வேர்களைத்தேடி தளத்திற்குத் தங்களை அன்புடன் வரவேற்கிறேன்... இத்தளத்தில் சங்க இலக்கியம், கணினித்தமிழ் சார்ந்து எனது அனுபவங்களைப் பகிர்ந்து வருகிறேன். 13 ஆண்டுகளில் 1500க்கும் மேற்பட்ட பதிவுகளை வழங்கியுள்ளேன். தற்போது இந்தியக் குடிமைப் பணித்தேர்வுக்கான விருப்பப் பாடம் தமிழுக்குரிய விளக்கங்களைத் தொடர்ந்து வழங்கி வருகிறேன். தங்கள் மேலான வருகைக்கு நன்றிகளைத் தெரிவித்துக்கொள்கிறேன்.

வெள்ளி, 30 செப்டம்பர், 2011

விருந்துக்கு வாங்க..


தமிழ் உறவுகளே...
வாங்க வாங்க.. சாப்பிடுங்க....
பண்பாடு குறித்த முந்தைய பதிவில் நம் பண்பாடுகள் எவை என்பதை கோடிட்டுக் காட்டிச் சென்றேன். இனிவரும் காலங்களில் அவற்றை முடிந்தவரை சமகால வாழ்வியலோடு விளக்க முயற்சிக்கிறேன்.

விருந்தோம்பல் என்னும் பண்பாடு குறித்து இன்றைய பதிவில் காண்போம்.
நான் சிவகங்கை மாவட்டம் காரைக்குடியில் (செட்டிநாடு) பிறந்து வளர்ந்தவன். எங்கள் பகுதியில் உணவு தயாரிப்பதிலும், பரிமாறுவதிலும் நிறைய மரபுகள் உண்டு. அதிலும் இம்மரபு நகரத்தாரிடையேதான் அதிகம் கடைபிடிக்கப்பட்டுவருகிறது.
அன்போடு பரிமாறப்படும் உணவு இருமடங்கு சுவையுடையது என்பதை எங்கள் பகுதிக்கு வந்தால் நன்கு உணரமுடியும்.
ஆளுயர இலைபோட்டு கொஞ்சம் கொஞ்சமாக நிறைய வகைப்பட்ட உணவுகளைப் பரிமாறுவார்கள்.
நாம் எதை விரும்பி உண்கிறோம் என்பதை அறிந்து அதை மீண்டும் மீண்டும் நாம் போதும் என்னும் அளவுக்கு பரிமாறுவார்கள்.

உணவு குறித்த பழமொழி, பொன்மொழி, கொள்கைகள் சில..


கூழானாலும் குளித்துக் குடி!
விருந்தும் மருந்தும் மூன்று நாளைக்குத் தான்!
நொறுங்கத் தின்றால் நூறு வாழ்வு!
பசி வந்தால் பத்தும் பறந்துபோகும்!
பசித்தபின் புசி!
பசி ருசி அறியாது!
உண்டி கொடுத்தோர் உயிர் கொடுத்தோரே!
அன்னத்தில் வின்னம் (பழுது, தடை) செய்யாதே!
பொய் சொன்ன வாய்க்கு போசனம் கிடைக்காது!
பகுத்துண்டு வாழ்!


அளவுக்கதிகமான உணவு உண்பவன் தன் பற்களாலே தன் சவக்குழியைத் தோண்டிக் கொள்கிறான்!


தனி ஒரு மனிதனுக்கு உணவில்லை எனில்
செகத்தினை அழித்திடுவோம்!


சாப்பிடும்போது பேசாதே!
ஒரு பானை சோற்றுக்கு                   
ஒருசோறு பதம்!
நெல்மணி ஒவ்வொன்றிலும் உயிர்களின் பெயர் எழுதப்பட்டுள்ளது!
எள்ளாக இருந்தாலும் ஏழாகப் பகுத்து உண்!


இவ்வாறு என்னதான் படித்தாலும், அறிவுரைகள் கேட்டாலும் நாம் உணவு உண்ணும் போது இவற்றையெல்லாம் மனதில் நினைத்துப் பார்க்கிறோமா? என்றால் பெரும்பாலனவர்கள்...

இதெல்லாம் நடக்கிற கதையா என்பார்கள்.


இதுவா உணவு உண்ணும் பண்பாடு..
  பேசிக்கொண்டே சாப்பிடுவது.(அலைபேசியிலோ, அருகிலிருப்பவரிடமோ)
2.       பக்கதில் இருப்பவர் மீது உணவு தெறிக்குமாறு சாப்பிடுவது.
3.       தொலைக்காட்சி பார்த்துக்கொண்டோ, நாளிதழ் படித்துக்கொண்டோ உண்பது.
4.       இடைவேளையின்றி வாய்க்குள் திணிப்பது.
5.       துரித உணவுகளை உண்பது.
6.       பசிக்கும் முன்பாகவே உண்பது.
7.       உண்டவுடனும், உண்ணும் போதும் தண்ணீர் குடிப்பது.
8.       பக்கத்தில் இருப்பவரைப் பற்றிக் கவலைப்படாமல் துப்பிக்கொண்டே சாப்பிடுவது. (எனக்குத் தெரிந்த ஒருவர் இப்படி சாப்பிடுவார் என்பதால் நண்பர்கள் அவருக்குத் துப்புக்கெட்ட மனுசன் என்று பெயர் வைத்திருந்தார்கள்)
9.       சத்தமாக, எல்லோரும் திரும்பிப்பார்க்கும் விதமாக உண்பது.                  கை முழுக்க, வாய்முழுக்க நிறைய உண்பது..
என எப்படியெல்லாம் சாப்பிடக் கூடாதோ அப்படியெல்லாம் தான் இன்று சாப்பிட்டுக் கொண்டிருக்கிறோம். நம் முன்னோர் ஏன் இப்படியெல்லாம் சாப்பிடக் கூடாது என்று சொன்னார்கள் என்று நாம் சிந்திப்பதற்கு நேரமில்லாதவர்களாக ஓடிக்கொண்டிருக்கிறோம்.


இதுவல்லவா பண்பாடு


   1. நன்றாக மென்று உண்ணும்போது உணவு செறிக்கப்படுகிறது.
   2. உண்ணும்போது இடையிடையே தண்ணீர் அருந்தாமலிருக்கும்போது   
      உணவு செறித்தலில் சிக்கல் இன்றி இயல்பாகவே உருவாகும்
      அமிலங்கள் தன் செயலைத் தடையின்றிச் செய்கின்றன.
   3.பகுத்து உண்ணும் போது கிடைக்கும் நிறைவு தனித்து உண்பதில்  
     கிடைப்பதில்லை.
   4. பசித்த பின்னும், செறித்தபின்னும் தான் உண்ணவேண்டும் அதனால் செறிமான இயந்திரங்கள் நன்கு பணிபுரியும்.
   5. நாகரீகமாக உண்பதால் நாம் மதிப்பிற்குரியராக வாழமுடியும்.
 என நம் முன்னோர் சொன்ன ஒவ்வொரு பழமொழிகளிலும் ஓராயிரம் பொருள்கள் உண்டு..
  

பழந்தமிழரின் உணவு முறைகள்

1.    அருந்துதல் - மிகச் சிறிய அளவே உட்கொள்ளல்.
2.    உண்ணல் - பசிதீர உட்கொள்ளல்.
3.    உறிஞ்சல் - வாயைக் குவித்துக்கொண்டு நீரியற் பண்டத்தை ஈர்த்து உட்கொள்ளல்.
4.    குடித்தல் - நீரியல் உணவை (கஞ்சி போன்றவை) சிறிது சிறிதாக பசி நீங்க உட்கொள்ளல்.
5.    தின்றல் - தின்பண்டங்களை உட்கொள்ளல்.
6.    துய்த்தல் - சுவைத்து மகிழ்ந்து உட்கொள்ளுதல்.
7.    நக்கல் - நாக்கினால் துலாவி உட்கொள்ளுதல்.
8.    நுங்கல் - முழுவதையும் ஓர் வாயில் ஈர்த்துறிஞ்சி உட்கொள்ளுதல்.
9.    பருகல் - நீரியற் பண்டத்தை சிறுகக் குடிப்பது.
10.  மாந்தல் - பெருவேட்கையுடன் மடமடவென்று உட்கொள்ளுதல்.
11.  மெல்லல் - கடிய பண்டத்தைப் பல்லால் கடித்துத் துகைத்து உட்கொள்ளுதல்.
12.  விழுங்கல் - பல்லுக்கும் நாக்குக்கும் இடையே தொண்டை வழி உட்கொள்ளுதல்.

பொது இடங்களில், விழாக்களில் பலரோடு உணவு உண்ணச் செல்லும்போது நான் உணவு உண்பதைவிட அதிகமாக மற்றவர்கள் உணவு உண்ணும் அழகைப் பார்த்து மகிழ்வேன்.


சிலரைப் பார்க்கும்போது.....
சே.. இவர் எவ்வளவு பண்பாடு தெரிந்தவராக, நாகரீகமாக உண்கிறார் என்று வியந்திருக்கிறேன்..
சிலரைப் பார்க்கும்போது...
சே.. இவர் எவ்வளவு பண்பாடற்றவராக, நாகரீகமற்றவர் போல உண்கிறார் எனச் சிரித்திருக்கிறேன்..

87 கருத்துகள்:

  1. தமிழ் மணத்தில் இணைத்து ஓட்டும் போட்டு விட்டேன்.

    பதிலளிநீக்கு
  2. ஆகா!சாப்பிடுவது பற்றி எத்தனை தமிழ்ச் சொற்கள்!
    அருமை!

    பதிலளிநீக்கு
  3. வாழை இலை போட்டு
    அழகாய் பரிமாறியிருக்கிரீர்கள் முனைவரே,
    உண்ணுதலில் இவ்வளவு வகைகள் உண்டா
    தமிழின் சொல் வளத்தை எண்ணிப் பெருமை கொள்ளாமல் இருக்க முடியவில்லை.
    அழகு.
    விர்ந்தொம்பலில் பழந்தமிழர் எவ்வளவு சிறந்து விளங்கினர் என்பது நன்கு புரிந்திற்று.

    பதிலளிநீக்கு
  4. இப்போதெல்லாம் விருந்தளிகளை கவனிப்பதே கடமையாக இருக்கிறது பல இடங்களில்... நீங்கள் சொல்வது மாதிரியான விருந்து சாப்பிட்டு ரொம்ப வருடங்கள் ஆகிறது...

    பதிலளிநீக்கு
  5. உணவு குறித்து எனக்கு பிடித்த குறள்
    தான் ஊன் பெருக்க தான் பிரிதூனுன்பான் எங்கனம்
    வந்தாளும் அருள்
    எழுத்துப் பிழை இருந்தால் பொறுத்தருள்க

    பதிலளிநீக்கு
  6. விருந்தோம்பலில் சிறந்தவர் நம் முன்னோர். அதைப் பற்றிய இக் கட்டுரையும் அருமை. நம்மவர்களில் பலருக்கு சுற்றிலும் சிந்தாமல் சாப்பிடத் தெரிவதில்லை. என்ன செய்ய...

    பதிலளிநீக்கு
  7. தமிழரின் உணர்வுகளில் விரும்தோம்பலும் ஒருன்று....

    தமிழரின் குணம் விருந்தோம்பலை முகமலர்ச்சியுடன் செய்ய கூடிய ஒரு இனம்...

    தங்களி பதிவிலும் அத்தனை சுவையும் உள்ளது....

    பகிர்வுக்கு வாழ்த்துக்கள்...

    பதிலளிநீக்கு
  8. தமிழரின் இந்த 12 உணவு முறைகளும் தற்ப்போது மாறிக் கொண்டு வருகிறது...

    பதிலளிநீக்கு
  9. நம் எதிரியாக இருந்தாலும் வீடுதேடி வந்தவனை உள்ளே அழைத்து குடிக்க தண்ணீராவது கொடுத்து அனுப்புவது நம் முன்னோர்களின் முறை..
    அமுதே கிடைத்தாலும் அதை பகிர்ந்து உண்பார்கள் என்று ஒரு பாடலில் படித்த நியாபகம்...நண்பரே...

    விருந்தோம்பளின் சிறப்பை விளக்கும் வண்ணம் உள்ளது தங்களின் படைப்பு...

    பதிலளிநீக்கு
  10. விருந்தோம்பலிலும் சாப்பிடுவதிலும் இத்தனை சமாச்சாரங்களா?

    பதிலளிநீக்கு
  11. உணவில் சிறந்த உணவு செட்டிநாட்டு உணவு என்பது தமிழகம் முழுமையும் அறிந்த முறைதான் அதுமட்டுமின்றி அங்கு வந்தவர்களுக்கு இலையும் வருகின்றவர்களுக்கு (வருவார்கள் என எதிர்நோக்கி ) உலையும் என ஒரு செலவாடை உண்டு அந்த சிறப்பான ஊருக்கு சொந்தக் காரராநீங்கள் பாராட்டுகள் தொடருங்கள்.

    பதிலளிநீக்கு
  12. "கொஞ்சம் காத்திருங்கள். சாப்பிட்டுவிட்டு வந்துவிடுகிறேன்." என்று கூறுவது இப்போதைய நிலை. பழந்தமிழர் உணவு முறைகள் தின்பது மட்டுமே தெரிந்த இளையவர்கள் தெரிந்து கொள்ள வேண்டும். பகிர்விற்கு நன்றி

    பதிலளிநீக்கு
  13. அருமையான தகவல்கள் தெரிந்து கொண்டேன் முனைவரே நன்றி!!!

    பதிலளிநீக்கு
  14. எப்படி சாப்பிட வேண்டுமோ அப்படி நான் சாப்பிடவே இல்லை. ம்ம் என்ன செய்ய

    பதிலளிநீக்கு
  15. சாப்பிடுவது பற்றிய தங்கள் பதிவு மிக அற்புதம்... சாப்பிடும் விசயத்தில் இவ்வளவு சமாச்சாரங்களா என மலைக்க வைத்துவிட்டீர்கள்...

    பகிர்வுக்கு மிக்க நன்றி...

    http://anubhudhi.blogspot.com/

    பதிலளிநீக்கு
  16. மாப்ள அழகா சொல்லி இருக்கீங்க!

    பதிலளிநீக்கு
  17. சாப்பிடுவது பற்றி எவ்வளவு விஷயம்! கலக்கல்ஸ்!

    பதிலளிநீக்கு
  18. விருந்தும் மருந்தும் மூன்று நாள், ஒரு சோற்றுக்கு ஒரு சோறு பத்ம் என நிறய விசயங்களை வாழை இலையோடு சொல்லிச் செல்லும் விதம் அருமை முனைவரே.

    பதிலளிநீக்கு
  19. எனக்கு பிடித்தமானவற்றை தெரிந்து எழுதியிருக்கிறீர்கள் எப்படி நண்பா?

    விருந்தோம்பல் அறிந்திருந்தாலும் விரிவாக அறிந்துக் கொள்ளும் வாய்ப்பை உங்கள் பதிவு வழங்கியிருக்கிறது.

    பதிலளிநீக்கு
  20. மருந்துண்டு வாழும் எனக்கு இலைபோட்டு
    விருத்துண்ண அழைப்பது அறந்தானா
    முனைவரே!

    புலவர் சா இராமாநுசம்

    பதிலளிநீக்கு
  21. ////பேசிக்கொண்டே சாப்பிடுவது................////

    ஒரு 10 நிமிடத்தை இதுக்கு ஒதுக்க கூட முடியாத மனுசனா..

    அருமையாக பகிர்ந்துள்ளிர்கள் நன்றிகள்..

    அன்புச் சகோதரன்...
    ம.தி.சுதா
    பில்கேட்சை ஏழையாக்கப் போகும் ஈழத்துப் புதல்வன்

    பதிலளிநீக்கு
  22. இன்றைய தங்கள் சாப்பாடு [சாப்பாடு பற்றிய பதிவு] அருமையோ அருமை. பாராட்டுக்கள்.

    பதிலளிநீக்கு
  23. குணா பார்த்தால் பசி எடுத்தது..படித்ததும் பசி தீர்ந்தது...விருந்தோம்பல் சுவையோ சுவை..ம்ம்ம்ம் உண்மையை சொன்னால் பசிக்குது குணா..

    பதிலளிநீக்கு
  24. சாப்பாடு பற்றிய உங்கள் பகிர்வு மிக அருமை முனைவரே... எத்தனை வார்த்தைகள்.... சுவையான பகிர்வுக்கு நன்றி முனைவரே...

    பதிலளிநீக்கு
  25. சிவகங்கையா .............


    நானும் சிவகங்கை தான் நண்பரே ....

    பதிலளிநீக்கு
  26. பண்படுதல் என்பது நாம் செய்யும்
    ஒவ்வொரு செயலிலும் இருத்தல் வேண்டும்
    பண்பட்ட நடத்தைகளின் தொகுப்புதானே
    பண்பாடு என்பதும் என்பதை
    உண்ணுதலில் இருந்து சொல்லத் துவங்கிஇருப்பது அருமை
    தலைவாழை இலை போட்டு பண்பாட்டு விருந்துக்கு
    அழைத்துள்ளீர்கள்
    கரும்புதின்னக் கூலியாதொடர்ந்து வருகிறோம்
    தொடர வாழ்த்துக்கள் த.ம 20
    ( எங்கள் பக்கம் அன்னத்தை பின்னப் படுத்தாதே என்பார்கள் )

    பதிலளிநீக்கு
  27. சமைத்தலில் மட்டுமல்ல. சாப்பிடுவதிலும் அழகு இருக்கின்றது என்பதை அழகாய் சொல்லியிருக்கின்றீர்கள். . .

    பதிலளிநீக்கு
  28. விருந்தோம்பல் பற்றிய தகவல்கள் பகிர்வுக்கு நன்றி

    பதிலளிநீக்கு
  29. உணவில் இத்தனை விவகாரம் இருக்கிறதா! நன்று குணசீலன் சார்!

    பதிலளிநீக்கு
  30. உணவு குறித்த பழமொழிகள் அருமை நண்பரே

    பதிலளிநீக்கு
  31. அருமை அருமை! நிறைவான விருந்தாக அமைந்தது தங்கள் பதிவு!

    பதிலளிநீக்கு
  32. ஆஹா !இவ்ளோ விசியம் இருக்கா.

    பொழுது போகலைனா கிட்சனிலும்,பிரிஜ்ஜிலும் என்ன தீனி இருக்குனு பாத்து சாப்புடுற ஆளு நான்.
    சில சமயம் என்ன கம்னு இருக்கோம்னு தீனி எதையாவது எடுத்து சாப்பிடுவேனே.

    பதிலளிநீக்கு
  33. தமிழர் பண்பாடுகளில் முதன்மையான விருந்தோம்பல் பற்றி அழகாக உரைத்துள்ளீர்கள். உணவருந்தும் முறை பற்றி இன்றையக் குழந்தைகளுக்குக் கற்றுத்தர பல பெற்றோர் முன்வருவதில்லை. அவர்கள் தொலைகாட்சி பார்த்துக்கொண்டே அரைகுறையாயும், உணவில் கவனமில்லாமலும் சாப்பிட்டுச் செல்கின்றனர். மேலும் நொறுக்குத்தீனிகளில் நாட்டம் கொண்டு கண்ட நேரத்திலும் தின்று வயிற்றைக் கெடுத்துக்கொள்கின்றனர். இன்றையக் காலத்துக்குத் தேவையான நல்லதொரு பதிவு.

    பதிலளிநீக்கு
  34. மிக்க மகிழ்ச்சி சென்னைப் பித்தன் ஐயா..
    தமிழ் மணத்தில் இப்போதெல்லாம் முன்புபோல உடனடியாக இணைக்கமுடியவில்லை..

    இடுகைகளை இணைப்பதில் இருக்கும் சிக்கலைத் தங்களைப்போன்ற அன்புள்ளங்கள் எளிதாக்கித் தாங்களே இணைத்து உதவிபுரிகின்றன..

    மிக்க மகிழ்ச்சி.

    பதிலளிநீக்கு
  35. உண்மைதான் மகேந்திரன்..

    தமிழர் உணவு என்றொரு நூல் உலகத்தமிழாராய்சி நிலைய வெளியீடாகவே வெளிவந்துள்ளது..

    அந்நூல் முழுக்க பழந்தமிழர் உணவு பற்றியதுதான்.

    வருகைக்கு நன்றிகள்.

    பதிலளிநீக்கு
  36. நீண்டநாள் கழித்து வந்திருக்கீங்க அன்புமணி..

    பகிர்தலுக்கு நன்றி.

    பதிலளிநீக்கு
  37. அதனாலென்ன சூர்யஜீவா...

    தன்ஊன் பெருக்கற்குத் தான்பிறிது ஊன்உண்பான்
    எங்ஙனம் ஆளும் அருள்?

    நல்ல குறள்..

    பகிர்தலுக்கு நன்றி..

    பதிலளிநீக்கு
  38. உண்மைதான் கணேஷ்..
    தங்கள் முதல் வருகைக்கும் கருத்துரைக்கும் நன்றிகள்.

    பதிலளிநீக்கு
  39. உண்மைதான் சௌந்தர்..

    தங்கள் வருகைக்கும் கருத்துரைக்கும் நன்றி.

    பதிலளிநீக்கு
  40. உண்மைதான் இராஜா நம் பண்பாட்டை அசைபோட்டமைக்கு நன்றிகள்..

    பதிலளிநீக்கு
  41. அம்பலத்தாரே வாங்க வாங்க சாப்பிட்டீங்களா..

    பதிலளிநீக்கு
  42. நல்லதொரு சொலவடையை அறிமுகம் செய்தமைக்கு நன்றிகள் போளுர் தயாநிதி..

    பதிலளிநீக்கு
  43. மிக்க மகிழ்ச்சி கருன்..

    உங்க மனசு நிறைந்தால்
    என் எழுத்துக்கும் வயிறு நிறையும்..

    பதிலளிநீக்கு
  44. வருகைக்கும் புரிதலுக்கும் நன்றி பலேபிரபு.

    பதிலளிநீக்கு
  45. ஓ அப்படியா..

    மகிழ்ச்சி சங்கர் குருசாமி.

    பதிலளிநீக்கு
  46. மிக்க மகிழ்ச்சி சத்திரியன்..
    இலக்கிய விருந்தைத் தினந்தோறும் உண்ணவரும் தங்களுக்கு என்றும் நன்றிகள்..

    பதிலளிநீக்கு
  47. இது அன்பு கலந்த தமிழுணவு அல்லவா புலவரே..

    உடலுக்குத் தீங்கிழைக்காது..

    உடலையும் உள்ளத்தையும் சேர்த்துவளர்க்கும் தன்மை தமிழுக்கு உண்டல்லவா....

    பதிலளிநீக்கு
  48. நன்றி மதிசுதா..

    தாங்கள் சொல்வது உண்மைதான்..

    மனிதன் போகிற போக்கில்...
    உணவுக்குப் பதில் மாத்திரை எதுவும் கிடைத்தால் அதையே உண்டு வாழ்வதற்கும் தயாராகிவிட்டான்..

    பதிலளிநீக்கு
  49. தமிழரசி..

    நீண்ட நாட்களுக்குப் பின்னர் வேர்களைத்தேடித் தாங்கள் வந்ததால்...

    தங்களுக்கு இலக்கியப்பசி எடுத்துவிட்டதோ!!

    பதிலளிநீக்கு
  50. ஓ அப்படியா!!!!!!

    மகிழ்ச்சி ஸ்டாலின்..

    எப்படி ஒரு சந்திப்பு நமக்குள்..

    பதிலளிநீக்கு
  51. அழகாகச் சொன்னீர்கள் இரமணி ஐயா..

    விளக்கத்துக்கு நன்றிகள்..

    பதிலளிநீக்கு
  52. தங்கள் பணிச்சூழலுக்கு இடையே வருகை தந்தமைக்கு நன்றிகள் மோகன்ஜி.

    பதிலளிநீக்கு
  53. வருகைக்கும் வாசித்தலுக்கும் நன்றிகள் திருமதிஸ்ரீதர்.

    பதிலளிநீக்கு
  54. உண்மைதான் கீதா..

    வருகைக்கும்
    புரிதலுக்கும்
    சிந்தித்தமைக்கும்
    கருத்துரைத்தமைக்கும் நன்றிகள் கீதா.

    பதிலளிநீக்கு
  55. விருந்தோம்பலுடன் நின்றுவிடாமல் அதை
    உண்ணுபோது உள்ள சிறப்பினையும் உணர்த்தி
    நிற்கும் தங்கள் படைப்பிற்கு வாழ்த்துக்கள் .
    மிக்க நன்றி பகிர்வுக்கு ...........

    பதிலளிநீக்கு
  56. அருமையான கட்டுரை. மிகவும் பயனுள்ள தகவல். மிக்க நன்றி.

    பதிலளிநீக்கு
  57. வருகைக்கும் கருத்துரைக்கும் நன்றி அம்பாளடியாள்..

    பதிலளிநீக்கு
  58. விருந்துக்கு வந்த அனைவருக்கும் மனம் நிறைந்த நன்றிகளைத் தெரிவித்துக்கொள்கிறேன்..

    பதிலளிநீக்கு
  59. 1. அருந்துதல் - மிகச் சிறிய அளவே உட்கொள்ளல்.
    2. உண்ணல் - பசிதீர உட்கொள்ளல்.
    3. உறிஞ்சல் - வாயைக் குவித்துக்கொண்டு நீரியற் பண்டத்தை ஈர்த்து உட்கொள்ளல்.
    4. குடித்தல் - நீரியல் உணவை (கஞ்சி போன்றவை) சிறிது சிறிதாக பசி நீங்க உட்கொள்ளல்.
    5. தின்றல் - தின்பண்டங்களை உட்கொள்ளல்.
    6. துய்த்தல் - சுவைத்து மகிழ்ந்து உட்கொள்ளுதல்.மிகப்பயனுள்ள பதிவு
    7. நக்கல் - நாக்கினால் துலாவி உட்கொள்ளுதல்.
    8. நுங்கல் - முழுவதையும் ஓர் வாயில் ஈர்த்துறிஞ்சி உட்கொள்ளுதல்.
    9. பருகல் - நீரியற் பண்டத்தை சிறுகக் குடிப்பது.
    10. மாந்தல் - பெருவேட்கையுடன் மடமடவென்று உட்கொள்ளுதல்.
    11. மெல்லல் - கடிய பண்டத்தைப் பல்லால் கடித்துத் துகைத்து உட்கொள்ளுதல்.
    12. விழுங்கல் - பல்லுக்கும் நாக்குக்கும் இடையே தொண்டை வழி உட்கொள்ளுதல்.

    பதிலளிநீக்கு
  60. தின்றலா தின்னலா என்பதையும், துலாவலா துழாவலா என்பதையும் விளக்குங்கள்.

    பதிலளிநீக்கு
  61. பின்னூட்டங்கள் ஒவ்வொன்றுக்கும் விடையளிப்பதே கூட ஒருவகை விருந்தோம்பல்தான். முனைவருக்கு காலம் எங்ஙனம் வாய்க்கிறது? பொறாமையாக இருக்கிறது.

    பதிலளிநீக்கு
  62. நாஞ்சில் நாடன் ஒரு கதையில் சொல்வார், கான்சாகிப் தொகுப்பென நினைக்கிறேன். திரைப்பத்தின் ப்ரிவியூ ஒன்றில், (கும்பமுனி.....?)உறிஞ்சப் பழச்சாறு, நக்க ஐஸ்கிரீம், கொறிக்க நெய்யில் வறுத்த முந்திரி, என வர்ணித்திருபார்.

    பதிலளிநீக்கு
  63. கடித்தல் கொறித்தல், புசித்தல், சப்புதல், ....?

    பதிலளிநீக்கு
  64. பொன்னியின் செல்வனில் வல்லவரையன் ,தஞ்சையில் சேந்தன் அமுதனின் வீட்டில் காற்படி தயிருடன் நுங்கியதைக் கல்கி வருணித்த விதம் நினைவுக்கு வருகிறது. வைரமுத்துவின் ஆளுக்கொருகோப்பை நினைவுக்கு வருகிறது.மிக நல்ல பதிவு .

    பதிலளிநீக்கு
  65. அன்பு நண்பர் ரஜினி அவர்களே..

    தங்கள் வரிசையான மறுமொழிகளைக் கண்டு மகிழ்ச்சியடைந்தேன்..

    தங்கள் பலவகையான ஒப்பீடுகளைக் கண்டு பெருமிதம் கொண்டேன்..

    தின்றல் என்பது மரபு வழக்கு
    தின்னல் என்பது நாட்டுப்புற வழக்கு!


    துழாவல்தான் சரியான பதம் நண்பா.

    கடித்தல் கொறித்தல், புசித்தல், சப்புதல், ....?

    எத்தனை மரபுகளைத் தொலைத்துவிட்டோம் நாம்..

    இத்தனையும் தொலைத்துவிட்டுத்தான்..

    ஹோட்டலில் சென்று டிபன் ஈட்டிங் பண்ணிக்கிட்டிருக்கோம்.

    தங்கள் ஆழ்ந்த புரிதலுக்கும்
    பல்வேறு ஒப்பீடுகளுக்கும்
    எடுத்துக்காட்டுக்கும்
    நன்றிகள் நண்பா..

    பதிலளிநீக்கு
  66. வருகைக்கும்
    புரிதலுக்கும்
    சிந்தித்தமைக்கும்
    கருத்துரைத்தமைக்கும் நன்றிகள்

    பதிலளிநீக்கு
  67. விருந்துக்கு அழைக்கிறீர்கள் என்று ஆவலுடன் வந்த (கற்போம் தளத்தில் மறுமொழி பார்த்து) எனக்கு விருந்து பற்றி அழகான படித்து சுவைக்கக் கூடிய விருந்து வைத்து விட்டீர்கள்..

    குமுதத்தில் வந்த "உணவு முறைகள்" இங்கிருந்து எடுக்கப்பட்டதோ?

    பதிலளிநீக்கு