வேர்களைத்தேடி தளத்திற்குத் தங்களை அன்புடன் வரவேற்கிறேன்... இத்தளத்தில் சங்க இலக்கியம், கணினித்தமிழ் சார்ந்து எனது அனுபவங்களைப் பகிர்ந்து வருகிறேன். 13 ஆண்டுகளில் 1500க்கும் மேற்பட்ட பதிவுகளை வழங்கியுள்ளேன். தற்போது இந்தியக் குடிமைப் பணித்தேர்வுக்கான விருப்பப் பாடம் தமிழுக்குரிய விளக்கங்களைத் தொடர்ந்து வழங்கி வருகிறேன். தங்கள் மேலான வருகைக்கு நன்றிகளைத் தெரிவித்துக்கொள்கிறேன்.

ஞாயிறு, 9 அக்டோபர், 2011

வலைப்பதிவுகளின் காவலன்!


ஒவ்வொரு வலைப்பதிவர்களும் தம் வலைப்பதிவைக் காப்பாற்ற எவ்வளவோ போராடிப் பார்க்கிறார்கள். தாக்குநர்கள் (ஹேக்கர்ஸ்) மிக எளிதாக ஒவ்வொரு வலைப்பதிவையும் தாக்கி அழித்துத் தம் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்துவிடுகிறார்கள்.

திருடாதே பாப்பா திருடாதே...
என்றொரு பழைய திரைப்படப் பாடல் இன்றைய வலைப்பதிவு ஊடகத்துக்குப் பெரிதும் பொருந்துவதாகவே உள்ளது..

மூளை வறட்சி ஏற்பட்டவர்களும்
மனக் குறைபாடு உள்ளவர்களும்
இயலாமை மிகுந்தவர்களும்
தம் திறமையை உணராதவர்களும்தான் அடுத்தவர்கள் எழுத்துக்களைத் தம் எழுத்து எனச் சொந்தம் கொண்டாடிக் கொள்கிறார்கள்.. இவர்களைப் பார்த்து கோபம் வருவதைவிட அவர்களின் நிலைகண்டு வருத்தம் தான் வருகிறது..
என்னோட பதிவைத் திருடிட்டாங்க!
ஓட்டு வாங்கிட்டங்க!
பிரபலமாகிட்டாங்க என்ற வலைப்பதிவர் குரல் எங்கும் கேட்கிறது.


இதற்கு என்னதான் வழி..

  1. பணப்பெட்டிக்குத் திறவுகோல் எவ்வளவு தேவையானதோ அதுபோல வலைப்பதிவுக்கு பயனர் முகவரியும், கடவுச்சொல்லும் அடிப்படைத் தேவை என்பதை உணரவேண்டும்.
  2. வலைப்பதிவின் எச்டிஎம்எல் கோப்பை மாதத்திற்கு ஒரு முறை பதிவிறக்கிப் பாதுகாக்க வேண்டும்.
  3. ப்ளாக்கர் பேக்கப் மென்பொருள் வாயிலாக நாம் இதுவரை எழுதிய கட்டுரைகளை சேமித்து வைக்கலாம்.
  4. முடிந்த வரை நம் கணக்கை நம் சொந்த கணினியில் கையாளலாம். இயலாத சூழலில் வெளியே பிற கணினிகளில் கையாளும்போது, நம் கடவுச் சொல் எங்கும் சேமிக்கப்படுகிறதா என்பதில் கவனமாக இருத்தல் வேண்டும்.
  5. பிற கணினிகளில் உலவும் போது முடிந்தவரை ப்ரைவேட் ப்ரௌசிங்க என்னும் முறையில் கையாள்வது சிறந்தது.
  6. மேலும் வெளி கணினிகளில் உலவி முடித்தபின் வரலாற்றையும், குக்கிகளையும் சுத்தம் செய்துவிடவேண்டும்.

பதிவர்களின் தற்காப்பு முயற்சிகள்.

வலைப்பதிவர்தம் சிந்தனைகள் திருடப்படுவதில் இருந்து தம் கட்டுரைகளைப் பாதுகாத்துக்கொள்ள பல வழிகளைக் கையாள்கிறார்கள்.

1.      சுட்டியின் (மௌசின்) வலது புறத்தைச் செயலிழக்கச் செய்தல்.
2.      சுட்டியின் இடது புறத்தைச் செயலிழக்கச் செய்தல்.
3.      காப்புரிமை பெறும் தளங்களில் சென்று கணக்கை உருவாக்கிக் கொள்தல்.
4.      தம் கருத்துக்கள் எங்கெங்கு திருடப்பட்டுள்ளன என்பதை அறிந்து கொள்ளும் இணையதளங்களின் துணையை நாடுதல்
5.      ஐயா சாமி என்னோட பதிவை எடுத்தா என் பெயரை சொல்லி வெளியிடலாமே என வேறு வழியில்லாமல் திருடர்களிடமே கேட்டல்.
6.      என்னோட பதிவைத் திருடினா இரத்தம் கக்கி சாவ! என பயமுறுத்துதல்.
  
இப்படி பல வழிமுறைகள் வழக்கில் இருந்தாலும்.

பல இணையதளங்களும், சில வலைப்பதிவுகளும் அதில் உள்ள ஒரு எழுத்துக்களைக்கூட நகல் எடுக்க முடியாதபடி உள்ளே ஏதோ தொழில்நுட்ப வசதிகளைக் கையாண்டிருப்பார்கள்..

நான் சில ஆண்டுகளுக்கு முன்னர் இணையத்தில் இதுதொடர்பாக தேடியபோது கிடைத்த தொழில்நுட்ப வசதி இது
எங்கு கிடைத்தது என நினைவில் இல்லை..

அப்படியொரு வசதியைப் பல வலைப்பதிவர்களும் அறியவேண்டும் என்ற நோக்கில் இன்று உங்களோடு பகிர்ந்து கொள்கிறேன்..

அன்பு நண்பர்களே உங்கள் வலைப்பதிவின் கணக்கில் உள் நுழைந்து..

வடிவமைப்பு (Design) பகுதிக்குச் செல்லுங்கள். அடுத்து,

எச்டிஎம்எல்ஐ திருத்து (EDIT HTML) என்னும் பகுதிக்குச் செல்லுங்கள். அதில்

டிக் Expand Widget Templates

அடுத்து

CTL F அழுத்தினால்

தேடல் பெட்டி வரும் அதில் <head> என்று தேடவும் பின், கீழ்வரும் நிரலை நகல் எடுத்து அதன் கீழே ஒட்டவும்.



<!-- Disable Copy and Paste-->
<script language='JavaScript1.2'>
function disableselect(e){
return false
}
function reEnable(){
return true
}
document.onselectstart=new Function ("return false")
if (window.sidebar){
document.onmousedown=disableselect
document.onclick=reEnable
}
</script>


save template பட்டனை அழுத்தவும். அவ்வளவு தான் இனிமேல் உங்கள் எழுத்துக்களை யாரும் திருடமுடியாது. ஆம் இந்த நிரல்கள் உங்கள் வலைப்பதிவின் சிறந்த காவலனாக செயல்படும் என்பதில் எவ்வித ஐயமும் இல்லை.


(அன்பு நண்பர்களே இந்த நிரல்கள் ஏனோ இடுகையில் உள்ளீடு செய்தும் வெளியே தோன்றவில்லை. அதனால் படமாக்கி வெளியிட்டிருக்கிறேன். நிரல்களை காப்பி செய்வது போல உள்ளீடு செய்யும் நுட்பம் அறிந்தவர்கள் சொன்னால் பெரிதும் மகிழ்வேன்)  


அன்பு நண்பர் அப்துல் பசீத் அவர்கள் எனது இந்த தொழில்நுட்ப 


வினாவுக்கு மின்னஞ்சல் வழியே தெளிவான விளக்கம் கொடுத்தார்.


அவர் பரிந்துரை செய்த இந்த முகவரி பதிவர்களுக்குப் பெரிதும் 


பயன்படுவதாக இருக்கும்.


அன்பருக்கு என் மனம் நிறைந்த நன்றிகளைத் தெரிவித்துக்கொள்கிறேன்.

47 கருத்துகள்:

  1. மூளை வறட்சி ஏற்பட்டவர்களும்
    மனக் குறைபாடு உள்ளவர்களும்
    இயலாமை மிகுந்தவர்களும்
    தம் திறமையை உணராதவர்களும்தான் அடுத்தவர்கள் எழுத்துக்களைத் தம் எழுத்து எனச் சொந்தம் கொண்டாடிக் கொள்கிறார்கள்.. இவர்களைப் பார்த்து கோபம் வருவதைவிட அவர்களின் நிலைகண்டு வருத்தம் தான் //


    அருமை பயனுள்ள தொழில் நுட்ப தகவல் நண்பா ...


    நன்றி ..

    பதிலளிநீக்கு
  2. நல்ல தகவல்....

    “திருடராய்ப் பார்த்து திருந்தாவிட்டால் திருட்டை ஒழிக்க முடியாது” என்ற வரிகளும் நினைவுக்கு வருகிறது..... :)

    பதிலளிநீக்கு
  3. பயனுள்ள தகவல் திரு.முனைவர் அவர்களே..

    பகிர்ந்தமைக்கு மிக்க நன்றி

    நன்றியுடன்
    சம்பத்குமார்

    பதிலளிநீக்கு
  4. என்னை பொறுத்தவரை, என் எழுத்துக்கள் எத்தனை பேர் நகல் எடுத்து பெயர் வாங்கினாலும் நன்மையே... அறிவு விலை மதிக்க முடியாதது, ஆகையால் அதை இலவசமாய் குடுப்பது என் கொள்கை...

    பதிலளிநீக்கு
  5. இதுவரை எனக்கு தெரியாத தகவல். மிக்க நன்றி!-
    HVL
    http://rithikadarshini.blogspot.com/

    பதிலளிநீக்கு
  6. பயனுள்ள தகவல்கள் நண்பரே! இது ஓரளவு நமது பதிவுகளை பாதுகாக்கும்.

    பதிலளிநீக்கு
  7. மிக பயனுள்ள தகவல் ஐயா,பகிர்வுக்கு நன்றி.

    பதிலளிநீக்கு
  8. வணக்கம்!உண்மையில் வலைப்பதிவாளரகள் எழுத்துக்கு என்ன பாதுகாப்பு என்றே தெரியவில்லை. தங்களது இந்த கட்டுரை நல்ல தகவல்.நன்றி.

    பதிலளிநீக்கு
  9. உபயோகமான தகவல் அன்பரே நன்றி

    பதிலளிநீக்கு
  10. இன்ட்லியில் எவ்வாறு ஓட்டளிப்பது என்பது தெரிந்தால் கூறுங்கள் அன்பரே

    பதிலளிநீக்கு
  11. நல்ல பயனுள்ள பதிவு நண்பரே

    பதிலளிநீக்கு
  12. வலையின் பாதுகாப்பு மிக அவசியம்..

    அத்றக்காக தங்களின் கருத்து மற்றும் அறிவுறைகள் அழகு..
    நன்றிகள் பல...

    பதிலளிநீக்கு
  13. பதிவுகளை இமேஜாக மாற்றி வெளியிட்டால் கொஞ்சம் காப்பி எடுப்பதில் சிரமம் இருக்கும் அதற்கும் கூட OCR இருக்கிறது எனக்கு தெரிந்தவரையில் எழுத்துக்களை காப்பி எடுக்க முடியாத அளவிற்கு இன்னும் வசதிகள் இல்லை என்றே நினைக்கிறேன், எல்லாவற்றிற்கும் மாற்று தொழில்நுட்பம் விரவி கிடக்கிறது

    பதிலளிநீக்கு
  14. காபி பேஸ்ட் மவுசில் செய்ய முடியாதே தவிர ctrl+c /ctrl+v முறையில் முடியும்.

    பதிலளிநீக்கு
  15. நாம் எழுதுவதே யாருக்காவது பயன்பட வேண்டும் என்பதற்காக தானே . காப்பி அடித்தாவது எழுதட்டுமே.

    பதிலளிநீக்கு
  16. எழுத்துத் திருடர்களும் பதிவர்களா இருக்கிறார்களா
    பலநாள் திருட் ஒருநாள் அகப்படுவான்
    நல்ல பதிவு முனைவரே!

    புலவர் சா இராமாநுசம்

    பதிலளிநீக்கு
  17. இந்த வழியில் right cilck, CTRL+C CTRL+V யிலும் காப்பி எடுக்கமுடியாது. சாதாரண பயனரால் திருடமுடியாது. பகிர்வுக்கு நன்றி

    நீங்கள் நிரல்களை தளத்தில் பதிய வேண்டுமானால் < என்ற குறியீடை &lt; என்றும் > என்ற குறியீடை &gt; என்றும் கொடுக்கவும்.

    சிலருக்கு இந்த பூட்டுப்பட்டறை பயன்படலாம்

    பதிலளிநீக்கு
  18. மிக நல்ல ஆலோசனைகள் மிக்க நன்றீங்க..

    பதிலளிநீக்கு
  19. நண்பரே! தங்களின் gunathamizh[at]gmail.com முகவரிக்கு மின்னஞ்சல் அனுப்பியுள்ளேன். பார்க்கவும்.

    பதிலளிநீக்கு
  20. @வெங்கட் நாகராஜ் உண்மைதான் வெங்கட் எக்காலத்துக்கும் பொருந்தும் வரிகள் இவை..

    பதிலளிநீக்கு
  21. @Abdul Basith தங்கள் மின்னஞ்சல் வழி விளக்கத்துக்கு நன்றி நண்பரே..

    பதிலளிநீக்கு
  22. @சி.பிரேம் குமார் இன்லியில் ஓட்டளிக்கும் முறையில் கொண்டுவந்த மாற்றத்தால் இன்னும் தான் ஓட்டளிப்பதில் குழப்பம் இருக்கிறது பிரேம்.

    பதிலளிநீக்கு
  23. @புலவர் சா இராமாநுசம் உண்மைதான் புலவரே..

    கெட்டிக்காரன் குட்டு 8 நாளைக்குள் வெளிப்படும்.

    பதிலளிநீக்கு