பக்கங்கள்

இந்திய குடிமைப் பணித்தேர்வு - தமிழ் - 2 - (UPSC EXAM TAMIL)

புதன், 30 நவம்பர், 2011

உயிரற்றுப் போன உயிர்கள்!

சில 
நடத்துநர்களின் பார்வையில்
மனிதர்கள் யாவரும்
பயணச்சீட்டுகளாகவே தெரிகின்றனர்!

சில 
ஓட்டுநர்களின் பார்வையில்
விபத்துக்குள்ளாகும் உயிர்கள்
தம் சாலைவிதி மீறலின்
ஒறுத்தல் கட்டணமாகவே புலப்படுகின்றனர்!

சில 
அரசியல்வாதிகளின் பார்வையில்
வாக்காளர்கள் யாவரும்
சிந்திக்காமல் ஓட்டுப்போடும் 
இயந்திரங்களாகவே காட்சியளிக்கின்றனர்!

சில 
மருத்துவர்களின் பார்வையில் 
நோயாளிகள் யாவரும் 
தம் மருத்துவமனைக்கு நிதியுதவி செய்யவந்த 
வங்கிகளாகவே தெரிகின்றனர்!

சில 
ஆசிரியர்களின் பார்வையில்
மாணவர்கள் யாவரும்
தேர்ச்சி விழுக்காடுகளாகவே 
பதிவுசெய்யப்படுகிறார்கள்!

சில 
மாணவர்களின் பார்வையில்
ஆசிரியர்கள் யாவரும்
பாடம் கற்பிக்கும்
 இயந்திரங்களாகவே உணரப்படுகின்றனர்!

சில 
செய்திவாசிப்பாளரின் பார்வையில்
பலியான உயிர்கள் 
எதுகை மோனையோடு சொல்லப்படும் 
எண்ணிக்கையாகவே உள்ளனர்!

மனிதர்கள் பார்வையில்..
உயிர் உள்ளவையெல்லாம்
உயிரற்றுப் போகின்றன

உயிரற்ற பணம் மட்டும்  
உயிராக மதிக்கப்படுகிறது!


தொடர்புடைய இடுகைகள்

24 கருத்துகள்:

  1. வேகமாய் ஓட பணம் தேவை படுகிறது என்ற தவறான எண்ணம் இங்கு உள்ளது.. பணம் நம் ஓட்ட வேகத்துக்கு தடை...

    பதிலளிநீக்கு
  2. பார்வைகள் பலவிதம்.
    ஆனால் பார்க்கப்படும் நோக்கு மாற வேண்டும்.

    பதிலளிநீக்கு
  3. படங்களும் சொல்லப் பட்ட கருத்துக்களும் பொருத்தமாக
    இருக்கின்றன!

    புலவர் சா இராமாநுசம்

    பதிலளிநீக்கு
  4. பணத்தை பற்றிய தங்களின் பார்வை அற்புதம்.

    பதிலளிநீக்கு
  5. எல்லோரும் தாங்கள் செய்யும் பணியில் ஈடுபாடு இல்லாததால், அது ஒரு சுமையாக தெரிகிறது. வேளையாக எண்ணும்போது மனம் தானாகவே ஒருவித சலிப்பை வெளிப்படுதும் அதுவே அவர்கள் அளுத்துக்கொள்ள காரணம்.
    முதலில் தங்கள் வேளையை நேசிக்கவேண்டும்.

    பணத்தை சேர்க்க சேர்க்க அவர்களுடைய தேவைகளும் நீண்டுகொண்டே போகும் என்பதை உணராதவரை பணத்தை சேர்க்கும் குணம் அவர்களை விட்டு விளகாது.

    பதிலளிநீக்கு
  6. உயிரற்ற பணம் மட்டும்
    உயிராக மதிக்கப்படுகிறது!// உண்மை..

    இதுதான் உலகம், இதுதான் வாழ்க்கை..

    பதிலளிநீக்கு
  7. அமர்க்களமான கருத்துகளைச் சொன்ன விதம் அருமை சார், கடைசி வரி நெத்தியடியாக மனதில் பதிந்தது.

    பதிலளிநீக்கு
  8. வாழ்க்கைக்குப் பணம் தேவை.வாழ்க்கையே பணமாகும்போதுதான் இப்படியான பிரச்சனைகள் வருகிறது !

    பதிலளிநீக்கு
  9. அத்தனை கருத்துக்களும் நெத்தியடிப் பதில்கள்
    முனைவரே...

    பதிலளிநீக்கு
  10. ஆதங்கத்தையும் அழகாகச் சொல்லத் தங்களால்தான் இயலும். பகிரப்பட்ட யாவுமே எவராலும் மறுக்க முடியாத அன்றாட வாழ்வியல் நிகழ்வுகள்.

    பதிலளிநீக்கு
  11. உண்மை, மனிதன் இயந்திரமாகிவிட்டான்.

    பதிலளிநீக்கு
  12. @கீதாமகிழ்ச்சி கீதா..

    தங்கள் இரசிப்புத் தன்மை என் கருத்துக்களுக்கு மேலும் மதிப்பளிப்பதாக இருக்கிறது என்பதுதான் உண்மை..

    பதிலளிநீக்கு
  13. "உயிரற்ற பணம் மட்டும்
    உயிராக மதிக்கப்படுகிறது!"
    அருமையான் வரிகள் Sir!
    இதே கருத்தை வைத்து தான் ஒரு பதிவு போட்டுள்ளேன்.
    நம்ம தளத்தில்:
    "மாயா... மாயா... எல்லாம்... சாயா... சாயா..."

    பதிலளிநீக்கு