பக்கங்கள்
▼
இந்திய குடிமைப் பணித்தேர்வு - தமிழ் - 2 - (UPSC EXAM TAMIL)
▼
செவ்வாய், 13 செப்டம்பர், 2011
நிழலானவன்!!
மண் பயனுற வாழ்வதே வாழ்க்கை.
நிலச் சுமையென வாழ்தல் வாழ்க்கையா?
நாம் இல்லாத சூழலில் நம்மைப் பற்றி எண்ணிப்பார்க்க நாம் எத்தனை பேரை சம்பாதித்திருக்கிறோம் என்பதே உண்மையில் நம்வாழ்வில் நாம் சேர்த்த மதிப்புமிக்க செல்வமாகும்.
இதோ மண் பயனுற்ற வாழ்க்கைச் சான்று ஒன்று..
கார்பெயல் தலைஇய காண்பு இன் காலை
களிற்று முக வரியின் தெறுழ் வீ பூப்ப
செம் புற்று ஈயலின் இன் அளைப் புளித்து
மென் தினை யாணர்த்து நந்தும் கொல்லோ
நிழல் இல் நீள் இடைத் தனிமரம் போல
பனை கெழு வேந்தரை இறந்தும்
இரவலர்க்கு ஈயும் வள்ளியோன் நாடே!
புறநானூறு – 119
திணை – பொதுவியல்
துறை – கையறுநிலை
வேள்பாரியைக் கபிலர் பாடியது.
நிழல் இல்லாத நீண்ட வழியில் நின்ற தனிமரம் போல முரசுடை வேந்தரைக் காட்டிலும் மிகுதியாக இரவலர்க்கு வழங்கும் வன்மையுடையவன் வேள்பாரி.
அவனது நாடு, கார்காலத்தில மழை பெய்ததால் காட்சிக்கு இனிய காலமாயிற்று.
தெருழ் மலர்
யானை முகத்தில் உள்ள புள்ளி போலத் தெறுழ் மலர் மலர்ந்தது.
புளிங்கறி
செம்புற்றின் ஈயலை, இனிய மோருடன் கூட்டிச் சமைத்த புளிங்கறியை உடையது பாரிநாடு. மேலும் சிறு தினையாகிய புது வருவாயும் முன்பு உடையதாயிருந்தது.
கையறுநிலை
இனி அது கெட்டொழிந்தது. பாரி இறந்த பிறகு நாடும் கெட்டொழிந்தது. கொடுப்பவரும் இல்லை எனக் கபிலர் கையற்றுப் புலம்புவதாக இப்பாடல் அமைகிறது.
பாடல் வழியே..
1. கையறுநிலை என்றால் கையற்றுப் புலம்புதல் என்ற புறத்துறை விளக்கப்பட்டுள்ளது.
2. நிழல் தரும் தனிமரத்தைப் போன்றவன் பாரி என்ற உவமை மிகவும் இயைபுடையதாகவுள்ளது.
3. யானையின் முகத்தில் உள்ள புள்ளி போலத் தெருழ் மலர் மலர்ந்தது என்ற உவமை புதுமையானதாகக் காட்சியளிக்கிறது.
4. ஈயலை மோருடன் கலந்து புளிங்கறி சமைத்து உண்டனர் என்ற செய்தி சங்ககால மக்களின் உணவுவழக்கத்தை அறிந்துகொள்ளத் துணைநிற்பதாகவுள்ளது.
5. இத்தகைய சிறப்புடைய கொடையாளியான பாரி மறைந்தனன் என்ற கையற்ற புலம்பல் பாரி, மண் பயனுற வாழ்ந்தமைக்குத் தக்க சான்றாக விளங்குகிறது.
“வாழ்ந்தா இப்படியொரு வாழ்க்கை வாழனும்!!!“
அழகிய பாடல். சிறப்பான விளக்கம்.
பதிலளிநீக்குஆம், மண் பயனுற வாழ்வதே வாழ்க்கை.
நன்றி பகிர்வுக்கு.
என்னவோ போங்க..
பதிலளிநீக்குமுனைவரின் ஒவ்வொரு பதிவிலும் படிப்பினைகள்
பதிலளிநீக்குஅருமை பாராட்டுக்கள் தோழரே
நீங்கள் பதிவிடும் வேகம் பிரமிக்க வைக்கிறது முனைவரே....
பதிலளிநீக்குநல்ல பகிர்வு....
நல்ல பதிவு
பதிலளிநீக்கு“வாழ்ந்தா இப்படியொரு வாழ்க்கை வாழனும்!!!“//
பதிலளிநீக்குமுற்றிலும் உண்மை சகோ...
உங்களை நான் சம்பாதித்து இருந்தால் அது எனது பயன்..... அருமை நண்பா...!
பதிலளிநீக்குபயன் ’தரு’ம் பதிவு குணா!
பதிலளிநீக்குநிழலில்லா வழியில் நிற்கும் தனிமரமும் இல்லாது போனால்....? நினைக்கவே வேதனை தரும் ஒரு நிகழ்வினை உவமையாகச் சொல்லித் தம் கையறு நிலையைக் குறிப்பிட்டப் புலவரின் புலமையை என்னவென்பது?வாழ்க்கையென்றால் என்னவென்பதை வகையாய்ப் பறைசாற்றும் பதிவு. நன்றி முனைவரே.
பதிலளிநீக்குபாரி ஆண்ட பிரான்மலை காரைக்குடிக்கு அருகில்தான் உள்ளது.
பதிலளிநீக்குஅருமையான பாடலுக்குச் சிறப்பான விளக்கம்!
பதிலளிநீக்குமனித வாழ்க்கை பயனுள்ளதாக அமைத்துக்கொள்ள தூண்டுதல் ஏற்ப்படுத்தும் பதிவு..
பதிலளிநீக்குவாழ்த்துகள்.... நண்பரே..
வருகைக்கும் புரிதலுக்கும் நன்றி இராம்வி
பதிலளிநீக்குவருகைக்கு நன்றி சூர்யா
மகிழ்ச்சி செய்தாலி
நன்றி வெங்கட் நேரம் கிடைக்கும்போது எழுதிக்கொள்வேன் அவ்வளவுதான்..
வருகைக்கு நன்றி இராஜா
பதிலளிநீக்குபுரிதலுக்கு நன்றி கருன்
உங்களை சம்பாதி்த்தது நான் செய்த பயன் நிரோஷ்
நன்றி சத்ரியன்
நன்றி கீதா
குறிப்புக்கு நன்றி தேவன் மாயன்
பதிலளிநீக்குகருத்துரைக்கு நன்றி சென்னைப் பித்தன்
புரிதலுக்கு மகிழ்ச்சி இராஜா எம்விஎஸ்
நன்றி நண்டு