பக்கங்கள்
▼
இந்திய குடிமைப் பணித்தேர்வு - தமிழ் - 2 - (UPSC EXAM TAMIL)
▼
ஞாயிறு, 18 செப்டம்பர், 2011
சொரணை (காசியானந்தன் கதை)
உணர்ச்சிக் கவிஞர் காசியானந்தன் அவர்கள் தம் கவிதைகளால் உலகத்தமிழர்களின் மனதில் நீங்கா இடம்பிடித்தவராவார். இவர் கவிதைகளில் உள்ள வேகம் சற்றும் குறையாமல் கதையும் சொல்லும் திறன் கொண்டவராவார். இவர் எழுதிய கதைகளில் ஒன்று இன்றைய சிந்தனைக்காக...
சொரனை
நெருஞ்சிப்புல் வருகிறவர் போகிறவர் கால்களையெல்லாம்
தன் முள்ளினால் குத்திப் புண்ணாக்கிக் கொண்டிருந்தது.
“மனிதர்களின் காலைக் குத்தி அவர்களுக்குச் சினத்தை உண்டாக்குகிறாயே – பார்... பார்... அவர்கள் என்றோ ஒருநாள் வேரோடு உன்னைப் பிடுங்கி எங்காவது பயிர்களுக்கு எருவாய்ப் புதைத்துவிடப் போகிறார்கள் என்றது அறுகம்புல்.
நெருஞ்சி சூடானது.
“என்னைக் காலால் மிதித்து வதைக்கிறவர்களையெல்லாம்
நான் தாங்கி்க் கொள்ளவேண்டுமாக்கும்..“
நெருஞ்சிப்புல் சொன்னது..
“வதைபடுவதை விட
புதைபடுவது மேல்“
தொடர்புடைய இடுகை.
அஃறிணை பேசுகிறேன்!
”நறுக்”-குனு குத்துது.
பதிலளிநீக்குபகிர்விற்கு நன்றிங்க குணா.
super
பதிலளிநீக்குLast line super
பதிலளிநீக்குசபாஷ்... உங்கள் அக்றிணை உயர்திணை பதிவுக்கு இங்கே இணைப்பு கொடுத்தால் அருமையாக இருக்கும்...
பதிலளிநீக்குவாழ்வியல் தத்துவத்தை
பதிலளிநீக்குசிறு குப்பியில் அடக்கி
கொடுத்தது போல
அருமையாக இருந்தது முனைவரே....
//“வதைபடுவதை விட
பதிலளிநீக்குபுதைபடுவது மேல்“//
அருமையான வரிகள்
அருமை .
பதிலளிநீக்குகாசியாந்தன் கவிதைகளும் கதைகளும் அருமையே. அதனை வாழ்த்தலாம். எனது ஊரிலே வாழ்ந்தார். அரசியலிலும் ஈடுபட்டார். அவர் பற்றி நன்கு அறிந்திருக்கின்றேன். பகிர்வுக்கு நன்றி
பதிலளிநீக்குசார் ,பகிர்ந்து கொள்ள கூகுள் பிளஸ் ,பேஸ் புக் ,டுவிட்டர் பட்டனலாம் காணோம் ...
பதிலளிநீக்குநன்றி ...
மிக அருமையான வரிகள்... எனக்கு இப்போதைக்கு தேவையான வரிகள்... எத்தனை வதைப்பட்டாலும் சரி முணுக்கென்று ஒரு கோபம் கூட காட்டாது இன்முகம் காட்டிட நினைக்கவைக்கும் வரிகள்..... இனி நானும் இப்படி இருக்க முயல்கிறேன் குணசீலா...
பதிலளிநீக்குஅருமையான பகிர்வுக்கு அன்பு நன்றிகள்பா..
வதைபடுவதை விட புதைபடுவது மேல்! வாய்மூடி மெளனியாயிருந்து அடிமைகளைப்போல் ஆண்டுகள் பல வாழ்வதிலும், எதிர்த்துப் போராடி ஒரு நாள் வாழ்வதே பெருமை என்னும் உயரிய சிந்தனையை நெருஞ்சி மூலம் நன்றாகவே மனம் தைக்கும்படி உரைத்துள்ளார் ஆசிரியர். கவிஞர் காசியானந்தன் அவர்களுக்கும், பகிர்ந்துகொண்ட தங்களுக்கும் நன்றி.
பதிலளிநீக்குநல்ல பகிர்வு.
பதிலளிநீக்கு//“வதைபடுவதை விட
பதிலளிநீக்குபுதைபடுவது மேல்“//
சிறப்பான வரிகள்.
பகிர்வுக்கு நன்றி.
கடைசி வரிகள் அழுத்தமானவை .. அற்புதம்
பதிலளிநீக்குகவிதையை விட மிக ஆழமாக
பதிலளிநீக்குமனதை பாதித்துப் போகும் கதை
அறியத் தந்தமைக்கு நன்றி
த.ம 9
கதையல்ல முனைவரே!
பதிலளிநீக்குஇதும் உணர்ச்சிக் கவிதையே
அடுத்தவர் திறமையை கடுத்துக்காட்டும் உங்களின் மனப்பாங்கு போற்றத் தக்கது
நன்றி
புலவர் சா இராமாநுசம்
“வதைபடுவதை விட
பதிலளிநீக்குபுதைபடுவது மேல்“
கஷ்டப்பட தேவையில்லையே
பகிர்வுக்கு நன்றி நண்பரே
’நெருஞ்சி முள்’னுதான் இதுவரை கேள்விப்பட்டிருக்கேன்.நெருஞ்சிபுல்னு இப்பதான் படிக்கிறேன்.கதையின் கருத்து அருமை
பதிலளிநீக்குமனதைக் கவர்ந்த பதிவு.
பதிலளிநீக்குநாலு வார்த்தை நருக்கென்று...
பதிலளிநீக்குபதிவு அருமை.. நண்பரே..
“வதைபடுவதை விட
பதிலளிநீக்குபுதைபடுவது மேல்“
அருமை நண்பரே!
super
பதிலளிநீக்குமதிப்பிற்குரிய ஆசிரியர் அவர்களுக்கு,
பதிலளிநீக்குவணக்கம். நான் தற்சமயம் தான் உங்களுடைய பதிவில் இணைந்துள்ளேன். உங்களுடைய அனைத்துப் பதிவுகளும் மிக அருமை.
'வதைபடுவதைவிட புதைபடுவது மேல்' அருமை.
பதிலளிநீக்குநல்ல கதை.
நெருஞ்சி முள் என்றுதான் சொல்லுவோம்... நெருஞ்சிப் புல் என்பது புதிய வார்த்தை.
நல்ல பகிர்வு. . . அடிமைத்தனத்தை எதிர்க்கும் வரிகள் அருமை. . .
பதிலளிநீக்குபுரிதலுக்கு நன்றி சத்ரியன்
பதிலளிநீக்குவருகைக்கு நன்றி சசி
நன்றி இராஜா
தங்கள் அறிவுறுத்தலுக்கு நன்றி சூர்ய ஜீவா.
பதிலளிநீக்குஇதோ கொடுத்துவிட்டேன்..
வருகைக்கு நன்றி மகேந்திரன்
பதிலளிநீக்குநன்றி சம்பத்.
நன்றி நண்டு.
மகிழ்ச்சி சந்திர கௌரி.
வருகைக்கு நன்றி ஸ்டாலின். அதையெல்லாம் முகப்புத்தகத்திலேயே தானாக இற்றைப்படுத்தும் நுட்பங்களைக் கையாண்டுள்ளேன்.
பதிலளிநீக்குபுரிதலுக்கு நன்றி மஞ்சு
பதிலளிநீக்குநன்றி கீதா
நன்றி சென்னைப் பித்தன் ஐயா
நன்றி இராம்வி
நன்றி உங்கள் நண்பன்
நன்றி இரமணி ஐயா
உண்மைதான் புலவரே
பதிலளிநீக்குநன்றி எம்ஆர்
புல் இனம் சார்ந்த தாவரம் என்பதால்அவ்வாறு சொல்லியிருக்கிறார் திருமதி ஸ்ரீதர்.
மகிழ்ச்சி சண்முகவேல்
நன்றி சதீஷ்
நன்றி இராஜா
மகிழ்ச்சி மரியம்மாள்
நன்றி மாயஉலகம்
நன்றி பிரணவன்
நன்றி குமார்.
சுருக் !
பதிலளிநீக்கு