வீட்டுக்கொரு நிலவு! இருந்தால் எப்படியிருக்கும்..?
நிலவை பாடாத கவிஞர்களே கிடையாது. இவர்களின் சிந்தனை ஊற்று எங்கே பெருக்கெடுத்துள்ளது என்பதற்கான சங்க இலக்கிச் சான்று ஒன்று.
இதோ என் வீட்டிலும் ஒரு நிலவு இருக்கிறது என்று நிலவைப் பார்த்துச் சொல்கிறான் தலைவன்.
பொருள் தேடிச் செல்ல எண்ணுகிறான் தலைவன். அப்போது அவனுக்கு முன்பு ஒருமுறை இதுபோல பொருள் தேடச் சென்றமை நினைவுக்கு வருகிறது.
அப்போது..
“ ஏ நிலவே! என் வீட்டிலும் ஒரு நிலவு இருக்கிறது.
ஆம்! முள்போன்ற கூரிய பற்களையும்,
திலகமிட்டு மணம் கமழும் நெற்றியையும் கொண்டு அழகு நிறைந்த நிலவு ஒன்று என் வீட்டிலும் இருக்கிறது. அவள் தான் என் காதலி. ஆனால் இப்போது என் நிலவு எங்கு இருக்கிறதோ தெரியவில்லையே???“
என்று புலம்பியமை நினைவுக்கு வந்தது.
தலைவியைப் பிரிந்தது போதும் வருந்தியது போதும்!
தேடிய பொருள் போதும்!
இங்கேயே இவளோடு சேர்ந்து வாழ்வோம் அதுபோதும்!!
என எண்ணித் தன் பயணத்த நிறுத்திக்கொள்கிறான் தலைவன்.
பாடல் இதோ..
வேர் பிணி வெதிரத்துக் கால் பொரு நரல் இசை
கந்து பிணி யானை அயர் உயிர்த்தன்ன
என்றூழ் நீடிய வேய் பயில் அழுவத்து,
குன்று ஊர் மதியம் நோக்கி, நின்று, நினைந்து,
உள்ளினென் அல்லெனோ யானே- 'முள் எயிற்று, 5
திலகம் தைஇய தேம் கமழ் திரு நுதல்,
எமதும் உண்டு, ஓர் மதிநாட் திங்கள்,
உரறு குரல் வெவ் வளி எடுப்ப, நிழல் தப
உலவை ஆகிய மரத்த
கல் பிறங்கு உயர் மலை உம்பரஃது' எனவே? 10
நற்றிணை 62. (பாலை)
இளங்கீரனார்.
முன் ஒரு காலத்துப்பொருள்வயிற் பிரிந்து வந்த தலைவன், பின்னும் பொருள்வலிக்கப்பட்ட நெஞ்சிற்குச் செலவு அழுங்குவித்தது.
மூங்கில் காற்று.
வேர்கள் ஒன்றோடொன்று பிணிப்புற்றிருக்கும் மூங்கில்களிலே காற்று மோதுதலால் உண்டாகிய ஓசை தறியிலே கட்டப்பட்ட யானை வருந்திப் பெருமூச்சு விட்டது போன்றது.
பாலை நிலவு.
கோடை நிலைபெற்ற மூங்கில் பிறங்கிய சுரவழியில் மலையை நோக்கிச் செல்லும் நிலவைப் பார்த்துத் தலைவியின் நினைவு வந்து நின்றான் தலைன்
நிலவு – தலைவி.
முட்போன்ற பற்களையும் திலகமிட்ட மணங் கமழ்கின்ற அழகிய நெற்றியையும் உடைய நாள் நிரம்பிய மதித்திங்கள் என்பது ஒன்று எம்முடையதும் உண்டு. அத்திங்கள் இப்பொழுது எங்கு உள்ளதோ..?
முழங்குகின்ற ஓசையையுடைய வெவ்விய காற்றானது வீசுதலாலே இலையுதிர்ந்து நிழல் செய்யும் தன்மை நீங்க வெறுங் கொம்புகளாய் நிற்கின்ற மரங்களையுடைய கற்கள் விளங்கிய கரிய மலை மீதுள்ளது என்று நான் நினைத்திருந்தேன் அல்லவா ?
பாடல் வழியே..
1. செலவழுங்குதல் (பயணத்தை நிறுத்திக்கொள்ளுதல்) என்னும் அகத்துறை விளக்கபட்டுள்ளது.
2. மூங்கில் காற்றை, யானையின் பெருமூச்சுடன் ஒப்பிட்டுச் சொன்ன பாங்கு அழகு நிறைந்ததாக உள்ளது.
3. நிலவைத் தன் தலைவியுடன் ஒப்பிட்ட தலைவன் நிலவின் குறையையும், தலைவியின் நிறையையும் சொன்னவிதம் புதுமையாக உள்ளது.
4. நிலவைப் போன்ற பெண் என்றோ, பெண்தான் நிலவு என்றோ இன்றைய கவிஞர்கள் கவிதை பாடுகிறார்கள்.இவர்களுக்கு இந்த நற்றிணைப் பாடல் கூட சிந்தனைக் கருவாக இருந்திருக்கலாம் என்பதை இந்தப் பாடல் கொண்டு உணரமுடிகிறது.
பெண்தான் நிலவு!
என் வீட்டில் வாழும் நிலவு!
என்னோடு வாழும் நிலவு!
5. இந்தத் தலைவனைப் போலவே இன்றும் ஆண்கள் தன் மனைவியை நிலவாக நினைத்தால் “உயிர்க் கொல்லி“ நோய்களைக் கூட அழித்துவிடமுடியும் என்று கருதுகிறேன்.
////////
பதிலளிநீக்குஇதோ என் வீட்டிலும் ஒரு நிலவு இருக்கிறது என்று நிலவைப் பார்த்துச் சொல்கிறான் தலைவன்.
////////////////
ஆரம்பத்தில் சொல்லியிருக்கோம்...
அருமை .
பதிலளிநீக்குநற்றிணைப்படல் நிலைவைப்போல் ஒளிர்கிறது இங்கு...
பதிலளிநீக்குபாடல் அதன் விளக்கமும் சூப்பர்..
முயற்ச்சிக்கு வாழ்த்துக்கள்...
//இந்தத் தலைவனைப் போலவே இன்றும் ஆண்கள் தன் மனைவியை நிலவாக நினைத்தால் “உயிர்க் கொல்லி“ நோய்களைக் கூட அழித்துவிடமுடியும் என்று கருதுகிறேன்.//
பதிலளிநீக்குஇளங்கீரனார்,
புனைந்த செய்யுளை, இத்தனை நூற்றாண்டுகள் கழித்தும் சமூகத்துக்குப் பொருந்தும் ஒரு புது செய்தியுடன் பொருத்தி எளிய விளக்கத்துடன்
இளையச் சமுதாயத்துக்கு அளித்திருக்கும் விதத்தில்
முனைவர் குணாவின் தனித்துவம் மிளிர்கிறது.
பகிர்வுக்கு நன்றி!
பதிலளிநீக்குஅருமையான பாடல் அழகான விளக்கம் ஐயா
பதிலளிநீக்கு//செலவழுங்குதல் (பயணத்தை நிறுத்திக்கொள்ளுதல்)//
புதிய வார்த்தை/விளக்கம் தெரிந்து கொண்டேன் ஐயா. நன்றி பகிர்வுக்கு.
நிலவை பெண்ணுடன் ஒப்பிடுவது மிகவும் உண்மை தான், ஏனெனில் நிலவின் மறுபக்கத்தை இது வரை யாரும் காணவில்லை..
பதிலளிநீக்குTHANKS FOR SHARING
பதிலளிநீக்குஎனக்கு என்றும் அமாவாசைதான்
பதிலளிநீக்குமுன்னைவரே!
ப்லவர் சா இராமாநுசம்
//நிலவைப் பிடித்துச் சில கறைகள் துடைத்துக் குறு முறுவல் பதித்த முகம்//
பதிலளிநீக்குநா.பா.
நிலவினைப்போல குளிர்கிறது பதிவு...
பதிலளிநீக்குநற்றிணைப்பாடலின் விளக்கம்
இனிக்கிறது முனைவரே.
நல்ல பதிவு !
பதிலளிநீக்குகாதலில் திளைத்த மனத்தில் எழும் உணர்வை எத்தனை நயமாய் இனிமையாய் எடுத்துக்கூறியுள்ளனர் புலவர்கள்! சங்கப் பாடலைப் பொருளுடன் பகிர்ந்து அதனோடு சமுதாயத்துக்குத் தேவையான செய்தியும் சொல்லி காதலுணர்வுடன் விழிப்புணர்வையும் கலந்து எழுதியமைக்குப் பாராட்டுகள்.
பதிலளிநீக்குபகிர்வுக்கு நன்றி முனைவரே
பதிலளிநீக்குஅருமையாக காதலை உணர்த்தும் கவிதை அதற்கான விளக்கம் அருமை .
பதிலளிநீக்குமனைவியை நேசி
எய்ட்ஸ் வருமா யோசி
என்ற கருத்தை வலியுறுத்தி பதிவிட்டமைக்கு நன்றி நண்பரே
t.m 13
பதிலளிநீக்குஅருமை அருமை...!!!
பதிலளிநீக்கு. இந்தத் தலைவனைப் போலவே இன்றும் ஆண்கள் தன் மனைவியை நிலவாக நினைத்தால் “உயிர்க் கொல்லி“ நோய்களைக் கூட அழித்துவிடமுடியும் என்று கருதுகிறேன்.
பதிலளிநீக்குஉண்மை ஐயா.
வாழ்த்துக்கள்.
அழகான பாடலும் அருமையான விளக்கமும், அந்த நிலவினைப்போலவே மிகவும் குளுமையாக. vgk
பதிலளிநீக்குகாதலுணர்வுடன் விழிப்புணர்வு..நல்ல பதிவு முனைவரே...
பதிலளிநீக்குரெவெரி
நிலவே நீ யாருக்கு சொந்தமடி...?
பதிலளிநீக்குஅருமை முனைவரே..!
முனைவரே மிக அருமையான பதிவு
பதிலளிநீக்குநானும் சிறிது காலத்திர்க்கு முன் இரவி ஒளிரும் நிலவு பகலிலும் தஞ்சம் புகுந்தது என் வீட்டினிலே என்று என் மனைவியை பற்றி எழுதினேன் நிலவு காதலை போல் எழுத எழுத திகட்டாது
மிக்க நன்றி முனைவரே
ஜேகே
அருமையான படைப்பிற்கு வாழ்த்துகள்
பதிலளிநீக்குஅவசியம் என் தளத்திற்கு வாருங்கள்
ஒரு கேள்விக்குப் பதில் உள்ளது ...........
வளரவும் இல்லை
பதிலளிநீக்குதேயவும் இல்லை
அறிவியல் இதனை
கண்டு பிடித்துவிட்டதே
வியந்து நிற்கிறது வான்மதி!
வளரவும் இல்லை
தேயவும் இல்லை
உன்னால் எனக்கு
பித்து பிடித்துவிட்டதே
மயங்கி நிற்கிறது என்மதி!
நற்றிணை பாடலுக்கு நல்ல விளக்கம்....
பதிலளிநீக்குசெலவழுங்குதல் - எத்தனை சொற்களை நாம் இழந்துள்ளோம் என்று புரிகிறது...
நல்ல பாடல் தேர்ந்தெடுத்து எங்களுக்கும் சுவைக்கத் தந்தமைக்கு நன்றி முனைவரே...
தமிழ் மணம் 17
பதிலளிநீக்குவீட்டில் உள்ள நிலவு முகம் கொண்ட மனைவியை மட்டும் காதலி.... என்பதை தமிழ் மணம் கமழ எடுத்துரைத்த நண்பர் முனைவருக்கு வாழ்த்துக்கள்
பதிலளிநீக்குநன்றி சௌந்தர்
பதிலளிநீக்குநன்றி நண்டு
நன்றி விக்கி
மகிழ்ச்சி சத்ரியன்
நன்றி இராம்வி
பதிலளிநீக்குநன்றி சசி
நன்றி சூர்ய ஜீவா
வருகைக்கு நன்றி புலவரே
குறிப்புக்கு நன்றி சென்னப்பித்தன் ஐயா.
நன்றி மகேந்திரன்
பதிலளிநீக்குமகிழ்ச்சி பாலா
கருத்துரைக்கு நன்றி கீதா
நன்றி காந்தி
புரிதலுக்கு நன்றி எம்ஆர்
நன்றி மனோ
பதிலளிநீக்குநன்றி இரத்தினவேல் ஐயா
நன்றி வை.கோபாலகிருஷ்ணன் ஐயா
வருகைக்கு நன்றி நிரோஷ்
நன்றி ஜேகே
வந்தேன் கண்டேன் மகிழ்சி அம்பாளடியாள்
பதிலளிநீக்குவருகைக்கும் கருத்துரைக்கும் நன்றி சீனவாசன்
நன்றி வெங்கட்
நன்றி மாயஉலகம்