வேர்களைத்தேடி தளத்திற்குத் தங்களை அன்புடன் வரவேற்கிறேன்... இத்தளத்தில் சங்க இலக்கியம், கணினித்தமிழ் சார்ந்து எனது அனுபவங்களைப் பகிர்ந்து வருகிறேன். 13 ஆண்டுகளில் 1500க்கும் மேற்பட்ட பதிவுகளை வழங்கியுள்ளேன். தற்போது இந்தியக் குடிமைப் பணித்தேர்வுக்கான விருப்பப் பாடம் தமிழுக்குரிய விளக்கங்களைத் தொடர்ந்து வழங்கி வருகிறேன். தங்கள் மேலான வருகைக்கு நன்றிகளைத் தெரிவித்துக்கொள்கிறேன்.

வியாழன், 8 டிசம்பர், 2011

துளிப்பாக்கள்


வெற்றிக்குத் தேவையான 
எரிபொருள்

“தன்னம்பிக்கை”


சிலருக்கு நோய் 
பலருக்கு மருந்து

“பசி”


அழகின் 
முற்றுப்புள்ளி

“நிலவு”


உயர்ந்தவர்களின் செருப்பு
தாழ்ந்தவர்களின் மணிமகுடம்

“புகழ்”

தவறுகளைக்கூட
தவறின்றிச் செய்யத்தெரியாத அப்பாவிகள்

“சிறைக்கைதிகள்“

பல வண்ணங்களும்
பல நிறங்களும் கொண்ட ஒரே பூ

“சிரிப்பூ”


அறிவின் அடையாளம்
அறியாமையின் குறியீடு

“அமைதி”


மனித அறிவின் எச்சம்
மனித அழிவின் உச்சம்

“அறிவியல்”


தொடர்புடைய இடுகை

38 கருத்துகள்:

  1. அழகிய படங்களுடன் தத்துவமுத்துக்கள் ஜோராயிருக்கு.

    பதிலளிநீக்கு
  2. ப‌ட‌ங்க‌ளின் தேர்வு ப்ர‌மாத‌ம்! பாக்க‌ளும் 'ந‌ச்'

    பதிலளிநீக்கு
  3. மனித அறிவின் எச்சம்
    மனித அழிவின் உச்சம்

    “அறிவியல்”-----அருமை!!!!சும்மா நச்!

    பதிலளிநீக்கு
  4. படங்களும் அதற்கேற்ற தத்துவக்கவிதை வரிகளும் அருமை.

    பதிலளிநீக்கு
  5. சூப்பர்!
    அறிவியலும், சிறைக்கைதிகளும் மிக அருமை!

    பதிலளிநீக்கு
  6. படத்திற்கு ஏற்ப மகுடம் சூட்டுகிறது. தங்களின் வரிகள்...

    அழகிய பதிவு..

    பதிலளிநீக்கு
  7. சொற்களுக்கான விளக்கம்
    மிக மிக சுருக்கம் ஆயினும்
    மிக மிக அருமை
    த.ம 6

    பதிலளிநீக்கு
  8. எப்புடிங்க முனைவரே ..
    துளிப்பாக்கள் துண்டு நெருப்பாய் நிதர்சன உண்மைகளை கொட்டிசெல்கிறது ..

    பதிலளிநீக்கு
  9. அருமை!இவற்றை சிறு ஹைக்கூக்கள் என்று சொல்லலாமா?

    பதிலளிநீக்கு
  10. கருத்தும் படங்களும் அருமை!

    புலவர் சா இராமாநுசம்

    பதிலளிநீக்கு
  11. குணா எல்லாமே நச்சுன்னு இருக்குங்க..புதியவிதமா நீங்க எழுதுவதும் ரசிக்கபடியா இருக்கு...

    பதிலளிநீக்கு
  12. தவறுகளைக்கூட
    தவறின்றிச் செய்யத்தெரியாத அப்பாவிகள்

    “சிறைக்கைதிகள்“

    உண்மை எளிய வார்த்தைகளில்...

    இன்று என் வலைப்பூவில்... அது ஒரு கார்த்திகை மாலை..அன்பே!

    பதிலளிநீக்கு
  13. துளித்தேன் போல சுவைத்தது தங்களின் துளிப்பாக்கள்.
    படங்களின் தேர்வு மிக அருமை முனைவரே.

    பதிலளிநீக்கு
  14. குறைந்த சொற்களில் ஆழமான அர்த்தங்கள்...

    அருமை... நண்பரே...

    பதிலளிநீக்கு
  15. எல்லாமே நறுக்...நச்...அழகின் முற்றுப்புள்ளி. செம சூப்பர்.

    பதிலளிநீக்கு
  16. @அரசன்தங்கள் புரிதல் என் எழுத்துக்களுக்கு ஆற்றல் தருவதால் நண்பரே..

    பதிலளிநீக்கு
  17. @சென்னை பித்தன்ஹை என்னும் வடசொல்லே வேண்டாம் என்றுதான் ஐயா “துளிப்பா“ என்ற தலைப்பிட்டுள்ளேன்..

    பதிலளிநீக்கு
  18. மிகவும் அருமை....

    //மனித அறிவின் எச்சம்
    மனித அழிவின் உச்சம்

    “அறிவியல்”//

    எச்சத்தை அழிவிற்காக பயன்படுத்துவதில் மனிதனுக்கு நிகர் இல்லை!

    பதிலளிநீக்கு