வேர்களைத்தேடி......... |
நச்சுநிரல் சோதனை
நம் கணினிக்கு மட்டும் போதுமா??
நம் எழுத்துக்களுக்கு வேண்டாமா??
நம் எழுத்துக்களையும் ஆய்வு செய்வோம்..
மூங்கில்கள் எல்லாம்
மயக்கும் குழலாவதில்லை!
மழைத்துளிகள் எல்லாம்
அழகிய முத்தாவதில்லை!
தீக்குச்சிகள் எல்லாம்
தீபஒளி தருவதில்லை!
ஆயிரம் ஆயிரம் உண்டு இங்கு
அறிவாளிகள்! ஆனாலும்
அவர்களுக்கெல்லாம் வாய்க்கவில்லை
வலையுலகில் தமிழ் எழுதும் வாய்ப்பு!!
இவ்வரிய வாய்ப்பை
நாம் எப்படிப் பயன்படுத்துகிறோம்?
நம் எழுத்துக்களை உற்று நோக்குங்கள்..
நம் எழுத்துக்கள்...
புல்லாங்குழலா?
முத்தா?
தீப ஒளியா?
அந்தக் காலத்தில் நந்திவர்ம பல்லவன்
எழுத்துக்களில் நச்சுவைத்து
அறம்பாடிக் கொல்லப்பட்டானாம்..
நம் எழுத்துக்களில் நச்சுநிரல் கலந்துள்ளதா
என்று ஆய்வு செய்வோமா??
நச்சு எழுத்துக்கள்...
எழுத்துப் பிழை, பிறமொழிக் கலப்பு, தவறான சிந்தனை, தவறான வழிகாட்டல், தன்னம்பிக்கையற்ற வார்த்தைகள்....
போன்ற நச்சு நிரல்கள் நம் எழுத்துக்களில் கலந்திருக்கிறதா?
அதனாலென்ன திருத்திக்கொள்வோம்..
அதனாலென்ன திருத்திக்கொள்வோம்..
தமிழ் உறவுகளே..
நம் விரல்களுக்குத் தமிழ் மை ஊற்றுவோம்..
தட்டச்சுப்பலகைகள் வழியே
தமிழ் மொழிக்கு வளம் சேர்ப்போம்..
வேறொருவர் கண்டுபிடிப்புக்கெல்லாம்
நாம் தமிழில் பெயர் கண்டு
இயம்பியது போதும்..
இனிமேலாவது
தமிழனின் கண்டுபிடிப்புக்கு
இன்னொருவர் பெயர் வைக்கும்
நிலையை உருவாக்குவோம்..
நம் துறை சார்ந்த
சிந்தனைகளை
படைப்பாக்கத் திறனை
கண்டுபிடிப்புகளை
அனுபவங்களை
இயன்றவரை இனியதமிழில்
பதிவு செய்வோம்!
கலைச் சொல்லாக்கம்.
virus - நச்சுநிரல்
Antivirus - எதிர்ப்பு நச்சுநிரல்
நல்ல பகிர்வு...
பதிலளிநீக்கு//நம் சிந்தனைகளை
பதிலளிநீக்குபடைப்பாக்கத் திறனை
கண்டுபிடிப்புகளை
அனுபவங்களை
இயன்றவரை இனியதமிழில்
பதிவு செய்வோம்!//
அப்படியே
உணர்வூட்டும் பதிவு.வாழ்த்துக்கள்.
பதிலளிநீக்குஉணர்வூட்டும் பதிவு.வாழ்த்துக்கள்.
பதிலளிநீக்குஅப்படியே செவோம் நண்பரே
பதிலளிநீக்குநம்மால் முடிந்தவரை இனிய தமிழில்
பதிலளிநீக்குபதிவு செய்ய முயற்சிப்போம்.
நன்றி!நண்பரே!
மிக நன்று !!
பதிலளிநீக்குநம் தமிழில் அனைத்துக்கும் பெயர் உண்டு என்று நினைக்கிறேன்...-ஆனால் நாம் எல்லாத்துக்கும் பெயர்களை கண்டுபிடிக்க தயங்குகிறோம்... காரணம் காலம் போகும் வேகத்துக்கு பலரால் தேடமுயற்ச்சிப்பதில்லை...
பதிலளிநீக்குஅணுவை பற்றிய சிந்தனையே இல்லாத காலத்தில் அணுவை நூறாக பிளந்து..,அந்த ஒரு பகுதிக்கு 'கோண்' என்று பெயர் வைத்திருக்கிறார்கள் நம் முன்னோர்கள்...ராமாயணத்தில் குறிப்பு உள்ளது...
(எப்போதோ படித்த ஞாபகம்..தவறிருந்தால் குற்ப்பிடுங்கள்.)
நல்ல முயற்ச்சி... நண்பரே..
பதிலளிநீக்குவாழ்த்துகள்...
//இனிமேலாவது
பதிலளிநீக்குதமிழனின் கண்டுபிடிப்புக்கு
இன்னொருவர் பெயர் வைக்கும்
நிலையை உருவாக்குவோம்..//
நிச்சயமாக முயல்வோம்!!
எழுத்துக்களில் நச்சு இல்லாமல் எழுத பழகுவோம்..
பதிலளிநீக்கு//நச்சு நிரல்கள் நம் எழுத்துக்களில் கலந்திருக்கிறதா?
பதிலளிநீக்குஅதனாலென்ன திருத்திக்கொள்வோம்..//
ஆம திருத்திக்கொள்வோம்.
அருமையான பதிவு ஐயா.
சிறப்பான பதிவு.
பதிலளிநீக்குநம் துறை சார்ந்த
பதிலளிநீக்குசிந்தனைகளை
படைப்பாக்கத் திறனை
கண்டுபிடிப்புகளை
அனுபவங்களை
இயன்றவரை இனியதமிழில்
பதிவு செய்வோம்!
சிறப்பான ஆக்கம் மிக்க நன்றி பகிர்வுக்கு ......
தேர்ந்த தமிழ் வார்த்தைகள் அறிந்தேன். நான் அறிந்தவரை, என் எழுத்தில் நச்சுநிரல் இல்லையென்பதில் எனக்குப் பெருமிதமே. அவ்வாறு எனையறியாது கலந்திருப்பின் எதிர்ப்பு நச்சுநிரலை இனிதே வரவேற்கிறேன். காலத்திற்கேற்ற பதிவு. மீண்டும் தங்களுக்கு என் நன்றியும் வாழ்த்துக்களும் முனைவரே.
பதிலளிநீக்கு// எழுத்துப் பிழை, பிறமொழிக் கலப்பு, தவறான சிந்தனை, தவறான வழிகாட்டல், தன்னம்பிக்கையற்ற வார்த்தைகள்....
பதிலளிநீக்குபோன்ற நச்சு நிரல்கள் நம் எழுத்துக்களில் கலந்திருக்கிறதா?
அதனாலென்ன திருத்திக்கொள்வோம்..//
சரியான பகுப்பு ... மாற்றம் தரும் பகிர்வு
நச்சு நிரல் என்று புது வார்த்தையா, சபாஷ் வாத்தியாரே... அதே போல் facebook என்பதற்கு இங்கு மூஞ்சி புத்தகம் என்று கூறுகிறார்கள் அதை இன்னும் அழகாக முகநூல் என்று கூறலாமே...
பதிலளிநீக்குஅருமையான பதிவு...
பதிலளிநீக்கு"வேறொருவர் கண்டுபிடிப்புக்கெல்லாம்
நாம் தமிழில் பெயர் கண்டு
இயம்பியது போதும்..
இனிமேலாவது
தமிழனின் கண்டுபிடிப்புக்கு
இன்னொருவர் பெயர் வைக்கும்
நிலையை உருவாக்குவோம்.."
கண்டிப்பாக முயல்வோம்...
முயன்றால் முடியாதது ஏதுமில்லை...
மாற்றம் தரும் பகிர்வு.
பதிலளிநீக்குநம் விரல்களுக்குத் தமிழ் மை ஊற்றுவோம்..தட்டச்சுப்பலகைகள் வழியே தமிழ் மொழிக்கு வளம் சேர்ப்போம்..
பதிவை திருடினாலும் இனி கவலை இல்லை என்ற பதிவு போட்டுருக்கேன் வந்து பார்க்கவும்
பதிலளிநீக்குhttp://vairaisathish.blogspot.com/2011/10/blog-post_06.html
6 அக்டோபர், 2011 2:44 pm
நல்லது...புதிய வார்த்தைகள் அறிந்தோம் ! தமிழ் சிறக்கட்டும்!!!
பதிலளிநீக்குநல்ல பதிவு! தாய்மொழி குறித்த தன்னுணர்வு இருந்தால்தான் எழுத்துப்பிழை போன்ற நச்சு நிரல்களைத் தவிர்க்க முடியும்.
பதிலளிநீக்குதமிழின், தமிழனின் தன்மானம் காக்கத்துடிக்கும் இடுகை.நன்றி நண்பரே.உமது கனவு பலிக்கட்டும்.
பதிலளிநீக்குகூடுமானவரையில் நச்சுக்களை படைப்புகளில்
பதிலளிநீக்குஒட்டவிடாமல்தான் பார்த்துக் கொள்கிறேன்
நல்ல வழிகாட்டும் பதிவைத் தந்தமைக்கு நன்றி
த.ம 14
//மூங்கில்கள் எல்லாம்
பதிலளிநீக்குமயக்கும் குழலாவதில்லை!
மழைத்துளிகள் எல்லாம்
அழகிய முத்தாவதில்லை!
தீக்குச்சிகள் எல்லாம்
தீபஒளி தருவதில்லை!//
உண்மைதான். நீங்கள் சொன்னபடி
இயன்றவரை இனிய தமிழில்பதிவு
செய்வோம்!
பதிவை சொல்லியிருக்கும் விதமே அடுத்த வரிக்கு ஈர்க்கிறது.. உங்கள் கைப்படுவதாலே என்னவோ தமிழ் மேலும் அழகாய்...விரல்களுக்கு மை ஊற்றுவோம் குணா..
பதிலளிநீக்குநல்ல பதிவு.
பதிலளிநீக்குஇன்று என் தளத்தில் ஒரு பக்திப் பாடல் காத்திருக்கின்றது இதைக் காணத் தவறாதீர்கள் முனைவரே ............
பதிலளிநீக்குநம் எழுத்துக்கள்...
பதிலளிநீக்குபுல்லாங்குழலா?
முத்தா?
தீப ஒளியா?
தன்னைதானே அறிவது அறிவு
தமிழறிந்து தனையும் உணர்வோம்.
@சசிகுமார்நன்றி சசி.
பதிலளிநீக்கு@நண்டு @நொரண்டு -ஈரோடு வருகைக்கு நன்றி நண்டு..
பதிலளிநீக்கு@malgudi மகிழ்ச்சி மால்குடி.
பதிலளிநீக்கு@கோகுல்புரிதலுக்கு நன்றி கோகுல்.
பதிலளிநீக்கு@யூர்கன் க்ருகியர் நன்றி க்ருகியர்.
பதிலளிநீக்கு@ராஜா MVS ஆம் இராஜா அழகாகச் சொன்னீர்கள்..
பதிலளிநீக்கு@ராஜா MVS ஆம் இராஜா அழகாகச் சொன்னீர்கள்..
பதிலளிநீக்கு@குடிமகன் புரிதலுக்கு நன்றி குடிமகன்.
பதிலளிநீக்கு@RAMVIநன்றி இராம்வி.
பதிலளிநீக்கு@சத்ரியன்மகிழ்ச்சி சத்ரியன்.
பதிலளிநீக்கு@அம்பாளடியாள்புரிதலுக்கு நன்றி அம்பாளடியாள்
பதிலளிநீக்கு@கீதாதங்கள் மதிப்பீட்டிற்கு நன்றி கீதா.
பதிலளிநீக்கு@உங்கள் நண்பன்மகிழ்ச்சி நண்பா..
பதிலளிநீக்கு@suryajeevaஇந்த சொல்லாடல் நன்றாகவுள்ளது சூர்யா.
பதிலளிநீக்கு@manidamமகிழ்ச்சி மனிதம்.
பதிலளிநீக்கு@சே.குமார்புரிதலுக்கு நன்றி குமார்.
பதிலளிநீக்கு@சே.குமார்புரிதலுக்கு நன்றி குமார்.
பதிலளிநீக்கு@thendralsaravananமகிழ்ச்சி தென்றல்.
பதிலளிநீக்கு@அ.அப்துல் காதர்அழகாகச் சொன்னீர்கள் அப்துல்..
பதிலளிநீக்கு@அகிலம் தங்கதுரைதன்மானம் தேடி வந்தமைக்கு நன்றிகள் தங்கதுரை.
பதிலளிநீக்கு@Ramaniதங்கள் தொடர் வருகைக்கு நன்றிகள் இரமணி ஐயா.
பதிலளிநீக்கு@வே.நடனசபாபதிபுரிதலுக்கு நன்றி நடனசபாபதி ஐயா..
பதிலளிநீக்கு@தமிழரசிஅதெல்லாம் எதுவுமில்லை தமிழரசி..
பதிலளிநீக்குதமிழுக்கு நான் ஒரு கருவி அவ்வளவுதான்..
@சேகர்மகிழ்ச்சி சேகர்.
பதிலளிநீக்கு@சேகர்மகிழ்ச்சி சேகர்.
பதிலளிநீக்கு@இராஜராஜேஸ்வரிபுரிதலுக்கும் தேடலுக்கும் நன்றி இராஜேஷ்வரி.
பதிலளிநீக்கு