பக்கங்கள்
▼
இந்திய குடிமைப் பணித்தேர்வு - தமிழ் - 2 - (UPSC EXAM TAMIL)
▼
சனி, 17 செப்டம்பர், 2011
எழுதுவதெல்லாம் எழுத்தல்ல!!
எழுதுவதெல்லாம் எழுத்தல்ல
மனிதனை விழித்தெழச் செய்வதே
எழுத்து!
எழுத்தே தவம்!
எழுதுவதே வழிபாடு!
புரியும்படி எழுதுவது வரம்!
புரியாமல் எழுதுவது சாபம்!
எழுத்துக்கும் உயிர் உண்டு..!
பிறமொழி கலந்து
எழுதும்போதெல்லாம் எழுத்துக்கள்
விபத்துக்குள்ளாகின்றன!
நல்ல சிந்தனைகளைத்
தரும்போதெல்லாம் எழுத்துக்கள்
மணிமகுடம் அணிந்துகொள்கின்றன!
தவறான சிந்தனைகளைத்
தரும்போதெல்லாம் எழுத்துக்கள்
கற்பிழந்து நிற்கின்றன!
பொய் சொல்லும்போதெல்லாம்
எழுத்துக்கள்
தற்கொலை செய்துகொள்கின்றன!
உண்மை சொல்லும்போதுமட்டுமே
எழுத்துக்கள்
தலைநிமிர்ந்து நிற்கின்றன!
பிழையோடு எழுதும்போது
எழுத்துக்கள்
நோய்வாய்ப்படுகின்றன!
தன்னம்பிக்கை
தரும்போதெல்லாம் எழுத்துக்களுக்கு
சிறகு முளைத்துவிடுகின்றன!
இப்படி...
எழுத்துக்கும் உயிர், உணர்வு, மானம், கற்பு, நலம், கேடு, சிறகு ஆகியன உண்டு என்பதை நாம் உணர்வோம்..
நாம் எழுத்துக்களை வாழவைக்காவிட்டாலும்....
நல்ல எழுத்து. பகிர்வுக்கு நன்றி.
பதிலளிநீக்குஎழுத்துக்கும் உயிர், உணர்வு, மானம், கற்பு, நலம், கேடு, சிறகு ஆகியன உண்டு என்பதை நாம் உணர்வோம்..//
பதிலளிநீக்குஉண்மை தான் நண்பரே....
மொழிக்கும் எல்லா உணர்வும் என்று புரிய வைத்து விட்டீர்கள்!நன்றி!
பதிலளிநீக்குபிழையோடு எழுதும்போது
பதிலளிநீக்குஎழுத்துக்கள்
நோய்வாய்ப்படுகின்றன!// இது வித்தியாசமா இருக்கே?
அருமையான பதிவு நண்பரே
பதிலளிநீக்குஉங்களைப் போன்ற எழுத்தாளர்களை மனமார வரவேற்கிறேன் மனமகிழ்ச்சி அடைகிறேன்
முடிந்தால் இதை வாசியுங்கள்.
வானம் வசமானதா? விஷமானதா?
http://valaiyukam.blogspot.com/2011/08/blog-post.html
பகிர்வுக்கு நன்றி நண்பரே
எழுத்தே தவம்!
பதிலளிநீக்குஎழுதுவதே வழிபாடு!
புரியும்படி எழுதுவது வரம்!
தவமின்றி கிடைத்த வரத்திற்குப் பாராட்டுக்கள்.
அருமை
பதிலளிநீக்குஎழுத்திற்கு புது உயிர் தருகிறது தங்களின் இந்த படைப்பு . அருமை தலைவா
பதிலளிநீக்குஅருமையாகச் சொன்னீர்கள் வாழ்த்துக்கள் மனம்
பதிலளிநீக்குகவர்ந்த பகிர்வுக்கு .............
அழகிய கவிதைக்கு என் அனைத்து ஓட்டுக்களும்
பதிலளிநீக்குபோட்டாச்சு மிக்க நன்றி பகிர்வுக்கு ..........
மிகச் சரி
பதிலளிநீக்குஎழுத்தின் வரிவடிவமே உடல்
அதன் ஒலி வடிவமே உயிர்
பயன்படுத்துதலைக் கொண்டே
அதன் உயர்வும் தாழ்வும்
அதன் உயர்வு தாழ்வைக் கொண்டே
இனத்தின் வாழ்வும் உயர்வும்
அருமையான சிந்தனை
அழகான பதிவு த.ம 8
தன்னம்பிக்கை
பதிலளிநீக்குதரும்போதெல்லாம் எழுத்துக்களுக்கு
சிறகு முளைத்துவிடுகின்றன!
நல்ல பதிவு.
நன்றி ஐயா.
தவறான சிந்தனைகளைத்
பதிலளிநீக்குதரும்போதெல்லாம் எழுத்துக்கள்
கற்பிழந்து நிற்கின்றன!//
உண்மைதான் நண்பரே
எழுத்திற்கு நல்ல ஒரு ஆதாரம் இருக்கிறது
பதிலளிநீக்குநாம் எழுதியதை திரும்ப நாம் பார்க்கும் போதே
ஒரு சந்தோசம் மனதில் குடிகொள்ளும்.
இன்றைய மிக இளைய தலைமுறையினரிடையே எழுதுவதும்
படிப்பதும் மிகவும் குறைந்தே காணப்படுகிறது
அதை பெருக்க வேண்டும் முனைவரே....
//
பதிலளிநீக்குஎழுத்தே தவம்!
எழுதுவதே வழிபாடு!
புரியும்படி எழுதுவது வரம்!
புரியாமல் எழுதுவது சாபம்!
//
அருமையான , உண்மையான வரிகள்
"உண்மை சொல்லும்போதுமட்டுமே
பதிலளிநீக்குஎழுத்துக்கள்
தலைநிமிர்ந்து நிற்கின்றன!"
ஆம்! இங்கே உங்கள் எழுத்துக்களும் தலை நிமிர்ந்து நிற்கின்றன. வாழ்த்துகள்!
எழுத்து:-
பதிலளிநீக்குநோய்வாய்ப்பட்டு - பிழையோடு எழுதல்.
கற்பிழந்து எழுதல், இப்படியெல்லாம் நடக்கும் போது அந்த எழுத்துகள் செய்யத்தகு காரியம் செய்ததாக 50-60 கருத்துகள் இடப்படுகிறதே - ஆகாசத்திற்கு ஏற்றி வைத்து. ஏன்? இதை வஞ்சப் புகழ்ச்சி என்று எடுப்பதா? எதற்காகத் தவறு இருந்தும் ஆகா! ஓகோ! என்று புகழ்ந்து கருத்திடுகிறார்கள்? இது தவறு என்று கோடு கூடக் காட்டப்படுவது இல்லையே ஏன்? நேற்று ஒரு ஆக்கத்திற்கு வீந்த பூமாலைகளைப் பார்த்து நானும் வேதனை அடைந்தேன்.
''..புரியும்படி எழுதுவது வரம்!
புரியாமல் எழுதுவது சாபம்!..''
மிக மிக - சரி...
அருமையான சிந்தனை மக்கள் புரிந்து கொள்ளட்டும்.
நமது எழுத்துக்கள் பத்தினிகளாக இருக்கட்டும்!
பதிலளிநீக்குபிறமொழி கலந்து
பதிலளிநீக்குஎழுதும்போதெல்லாம் எழுத்துக்கள்
விபத்துக்குள்ளாகின்றன!
நான் ரசித்த வரிகள்
பிழையோடு எழுதும்போது
பதிலளிநீக்குஎழுத்துக்கள்
நோய்வாய்ப்படுகின்றன!
அழகான ஆழமான வரிகள்
நல்ல பகிர்வு.
பதிலளிநீக்குவாழ்த்துக்கள், மொழியில் எழுத்து ஒரு அங்கம், பிழை அதில் நோய், மருந்து தங்களை போன்ற மொழி ஆர்வலர்கள், அதுவும் தன்மொழி தரணியில் தழைக்க வேண்டும் என எண்ணுபவர்கள்
பதிலளிநீக்குநல்ல பகிர்வு . எவ்வளவு சுலபமாக நாம் மொழியை களங்கபடுத்துகிறோம். நன்றி முனைவரே
பதிலளிநீக்குதமிழ் பகிர்வுக்கு நன்றி.
பதிலளிநீக்குஅருமையாகச் சொன்னீர்கள் வாழ்த்துக்கள் மனம்
பதிலளிநீக்குகவர்ந்த பகிர்வுக்கு
இன்று கூடல் பாலாவின் வலையில்
வெற்றியை நோக்கி ஒரு மரண பயணம்
~*~எழுத்துக்கும் உயிர், உணர்வு, மானம், கற்பு, நலம், கேடு, சிறகு ஆகியன உண்டு என்பதை நாம் உணர்வோம்..~*~
பதிலளிநீக்குஎல்லாம் இருக்கும் எழுத்துக்கு நாம் தருவது உடலை(வடிவம்) மட்டும்தான்.. அதையும் சரியாகத் தரவேண்டும்...
பகிர்வுக்கு மிக்க நன்றி..
வாழ்த்துகள் நண்பரே..
தமிழ் உலகின் மனி மகுடமே வருக செந்தமிழ் தருக.
பதிலளிநீக்குகவியை ரசித்தேன் உணர்வில்லை.
நெடு நேரம் சுவைத்தேன் முடிவில்லை.
இதுதான் கவிதையோ?
வாழ்த்துக்கள் முனைவரே.
அருமை சார் நீங்கள் எழுதிய பதிவுகளில் சிறந்தவைகளில் இதுவும் ஒன்று...
பதிலளிநீக்குகுணா,
பதிலளிநீக்குபிடியுங்கள் பூங்கத்தை!
எழுத்துக்கும் உயிர், உணர்வு, மானம், கற்பு, நலம், கேடு, சிறகு ஆகியன உண்டு என்பதை நாம் உணர்வோம்..//
பதிலளிநீக்குஉண்மை தான் முனைவரே...
எழுத்தைப் பற்றி மிகவும் அருமையாக ஆராய்ந்து எழுதியுள்ளீர்கள்.
பதிலளிநீக்கு//எழுத்துக்கும் உயிர் உண்டு..!//
மிலவும் உண்மை!!
நன்றி இராம்வி
பதிலளிநீக்குநன்றி பிரகாஷ்
நன்றி கோகுல்
நன்றி கருன்
மகிழ்ச்சி ஹைதர் அலி
மகிழ்ச்சி இராஜேஷ்வரி
பதிலளிநீக்குநன்றி சூரியஜீவா
நன்றி நண்டு
நன்றி சங்கர்
மகிழ்ச்சி அம்பாளடியாள்
மகி்ழ்ச்சி இரமணி ஐயா
பதிலளிநீக்குநன்றி இரத்தினவேல் ஐயா
நன்றி கடம்பவனக் குயில்
முயற்சிப்போம் மகேந்திரன்
நன்றி இராஜா
மகிழ்ச்சி ஊரான்
கருத்துரைகளின் எண்ணிக்கைகள் மட்டுமே
பதிலளிநீக்குஇடுகையின் தகுதியைச் சொல்லிவி்டாது கோவைக்கவி..
காலம் கடந்தும் வாழும் தன்மை கொண்டன கருத்துள்ள இடுகைகள் என்பது என் கருத்து.
நன்றி சென்னைப் பித்தன் ஐயா
பதிலளிநீக்குமகிழ்ச்சி இரஜினி பிரதாப்
நன்றி மாதேவி
இலக்கியத் தமிழைக் கூட தேடி ஓடிவரும் தங்களைப் போன்ற அன்பர்கள் இருக்கும் வரை தமிழ் தாழ்ந்துபோகாது வேல்முருகன்.
பதிலளிநீக்குதங்கள் முதல் வருகைக்கு நன்றிகள்.
வருகைக்கும் கருத்துரைக்கும் நன்றி உங்கள் நண்பன்.
பதிலளிநீக்குநன்றி இராஜநடராஜன்
நன்றி சதீஷ்
புரிதலுக்கு நன்றிகள் இராஜா
மிக்க மகிழ்ச்சி அந்நியன்
பதிலளிநீக்குநன்றி சசி
ஏற்றுக்கொண்டேன் சத்ரியன். நன்றிகள்!!
நன்றி குமார்
நன்றி ஆளுங்க.
'எழுதுவதெல்லாம் எழுத்தல்ல'- ஒற்றை வாக்கியத்தில் ஓராயிரம் கருத்துக்களை உள்ளடக்கிவிட்டிர்கள். ஏற்றம் பெறும் எழுத்துக்களையே உருவாக்குவோம். என்றென்றும் அவற்றை தலைநிமிர்ந்து வாழவைப்போம். மிகவும் நன்றி முனைவரே.
பதிலளிநீக்குஎழுதுவதெல்லாம் எழுத்தல்ல
பதிலளிநீக்குமனிதனை விழித்தெழச் செய்வதே
எழுத்து!
மறுக்கமுடியாத உண்மை
எழுத்துக்கும் உயிர், உணர்வு, மானம், கற்பு, நலம், கேடு, சிறகு ஆகியன உண்டு என்பதை நாம் உணர்வோம்..
பதிலளிநீக்குஅருமையான வரிகள்! இவற்றைப்படித்தபோது, அன்றைய எழுத்தாளர் அகிலன் மறுபடியும் பிறந்து வந்து எழுதியதைப்பார்த்தது போல ஒரு உணர்வு ஏற்பட்டது!
எழுத்தைப்பற்றிய அனைத்து கருத்துக்களும் நிஜம்,அருமை.
பதிலளிநீக்குஅற்புதம் குணா.
பதிலளிநீக்குஎழுத்திற்கு கவுரவம் படைத்துள்ளீர்கள்.இவைகளை உண்ர்ந்து எழுதுதல் சிறப்புதரும்.
பதிலளிநீக்குஅய்யா என் அப்பாவிடம் உங்கள் பதிவை காட்டினேன், அந்த புகைப் படத்தில் எங்கடா ஓள காணோம் என்றார்.. கேட்கிறேன் என்று கூறினேன்..
பதிலளிநீக்குபுரிதலுக்கு நன்றி கீதா.
பதிலளிநீக்குவருகைக்கு நன்றி குடிமகன்.
மிக்க மகிழ்ச்சி மனோ.
நன்றி சண்முகவேல்.
நன்றி ஜோதிஜி.
நன்றி சூர்ய ஜீவா..
பதிலளிநீக்குஇந்தப் படம் இணையத்தில் தேடியபோது கிடைத்தது.
கல்லெழுத்துக்கலை என்னும் நூலில் முழுமையாக நான்கு பக்கங்களில் உயிரெழுத்துக்களையும் மெய்யெழுத்துக்களையும் இவ்வாறு வெளியிட்டிருப்பார்கள்..
படியெடுக்கும் போது பாதி மறைந்திருக்கலாம் என்று கருதுகிறேன் நண்பா.
எழுத்துக்களின் வரிவடிவ வளர்ச்சிக்காக இந்தப்படத்தை நான் வெளியிடவில்லை..
எழுத்துக்களின் பரிணாம வளர்ச்சிகளை அடையாளப்படுத்தவே இப்படத்தை வெளியிட்டேன்.
நன்றிகள்.
//எழுத்துக்கும் உயிர், உணர்வு, மானம், கற்பு, நலம், கேடு, சிறகு ஆகியன உண்டு என்பதை நாம் உணர்வோம்..//
பதிலளிநீக்குஉண்மையான வரிகள்.....
மகி்ழ்ச்சி வெங்கட்.
பதிலளிநீக்குஅற்புதம் குணசீலன்.
பதிலளிநீக்கு@எம்.ஏ.சுசீலா மகிழ்ச்சி அம்மா..
பதிலளிநீக்குஎனது பதிவை விட
பதிலளிநீக்கு(http://yppubs.blogspot.com/2014/08/blog-post_20.html)
தங்கள் பதிவு
பதிவர்களுக்கு
அதிக தன்னம்பிக்கை தருமென
நம்புகின்றேன்!
நானும்
தங்கள் பதிவை விரும்புகிறேன்!
ஐயா,
பதிலளிநீக்குபுதுக்கவிதையின் தோற்றமும் வளர்ச்சியும்' என்னும் தங்கள் கடுரையில், புதுக்கவிதையின் தோற்றத்துக்கு "மரபுக்கவிதையின் செறிவின்மையும்" ஒரு காரணமென தாங்கள் குறிப்பிட்டிருந்ததை கண்டேன். மரபுக்கவிதை செறிவானதாகவேயிருக்கும். அதை செறிவற்றதெனச்சொல்லலாகாது. வேண்டுமானால் அதை எளிதில் விளங்காததெனச்சொல்லலாம். ஆனால், புதுக்கவிதையானது மரபுக்கவிதையைக்காட்டிலும் எளிதில் விளங்கக்கூடியதென்பது நாம் அறிந்ததே.
குறிப்பிடத்தக்கதான இன்னொருவேறுபாட்டையும் இங்கே குறிப்பிடவேண்டும். அது என்னவென்றால், மரபுக்கவிதையில் இலக்கணக்குற்றம் காணப்படாது. ஆனால் புதுக்கவிதையிலோ புணர்ச்சிக்குற்றங்களை எங்குங்காணமுடியும்.
இங்கேயுள்ள இந்தப்பாடலிலேகூட,
"பிறமொழி கலந்து"
"பொய் சொல்லும்போதெல்லாம்"
"உண்மை சொல்லும்போதுமட்டுமே"
"மணிமகுடம் அணிந்துகொள்கின்றன"
"தற்கொலை செய்துகொள்கின்றன"
என்னுமிடங்களில் இரண்டாம்வேற்றுமை தொகைநிலையில்வந்திருந்தும் அங்கெல்லாம் சொற்கள் பிரிக்கப்பட்டுள்ளன.
மரபுக்கவிதையில் அவ்வாறு பிரியும். அதற்கு சீரளவென்னும் ஒரு கட்டுப்பாடு இருப்பதால் அவ்வாறு பிரிக்கவேண்டிய ஒரு தேவை உண்டாகிறது. ஆனால் புதுக்கவிதைக்கு சீரளவேது? எதனால் தொகைச்சொற்கள் பிரிக்கப்படுகின்றன? அப்படி பிரித்தபின் எவ்வாறு அங்கே தொகைநிலைப்பொருளை கொள்வது?
'பிறமொழிகலந்து' என இங்கே சேர்த்தெழுதுவதற்கு எது தடையாயிருக்கிறது?
'மணிமகுடம் அணிந்துகொள்கின்றன' என்றிருக்கிறதே, இதுவே மரபுக்கவிதையாயிருந்தால் 'மணிமகுட மணிந்து' என இந்த சொற்கள் புணர்ந்துபிரிந்திருக்கும். அப்போது அவை புணர்த்தப்பட்டிருப்பதால் அதை இரண்டாம்வேற்றுமைத்தொகையென எளிதாய்க்கண்டுகொள்ளலாம்.
ஆனால், 'மணிமகுடம் அணிந்துகொள்கின்றன' என்றிருக்கும்போது அதெப்படி 'மணிமகுடத்தை அணிந்துகொள்கின்றன' என்னும் வேற்றுமைப்பொருளைத்தருவதாயிருக்கும்?
நற்பதிவு ஐயா
பதிலளிநீக்கு