பக்கங்கள்

இந்திய குடிமைப் பணித்தேர்வு - தமிழ் - 2 - (UPSC EXAM TAMIL)

வியாழன், 8 செப்டம்பர், 2011

இன்னொரு மொழி


1.ஒரு மீன் தொட்டியில் ஒரு மீன் துள்ளிக் குதித்து விளையாடிக் கொண்டிருக்கிறது.
2.அதைப் பார்த்ததும் சாப்பிடவேண்டும் என்ற ஆசைகொண்ட பூனை அந்த மீன்தொட்டிக்கு அருகாமையில் வந்து எட்டிப் பார்க்கிறது.
3. பூனையைக் கண்ட மீன் நீரினுள் மறைந்துகொள்கிறது.
4.இங்கேதானே பார்த்தோம் என்று எண்ணிய பூனை, தொட்டியில் உள்ள நீரினுள் தலையை விடுகிறது.
5.மறைந்திருந்த மீன் நாயைப் போல “லொள் லொள்“ என்று குரைக்கிறது.
6. பூனை பயந்து ஓடிவிடுகிறது.

இதுதான் காணொளி. இதன் பொருள் “இன்னொரு மொழி கற்றுக்கொள்ளுங்கள்“ என்பதுதான்.

மீன் நாய் போலக் குரைத்தது கற்பனையே ஆயினும். இதுபோல நாமும் இன்னொரு மொழி கற்றுக்கொண்டால் தக்க சூழலில் அம்மொழி நம்மைக் காப்பாற்றும் என்பதே இக்காணொளி தரும் நீதி.

இதில் இன்னொரு மொழி கற்றுக்கொள்ள வேண்டும் என்பதில் எனக்கு எவ்விதமான கருத்துவேறுபாடும் இல்லை. அது காலத்தின் தேவை!

தாய் மொழியே முழுமையாகக் கற்றுக்கொள்ள முடியாத ஒருவனால் எப்படி இன்னொரு மொழியைக் கற்றுக்கொள்ள முடியும் என்பதே என்னுடைய கேள்வி????

இன்றைய சூழலில் மனிதனைவிட அதிகமான மொழி பேசும் ஆற்றல் வாய்ந்தவையாக கணினிகளே திகழ்கின்றன.

இந்தக் கணினிகளும் எத்தனை மொழி பேசினாலும் 01 என்று தன் தாய்மொழியில் தானே உள்வாங்கிக் கொள்கின்றன!

தாய் மொழியில் முழுமையான அறிவில்லாத ஒருவனால் பிறமொழியின் இலக்கண மரபுகளையும், அதன் ஆழ்ந்த பொருளையும் எவ்வாறு புரிந்துகொள்ள முடியும்,
எவ்வாறு தன் மனதில் பதிந்து வைக்க முடியும்?
எவ்வாறு முழுமையாக வெளிப்படுத்த முடியும்?
என்பதே என் வினாவாக இருக்கிறது...

34 கருத்துகள்:

  1. //இந்தக் கணினிகளும் எத்தனை மொழி பேசினாலும் 01 என்று தன் தாய்மொழியில் தானே உள்வாங்கிக் கொள்கின்றன!

    தாய் மொழியில் முழுமையான அறிவில்லாத ஒருவனால் பிறமொழியின் இலக்கண மரபுகளையும், அதன் ஆழ்ந்த பொருளையும் எவ்வாறு புரிந்துகொள்ள முடியும், //
    ஆணித்தரமான கூற்று. கணணி பற்றிய சிந்தனை உண்மையில் அருமை பாஸ்..எப்டி யோசிக்குறீன்களோ!

    பதிலளிநீக்கு
  2. தாய் மொழியே முழுமையாகக் கற்றுக்கொள்ள முடியாத ஒருவனால் எப்படி இன்னொரு மொழியைக் கற்றுக்கொள்ள முடியும் என்பதே என்னுடைய கேள்வி????
    // ஆமாம் நல்ல கேள்வி..
    காணொளியைப் பார்த்துவிட்டு வருகிறேன்..
    பகிர்வுக்கு நன்றி..

    பதிலளிநீக்கு
  3. பாரதியின் கனவை தங்கள் எழுத்துக்களில் காண்கிறேன் தங்களின் எழுத்துக்களுக்கு வலிமையுண்டு வாழ்த்துக்கள்

    பதிலளிநீக்கு
  4. அருமையான காணொளி
    அருமையான விளக்கம்
    பதிவாக்கித் தந்தமைக்கு நன்றி
    த,ம 4

    பதிலளிநீக்கு
  5. தாய்மொழி அவசியம்தான் அதோடு பிர மொழிகளும் கற்க வேண்டும் என்ற அடிப்படையில் இடம் பெற்ற பதிவு...

    கருத்துக்கு நன்றிகள்

    பதிலளிநீக்கு
  6. பொதுவாக தமிழகத்தில் இந்தியை நுழைய விடாமல் நமக்கு துரோம் செய்து விட்டார்கள் அப்படியாவது நாம் இந்தி கற்றுக் கொண்டிருக்கலாம்...


    பிற மொழி கற்பது என்பது அந்த மொழியாளர்களின் உணர்வோடு நாம் புதிய மனிதனாக உறுவெடுக்கிறோம்...

    நாம் எத்தனை மொழிக்கற்க்கிறமோ அத்தனை ஆட்களாக இருக்கிறோம்....

    பிற மொழி கற்க தற்போது எந்த முயற்ச்சியும் நான் எடுக்கவில்லை..

    தமிழைப்போல எளிமையான மொழி இந்தியாவில் இல்லை

    பதிலளிநீக்கு
  7. தாய் மொழியில் முழுமையான அறிவில்லாத ஒருவனால் பிறமொழியின் இலக்கண மரபுகளையும், அதன் ஆழ்ந்த பொருளையும் எவ்வாறு புரிந்துகொள்ள முடியும், //

    ,இது உண்மையே.... ஆனாலும் பிறமொழி கலப்பை முற்றிலும் நீக்கி உபயோகிப்பது என்பது கேலிக்கூத்தாக முடியும். உதாரணம் காபி- குளம்பி. என்றுதான் சொல்லணும்னு கட்டாயப்படுத்துவது.
    ராஜேந்திரனை ராசேந்திரன் என்பது .ஃபேஸ புக்கை முகநுல் என்பது இதெல்லாம் ஏத்துக்கமுடியல. தமிழை எளிய பாமரர்கள் முதல் அந்நிய மொழி பேசுபவர்கள் வரை அனைவரையும் தமிழின் பெருமையை அறிந்து கொள்ளச் செய்யவேண்டுமென்றால் நிச்சயம் சில அந்நிய மொழி கலப்பை ஏற்றுக்கொண்டாலே முடியும். தமிழின் சிறப்பான இலக்கணத்தையும் ஐய்யமற அறிந்திருத்தலும் அவசியம். நல்ல சிந்தனை தட்டி எழுப்பும் சீரிய பதிவு தங்களது பதிவு. வாழ்த்துக்கள்.

    பதிலளிநீக்கு
  8. தாய்மொழொயின் அவசியத்தையும் அதே நேரத்தில் பிற மொழி எப்பொழுது அவசியமாகிறது என்பதையும் உங்களின் படைப்பும் மற்றும் காணொளியும் விள்க்குகிறது. அவசியமான பகிர்வு. நன்றி முனைவரே

    பதிலளிநீக்கு
  9. தாய் மொழியில் தேர்ச்சி பெறாத பலர் - பிற மொழிகளில் மிக நல்ல தேர்ச்சி பெற்றிருப்பதை பார்க்க முடிகிறதே. எந்த மொழி மீது ஈடுபாடு காட்டுகிறார்களோ அதில் தேர்ச்சி பெறுகிறார்கள் என்று நினைக்கிறேன்.

    பதிலளிநீக்கு
  10. தாய் மொழியில் தேர்ச்சி பெறாத பலர் - பிற மொழிகளில் மிக நல்ல தேர்ச்சி பெற்றிருப்பதை பார்க்க முடிகிறதே. எந்த மொழி மீது ஈடுபாடு காட்டுகிறார்களோ அதில் தேர்ச்சி பெறுகிறார்கள் என்று நினைக்கிறேன்.

    பதிலளிநீக்கு
  11. தேவை இருப்பின், மிகவும் விரைவாக பிற மொழிகளை கற்றுக் கொள்ளும் ஆற்றல் மனிதனுக்கு உண்டு.. survival instinct

    பதிலளிநீக்கு
  12. தங்கள் கருத்து முற்றிலும் உண்மை ...வாழ்த்துக்கள் !

    பதிலளிநீக்கு
  13. //தாய் மொழியில் முழுமையான அறிவில்லாத ஒருவனால் பிறமொழியின் இலக்கண மரபுகளையும், அதன் ஆழ்ந்த பொருளையும் எவ்வாறு புரிந்துகொள்ள முடியும், //
    மிகச்சரி!

    பதிலளிநீக்கு
  14. மொழிகளின் மகத்துவம்
    தேவையான நேரங்களில்
    அதன் தேவை தெரியும் என்பதை
    அருமையாக எடுத்துரைத்திருக்கிறீர்கள்
    முனைவரே....
    தாய்மொழியோடு மற்ற மொழிகளையும்
    குறைந்தபட்சம் வேறு ஒரு மொழியாவது
    தெரிந்திருக்க வேண்டும்.
    என்னைப்போல வெளிநாடுகளை பணிபுரிபவர்களுக்கு
    இதன் மகத்துவம் நன்கு புரியும்.

    பதிலளிநீக்கு
  15. எடுத்துக்கொண்ட காணொளியின் மூலம் அருமையான விளக்கத்தை தமிழ் மொழியின் பொருட்டு தந்து விட்டீர்கள் ஐயா...

    பதிலளிநீக்கு
  16. மீன் நாய் போலக் குரைத்தது கற்பனையே ஆயினும். இதுபோல நாமும் இன்னொரு மொழி கற்றுக்கொண்டால் தக்க சூழலில் அம்மொழி நம்மைக் காப்பாற்றும் என்பதே இக்காணொளி தரும் நீதி.//

    உண்மை தான் நண்பரே.. ஒரு மொழி தெரிந்தவன் ஒருவன்... இரு மொழி தெரிந்தவன் இருவருக்கு சமம் என்பார்கள்... அருமையான தொரு பகிர்வுக்கு நன்றி

    பதிலளிநீக்கு
  17. தாய்மொழி முறையாய் அறியான்
    வேறுமொழியை எவ்வழி செவ்வண்
    இறிய இயலும்..?
    அருமை முனைவரே!
    எழுத நேற்றும் முயன்றேன் இயவில்லை
    தங்கள் வலையில் ஏதோ பழுது உள்ளது கவனிக்க!

    புலவர் சா இராமாநுசம்

    பதிலளிநீக்கு
  18. நல்லதொரு பகிர்வு. இரண்டு மொழி கற்றவன் இரண்டு மனிதருக்குச் சமம் என்று எங்கேயோ படித்த நினைவு. தாங்கள் சொல்வது போல் பலமொழிகள் கற்றுத் தேர, தாய்மொழியில் தேர்ச்சி அடைந்திருக்கவேண்டும். மிகவும் சரியான கருத்து. பகிர்வுக்கு நன்றி.

    பதிலளிநீக்கு
  19. தங்கள் முதல் வருகைக்கும் கருத்துரைக்கும் நன்றி அஷ்வின்

    பதிலளிநீக்கு
  20. வருகைக்கு நன்றி கருன்,
    நன்றி நண்டு
    மகிழ்ச்சி மணி
    மகிழ்ச்சி இரணி ஐயா

    பதிலளிநீக்கு
  21. மிகவும் சரியாகச் சொன்னீர்கள் சௌந்தர்.

    நன்றி.

    பதிலளிநீக்கு
  22. வருகைக்கும் கருத்துரைக்கும் நன்றி கடம்பவனக் குயில்.

    உண்மைதான்.
    தூய தமிழ் பேசுகிறேன் என்று சிலர் தமிழைக் கேலிக்கூத்தாக்கிக் கொண்டிருக்கிறார்கள்.

    பேசவேண்டிய இடத்தில் பேசவேண்டும்.

    புரியும் விதமாக, பிடிக்கும் விதமாகப் பேசவேண்டும்.

    நன்றி அன்பரே.

    பதிலளிநீக்கு
  23. கருத்துரைக்கு நன்றி காந்தி
    நன்றி விக்கி
    உண்மைதான் தமிழ் உதயம் தங்கள் கருத்து சிந்திக்கத்தக்கது.

    பதிலளிநீக்கு
  24. மிக அழகாகச் சொன்னீர்கள் சூர்யஜீவா
    நன்றி பாலா
    நன்றி சென்னைப்பித்தன் ஐயா
    நன்றி இரத்தினவேல் ஐயா.

    பதிலளிநீக்கு
  25. //குறைந்தபட்சம் வேறு ஒரு மொழியாவது
    தெரிந்திருக்க வேண்டும்.
    என்னைப்போல வெளிநாடுகளை பணிபுரிபவர்களுக்கு
    இதன் மகத்துவம் நன்கு புரியும்.//

    உண்மைதான் மகேந்திரன்.

    கருத்துரைக்கு நன்றிகள்.

    பதிலளிநீக்கு
  26. நன்றி தேவா
    நன்றி மாய உலகம்
    மகிழச்சி புலவரே
    வருகைக்கும் கருத்துரைக்கும் நன்றி கீதா.

    பதிலளிநீக்கு
  27. எந்த மொழியென்றாலும் பிற மொழி கலப்பின்றி பேசினால் இனிமையாக இருக்கும்...தாய் மொழியின் சிறப்பை அறியாதவனை என்ன செய்ய முடியும்?!!!

    பதிலளிநீக்கு
  28. ஒவ்வொருவரும் உணரவேண்டும் என்பதே என் ஆவல்.

    கருத்துரைக்கு நன்றிகள் தென்றல்.

    பதிலளிநீக்கு
  29. உண்மைதான்
    தாய் மொழியை அறிந்து கொள்ள முழு மனிதனாகிறான்
    இன்னொரு மொழியை கற்று கொள்ள பல மனிதனாகிறான் !

    பதிலளிநீக்கு