பக்கங்கள்

இந்திய குடிமைப் பணித்தேர்வு - தமிழ் - 2 - (UPSC EXAM TAMIL)

புதன், 21 செப்டம்பர், 2011

இலக்கியத் திரட்டி

தமிழ் உறவுகளே....

இலக்கியம் வேறு வாழ்க்கை வேறு என்று என்னால் பிரித்துப் பார்க்கமுடியவில்லை.

இலக்கியங்கள் வாழ்க்கையைத்தான் பதிவு செய்கின்றன.

வாழ்வில் வெற்றி பெற்ற அறிஞர்கள் பலரும் சொல்கிறார்கள்...

நான் வாழ்க்கை இலக்கியமாக..

சங்க இலக்கியத்தைப் பின்பற்றிவருகிறேன்..
அற இலக்கியங்களைப் பின்பற்றிவருகிறேன்..
திருக்குறளைப் பின்பற்றி வருகிறேன்..
சிலம்பபைப் பின்பற்றி வருகிறேன்..
கம்பராமாயணத்தைப் பின்பற்றி வருகிறேன்..

என்று..
சமயம் எவ்வாறு மனிதனைப் பக்குவப்படுத்தத் தோன்றியதோ அதுபோலவே இலக்கியங்களும் மக்களைப் பண்படுத்தவே தோன்றின..

அறம், பொருள், இன்பம், வீடு என்னும் நாற்பொருளை உரைப்பதே இலக்கு!

இவ்விலக்கை இயம்புவதாலேயே “இலக்கியங்கள்“ என்ற பெயரும் பெற்றன.


இயல், இசை, நாடகம் என்ற முத்தமிழையும் சங்கம் வைத்து வளர்த்த பெருமை நம் தமிழுக்கு உண்டு..

முதல், இடை, கடைச் சங்கம்
சமணர் வளர்த்த சங்கம்
பாண்டித்துரைத்தேவர் வைத்த சங்கம்

எனப் பல சங்கம் வைத்து தமிழாய்ந்து நூல்கள் அரங்கேற்றப்பட்டன.

இன்று நான்காம் தமிழான “இணையத்தமிழ்“ மிக விரைவாக இணையப்பரப்பில் உலகுபரவி வளர்ந்து வருவது பெருமகிழ்ச்சி அளிப்பதாக உள்ளது.


தமிழ்மணம், இன்லி, தமிழ்வெளி, தமிழ்10, மாற்று, திரட்டி, உலவு எனப் பல வலைப்பதிவுத் திரட்டிகள் இருந்தாலும்...

அவற்றில்..

செய்திகள்
நகைச்சுவை
தொழில்நுட்பம்
படைப்புகள்
இவை போன்ற பகுப்புகளையே காணமுடிகிறது.

“இலக்கியம்“ என்றொரு பிரிவு இருந்தால் இன்னும் நன்றாக இருக்குமே என்று எனக்குத் தோன்றுகிறது.

ஏதோ என்னால் முடிந்தவரை இலக்கியம் சார்ந்த வலைப்பதிவுகளைத் திரட்டி “தமிழ்க்காற்று“ என்ற ஒரு வலைப்பக்கம் உருவாக்கியுள்ளேன். இதில் உங்கள் பதிவுகளும் இடம்பெற்றிருக்கலாம்..


தமிழ் உறவுகளே வாங்க..

தமிழ்க் காற்று வாங்க......

27 கருத்துகள்:

  1. மிக்க நன்றி முனைவர் அவர்களே..

    எக்காலத்திற்க்கும் பயன்படும் அறியதொரு முயற்சி

    வெற்றி பெற என் மனமார்ந்த வாழ்த்துக்கள்

    நட்புடன்
    சம்பத்குமார்

    பதிலளிநீக்கு
  2. தொடர்ந்து வருகிறோம் தமிழ்காற்று வாங்க!
    வணங்குகிறோம் உங்கள் முயற்சிக்கு.

    பதிலளிநீக்கு
  3. தமிழ்காற்றை அனுபவித்தேன். பயனுள்ள திரட்டி

    பதிலளிநீக்கு
  4. தமிழ்க்காற்றுக்கு வாழ்த்துக்கள்.

    பதிலளிநீக்கு
  5. குணா,

    இணையத்தமிழில் உலாவருவதோட அல்லாமல்
    கற்றுணர்ந்தும்,உற்று நோக்கியும், இல்லாத குறிச்சொல்லைக் கண்டுணர்ந்து அதற்கென ஒரு திரட்டியை உருவாக்கியிருக்கும் உமது முயற்சி சிறக்கட்டும்.

    தமிழ்க்காற்று உலகமெங்கும் வீசட்டும்!

    பதிலளிநீக்கு
  6. மிகச் சிறந்த முயற்சி. இலக்கியத்திற்கென்று தனித் திரட்டி இல்லயையே என்பட்க்ஹு எனது நீண்ட நாள் ஆதங்கம். தாங்கள் இதற்குப் பொருத்தமான தகுதியானவர். வாழ்த்துககள்!

    பதிலளிநீக்கு
  7. தமிழ்க்காற்றுக்கு வாழ்த்துக்கள்.

    -சே,குமார்

    பதிலளிநீக்கு
  8. நல்ல முயற்சி முனைவரே.. இதோ சென்று பார்க்கிறேன்.

    பதிலளிநீக்கு
  9. நல்ல முயற்சி.வாழ்த்துக்கள்
    த.ம 7

    பதிலளிநீக்கு
  10. தமிழ்க்காற்று வரவேற்க பட வேண்டிய ஒன்று... தமிழ்க்காற்று மிகப்பெரிய வெற்றிக்கண்டு ஞானம் எங்கும் வீசட்டும்.... அதை அனைவரும் சுவாசிக்கட்டும்..... அன்பு வாழ்த்துக்கள் அன்பரே

    பதிலளிநீக்கு
  11. நல்ல முயற்சி குணா வாழ்த்துக்கள்..எனக்கு எல்லாம் எண்ட்ரன்ஸ் டிக்கெட் கூட கிடைக்காதுன்னு நினைக்கிறேன்..

    பதிலளிநீக்கு
  12. எல்லோருக்கும் பயன் படும் விதமான நல்ல முயற்சி.நன்றி .

    பதிலளிநீக்கு
  13. வாழ்த்துக்கள் தமிழ்காற்று நன்றாக வீசட்டும்

    பதிலளிநீக்கு
  14. வாழும் உலகத்தில்-தமிழ்
    வாழ தமிழ்க்காற்று
    சூழும் வலை வழியே-தினம்
    சுற்ற உலகெங்கும்
    ஆழி அலைபோல-நல்
    ஆர்வமுடன் பொங்கட்டும்
    வாழி வாழியென-நான்
    வாழ்த்துகிறேன் நன்றியுடன்

    புலவர் சா இராமாநுசம்

    பதிலளிநீக்கு
  15. உங்களது முயற்சிக்கு வாழ்த்துக்கள் குணா sir. . .

    பதிலளிநீக்கு
  16. சரியாகச் சொன்னீர்கள் முனைவரே..
    எனக்கும் இந்த எண்ணம் தோன்றியது உண்மைதான்.
    இதோ இன்று உங்கள் வாய்மொழி வாயிலாக நாங்கள் எல்லோரும் வழிமொழிகிறோம். இணையங்களின் திரட்டிகள் இதை பற்றி ஒரு முடிவு எடுக்கட்டும்.
    ஒரு மொழியின் இலக்கண இலக்கியங்கள் வாயிலாகவே தான் நம்முடைய கலாச்சாரமும் பண்பாடும் தெரிவிக்கப் பட்டிருக்கிறது.
    இதைச் சாரமாக கொண்டு பார்த்தால், வாழ்க்கையும் இலக்கியமும்
    பின்னிப்பிணைந்த ஒன்றே.

    அருமையான பதிவு முனைவரே.

    பதிலளிநீக்கு
  17. சிறந்த முயற்சி. தமிழ்க்காற்றுக்கு வாழ்த்துகள்.

    பதிலளிநீக்கு
  18. அன்பு சகோதரா, இந்த இலக்கிய தமிழ் காற்று முயற்சி மிகவும் அருமை, தமிழர்கள் தமிழில் பிண்ணூட்டமிட, தமிழ் எழுதியை நிறுவி வாசகர்களுக்கு உதவலாமே, அதிக விவரங்களுக்கு இங்கே சொடுக்கவும் நன்றி

    பதிலளிநீக்கு
  19. தமிழ்காற்றை அனுபவித்தேன்... பயனுள்ள திரட்டி..
    வாழ்த்துக்கள்...ரெவெரி

    பதிலளிநீக்கு
  20. நன்றி சென்னைப் பித்தன்.

    நன்றி சம்பத்.

    மகிழ்ச்சி கோகுல்.

    நன்றி தமிழ் உதயம்.

    நன்றி சண்முகவேல்.

    பதிலளிநீக்கு
  21. நன்றி சத்ரியன்.
    மகிழ்ச்சி பிரதாப்.
    நன்றி குமார்.
    நன்றி வெங்கட்.
    நன்றி இரமணி ஐயா.
    மகிழ்ச்சி மாயஉலகம்.

    பதிலளிநீக்கு
  22. கவிதை மழை பொழியும் தாங்களே இப்படிச் சொல்லலாமா தமிழ்..?

    நன்றி இராம்வி.
    நன்றி சசி.

    தங்கள் வாழ்த்துக்கவிதைக்கு நன்றி புலவரே.

    பதிலளிநீக்கு
  23. நன்றி பிரணவன்.

    சரியாகச் சொன்னீர்கள் மகேந்திரன்.

    நன்றி சந்திர கௌரி.

    வருகைக்கு நன்றி தமிழ் ரைட்டர்

    நன்றி ஸ்டாலின்

    மகிழ்ச்சி ரெவரி.

    பதிலளிநீக்கு
  24. இணையத் தமிழ் வழியில் அறிமுகமாகி -கவர்ந்த பதிவர்களில் நீங்களும் ஒருவர். தமிழின் எதிர்கால அசைவியக்கம் இணையவலையில் அமைந்ததாக நான்காவது தளமாக இருக்கும். 'அரசு'களால் கைவிடப்பட்டிருந்தும் ஆதரவாளர்களால் தமிழ் அடுத்தடுத்த பயணங்களில் சென்றுகொண்டே இருக்கிறது.
    இணைய உலா வரும் தமிழை மேலும் இலகுவான வகைப்படுத்தல்களுக்கு தங்களைப் போன்ற தன்னார்வ அறிவாளிகள் ஒன்றிணைந்து செயற்படவேண்டும். இதில் 1. பேச்சுத் தமிழ் வகைப் பதிவுகள் (வட்டார - பிரதேச - நாடுகள்) 2. தரமான தமிழ் (கற்கை நெறிசார்ந்த - தமிழை முறையாகக் கற்கவிரும்புபவர்களுக்கானதும் - பிற மொழியாளர்கள் தமிழில் தொடர்பு கொள்ளுவதற்கானதுமான தளம் 3. பண்டிதத் தமிழ் (மேற்கல்வியுடன் உயர் இலக்கிய -இலக்கணப் பதிவுகளை உடையவை)
    இவ்வகை பிரித்தலூடாக தகுநல் அகராதிகளும் இணைய வலையில் அமைக்கப் பெற்றால் இணையத் தமிழ் பயணம் இலகுவாகிவிடும்.
    தொடரும் தங்களது முயற்சிகளுக்கு எமது மனமார்ந்த பாராட்டுகள்!!

    பதிலளிநீக்கு