வேர்களைத்தேடி தளத்திற்குத் தங்களை அன்புடன் வரவேற்கிறேன்... இத்தளத்தில் சங்க இலக்கியம், கணினித்தமிழ் சார்ந்து எனது அனுபவங்களைப் பகிர்ந்து வருகிறேன். 13 ஆண்டுகளில் 1500க்கும் மேற்பட்ட பதிவுகளை வழங்கியுள்ளேன். தற்போது இந்தியக் குடிமைப் பணித்தேர்வுக்கான விருப்பப் பாடம் தமிழுக்குரிய விளக்கங்களைத் தொடர்ந்து வழங்கி வருகிறேன். தங்கள் மேலான வருகைக்கு நன்றிகளைத் தெரிவித்துக்கொள்கிறேன்.

வியாழன், 29 செப்டம்பர், 2011

கல்வி உளவியல் (கண்கள்)


கல்வியே தவம்!
கற்பித்தலே வழிபாடு!
கவனித்தலே வரம்!

கொடுக்கக் குறையாததும்
பெற்று நிறையாததும் கல்வி!

நம்மை நமக்கு
அடையாளம் காட்டுவது கல்வி!

இத்தகைய கல்வியில் ஆசிரியரிடமிருந்து மாணவர்களும்
மாணவர்களிடமிருந்து ஆசிரியர்களும் கற்கிறார்கள்.

ஆசிரியரின் கல்விசார் உளவியல் கூறுகளுள் கண் என்னும் உடலசைவு மொழியின் ஆளுமைத் தன்மைகளை இன்றைய இடுகையில் காண்போம்...

முதலில் ஒரு கதை..

ஒரு துறவி மரத்தடியில் கண்ணை மூடிக்கொண்டு தவமிருந்தாராம்.
அவ்வழியே வந்த மனிதர் ஒருவர் அந்தத் துறவியைப் பார்த்து என்ன செய்துகொண்டிருக்கிறீர்கள்? என்று கேட்டாராம்.
அதற்கு அந்தத் துறவி.. நான் கடவுளைக் காணத் தவம் செய்துகொண்டிருக்கிறேன் என்றாராம்.

அதற்கு அந்த மனிதர்...
நீங்கள் அமர்ந்திருக்கும் இந்த மரத்தில்...
எத்தனை பூக்கள் மலர்கின்றன?
எத்தனை சருகுகள் உதிர்கின்றன?
எத்தனை பறவைகள் பாடல் இசைக்கின்றன?

“இப்படிக் கண்ணைத் திறந்துகொண்டு கடவுளின் அசைவுகளைக் காண முடியாத நீங்கள்... கண்ணை மூடிக் கொண்டு என்னதான் தேடுவீர்கள்?“ என்றாராம்..

விழிப்படைந்த துறவி... அன்று முதல் கண் திறந்துகொண்டேதான் தவம் செய்வது என்று முடிவு செய்தாராம்.

இப்படிக் கண் திறந்துகொண்டு செய்யும் வழிபாடு தான் கற்பித்தல்.

கண்ணில் பாயும் மின்சாரம்

v     சில வகுப்புகளில் ஆசிரியர் பெருங்குரலிட்டு முழக்கமிட்டிருப்பார்.. மாணவர்களோ ஒருவரோடு ஒருவர் பேசிக்கொண்டிருப்பார்கள்..
       இந்த வகுப்பைப் பார்த்தாலே தெரியும் இங்கு ஆசிரியர்   
     கண்ணிலிருந்து பாயும் மின்சாரம் தடைபட்டுவிட்டது என்று..

v     சில வகுப்புகளில் ஆசிரியரின் மெல்லிய குரல் மட்டுமே கேட்கும்... மாணவர்களின் பார்வை முழுமையும் ஆசிரியரின் கண்களையே பார்த்திருக்கும்..
        இந்த வகுப்பைப் பார்த்தாலே தெரியும இங்கு ஆசிரியர் கண்களில்     மின்சாரம் தடையின்றிப் பாய்கிறது என்று..

கண் ஆயுதம்

Ø      சில ஆசிரியர்கள் தவறு செய்த மாணவர்களை அடிப்பார்கள், திட்டுவார்கள்... ஆனால் அந்த மாணவர்களுக்கோ அது ஒன்றும் பெரிய பாதிப்பை ஏற்படுத்துவதில்லை... தாலாட்டுப் போலவோ, திரைப்படப் பாடல்போலவோ, அதைப் பொழுதுபோக்காகவோதான் எடுத்துக்கொள்வார்கள்..


Ø      சில ஆசிரியர்கள் மாணவர்களைத் திட்டுவதே கிடையாது. சில மணித்துளிகள் அமைதியாக உற்று நோக்குவார்கள் அவ்வளவுதான்.. மாணவர்கள் கண்களில் கண்ணீர் அரும்பும். தம் தவறை மாணவர்கள் தாமே ஏற்றுக்கொண்டு மன்னிப்புக் கேட்பார்கள்.

தூங்கும் மாணவனை எழுப்ப.

Ø      ஆசிரியருக்குப் பெரிய சவால் மாணவர்களின் தூக்கமாகும். உணவு மயக்கமோ, உண்ட மயக்கமோ, ஆர்வமின்மையோ, உடல்சோர்வோ, மனச்சோர்வோ, ஆசிரியரின் ஒரே மாதிரியான சொற்பொழிவோ... மாணவனைத் தூங்கச் செய்துவிடுகிறது..
Ø      இச்சூழலில் தூங்கும் மாணவனை எழுப்பி எல்லோர் முன்னிலையிலும் திட்டினால் அவன் தூக்கம் நீங்கிவிடுமா...? அந்தப் பாடவேளை மட்டும் வேண்டுமானல் தூக்கம் நீங்கிவிடும். ஆனால் அடுத்த பாடவேளை தூங்க ஆரம்பித்துவிடுவான்.
Ø      பாடம் எடுக்கும் போது ஆசிரியர் ஒவ்வொரு மாணவர்களையும் தன் கண்களின் கட்டுப்பாட்டில் வைத்திருக்க வேண்டும். தூங்கும் மாணவரை கூடுதல் கவனத்தோடு உற்றுநோக்கவேண்டும்.. அவர் தூக்கதி்ன் பிடியில் இருக்கிறார் என்றால் அவரை எழுப்பிக் கேள்விகள் கேட்கலாம். வகுப்பு முடிந்தவுடன் தனியாக அழைத்துப் பேசலாம். எல்லோர் முன்னிலையிலும் அவரைக் கேலிப்பொருளாக்குவதால் எந்த மாற்றமும் மாணவரிடம் நேராது. அப்படி நேர்ந்தாலும் அது தற்காலிகமாகவே இருக்கும் என்பது நான் என் அனுபவத்தில் கண்ட உண்மை.

 கண்களின் ஆற்றல்

ü      எந்தவொரு மாணவரும் ஆசிரியர் பாடம் நடத்துவதால் மட்டுமே மதிப்பெண் பெறுவதில்லை.
ü      ஒரு மாணவருக்கு பாடம் பிடித்தாலேபோதும் தானாகப் புரிய ஆரம்பித்துவிடும்.
ü      மாணவர்களுக்குப் பிடிக்கும்விதமாக முதலில் ஆசிரியருக்குப் பாடம் நடத்தத் தெரிந்திருக்கவேண்டும்.
ü      ஆசிரியர் தம் கண்களில் பாடப்பொருளை உணர்வுகளோடு நடத்தவேண்டும்..
ü      சிரிப்பு, கோபம், அழுகை, அச்சம், பெருமிதம், உவகை எனப் பல்வேறு மெய்பாடுகளும் தோன்ற பாடம் கற்பிக்கும்போது மாணவர்களுக்கு அந்தப் பாடம் பிடித்த பாடமாகவே மாறிப்போகும்.
ü      ஒவ்வொரு மாணவர்களுக்கும் தனிப்பட்ட முறையில் ஆசிரியர் தன்னிடம் கவனம் செலுத்துகிறாரா என்ற எண்ணம் இருக்கும். அதை உணர்ந்துகொண்ட ஆசிரியர் அவர்களிடம் வாய்விட்டுப்பேச வேண்டுமென்றுகூடத் தேவையில்லை. கண்களாலேயே தம் அன்பையும் தன் ஆளுமையையும் வெளிப்படுத்தலாம்..

இப்படி கல்வி உளவியலில் உடலசைவு மொழிகள் பெரும்பங்கு வகிப்பனவாக உள்ளன. ஒரே இடுகையில் யாவற்றையும் உரைப்பது அரிது. அதனால்.. இனி வரும் காலங்களில் மேலும் கல்விசார் உளவியல் கூறுகளை தொடர்ந்து தரவிரும்புகிறேன்

தொடர்புடைய இடுகைகள்






37 கருத்துகள்:

  1. கருத்துப் பரிமாற்றத்தில் உடல் மொழியே
    அதிகப் பங்கு வகுக்கின்றது என்பார்கள்
    குறிப்பாக கண்கள்.அதை அழகாக
    விளக்கிப்போனதும் மேலும் தொடர
    அது தொடர்புடைய பதிவுகளை கொடுத்ததும் அருமை
    பயனுள்ள அருமையான பதிவு
    பதிவிட்டமைக்கு நன்றி

    பதிலளிநீக்கு
  2. //கொடுக்கக் குறையாததும்
    பெற்று நிறையாததும் கல்வி!
    நம்மை நமக்கு
    அடையாளம் காட்டுவது கல்வி!//

    உண்மைதான் முனைவர் அவர்களே...கல்வி உளவியலில் உடலசைவு மொழிகளின் தொடர்ச்சி தொடரட்டும்

    பதிலளிநீக்கு
  3. அழகாக சொல்லியுள்ளீர்கள் கண்களின் பார்வையின் தீர்க்கத்தைப் பற்றி ,வார்த்தை பேசாததை கண் பார்வை புரிய வைத்து விடும் என்று சொன்ன தங்கள் பதிவிற்கு நன்றி நண்பரே

    பதிலளிநீக்கு
  4. நல்லதொரு பதிவு. வகுப்பறை மாணவனுக்கு மட்டும் கற்பதற்கான இடமில்லை என்பது இப்பதிவு உணர்த்தும் செய்தி. பாராட்டுக்கள்.

    பதிலளிநீக்கு
  5. கல்வி உளவியலில் உடலசைவு மொழிகள் இவ்வளவு பங்காற்றுகிறதா?? அதுவும் கண்கள்.....உண்மையில் பெரிய விஷயம் தான். கண்களால் கட்டுப்படுத்தி கடமையாற்றுதல் இதுதானோ??

    பதிலளிநீக்கு
  6. கண் திறந்துகொண்டு செய்யும் வழிபாடு தான் கற்பித்தல்.

    அருமையான கண்ணோட்டம்.

    பதிலளிநீக்கு
  7. ஆசியர்களுக்கான கண் பேசும் மொழிகளை அழகாக சொல்லியிருக்கிறீர்கள்!
    மாணவர்களை குறை சொல்லாமல் .

    தெளிந்த பார்வை!

    பதிலளிநீக்கு
  8. ""கண்ணைத் திறந்துகொண்டு கடவுளின் அசைவுகளைக் காண முடியாத நீங்கள்... கண்ணை மூடிக் கொண்டு என்னதான் தேடுவீர்கள்?“"

    நல்ல வார்த்தைகள்....
    நாம் உணர்வுகளின் வெளிப்பாடு கண்கள் தான்... அழகா சொல்லிருக்கிங்க.....

    பதிலளிநீக்கு
  9. அத்தனை அம்சங்களுடன் இன்றைய பதிவும்..
    சூப்பர்....

    பதிலளிநீக்கு
  10. கண்ணை பற்றி இல்ல இல்ல பார்வைகள் பற்றிய தொகுப்பு அருமை

    பதிலளிநீக்கு
  11. கல்வி உளவியல் பற்றிய அருமையான பகிர்வு!
    த.ம.8

    பதிலளிநீக்கு
  12. என்னுடைய புவியியல் ஆசிரியர் கண்ணாடி அணிந்திருப்பார்... அவருக்கு நாங்கள் நான்கு கண்கள் உண்டு என்று சொல்வோம்.. கரும்பலகை பக்கம் திரும்பி எழுதும் பொழுது பின்னால் நாங்கள் செய்யும் சேட்டைகளை கண்ணாடியின் பிம்பத்தில் கண்டு சரியாக அடையாளம் கண்டு கண்டிப்பார்... அவர் வகுப்பில் மட்டும் எந்த மாணவனும் சேட்டை செய்ய மாட்டோம்... அதே போல் இன்று புவியியலில் எனக்கு உள்ள ஈடுபாட்டுக்கு காரணம் அந்த விதமான எந்த கவன சிதறல் நடக்காதவாறு அவர் வகுப்பில் பார்த்துக் கொண்டதே...

    பதிலளிநீக்கு
  13. கண் பேசும் மொழிக்கு சக்தி உண்டுதான்.
    நானும் கத்திப் பாடம் நடத்தும் ஆசிரியர் மாணவனை கட்டுக்குள் வைக்க முடியாமல் போவதையும் சப்தமே இல்லாமல் பாடம் எடுக்கும் ஆசிரியர் மாணவர்களை கட்டிப் போட்டு விடுவதையும் பார்த்திருக்கிறேன்.

    அருமையான பகிர்வு முனைவரே.

    பதிலளிநீக்கு
  14. கருத்துப் பரிமாற்றத்தில் உடல் மொழியே
    அதிகப் பங்கு வகுக்கின்றது என்பதை அழகான விளக்கங்களுடன் அருமை..

    பதிலளிநீக்கு
  15. நல்ல பகிர்வுக்கு நன்றிங்க முனைவரே

    பதிலளிநீக்கு
  16. //மாணவர்களுக்குப் பிடிக்கும்விதமாக முதலில் ஆசிரியருக்குப் பாடம் நடத்தத் தெரிந்திருக்கவேண்டும்.//

    இது ஒரு உண்மையான கருத்து. நான் படித்த கல்லூரியில் மகேசன் என்று ஒரு தமிழ் பேராசிரியர் இருந்தார். கணிப்பொறி மாணவர்களான நாங்கள் தமிழ் பாடவேளைக்கு காத்திருந்த நாட்கள் உண்டென்றால் , நீங்கள் சொன்ன கருத்து அவருக்கு பொருந்தும் என்பது திண்ணம்.

    பதிலளிநீக்கு
  17. பார்வையின் பலத்தை உணர்த்துகிறது...

    அருமை நண்பரே...

    பதிலளிநீக்கு
  18. கண் திறந்துகொண்டே தவம் செய்த முனிவரின் கதை
    சற்று சிந்திக்க வைக்கிறது முனைவரே,
    வழிவழியாய் தவமென்பது விழிகள் மூடி அதாவது புறப்போருட்களை பார்ப்பது தவிர்த்தலே அதன் முக்கியப் பொருளாம்...
    அங்கு கேட்கப்பட்ட கேள்விதான் முனிவரின் கண்ணத் திறக்க வைத்தது...
    கண்கள் பற்றிய இந்த உளவியல் கருத்துக்கள்
    மனதில் பதிவேற்றிவிட்டேன்.

    பதிலளிநீக்கு
  19. அருமையான பதிவு..!!ஆசிரியரின் இலக்கணங்களை நன்றாக எழுதியுள்ளீர்கள்..!!

    பதிலளிநீக்கு
  20. நல்ல ஆய்வு
    கண் பற்றி சொன்னது
    கண்ணெத் தகும்
    வாழ்த்துக்கள்
    புலவர் சா இராமாநுசம்

    பதிலளிநீக்கு
  21. கருத்துரை பதிவிட்டேன் என்ன
    ஆயிற்று
    ஓட்டு பதிவானதே!

    புலவர் சா இராமாநுசம்

    பதிலளிநீக்கு
  22. கண் பேசும் வார்த்தைகள் புரிவதில்லை... ஆனால் இங்கே புரியவைத்தமைக்கு நன்றி நண்பரே

    பதிலளிநீக்கு
  23. //கண் திறந்துகொண்டு செய்யும் வழிபாடு தான் கற்பித்தல்.//

    அருமையான கருத்து. ஆசிரியர்கள் எப்படி மாணவர்களை தம் வசப்படுத்த வேண்டும் என்பதை அழகாக சொல்லியிருக்கீங்க.
    நல்ல பதிவு.. பகிர்வுக்கு நன்றி.

    பதிலளிநீக்கு
  24. கண் பார்வையில் மாணவர்களை கட்டுப்பாட்டில் வைத்திருத்தல் மிகவும் அவசிம் தான் sir... அருமையான பதிவு. . .மாணவர்களை தன் கவனத்தில் வைத்திருந்தால் தான் மாணவர்கள் தன் கட்டுப்பாட்டில் இருப்பர். . .

    பதிலளிநீக்கு
  25. "நம்மை நமக்கு
    அடையாளம் காட்டுவது கல்வி!"

    சூப்பர் வரிகள்......

    நன்றி,
    கண்ணன்
    http://www.tamilcomedyworld.com

    பதிலளிநீக்கு
  26. மகிழ்ச்சி இரமணி ஐயா
    நன்றி சம்பத்
    நன்றி எம்ஆர்

    பதிலளிநீக்கு
  27. நன்றி முனைவர்.மணி
    ஆம் கடம்பவனக் குயில்
    நன்றி இராஜா
    நன்றி இராஜேஷ்வரி

    பதிலளிநீக்கு
  28. நன்றி சசி
    நன்றி கோகுல்
    மகிழ்ச்சி சின்னத்தூறல்
    நன்றி இரமேஷ்
    நன்றி சென்னைப்பித்தன் ஐயா.

    பதிலளிநீக்கு
  29. நன்றி சௌந்தர்

    தங்கள் ஆழ்மனப் பகிர்தலுக்கு நன்றி சூர்யஜீவா

    நன்றி கருன்

    நன்றி குமார்

    நன்றி அரசன்

    நன்றி தென்றல்

    பதிலளிநீக்கு
  30. தங்கள் பகிர்தலுக்கு நன்றி உங்கள் நண்பன்
    நன்றி இராஜா
    நன்றி மகேந்திரன்
    மகிழ்ச்சி தேவா
    மகிழச்சி புலவரே
    நன்றி மாயஉலகம்

    பதிலளிநீக்கு
  31. நன்றி இராம்வி
    நன்றி பிரணவன்
    நன்றி கண்ணன்

    பதிலளிநீக்கு