றை வருமுன் தடுக்க இயலாது.. ஆனால், தற்காத்துக் கொள்ள இயலும்!

    பதிலளிநீக்கு
  16. நோயின் தாக்கத்தினையும் அதனைஎதிர் கொள்ள மருந்தினையும் தந்துவிட்டீர்கள்! நன்றி குணா !

    பதிலளிநீக்கு
  17. @மகேந்திரன்ஆழ்ந்த புரிதலுக்கும் மதிப்பீட்டிற்கும் நன்றி நண்பரே.

    பதிலளிநீக்கு