வேர்களைத்தேடி தளத்திற்குத் தங்களை அன்புடன் வரவேற்கிறேன்... இத்தளத்தில் சங்க இலக்கியம், கணினித்தமிழ் சார்ந்து எனது அனுபவங்களைப் பகிர்ந்து வருகிறேன். 13 ஆண்டுகளில் 1500க்கும் மேற்பட்ட பதிவுகளை வழங்கியுள்ளேன். தற்போது இந்தியக் குடிமைப் பணித்தேர்வுக்கான விருப்பப் பாடம் தமிழுக்குரிய விளக்கங்களைத் தொடர்ந்து வழங்கி வருகிறேன். தங்கள் மேலான வருகைக்கு நன்றிகளைத் தெரிவித்துக்கொள்கிறேன்.

வியாழன், 1 டிசம்பர், 2011

காற்று - ஆணா? பெண்ணா?


எங்கும் நிறைந்தது கடவுள் என்றால்..

என் மனம் காற்றின் இன்னொரு பெயர்தான் கடவுளா? 
என்று கேட்கிறது.

இந்த உலகில் ஆண், பெண் என்றபாகுபாடு உயர்திணை மட்டுமின்றி, அஃறிணையிலும் உண்டு...

கடலில் கூட அதன் சீ்ற்றத்தை வைத்து ஆண், பெண் எனப் பாகுபாடு செய்வார்கள்.

நிலவைப் பெண் என்றும் பரிதியை ஆண் என்றும் கவிஞர்கள் பாடுவார்கள்.

தாவரங்களில் கூட ஆண் பெண் பாகுபாடு செய்வதுண்டு..

இவற்றையெல்லாம் பார்க்கும்போது எனக்கும் மனதில் ஒரு கேள்வி தோன்றியது. 

காற்று ஆணா? பெண்ணா? என்று..

தென்றல், வாடை, கொண்டல், கோடை என்று இலக்கியங்களும் 

அறிவியலும் காற்றைப் பலவாறு பாகுபாடு செய்திருக்கின்றன.

இருந்தாலும் இந்த சராசரி சிந்தனைகளைக் கடந்து காற்று எனக்கு 

பெண்ணாகவும், ஆணாகவும் தெரிகிறது..


மரங்களின் 
இலைகளாய்
சலசலக்கும்போது...

மழலையின்
தலைமுடி
கோதும்போது..

மலரின் வாசத்தை
ஊரெல்லாம் 
சொல்லும்போது...

குழலின்
வழியே
இசையாகும்போது...

பறவைகள்
மொழியில்
ஒலியாகும்போது...

!காற்று பெண்ணாகிறது!


பேரலையாய் 
கரையை 
மிரட்டும்போது...

பெருங்காற்றாய்
மக்களைச் 
சிதைக்கும்போது...

வாடைக்காற்றாய்
மக்களை 
வதைக்கும்போது...

பறையின் 
வழியே
இசையாகும்போது..

விலங்குகளின்
மொழியில் 
ஒலியாகும்போது..

இடித்தாலும்
மேகமாய்
மழைபொழியும்போது..

!காற்று ஆணாகிறது!

தொடர்புடைய இடுகை


41 கருத்துகள்:

  1. kaatru aanpaal penpaal irandume.ulakil iraivanal padaiththa anaiththilum aan undu penundu. anaithu nadhikalum penpal aanal brahmaputraa aanpal. hindiyil hava enraal kaatru athu penpaal. aandhi puyal penpaal pavn enraal kaatru. athu aanpal.neengal kooriya padi katrukkum maraththirkum paal undi. manthuppaal veru. manappaal veru.

    பதிலளிநீக்கு
  2. அருமையான ஆராய்ச்சி, ஒ.. காற்று ஆண் பாலினமா?

    பதிலளிநீக்கு
  3. சந்தேகம் இப்படியுமா? இருந்தாலும் உங்கள் கவிதைகள் மூலம் இரண்டுமே காற்றுக்கு உண்டு என்பதை பகிர்ந்திருகிறீர்கள். நன்றி


    எனது வலைப்பூ இன்று முதல் புதிய டொமைனுக்கு மாறுகிறது:
    வலையுலக நண்பர்களே, எனது வலைப்பூ பற்றி ஓர் அறிவிப்பு

    பதிலளிநீக்கு
  4. நல்ல சந்தேகம் நல்ல விடைகளை தேடித்தரும் என்பதை இந்த பதிவு உணர்த்துகிறது. நன்றி!

    பதிலளிநீக்கு
  5. பெண்ணுக்கும் ஆணுக்குமான விளக்கம் அருமை

    பதிலளிநீக்கு
  6. மாறுபட்ட்ட சிந்தனை
    அழகான ரசித்து மகிழும்படியான
    அருமையான பதிவு
    தொடர வாழ்த்துக்கள்
    த.ம 4

    பதிலளிநீக்கு
  7. அன்புநிறை முனைவரே,
    காற்றுக்கு பால் தேடும் முயற்சி ....
    அருமையான பதிவு...
    குணங்களில் மேன்மையான காற்றை பெண்ணாகவும்
    கொஞ்சம் கடின குணம் கொண்ட காற்றை ஆணாகவும்
    உருவகப்படுத்தி அழகாய் பதிவு கொடுத்தமைக்கு
    நன்றிகள் பல.

    பதிலளிநீக்கு
  8. காற்றை மிக அழகாக ரசிக்கும் படி வடிவமைத்துள்ளீர்கள்...

    அருமை நண்பரே...

    பதிலளிநீக்கு
  9. காற்றை ஆண் என்றும் பெண் என்றும் வகுத்த விதம்
    அருமை!.....வாழ்த்துக்கள் சகோ .மிக்க நன்றி பகிர்வுக்கும்
    புதிய முயற்சிக்கும் .

    பதிலளிநீக்கு
  10. இனி காற்றில் நனையும் போது இந்த கேள்வியை கேட்கிறேன்,
    காற்றே நீ ஆணா பெண்ணா? என்று.

    பதிலளிநீக்கு
  11. காற்றடிக்குப்போதெல்லாம் இனி இந்தப் பதிவின் ஞாபகம் வரும் குணா !

    பதிலளிநீக்கு
  12. மன்னர்களுக்கு என்றுமே சந்தேகம்தான்.

    பதிலளிநீக்கு
  13. அருமையான விளக்கம். வித்தியாசமான முயற்சி வாழ்த்துக்கள் சகோ

    பதிலளிநீக்கு
  14. மீண்டும் ஒரு கலக்கலான பதிவு... இப்படியும் யோசிப்பீங்களோ

    பதிலளிநீக்கு
  15. @வே.சுப்ரமணியன்.நல்ல சந்தேகம் தங்களைப் போன்ற நல்ல நண்பர்களையுத் தேடித்தரும் நண்பா..

    பதிலளிநீக்கு
  16. காற்றை அருமையாக பகுத்துள்ளீர்கள்...

    பதிலளிநீக்கு
  17. காற்று எங்கும் நிறைந்து இல்லை. ஆனால் நாம் இருக்கும் இடத்தில் காற்று இருக்கிறது. ஆனால், காற்றில் கடவுள் தன்மை உண்டு. (நம்மை உயிர் வாழ வைக்கிறதே!)

    உங்கள் ஆண் பெண் ஆராய்ச்சி அட! போட வைக்கிறது.

    பதிலளிநீக்கு
  18. தங்கள் ரசித்தலுக்கு நன்றிகள் இரசிகன்..

    பதிலளிநீக்கு
  19. ஆண் பெண் அலசல் நன்று. காளி போன்ற பெண்களும் உள்ளனரே அவை எந்தக்கணக்கில் வருமோ !
    ஆயினும் சிந்தனைத் தூண்டல் தான். இனிய நல்வாழ்த்து.
    எது எப்படியென்றாலும் விண்டோஸ்8 எனது கணனியானாலும். தேருக்குக் கயிறு கட்டி இழுப்பது போலத் தான் உங்கள் வலை அல்லது தொழில் நுட்பம்.
    ம்..ம்.. மேலும் கீழும் அசைக்கவே முடியுதில்லை.
    நான் நினைக்கிறேன் அத்தனை கனதி - லோட் உள்ளது போல.
    பின்னே என்ன!...புதுக் கணனியிலேயே கஷ்டப்படுகிறேனே!
    வேதா. இலங்காதிலகம்.

    பதிலளிநீக்கு