வெள்ளி, 16 செப்டம்பர், 2011
Earth's Bounty (புறநானூறு)
பழந்தமிழ் இலக்கியங்களின் நயத்தை ஆங்கில மொழி அறிந்தவர்களும் உணரவேண்டுமென்ற நோக்கில் பழந்தமிழ்ப் பாடல்களை ஆங்கில வடிவத்திலும் தொடர்ந்து வழங்கிவருகிறேன்.
அவ்வடிப்படையில் இன்று ஔவையாரின் புறநானூற்றுப் பாடல் ஒன்று காண்போம்..
“Bless you earth
field
forest
vally
or hill
you are only
as good
as the good youg men
in each place'
நாடா கொன்றோ ; காடா கொன்றோ;
அவலா கொன்றோ ; மிசையா கொன்றோ;
எவ்வழி நல்லவர் ஆடவர்,
அவ்வழி நல்லை ; வாழிய நிலனே!
(புறநானூறு-187)
மக்கள் வாழ்வது நாடு!
மாக்கள் வாழ்வது காடு! (மாக்கள்- விலங்குகள்)
மனம் இருப்பதாலேயே மனிதன் ஆனோம். மனிதம் இல்லாவிட்டால் நாம் மாக்கள் தானே!
மாக்கள் வாழ்வது நாடாகுமா..?
ஔவை நிலத்தை நோக்கிக் கூறுகிறார்..
ஏ! நிலமே..!
நீ ஒன்றில் நாடாகவும்!
ஒன்றில் காடாகவும்!
ஒன்றில் பள்ளமாகவும்!
ஒன்றில் மேடாகவும்!
எப்படி இருந்தாலும்,
ஆடவர் எவ்விடத்தில் நல்லவராக இருக்கிறாரகளோ அவ்விடத்து நீயும் நன்மையுடையதாக இருக்கிறாய்.
வாழ்வும் தாழ்வும் நிலத்தைப் பொறுத்ததன்று. அந்நிலத்தில் வாழும் ஆடவரைப் பொறுத்தது. நற்பண்பும், நற்செயலும் கொண்ட ஆடவர் நாட்டின் புகழுக்கும் வளத்துக்கும் காரணமாக அமைகின்றனர்.
நல்லோர் இருப்பின் அது நல்ல நிலம்.
தீயோர் இருப்பின் அது தீய நிலம்.
நல்லவர்களின் பார்வையில் யாவரும் நல்லவர்களாகவே தெரிவார்கள்!
தீயவர்கள் பார்வையில் யாவரும் தீயவர்களாகவே தெரிவார்கள்!
உழைக்கும் கைகள் வளமான நிலத்துக்கும்!
நேர்மறை எண்ணங்கள் நலமான வாழ்வுக்கும்!
அடித்தளமாக அமையும் என்பது எனது கருத்தாகும்.
அன்பின் உறவுகளே நீங்கள் வாழும் நிலம் எத்தகையது..??
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
அருமையா சொல்றீங்க முனைவரே....!!!
பதிலளிநீக்குநல்லோர் இருப்பின் அது நல்ல நிலம்.
பதிலளிநீக்குதீயோர் இருப்பின் அது தீய நிலம்.
தற்போது இதை கண்டறிவது
கடினம்.......
நல்லா சொன்னீங்க பாஸ். டவுட்டா இருக்கு.. நாங்க வாழ்வது நாடா?
பதிலளிநீக்குஅது சரி, முனைவர் கேக்கும் கேள்விகளுக்கு எனக்கு மட்டும் தான் பதில் தெரியாதா? இல்ல எல்லாரும் பிட் அடிச்சு தான் பதில் எழுதுறாங்களா?
பதிலளிநீக்கு//உழைக்கும் கைகள் வளமான நிலத்துக்கும்!
பதிலளிநீக்குநேர்மறை எண்ணங்கள் நலமான வாழ்வுக்கும்!
அடித்தளமாக அமையும் என்பது எனது கருத்தாகும்.//
கருத்துக்களுக்கும் பகிர்வுக்கும் நன்றி முனைவர் அவர்களே..
நட்புடன்
சம்பத்குமார்
அருமை.
பதிலளிநீக்குநல்ல முயற்சி....நண்பரே...
பதிலளிநீக்குஎன் வலையில்:
கூடங்குளம் அணுஉலைக்கு எதிராக கோஷம்... நீங்களும் பங்கு கொள்ளுங்கள்!
அருமையான விளக்கம்
பதிலளிநீக்குநாம் வாழும் நிலத்தை நல்ல நிலமாக்குவோம்
த.ம 5
பாஸ் எப்படி பாஸ் இந்த கேள்விய யோசிச்சிங்க.
பதிலளிநீக்குஇன்று என்னுடைய பதிவு
ப்ளாக்கரில் கர்சரை சுற்றி வித்தியாசமான Effect-களை வரவைக்க
நல்ல பாடல்.. நீங்கள் எளிமையாய் விளக்கிய விதமும் அருமை..
பதிலளிநீக்குஎன்ன தமிழ் !!!!!
பதிலளிநீக்குஇதை படிக்கச்
என்னால் இயலவில்லை ...
அற்புதம்
நன்று
யானைக்குட்டி
//நல்லோர் இருப்பின் அது நல்ல நிலம்.
பதிலளிநீக்குதீயோர் இருப்பின் அது தீய நிலம்.//
அருமையான விளக்கம். நன்றி பகிர்வுக்கு.
:))
பதிலளிநீக்கு(நீங்க மட்டும் தான் டெம்ப்ளேட் கமெண்ட் போடுவீங்களா??? நாங்களும் போடுவோம்ல..)
உண்மைதான்... ஆனால் எங்கள் ஈழ திருநாட்டின் நிலைமைதான் தெரியுமே.... நிலத்தில் முகங்கள் புதைந்து இருப்பதும் புரியுமே....!
பதிலளிநீக்குநல்ல பதிவு வாழ்த்துக்கள் நண்பா..!
தொடரட்டும் தங்கள் நற்பணி
பதிலளிநீக்குpagivukku nandri sir
பதிலளிநீக்குநல்ல முயற்சி.
பதிலளிநீக்குநிலத்தின் பெயர் நம்மால் மாசுபடாமல் இருக்கட்டும்..
//நல்லோர் இருப்பின் அது நல்ல நிலம்.
பதிலளிநீக்குதீயோர் இருப்பின் அது தீய நிலம்.//
நன்று.
முற்சிகள் தொடரவேண்டும்
பதிலளிநீக்குமுனைவரே!
வாழ்த்துக்கள்
இன்று கூடங்குளம் பற்றிய கவிதை
காண அழைக்கிறேன்
புலவர் சா இராமாநுசம்
குணா,
பதிலளிநீக்கு”மாக்கள்” மத்தியில் தான் வாழ்ந்துக் கொண்டிருக்கிறேன்.
சுயபரிசோதனைக்கான சங்கப்பாடல் பகிர்வு. சரியானதொரு தருணத்தில் பகிர்ந்தமைக்கு நன்றி முனைவரே!
அருமையான விளக்கம்..
பதிலளிநீக்குநம் நிலம் என்பது இன்னும் தேடலில் தான்
பதிலளிநீக்குஇருக்கிறது முனைவரே.....
அருமையான பொருள்பொதிந்த பதிவு.
நல்லவர்களின் பார்வையில் யாவரும் நல்லவர்களாகவே தெரிவார்கள்!
பதிலளிநீக்குதீயவர்கள் பார்வையில் யாவரும் தீயவர்களாகவே தெரிவார்கள்!
நல்ல பதிவு.
அருமையான விளக்கங்கள்.
நன்றி ஐயா.
நன்றி மனோ
பதிலளிநீக்குஉண்மைதான் சின்னத்தூரல்
ஒரு நொடியாவது தாங்கள் சிந்தித்தமை
பதிலளிநீக்குமகிழ்வளிக்கிறது அஸ்வின்.
தாங்கள் நகைச்சுவையாக அளித்த பதில் நீங்க சிந்திக்க ஆரம்பிச்சிட்டீங்க என்பதையே காட்டுகிறது சூரியஜீவா.
பதிலளிநீக்குநன்றிகள்.
மகிழ்ச்சி சம்பத்
பதிலளிநீக்குநன்றி நண்டு
நன்றி தமிழ்வாசி
நல்ல புரிதல் இரமணி ஐயா
பழந்தமிழ் இலக்கியங்களே என்னை சிந்திக்க வைத்தன சதீஷ் வருகைக்கு நன்றிகள்.
பதிலளிநீக்குகருத்துரைக்கு நன்றி இரமேஷ்
வருகைக்கு நன்றி ஞானேந்திரன்
நன்றி இராம்வி
வருகைக்கு நன்றி இந்திரா
பதிலளிநீக்குபுரிகிறது நிரோஷ்
வருகைக்கு நன்றி சசி
முயற்சி செய்வோம் பாரதி
நன்றி சென்னைப்பித்தன் ஐயா.
நன்றி புலவரே
பதிலளிநீக்குநன்றி சத்ரியன்
மகிழ்ச்சி மகேந்திரன்
நன்றி இரத்தினவேல் ஐயா.
அட இவளவு நாளா இப்படி ஒரு தளம் இருப்பதை அறியாமல் மாக்கள் போல இருந்துவிட்டேன்.
பதிலளிநீக்கு