பக்கங்கள்

இந்திய குடிமைப் பணித்தேர்வு - தமிழ் - 2 - (UPSC EXAM TAMIL)

புதன், 28 செப்டம்பர், 2011

நம்பமுடியாத ப்ளாக்கர் சேவை!!


இன்னும் நான் வியப்பிலிருந்து மீளவில்லை...

இன்று காலை வழக்கம் போல என் வலைப்பதிவின் கணக்குப் பகுதிக்குச் சென்றால் புதிய சேவை..

பயன்படுத்திப்பார்க்கிறீர்களா என்று வந்தது..

சரி முயற்சித்துப் பார்ப்போம் என்று பார்த்தேன்.. பெருவியப்படைந்தேன்..

ஆம்..

உங்கள் வலைப்பதிவையோ
நீங்கள் பார்வையிடும் வலைப்பதிவையோ..

பல்வேறு வடிவங்களில் (டெம்ளேட் மாற்றி) மாற்றிப் பார்க்கும் வசதி தான் இது..

சான்றாக..

http://gunathamizh.blogspot.com/  என்பது என் இயல்பான முகவரி..

இதனை..

http://gunathamizh.blogspot.com/view/classic
http://gunathamizh.blogspot.com/view/sidebar
http://gunathamizh.blogspot.com/view/flipcard
http://gunathamizh.blogspot.com/view/magazine
http://gunathamizh.blogspot.com/view/mosaic
http://gunathamizh.blogspot.com/view/snapshot
http://gunathamizh.blogspot.com/view/timeslide

என்று பல்வேறு வடிவங்களில் பார்க்கமுடிகிறது..
இதில் நிழற்படங்கள், கருத்துரைகள், இடுகைகள் ஆகியன பல்வேறு தோற்றங்களில் மனதை மயக்கும் விதமாக அமைந்துள்ளன..

நம் வலைப்பக்கத்தைப் பார்த்துக் கொண்டே இருப்பதுபோல இருக்கிறது.

நாம் பார்வையிடும் வலைப்பக்கங்களையும் இப்படி பல்வேறு தோற்றங்களில் காணலாம் என்பது கூடுதல் வசதியாகும்.

அன்பு நண்பர்களே..

நீங்களும் உங்கள் வலைப்பக்கத்தை, உங்கள் முகவரிக்குப் பின் /view என்று அடித்துப் பாருங்கள்..


இடது பக்க மேல்ப் பகுதியில் வடிவங்களைத் தேர்வு செய்யும் வசதி இருக்கிறது.

இந்த வசதியை ப்ளாக்கர் சோதனை முயற்சியில் வெளியிட்டிருக்கிறார்களா?
நடைமுறைப்படுத்திவிட்டார்களா? என்பதுதான் இன்னும் புரியவில்லை..

எது எப்படியோ இப்படியொரு வசதி மக்கள் பயன்பாட்டுக்கு வந்தால் பெரிய வரவேற்பிற்குரியதாக இருக்கும் என்பதைத் தமிழ் வலைப்பதிவர் என்ற முறையில் இங்கு பதிவு செய்ய விரும்புகிறேன்.




கூகுள் நிறுவனத்துக்கு நான் அளித்த மறுமொழியாகவோ, கருத்துரையாகவோ, பாரட்டுரையாகவே இவ்விடுகையைக் கருதலாம்.

27 கருத்துகள்:

  1. வியப்பாய் தான் இருக்கு குணா நானும் என் வலைப்பூ சென்று பார்க்கிறேன். நன்றி பகிர்வுக்கு.

    பதிலளிநீக்கு
  2. ஷீ-நிசி கவிதைகள் பதிவில் குறிப்பிட்டதை எளிமையாக அருமையாக செய்து புரியும்படி எழுதி உள்ளீர்கள்

    பதிலளிநீக்கு
  3. அருமையான தகவல் நண்பரே...
    வாழ்க வளமுடன்
    வேலன்.

    பதிலளிநீக்கு
  4. அணைத்தையும் சோதித்து பார்த்தேன் நண்பரே...
    அருமையாக உள்ளது...

    தகவலுக்கு நன்றி....

    பதிலளிநீக்கு
  5. ஆமாம் அருமையாய் ஒரு மாற்றம்!இப்போதான் பார்த்துவிட்டு வருகிறேன்...அதை பதிவில் போட்டு கூகிலின் அன்பையும் பெற்று விட்டீர்கள்!

    பதிலளிநீக்கு
  6. புதிய தகவலுக்கு நன்றி. நானும் முயன்று பார்க்கிறேன்.

    பதிலளிநீக்கு
  7. தகவலுக்கு நன்றி முனைவரே... நானும் முயற்சித்து பார்க்கிறேன்.....

    பதிலளிநீக்கு
  8. பகிர்வுக்கு நன்றி நண்பரே! சில குறைகளை மட்டும் ப்ளாக்கர் சரி செய்துவிட்டால், உண்மையிலேயே இது ஒரு பிரமாதமான வசதி தான்.

    பதிலளிநீக்கு
  9. நன்றி நண்பரே ,சோதனை செய்து பார்த்தேன் ,நன்றாக உள்ளது

    பதிலளிநீக்கு
  10. classic மற்றும் magazine வடிவங்களே புதியதாக சேர்க்கப்பட்டுள்ளது. மற்ற Dynamic view வடிவங்கள் மார்ச் மாதங்களை ஒட்டியே அறிமுகம் செய்யப்பட்டிருந்தது.
    இது கூகுளின் சோதனை முயற்சியல்ல சாதனை முயற்சி

    பதிலளிநீக்கு
  11. நன்றி தமிழ்
    மகி்ழ்ச்சி சூர்யஜீவா
    வருகைக்கு நன்றி வேலன்
    நன்றி நடனசபாபதி ஐயா
    நன்றி நாகேஷ்
    உண்மைதான் சத்ரியன்

    பதிலளிநீக்கு
  12. மகிழ்ச்சி இராஜா
    நன்றி நிசாமுதீன்
    நன்றி நிரோஷ்
    நன்றி தென்றல்
    நன்றி கீதா
    நன்றி வெங்கட்
    நன்றி ஸ்டாலின்
    நன்றி சண்முகவேல்

    பதிலளிநீக்கு
  13. ஆம் அப்துல்
    மகிழ்ச்சி எம்ஆர்
    உண்மைதான் நீ்ச்சல்காரன் தகவலுக்கு நன்றிகள்..

    பதிலளிநீக்கு
  14. இப்ப தான் நானும் பாத்து ஆச்சர்யப்பட்டு யாராவது இத பத்தி எழுதியிருக்காங்களான்னு மேலதிக விளக்கத்துக்காக தேடுனேன்....... உங்க பக்கம் வந்தது....

    பகிர்வுக்கு நன்றி சகோ

    பதிலளிநீக்கு
  15. அன்பரே இதில் ஓட்டளிப்பு பட்டை மற்றும் சைடு பார் தெரியாது .இது மிகப்பெரிய குறை அல்லவா

    பதிலளிநீக்கு
  16. நல்ல வசதி நண்பரே.... லோடு ஆகும் நேரம் ஆகும் மிச்சமாகிறது... நன்றி முனைவரெ

    பதிலளிநீக்கு
  17. வியப்பான அருமையான பகிர்வுக்கு நன்றி.

    பதிலளிநீக்கு