வேர்களைத்தேடி தளத்திற்குத் தங்களை அன்புடன் வரவேற்கிறேன்... இத்தளத்தில் சங்க இலக்கியம், கணினித்தமிழ் சார்ந்து எனது அனுபவங்களைப் பகிர்ந்து வருகிறேன். 13 ஆண்டுகளில் 1500க்கும் மேற்பட்ட பதிவுகளை வழங்கியுள்ளேன். தற்போது இந்தியக் குடிமைப் பணித்தேர்வுக்கான விருப்பப் பாடம் தமிழுக்குரிய விளக்கங்களைத் தொடர்ந்து வழங்கி வருகிறேன். தங்கள் மேலான வருகைக்கு நன்றிகளைத் தெரிவித்துக்கொள்கிறேன்.

புதன், 9 நவம்பர், 2011

ஏனிந்த நரைமுடி?


தலைமுடியின் இயற்கையான நிறமே வெள்ளைதான்.
தட்பவெப்பசூழலுக்கு ஏற்ப முடி நிறம் பெறுகிறது.
மரபியல் கூறுகளை அடிப்படையாகக் கொண்டும், மனக் கவலை காரணமாகவும், தண்ணீர் காரணமாகவும் முடி கொட்டுகிறது, நரைக்கிறது என்று அறிவியலாளர்களும், உளவியலாளர்களும் தெரிவிக்கின்றனர்.

முகச்சுருக்கம், உடல்தளர்ச்சி, மறதி, முடிகொட்டுதல், நரைத்தல் ஆகியன காலன் தன் வருகைக்குத் தரும் முன் அறிவிப்பு என்று ஆன்மீகவாதிகள் சொல்கின்றனர்.

சங்க காலத்தில், பிசிராந்தையாரைக் கண்ட ஊர்மக்கள் அவரது தோற்றம் கண்டு வியந்தார்கள்.  வயதான பின்பும் முடி நரைக்காமல் இருந்த அவரது தோற்றமே ஊரார் வியப்பெய்தக் காரணம். நரையின்றி இருப்பதன் நுட்பத்தை அவரிடம் வினவினர்.“ அதற்கு அவர் சொன்ன பதில்...


புறநானூறு -191.
இப்பாடலின் பொருளை ஆங்கிலம் மொழி தெரிந்தவர்களும் உணர்ந்துகொள்ளவேண்டும் என்ற நோக்கில்..
இப்பாடலின் ஆங்கில வடிவத்தைப் பதிவு செய்கிறேன்..

If you ask me how it is
that I’am so full of years
and yet my hair is not grey

it’s because
my wife is virtuous
my children are mature

younger men wish
what I wish
and the king only protects
doesn’t do what shouldn’t be done

Moreover, my town
has several noble men
wise and self-possessed.

நண்பர்களே இப்பாடலுக்கான முழுமையான பொருளை அறிய..


என்னும் இடுகைக்கு உங்களை அன்புடன் அழைக்கிறேன்.

27 கருத்துகள்:

  1. ஹூம்... மன்னர் காலத்திலேயே நாமும் வாழ்ந்திருக்கலாமோ என்ற எண்ணம் தோன்றச் செய்து விட்டீர் முனைவரையா...

    பதிலளிநீக்கு
  2. சங்க காலத்தில் இப்படி ஒரு சூழ்நிலை இருந்திருக்கிறது என்பது மகிழ்ச்சியாக உள்ளது... நண்பரே...

    பகிர்வுக்கு நன்றி... நண்பரே...

    பதிலளிநீக்கு
  3. அந்த காலத்திலும் இப்படி இருந்தார்கள். அட..

    பதிலளிநீக்கு
  4. நான் அறியாத தகவல் ,அறியத்தந்தமைக்கு நன்றி நண்பரே

    பதிலளிநீக்கு
  5. அழகிய பாடல், அருமையான விளக்கம் ஐயா.

    பதிலளிநீக்கு
  6. நல்ல பகிர்வு.. முன்பெல்லாம் தண்ணீரும் நன்றாக இருந்தது. இப்போது அத்தனை கலப்படம்.. தில்லி வந்து சில நாட்களிலேயே ஆங்காங்கே வெள்ளி முடி வந்து விட்டது எனக்கு! அதுவும் இருபது வயதிலேயே.....

    பதிலளிநீக்கு
  7. முகச்சுருக்கம், உடல்தளர்ச்சி, மறதி, முடிகொட்டுதல், நரைத்தல் ஆகியன காலன் தன் வருகைக்குத் தரும் முன் அறிவிப்பு என்று ஆன்மீகவாதிகள் சொல்கின்றனர்.
    >>>>
    அட அப்படியா சகோ. இனி விழிப்புடன் உடல் நலத்தை பாதுகாத்துகொள்வோம். பகிர்விற்கு நன்றி

    பதிலளிநீக்கு
  8. நரைநீக்கக்கூட புறநானூறு இருக்கு !

    பதிலளிநீக்கு
  9. இந்த புறநானூற்றுப்பாடலை முழுதாக எனக்கு இப்போதுதான் தெரிகிறது.நன்றி.

    பதிலளிநீக்கு
  10. @ராஜா MVS வாசித்தலுக்கும் புரிதலுக்கும் நன்றி இராஜா..

    பதிலளிநீக்கு
  11. @MyKitchen Flavors-BonAppetit!. வருகைக்கும் வாசித்தலுக்கும் நன்றி போனாபட்.

    பதிலளிநீக்கு
  12. நல்ல பதிவு
    எடுத்துக் காட்டும் அருமை!

    புலவர் சா இராமாநுசம்

    பதிலளிநீக்கு
  13. biotin என்ற வைட்டமின் குறைபாடும் காரணம்

    பதிலளிநீக்கு