வேர்களைத்தேடி தளத்திற்குத் தங்களை அன்புடன் வரவேற்கிறேன்... இத்தளத்தில் சங்க இலக்கியம், கணினித்தமிழ் சார்ந்து எனது அனுபவங்களைப் பகிர்ந்து வருகிறேன். 13 ஆண்டுகளில் 1500க்கும் மேற்பட்ட பதிவுகளை வழங்கியுள்ளேன். தற்போது இந்தியக் குடிமைப் பணித்தேர்வுக்கான விருப்பப் பாடம் தமிழுக்குரிய விளக்கங்களைத் தொடர்ந்து வழங்கி வருகிறேன். தங்கள் மேலான வருகைக்கு நன்றிகளைத் தெரிவித்துக்கொள்கிறேன்.

செவ்வாய், 11 அக்டோபர், 2011

எப்படியெல்லாம் இடம்பிடிக்கறாங்கப்பா!!



மக்கள் தொகைப் பெருக்கத்தில் நாம் நம் தேவைகளை நிறைவு செய்துகொள்வதில் இடம்பிடித்தல் தவிர்க்கமுடியாததாக இருக்கிறது.

எங்கும் வரிசை எதற்கும் வரிசை..

இணையத்தில் சென்று பயனச்சீட்டு முன்பதிவு செய்யலாம் என்றால் அங்கும் வரிசை.. நமக்கு முன் ஆயிரம் பேர் ஆறு மாதத்துக்கு முன்பே பதிவு செய்து காத்திருக்கின்றனர்..

தமிழகத்தின் தனிச்சிறப்புகளுள் போக்குவரத்து வசதி குறிப்பிடத்தக்கது.
பேருந்திலோ தொடர்வண்டியிலோ விழாக்காலங்களில் முன்பதிவு  செய்யாமல் சென்று வருவோர் மட்டுமே போக்குவரத்துத் துறை அமைச்சராகத் தகுதியுடையவர் என்ற சட்டம் இயற்றவேண்டும். அப்போதுதான் மக்கள் எவ்வளவு வசதியாக வாழ்கிறார்கள் என்பது ஆட்சியாளர்களுக்குப் புரியும்.

எப்படியெல்லாம் இடம்பிடிக்கறாங்கப்பா!!
கைக்குட்டை
துண்டு
சில நேரம் குழந்தை!

கைபை
தண்ணீர் பாட்டில்
சில நேரம் செருப்பு!!
எதுவும் இடம்பிடிக்கும் பொருளாகிவிடுகிறது.

வண்டி வரும் போதே காத்திருப்போர் இடம்பிடிக்க ஆரம்பித்துவிடுவார்கள். இறங்கவும் விடமாட்டார்கள்!
ஏறவும் விடமாட்டார்கள்!
இந்த இடைவெளியில் சிலர்
காலதர் (சன்னல்) வழியே
இடம்பிடித்துவிடுவர்.
சிலர் காலதர் வழியே
ஏறிக்கூடச் சென்றுவிடுவர்!
இடம் கிடைத்த ஆனந்தத்தில் சிலர்
குறட்டை விடுவர்!
இடம் கிடைக்காத வெறுப்பில்
சிலர் பொதுவுடைமை பேசுவர்!
இடம்பிடிப்பது ஒரு கலை!

அளவான உடல் என்பதால் எனக்கு எங்கு சென்றாலும் இடம் கிடைத்துவிடும். இப்படித்தான் ஒருநாள் சென்னையிலிருந்து சேலம் வருவதற்காக ஒரு பேருந்தில் ஏறினேன். பேருந்து நிறைந்திருந்தது. ஒரே ஒரு இடம் தான் காலியாக இருந்தது. மூவர் இருக்கும் இடத்தில் இருவர் அமர்ந்திருந்தனர். நடுவில் ஒரு பை இருந்தது. வருவோரிடமெல்லாம் உறவினர் ஒருவர் வந்துவிடுவார் என்று கூறிக்கொண்டிருந்தார்கள். நான் போனவுடன் வாங்க வாங்க வாங்க என்று அமரச் சொன்னார்கள். இவர்கள் யாருன்னே தெரியாதே..
நமக்கு எப்படி இவங்க இடம் போட்டுவைச்சிருக்காங்க என்ற குழப்பத்துடனேயே நானும் சென்று அவர்கள் நடுவே அமர்ந்தேன்.. பிறகு அமைதியாக அவர்கள் சொன்னார்கள். தம்பி.. நாங்க இரண்டுபேரும் குண்டான ஆளுங்க நீங்க அளவான ஆளா இருக்கீங்க.. உங்களைத் தவிர வேறு யாரும் அமர்ந்தா மூவருக்கு இடம் பற்றாது. அதனால் தான் என்றனர்..
உடம்பை அளவா வைச்சிக்கிறதால இப்படியெல்லாம் கூட வசதியிருக்கான்னு நினைச்சுட்டே சிரிச்சிட்டு வந்தேன்..
அப்புறமென்ன இடம் கிடைத்தபின் இப்படி வேடிக்கை பார்ப்பதுதான் இதை விட சிறந்த பொழுதுபோக்கு வேறு என்ன இருக்கிறது?

தொடர்புடைய இடுகை.

56 கருத்துகள்:

  1. ஹா ஹா ஒல்லியாக இருப்பதும் பல இடங்களில் வசதி தான்... மறைமுகமாக மக்கள் தொகை பேருக்கத்தை சுட்டிக்காட்டியுள்ளீர்கள்... பகிர்வுக்கு நன்றி முனைவரே!

    பதிலளிநீக்கு
  2. உண்மையான அனுபவங்கள்! எனக்கும் இது போன்று நிகழ்ந்துள்ளது! உங்களுக்கு இருக்கை கிடைத்தது! எனக்கு கிடைக்கவில்லை!!

    பதிலளிநீக்கு
  3. உண்மைதான்... குழந்தைகளை தூக்கி சன்னல் வழியாக சீட்டில் போட்டு இடம் பிடிப்போரைப் பார்த்திருக்கிறேன். கர்ச்சீப் போட்டு வைத்தால் அதன் மீது துண்டை போட்டுவிட்டு சண்டை போடுபவர்களையும் பார்த்திருக்கிறேன். ஆள் வருது என்று சொல்லி உங்களை அமர வைத்தது போல் எனக்கும் அனுபவம் இருக்கிறது முனைவரே.

    பதிலளிநீக்கு
  4. அடடே!உடம்பு குறைவா இருந்தா பேருந்துல இடம் கிடைக்குதா?
    நல்லாருக்கே!

    பதிலளிநீக்கு
  5. பேருந்திலோ தொடர்வண்டியிலோ விழாக்காலங்களில் முன்பதிவு செய்யாமல் சென்று வருவோர் மட்டுமே போக்குவரத்துத் துறை அமைச்சராகத் தகுதியுடையவர் என்ற சட்டம் இயற்றவேண்டும்.
    //

    இடம் காலியாகவே இருக்கும்.யாரும் உக்கார மாட்டாங்க!

    பதிலளிநீக்கு
  6. உங்களுக்கு இடம் பிடிக்க ஆளெல்லாம் வச்சிருக்கீங்களா?

    பதிலளிநீக்கு
  7. அன்புநிறை முனைவரே...
    கடந்த ஒருவாரம் கொஞ்சம் வேலைப்பளு காரணமாக வரமுடியவில்லை..
    பொறுத்தருள்க...

    காலதர் என்ற புதிய சொல்லை அறிமுகபடுத்தி இருக்கிறீர்கள்..
    நன்றி..
    குழந்தையையை சாளரம் வழியாக தூக்கி போட்டு இடம்பிடிப்பார், அந்த குழந்தை அழுதுகொண்டே அப்பாவை தேடி இறங்கி வரும். இவர் உள்ள போவதற்குள் குழந்தை வெளியே வந்துவிடும்...
    இன்னும் இந்த மாதிரி கூத்து எல்லாம் முடிந்த பாடில்லை....

    பேருந்தில் இருக்கும் சிக்கல்களை அழகாய் நகைச்சுவையுடன் சொல்லியிருகீங்க முனைவரே...

    பதிலளிநீக்கு
  8. அப்போ 3 வேலை சாப்பாட்டுல இரண்டு வேலை சாப்பிட கூடாது அப்போதான் உடம்பு குறையும்

    பதிலளிநீக்கு
  9. வேடிக்கை மனிதர்கள். மிக அழகாக விவரித்துள்ளீர்கள்.

    பதிலளிநீக்கு
  10. நல்ல படைப்பு .மிக்க நன்றி படைபிற்கு .......

    பதிலளிநீக்கு
  11. இந்தக் காட்சிகள் எல்லாம் இனி இருக்காது. படித்தவர் எல்லாம் இன்டர்நெட்டில் முன்பதிவு செய்துவிட, ரிசர்வ் செய்யாமல் வரும் அப்பாவிகள் அவதிப்படுவதுதான் நடக்கும் என நினைக்கிறேன்....

    பதிலளிநீக்கு
  12. இது உண்மை தான்
    எல்லா இடங்களிலும் இது நடக்க தான் செய்கிறது
    ஆட்சியாளர்கள் சிந்திக்க வேண்டும்

    பதிலளிநீக்கு
  13. சில நேரம் செருப்பு!!
    எதுவும் இடம்பிடிக்கும் பொருளாகிவிடுகிறது.// இதுதான் கொடுமை..

    பதிலளிநீக்கு
  14. அருமையான பதிவு.
    நிஜம் தான்; இடம் பிடிப்பதில் தான் இப்போது போட்டியே.
    வாழ்த்துக்கள் ஐயா.
    http://rathnavel-natarajan.blogspot.com/2011/10/blog-post.html

    பதிலளிநீக்கு
  15. நடைமுறைப் பதிவு வாழ்த்துக்கள்...!

    பதிலளிநீக்கு
  16. பேருந்திலோ தொடர்வண்டியிலோ விழாக்காலங்களில் முன்பதிவு செய்யாமல் சென்று வருவோர் மட்டுமே போக்குவரத்துத் துறை அமைச்சராகத் தகுதியுடையவர் என்ற சட்டம் இயற்றவேண்டும். அப்போதுதான் மக்கள் எவ்வளவு வசதியாக வாழ்கிறார்கள் என்பது ஆட்சியாளர்களுக்குப் புரியும்.. . உண்மை சகா, தொலைதூர பயணம் விழாக்காலங்களில் சிரமம் தான்.........

    பதிலளிநீக்கு
  17. //நினைச்சுட்டே சிரிச்சிட்டு வந்தேன்..//

    எனக்கும் சிரிப்பு வந்துவிட்டது...

    ரைட்டு ...

    இன்று என் வலையில்:
    "விகடனும் நானும்!"

    பதிலளிநீக்கு
  18. ”காலதர்” என்ற சொல்லைப் பார்த்தவுடன் பள்ளிநாட்களுக்கு நினைவலைகள் சென்றுவிட்டது. இளங்கோவடிகள் சிலப்பதிகாரத்தில் காற்று வருகிற வழி என்று குறிப்பிடும் இடத்தில் ”கால்தர்” என்கிறார்.

    ரொம்பநாட்கள் கழித்து அந்த சொல்லை தங்கள் பதிவில் பார்த்தவுடன் ஒரு மகிழ்ச்சி. நன்றி.

    பதிலளிநீக்கு
  19. தென்னகம் எவ்வளவோ பரவாயில்லை நண்பரே. வட மாநிலங்களிலோ மிகவும் கொடுமை. பேருந்தின் கூரையின் மேல் பயணிப்பவர்கள் அங்கு அதிகம்.

    பதிலளிநீக்கு
  20. காமெடியா இருக்கு... ஆனா மக்களின் இடம் பிடிக்கும் போக்கை நன்றாக சொல்லி இருக்கிறீர்கள்

    பதிலளிநீக்கு
  21. ((இறங்கவும் விடமாட்டார்கள்!
    ஏறவும் விடமாட்டார்கள)) mmmmm

    பதிலளிநீக்கு
  22. ஒல்லியாக இருப்பதிலும் சில வசதிகள் இருக்கத்தான் செய்கிறது. பேருந்தில் இடம் பிடிக்க என்ன வேண்டுமானாலும் செய்கிறார்கள்... :))))

    பதிலளிநீக்கு
  23. @மகேந்திரன் தாங்கள் சொன்னது இன்னும் நகைச்சுவையாக உள்ளது..

    பதிலளிநீக்கு
  24. @வைரை சதிஷ் உணவே மருந்து..

    மருந்தே உணவு..

    வருகைக்கு நன்றி சதீஷ்

    பதிலளிநீக்கு
  25. @கவிப்ரியன் உண்மைதான் நண்பரே..

    சிலநேரம் இதுபோன்ற காட்சிகள் மின்னஞ்சலில் வருவதுண்டு..

    பதிலளிநீக்கு
  26. ஒரு படத்தில் ஒருவன் பாம்பை விட்டு இடம் பிடிப்பதாக நகைச்சுவயாக காட்டுவார்கள். அதுவும் ஒரு நாள் நடக்கலாம்

    பதிலளிநீக்கு
  27. @Rajan தங்கள் வருகைக்கும் பகிர்வுக்கும் நன்றி நண்பா.

    பதிலளிநீக்கு
  28. பஸ் நிறுத்தத்திற்கு வரும் முன்பே சாமர்த்தியமா கைகுட்டைய வச்சு இடம் பிடிச்சுடுறாங்க. இப்பலாம் இடம் கிடைப்பது என்பது அதிஷ்ட்டத்தின் அடிப்படையிலோ என எண்ண தோன்றுகிறது

    பதிலளிநீக்கு
  29. வருகைக்கும் மதிப்பீட்டிற்கும் நன்றி ஆமினா..

    பதிலளிநீக்கு