வேர்களைத்தேடி தளத்திற்குத் தங்களை அன்புடன் வரவேற்கிறேன்... இத்தளத்தில் சங்க இலக்கியம், கணினித்தமிழ் சார்ந்து எனது அனுபவங்களைப் பகிர்ந்து வருகிறேன். 13 ஆண்டுகளில் 1500க்கும் மேற்பட்ட பதிவுகளை வழங்கியுள்ளேன். தற்போது இந்தியக் குடிமைப் பணித்தேர்வுக்கான விருப்பப் பாடம் தமிழுக்குரிய விளக்கங்களைத் தொடர்ந்து வழங்கி வருகிறேன். தங்கள் மேலான வருகைக்கு நன்றிகளைத் தெரிவித்துக்கொள்கிறேன்.

வெள்ளி, 2 செப்டம்பர், 2011

மிதக்கும் தலைப்புகள்.




வலையுலகில் ஒவ்வொரு நாளும் பல பாடங்களைக் கற்று வருகிறேன். சில வலைப்பதிவுகளைக் காணும்போது அவர்கள் “மிதக்கும் தலைப்புகளை“ வைத்திருப்பார்கள். அவர்கள் எப்படி இதனைச் சேர்த்திருப்பார்கள் என்று பல நாள் சிந்தித்திருக்கிறேன்.

இன்றுதான் அதன் நுட்பத்தை அறிந்தேன். என்னைப் போல சிலருக்காவது இந்த வசதி பயன்படும் என்ற எண்ணத்தில் இவ்வழிமுறையைப் பகிர்ந்து கொள்கிறேன்.

1. உங்கள் ப்ளாக்கர் கணக்கிற்குள் நுழைந்துகொள்ளுங்கள்.

2. டாசுபோர்டு சென்று லேயவுட் என்னும் வடிவமைப்புக்குச் செல்லுங்கள்

3. கேட்கட்டைச் சேர் என்னும் பகுதியில் உள்ள தேடல் பெட்டியில் Alex Dioso அல்லது Label Sphere என்று தட்டச்சிட்டுத் தேடுங்கள்.

4. தேடலில் கிடைக்கும் பெட்டியைதங்கள் வலைப்பக்கத்தில் சேர்த்துக்கொள்ளுங்கள்.

5. பின் அந்தப் பெட்டியை உங்கள் வலைப்பக்கத்தில் எங்குவேண்டுமானாலும் மாற்றிக்கொள்ளலாம்.

6. மேகங்கள் போல இதுவரை நீ்ங்கள் பகுத்துவைத்திருக்கும் உட்தலைப்புகள் மிதப்பதை இப்போது நீங்கள் காணமுடியும்.

7. இதன் அளவுகளைக் கூட நீங்கள் தேவையான அளவில் மாற்றிக்கொள்ள முடியும்.

8. மேலும் இதுதொடர்பான விளக்கங்களைப் பெற இந்த இணையபக்கத்துக்குச் செல்லுங்கள்.

9. இதில் எனக்குப் பிடித்த நுட்பம் என்னவென்றால் இந்த வசதி தமிழ் வலைப்பதிவுகளுக்கும் பொருந்துகிறது என்பதுதான்.

10. இந்த வசதியை முன்பு ஒருமுறை வேறு வழியில் நான் முயற்சித்தபோது ஆங்கில வார்த்தைகளை மட்டுமே ஏற்று, தமிழ்ச் சொற்களை ஏற்காத தன்மையை உணர்ந்திருக்கிறேன். அவ்வகையில் இவ்வசதி பலருக்கும் பிடிக்கும் என்று கருதுகிறேன்.

65 கருத்துகள்:

  1. புதுமையாக அறிந்ததை உடன்
    அனைவரும் அறியும்படியாக மிக விளக்கமாக
    ப்திவிட்டமைக்கு நன்றி
    பயனுள்ள பதிவு

    பதிலளிநீக்கு
  2. அருமை அன்பரே எனக்கும் இந்த கேள்வி இருந்தது தீர்த்து வைத்ததற்கு நன்றி

    பதிலளிநீக்கு
  3. பயனுள்ள பதிவு நண்பரே


    உங்கள் கல்வி தகுதியை மாநில & மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்திற்க்கு செல்லாமல் ஆன்லைனில் பதிவது எப்படி
    http://murugananda.blogspot.com/2011/09/go-to-state-district-employment-office.html

    பதிலளிநீக்கு
  4. வித்தியாசமான தொழில்நுட்பம்..போட்டு பார்ப்போம்!

    பதிலளிநீக்கு
  5. முனைவரின் வழிகாட்டுதல் படி எத்தனை வலை பூக்கள் உருமாற போகிறதோ.. இலக்கிய வாசம் அடிக்கும் பூங்காவில் தொழில் நுட்ப வாசம் சற்று புதுமையாக இருந்தது..

    பதிலளிநீக்கு
  6. தகவலுக்கு நன்றி முனைவரே...
    பயன்படுத்திப் பார்க்கிறேன்.

    பதிலளிநீக்கு
  7. எங்களை மாதிரி ஆட்களுக்கு வேலை இல்லாம பண்ணிருவீங்க போல முனைவரே...

    பதிலளிநீக்கு
  8. புதிய தொழில்நுட்ப பதிவுக்கு நன்றி..!!

    பதிலளிநீக்கு
  9. தகவலுக்கு நன்றி நண்பரே... பயன்படுத்திப்பார்க்க முனைகிறேன்...தமிழ் மணம் 10

    பதிலளிநீக்கு
  10. நல்ல தகவல் நண்பரே

    பகிர்வுக்கு நன்றி

    பதிலளிநீக்கு
  11. பயனுள்ள தகவல் நண்பரே! பகிர்வுக்கு நன்றி!

    பதிலளிநீக்கு
  12. நல்லதொரு பகிர்வு... முயற்சிக்கலாம்.
    ஆனால் Lading... என்றுதான் வருகிறது... ஆனால் உங்கள் பக்கத்தில் வரவேயில்லை... எனக்கு மட்டும் அப்படியா இல்லை எல்லாருக்கும் இதுபோல் வருகிறதா தெரியவில்லை.... சரி பாருங்கள் முனைவரே..!

    பதிலளிநீக்கு
  13. அப்படியெல்லாம் எதுவுமில்லை ரெவரி.

    இடையிடையே இவ்வாறு என் அனுபவத் தொழில்நுட்பங்களை “இணையதள தொழில்நுட்பம் என்று நீண்டகாலமாகவே பகிர்ந்து வருகிறேன்.

    பதிலளிநீக்கு
  14. வணக்கம் சகோதரம்,

    சூப்பரான ஐடியாவினைத் தந்திருக்கிறீங்க. எம் படைப்புக்கள் பற்றிய பார்வை பலருக்கும் ஏற்படும் வகையில் எம் பதிவினை மிதக்கும் தலைப்புக்கள் மூலம் காட்சிப்படுத அருமையான ஐடியாவினைத் தந்திருக்கிறீங்க.

    பதிலளிநீக்கு
  15. ஆஹா அபாரம், இந்த டைட்டிலுக்கு நீங்க மிதக்கும் டைட்டில் வெச்சிருந்தா மேட்சிங்கா இருந்திருக்குமே?

    பதிலளிநீக்கு
  16. அருமையான தொழில்நுட்ப பதிவு .பகிர்வுக்கு நன்றி .வாழ்த்துக்கள்.

    பதிலளிநீக்கு
  17. உங்கள் இடுகைகள் மிகவும் அருமை. என்னுடைய தளத்திற்கும் வருகைதருமாறு அழைக்கிறேன்.

    பதிலளிநீக்கு
  18. ஆமாம் முனைவரே, மற்றவர்கள் ப்ளாக்கில் எதாவது புதுமையாக பார்க்கும் போது, அது போல வடிவமைக்க முயற்சித்திருக்கிறேன். சில நேரம் தோல்வி மட்டும் தான் மிஞ்சும். தங்கள் தகவல் மிகவும் பயனுள்ளதாக இருக்கும். நன்றி

    பதிலளிநீக்கு
  19. வருகைக்கும் கருத்துரைக்கும் நன்றி தேவா.

    பதிலளிநீக்கு
  20. பயனுள்ள தகவல் நண்பரே.. முயற்சிக்கிறேன்..

    பதிலளிநீக்கு
  21. அன்பர் சே.குமார்..

    தங்கள் கருத்துரை கண்டேன்.
    எனக்கு எவ்வித சிக்கலும் இல்லை.
    மொசில்லா, குரோம், இ.எக்சு என மூன்று உலவிகளிலும் திறந்து பார்த்துவிட்டேன்.

    அதைத்தான் படமாகவும் வெளியிட்டிருக்கிறேன்

    தங்களுக்கு எதுவும் இணைய இணைப்பில் சிக்கல் உள்ளதா? உலவிகளில் சிக்கலா எனத் தெரியவில்லை நண்பா. எந்த உலவி பயன்படுத்துகிறீர்கள்.?

    பதிலளிநீக்கு
  22. நல்ல தகவல். சில உலவிகளில் பார்க்கும் போது பிரச்சனை இருக்கிறது. உங்கள் பக்கத்தில் கூட “Given URL is not allowed by the Application configuration.” என்று வருகிறது நடுவே.... என்ன என்று புரியவில்லை... நானும் முயற்சித்துப் பார்க்கிறேன் நண்பரே...

    பதிலளிநீக்கு
  23. தமிழில் தலைப்பு வைக்கலாம் என்ன எண்ணத்தில்தான் அப்படி வைத்தேன் செந்தில்.
    கருத்துரைக்கு நன்றிகள்.

    பதிலளிநீக்கு
  24. உண்மைதான் வெங்கட்..

    தங்களுக்கு எந்த உலவியில் இந்த சிக்கல் வருகிறது?

    நானும் பார்த்தேன் அந்த காட்கெட் பெட்டியில் உள்ள தலைப்புப் பட்டியல் எதுவும் எழுதப்படாமலிருந்தால் இப்பிழைக் குறியீடு வந்தது அதை நிறைவு செய்ததும் அப்பிழை மறைந்துவிட்டது.

    எது எப்படியோ வரும் காலத்தில் இந்த நுட்பம் மேம்படுத்தப்பட்டால் பலருக்கும் பயனளிப்பதாக இருக்கும்.

    பதிலளிநீக்கு
  25. நான் உபயோகிப்பது க்ரோம்...

    //எது எப்படியோ வரும் காலத்தில் இந்த நுட்பம் மேம்படுத்தப்பட்டால் பலருக்கும் பயனளிப்பதாக இருக்கும்.//

    நிச்சயமாக...

    பதிலளிநீக்கு